பாட்டு பாடவா

என் இனிய தமிழ் மக்களே

நம்ம ஊருல எப்பவுமே ஒரு பெரிய பிரச்சினை இருக்குங்க!! எங்கயாவது நாலு பேரு ஒன்னா சேர்ந்தா போதும்,அதுல இருக்கறதுலயே கேனையனா எவன் இருக்கான்னு கண்டு பிடிச்சு அவன பாடு பாடுனு (கெட்ட வார்த்தை இல்லீங்கன்னா) ஓட்டி எடுக்க ஆரம்பிச்சிருவாங்க!! நான் வேலைக்கு சேர்ந்த அப்புறம் அப்பபோ ப்ராஜெக்ட் பார்டின்னு ஒரு காமெடி நடக்கும் பாருங்க, அப்போ எல்லாம் இந்த நாடகத்தை நிறைய பாத்திருக்கேன்.

இத்தனைக்கு அவனுக்கும் பாட்டு பாடறதுக்கும் சம்பந்தமே இருக்காது. "என்னது?? என்னையா பாட சொல்லுறீங்க??"அப்படின்னு அவனும் பே பே னு முழிப்பான். "வேண்டாம்னா என்னை விட்டுடுங்கன்னா "அப்படின்னு அவனும் எவ்வளவோ கெஞ்சி பார்ப்பான்(?!) ஆனா இவனுங்க இறக்கமே இல்லாம உசுப்பேத்தி விட்டுக்கிட்டே இருப்பானுங்க!! கொஞ்ச நேரம் கழிச்சு வேற வழி இல்லாம அவனும் பாட ஆரம்பிச்ச அப்புறம் இவனுங்க டோட்டலா கண்டுக்கவே மாட்டானுங்க. அப்போதான் "எலே காத்தமுத்து,உன் பால் வியாபாரம் எப்படிலே போய்ட்ருக்கு??”,”இன்னைக்கு குமுதத்துல நமீதா போட்டோ ஓன்னு போட்டுருக்காக,அதை பார்த்தியாலே??” அப்படின்னு அதிமுக்கியமான விஷயங்களை அவன் பாடிட்டு இருக்கும்போதே பேச ஆரம்பிச்சிருவாங்க!!பாவம் அவனும் ஆரம்பிச்ச பாவத்துக்காக முக்கி முனகி பாடி (?!) முடிப்பான்.

நான் இது மாதிரியான விஷயங்கள்ல எல்லாம் வழக்கமா மாட்டுறது கிடையாது. நாம பேசுறதை வெச்சே நம்ம சாரீரத்தை பற்றி எல்லோரும் தெரிஞ்சிக்கறதுனால யாரும் துணிஞ்சு என்னை பாட சொல்ல மாட்டாங்க!! ஆனா நம்மளோட இசை ஆர்வம் இருக்கு பாருங்க,அது நம்மளையும் அறியாம அப்பப்போ பீறிட்டு வெளியே வந்துடும். அது மாதிரி ஒரு நாள் வந்துதான் ஒரே காமெடியா போயிருச்சு.

இங்க முன்னாடி இருந்த டேமேஜரு ஒரு தமிழ் காரரு. அவருடைய இரட்டை பெண் குழந்தைங்களோட (சுமார் ஐந்து வயசு இருக்கும்) பிறந்ததினத்துக்கு எங்களை எல்லாம் கூப்டிருந்தாரு. ஓசியில ஏதாவது சாப்பிட கிடைக்கும்ங்கற நம்பிக்கைல நாமலும் மொத ஆளா போய் அங்க நின்னுட்டோம். கொஞ்ச நேரத்துல கேக் வெட்டற வைபோகம் எல்லாம் இனிதே நிறைவடைந்த பிறகு அவனவன் எவனாவது பேக்கு கிடைப்பானா ஓட்டறதுக்கு அப்படின்னு கொலைவெறியோட அலைஞ்சுக்கிட்டு இருந்தானுங்க!! இங்கதான் நம்மலோட இசை ஆர்வம் நம்ம கண்ணை மறைச்சிடுச்சு.

