எதற்கு இந்த வெறுப்பு அச்சம்
எதற்கு இந்த பகைமை கோபம்
இருக்கும் மனிதர் எவரும் சொந்தம்
எதற்கு இங்கே புன்னகை பஞ்சம்
உனக்கு ஒன்று எனக்கு ஒன்று
வேறு வேறான கருத்து உண்டு
பிரிந்து சிந்திக்கும் மனது ஒன்றல்ல
மொழிகள் ஒன்றானாலும் கருத்து இரண்டு
இருந்து போகட்டும்,எண்ணம் பேச்சுக்கள்
பிரிந்து போகட்டும் ஒன்றும் புதிதல்ல
எண்ணம் இரண்டானால் இதயம் சேராதா?
மனிதம் தழைத்தோங்கி நட்பு பூக்காதா??
எல்லாம் ஒன்றாக இருந்தால்தான் நட்புண்டு
ஒன்று குறைந்தாலும் மலராது பூச்செண்டு
என்று இருந்துவிட்டால் அமைதி என்று வரும்?
அழகான இவ்வுலகில் பூப்பொழுது என்று புலரும்??
எண்ணங்கள் எழும்பட்டும் வெறுப்புகள் உமிழாமல்
வண்ணங்கள் விளங்கட்டும் வேற்றுமை விரியாமல்
கண்களிலே சினம் வேண்டாம் ,கருணையில் அது திளைக்கட்டும்
கடும் சொற்கள் கலைந்து விடு,உதட்டில் இனிமை பெருகட்டும்
இரத்தம் சூடேற்றும் இடுகைகள் பார்த்து விட்டால்,
கலங்காது கண் மூடி கண நேரம் பொறுமை கொள்வொம்
சிறிது நேரம் பொறுத்து விட்டு,சீராக சிந்தித்தால்
என் நாடு,எம் மக்கள்,என உணர்ந்து அமைதி கொள்வொம்
தன் நிலையை இழக்காமல், தெளிவுடனே பதில் தரலாம்
மற்றவரின் நிலை புரிந்து,சினங்காத்து நலம் பெறலாம்
பல பேரின் குரல் கேட்போம்,நம் வாதம் முன் வைப்போம்
நம் நோக்கங்கள் ஒன்றேதான், கை கோர்த்து தமிழ் வளர்ப்போம்
இந்த நிலை இங்கு வர
அருள் புரிவாய் எனது இறைவா
உன் இனிய உலகம் வளமை பெற
உதவிடுவாய் என் இறைவா
வெறுப்பு தவிர்ப்போம், நட்பு வளர்ப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
உங்கள் அன்பான நல்லெண்ணம் நிறைவேற
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
வாழ்த்துக்களுக்கு நன்றி அனானி அன்பரே!! :-)
கருத்துக்கள் மாறுபடுவதில் தவறில்லை. அதை சினம் கொண்டு எதிர் கொள்வதில் மன நிம்மதி இல்லை. அழகாக உங்கள் கருத்தை வலியுறித்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்!
@காட்டாறு
வாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)
நான் படித்த சில கவிதைகளில், மிகச் சாதாரணமாக எழுதி உள்ளக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
நன்றாக இருந்தது.
வருகைக்கு நன்றி குமார்
கவிதை உங்களுக்கு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி!! :-)
simple but beautiful....
//இரத்தம் சூடேற்றும் இடுகைகள் பார்த்து விட்டால்,
கலங்காது கண் மூடி கண நேரம் பொறுமை கொள்வொம்
சிறிது நேரம் பொறுத்து விட்டு,சீராக சிந்தித்தால்
என் நாடு,எம் மக்கள்,என உணர்ந்து அமைதி கொள்வொம்//
உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும் :)
வாழ்த்துக்களுக்கு நன்றி துர்கா!! :-)
கடைசி மூன்று பகுதிகளில் உங்கள் மனக்குமுலை வெளிப்படுத்தியிருக்கிறிர்கள்...அருமை
கவிதை நன்றாக உள்ளது ;-))
இது எனது உள்ளக்குமுறல் மட்டும்தானா இல்லை என்னை போன்ற ஏனைய நண்பர்களின் எண்ணஓட்டத்தின் பிரதிபலிப்பா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
வாழ்த்துக்களுக்கு நன்றி கோபிநாத்!!! :-)
//எண்ணங்கள் எழும்பட்டும் வெறுப்புகள் உமிழாமல்
வண்ணங்கள் விளங்கட்டும் வேற்றுமை விரியாமல்
கண்களிலே சினம் வேண்டாம் ,கருணையில் அது திளைக்கட்டும்
கடும் சொற்கள் கலைந்து விடு,உதட்டில் இனிமை பெருகட்டும்
//
ஔவையின் ஆத்திச்சூடியை பாரதி மறுபடியும் எழுதின மாதிரி, ஆத்திசூடியின் இன்னொரு பரிமாணம், CVR..
வெளிச்சகாலங்களில் விளக்குகள் பொருத்தும் மனிதரிடையே, இருட்டுக்கும் வெள்ளையடிக்கும் எண்ணங்கள்.. நல்லெண்ணங்கள்..
CVR, வளரட்டும் இது உலகோர் உள்ளத்திலே..பூக்கட்டும் வெள்ளை மலர்கள் நாட்டினிலே
/ஏனைய நண்பர்களின் எண்ணஓட்டத்தின் பிரதிபலிப்பா //
பெரும்பாலானவர்களின் எண்ணமும் இதுவாகத்தான் இருக்கும், CVR
தங்களை போல ஒரு கவிதை ஆர்வலரிடமிருந்து கருத்து பெறுவதில் பெறும் மகிழ்ச்சி
கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து பதிவுக்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டிகிறேன் கார்த்தி!! :-)
இன்றைய வலைத்தள உலகத்திற்குப் பொருத்தமான கவிதை.. ஏனுங்கோ அது இன்னாங்க ஸார்.. அல்லா கவிஞர்களும், எழுத்தாளர்களும் சாப்ட்வேர் படிச்சுப்புட்டு கோடிங்ன்னு ஒண்ணை சொல்லி எழுதுக்கின்னு இருக்கீங்க.. இப்படி அல்லாரும் வேற வேற வேலைக்குப் போயிட்டு போரடிச்சப்போ தபான்னு ஒரு தடவை இந்த மாதிரி கவிதை, கதையெல்லாம் எழுதித் தள்ளுறீங்க.. இது எந்த ஊர் நியாயம்?
கவிதை எழுதும் அளவுக்கு எல்லம் திறமை இருக்கிறதா என்று தெரியவில்லை உண்மை தமிழரே.
நாம் ஏதோ ஒன்றை சொல்ல ஆவாலாக இருக்கும்போது வெளிப்படும் வார்த்தைகளை கவிதைகள் என்று சொல்லி எழுதி வைக்கிறோம்.பிடித்திருந்த்தால் சந்தோஷம்!! :-)
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!! :-)
Post a Comment