எனக்கு எப்பவுமே ஏதாவது ஒரு பாட்டை ஹம் பண்ணிட்டு இருக்கறது அப்படிங்கறது ஒரு பழக்கம். ஏன்னு தெரியாமையே திடீர்னு ஒரு பாட்டு கேக்கனும்னு ஆசை வந்துடும்,அதையே நானும் மனசுக்குள்ள பாட ஆரம்பிச்சிருவேன். அன்னைக்கும் அப்படிதான் கமல் ரஜினி நடித்து,பாலச்சந்தர் இயக்கத்தில் எம்.எஸ்,விஸ்வனாதன் இசை அமைப்பில் உருவான"நினைத்தாலே இனிக்கும்" படத்தில் இருந்து "எங்கேயும் எப்போதும்" அப்படிங்கற பாட்டை ஹம் பண்ணிட்டு இருந்தேன்.

engeyum_eppothum.m...


அருமையான இசை அமைப்பில்,எஸ்.பி.பி யின் மனதை மயக்கும் குரலில் அமைந்த துள்ளளான பாட்டு அது. இளைஞர்களின் துடிப்பும்,எதற்கும் கவலை படாத மனோபாவமும் மிக அழகாக வெளிக்கொண்டு இருப்பார்கள் இசை அமைப்பாளரும்,பாடகரும்.

“தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு
திக்குகள் எங்கிலும் ஓடிக்கொண்டு
வரவை மறந்து செலவு செய்து
உயரப்பறந்து கொண்டாடுவோம்"

இப்படி வரிகளும் பாடலின் கருத்துக்கு ஏற்றார்போல் நச்சென்று இருக்கும்.
பாடல் ஆரம்பிக்கும் விதமே அட்டகாசமாக இருக்கும்,சரி சரி நான் என் மனதை பிடித்த பாடல்களை எல்லாம் பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டேன்,அதனால் நாம் கதைக்கு திரும்ப வருவோம்.

இப்படியாக நான் இந்த பாட்டை ஹம் பண்ணிக்கொண்டிருந்ததால் பார்ட்டிக்கு வந்த கொலைவெறிப்படைக்கு குஷி தாங்க வில்லை. "சீ.வீ.ஆர்!! இவ்வளவு இனிமையாக ஹம் பண்ணுகிறீர்களே,எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்களேன்" என்று அன்பொழுக கேட்டார்கள்.

“எலே பசங்களா!! நீங்க கேட்டா நானும் பாடிடுவேன் அப்புறமா உங்களூக்கு தான் கஷ்டம்" அப்படின்னு நல்ல மாதிரியா சொல்லி தப்பிச்சேன். சரின்னு அவிங்களும் வேறு எவனாவது கெடைப்பானானு பார்க்க ஆரம்பிச்சிட்டாய்ங்க!! ஆனா நம்மளால ஹம் பண்ணுறத நிறுத்த முடியலை.

என்ன பண்ணுறது நம்ம இசை ஆர்வம் அப்படி!! ஹி ஹி!! இவனுங்க வேற எவனையாவது பிடிக்கறதுக்கு பதிலா என் தலையிலேயே மிளகாய் அரைக்கலாம்னு திரும்பி என் கிட்ட வந்துட்டாங்க!!
என்னை இது மாதிரி எவனும் முன்ன பின்ன பாட சொல்லி கேட்டது இல்லை.சரி உண்மையாவே நம்ம குரல் நல்லா இருக்குன்னு தான் கேக்குரானுங்க போல அப்படின்னு நானும் பாட ஆரம்பிச்சுட்டேன்.

“எங்கேயும் எப்போதும்
சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால்
சாத்திரங்கள் ஓடி விடும்
கட்டழகு பொண்ணிருக்கு
வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை
ராராரரீரீரீ ஓஓஓஹோ"
அப்படின்னு பாடி முடிச்சேன்.

ஒரு அஞ்சு வயசு பெண் குழந்தை பிறந்தநாளுக்கு பாட வேண்டிய பாட்டாயா இது?? பாட ஆரம்பிச்ச அப்புறம்தான் பாட்டோட அர்த்தம் பற்றி எல்லாம் நான் யோசிக்க ஆரம்பிச்சேன்.

டேமேஜரும் அவிங்க மனைவியும் ஒரு மாதிரி மொறைக்க ஆரம்பிச்சுட்டாங்க!! பாட சொல்லி மொக்க போட்ட கொலை வெறி படைக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியலை. அங்க வந்த தமிழ் தெரியாத மக்கள் எல்லாம்,எல்லோரும் ஏன் எப்படி பேயறைஞ்ச மாதிரி நிக்கிறாங்கன்னு புரியாம முழிக்கறாய்ங்க!! ஒரே தமாசு தான் போங்க,நானும் பாடி முடிச்சிட்டு நிலைமையை சமாளிக்க ஹி ஹி அப்படின்னு இளிச்சு வெச்சேன்.
இந்த நிகழ்வுனால அடுத்த ஆப்புரேசல் எனக்கு எப்படி நடந்திருக்கும் அப்படின்னு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன். எது எப்படியோ இந்த மேட்டர் நடந்த அப்புறமா எவனும் என்னை பாட சொல்லி கேக்குறது இல்லை. நான் ஏதாவது பாட்டை பத்தி பேச ஆரம்பிச்சா கூட ஒரு பின் கோடு தள்ளி ஓடி போயிடறாங்க!! என்னவோ போங்க
எல்லாம் இறைவன் செயல்!! :-)

40 comments:

Anonymous said...

செய்யறது எல்லாம் செஞ்சுபுட்டு இறைவன் செயலா?

Anonymous said...

//எங்கேயும் எப்போதும்
சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால்
சாத்திரங்கள் ஓடி விடும்
கட்டழகு பொண்ணிருக்கு
வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை
ராராரரீரீரீ ஓஓஓஹோ"
அப்படின்னு பாடி முடிச்சேன்.//

அனுபவ பாட்டா?

MyFriend said...

அடடா.. துர்கா.. இன்னைக்கு இங்கேயும் முந்திக்கிட்டீங்களா?? ;-)
வாழ்த்துக்கள்!

MyFriend said...

தலைப்பை பார்த்ததுமே CVR பாட்டு பாட போறார் என்ற ஆர்வம்.. ;-)

MyFriend said...

அண்ணே, உங்க எழுத்துல ரொம்பவே முன்னேற்றம்.. உங்க கிட்ட இருந்து நான் கத்துக்க நிறைய விஷயம் இருக்கு.. :-)

வாழ்த்துக்கள்..

CVR said...

@துர்கா
//அனுபவ பாட்டா? //
இருக்கலாம்!! அதை பாட்டை எழிதின கண்ணதாசனைதான் கேக்கனும்!! :-)

@மை ஃபிரண்ட்
//அண்ணே, உங்க எழுத்துல ரொம்பவே முன்னேற்றம்.. உங்க கிட்ட இருந்து நான் கத்துக்க நிறைய விஷயம் இருக்கு.. :-)

வாழ்த்துக்கள்.. //
ரொம்ப நன்றி.முன்னேற்றம்னு ஏதாவது இருந்தா அதுக்கு உங்களை மாதிரி நண்பர்கள் ஊக்குவிப்பு தான் காரணம்.

மு.கார்த்திகேயன் said...

இப்போதைக்கு வருகைப் பதிவு.. அப்புறமா வந்து படிக்கிறேன்

வெட்டிப்பயல் said...

CVR,
உங்கள பாராட்டற அளவுக்கு நாம பெரிய ஆள் இல்லை... ஒரு ரசிகனா ஓரமா இருந்து ரசிக்கிறேன்...

பட்டையை கிளப்பவும் :-)

வெட்டிப்பயல் said...

//அதுல இருக்கறதுலயே கேனையனா எவன் இருக்கான்னு கண்டு பிடிச்சு அவன பாடு பாடுனு (கெட்ட வார்த்தை இல்லீங்கன்னா) ஓட்டி எடுக்க ஆரம்பிச்சிருவாங்க!!//

எப்படி இப்படி எல்லாம்???

தானா வருதா???

CVR said...

@வெட்டி
//உங்கள பாராட்டற அளவுக்கு நாம பெரிய ஆள் இல்லை... ஒரு ரசிகனா ஓரமா இருந்து ரசிக்கிறேன்...
//
இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா தலைவா??
வருக்கைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி வெட்டி!
:-)

SathyaPriyan said...

//
டேமேஜரும் அவிங்க மனைவியும் ஒரு மாதிரி மொறைக்க ஆரம்பிச்சுட்டாங்க!!
//
அடுத்த அப்புரைசல்லெ ஆப்பு வாங்கின கத அடுத்த பதிவா தலைவா??

CVR said...

//அடுத்த அப்புரைசல்லெ ஆப்பு வாங்கின கத அடுத்த பதிவா தலைவா?? //

நான் ஆப்புரேசல் வாங்கின கதையெல்லாம் ஒரு பதிவுல முடிக்க முடியாது தலைவா!! அததான் மூனு வருஷமா ஒவ்வொரு அறு மாசமும் வாங்கிட்டு இருக்கேனே!! :-D

Premma said...

சினிமா பாட்டு அப்படி இருந்தா நீங்க என்ன செய்வீங்க பாவம்?

Anonymous said...

//இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா தலைவா??
வருக்கைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி வெட்டி!
:-) //

நானும் ரெண்டு மறுமொழிகள் போட்டு இருக்கேன் எனக்கு இந்த 'மிக்க நன்றி' எல்லாம் கிடைக்க வில்லையே!!சிவிஆர் இந்த மாதிரி ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று பரபட்சம் பார்த்தால் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்

Anonymous said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
அடடா.. துர்கா.. இன்னைக்கு இங்கேயும் முந்திக்கிட்டீங்களா?? ;-)
வாழ்த்துக்கள்!
//

யக்கா எல்லாம் இன்னைக்கு மட்டும்தான்;-) ஏதோ அதிர்ஷ்டம் :-))

Anonymous said...

//@துர்கா
//அனுபவ பாட்டா? //
இருக்கலாம்!! அதை பாட்டை எழிதின கண்ணதாசனைதான் கேக்கனும்!! :-)//

ஓ நான் கூட நீங்க அடிக்கடி pub பக்கம் எல்லாம் போவீங்க இல்ல.அதுனாலதான் இந்த பாட்டை எல்லாம் பாடினீங்கன்னு நினைச்சேன்

Anonymous said...

// மு.கார்த்திகேயன் said...
இப்போதைக்கு வருகைப் பதிவு.. அப்புறமா வந்து படிக்கிறேன் //

attendence போடுவதில் 'தல' ஐ வெட்டிக்க முடியாது போல ;-)

மு.கார்த்திகேயன் said...

/பாவம் அவனும் ஆரம்பிச்ச பாவத்துக்காக முக்கி முனகி பாடி (?!) முடிப்பான்.
//

அடபாவிகளா! மனுஷனை இப்படியா ஓட்டுறது..ஹ்ம்ம்

மு.கார்த்திகேயன் said...

/எது எப்படியோ இந்த மேட்டர் நடந்த அப்புறமா எவனும் என்னை பாட சொல்லி கேக்குறது இல்லை//

இளையராஜா, தேடிகிட்டு இருக்கார்ன்னு நினைக்கிறேன் CVR

மு.கார்த்திகேயன் said...

//attendence போடுவதில் 'தல' ஐ வெட்டிக்க முடியாது போல ;-) //

துர்கா, நம்மளை இப்படி போட்டு கொடுக்குறீங்களே.. நியாயமா

Anonymous said...

//துர்கா, நம்மளை இப்படி போட்டு கொடுக்குறீங்களே.. நியாயமா //

என்ன தல!இது எல்லாம் உங்க வாழ்க்கையில சகஜம்.நான் என்ன பொய்யா சொன்னேன்:) உண்மையைதானே சொன்னேன்

CVR said...

@பிரேமா
//சினிமா பாட்டு அப்படி இருந்தா நீங்க என்ன செய்வீங்க பாவம்? //

ரைட்தானே பிரேமா,நீங்களே சொல்லுங்க!! :-)

@துர்கா
//நானும் ரெண்டு மறுமொழிகள் போட்டு இருக்கேன் எனக்கு இந்த 'மிக்க நன்றி' எல்லாம் கிடைக்க வில்லையே!!சிவிஆர் இந்த மாதிரி ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று பரபட்சம் பார்த்தால் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் //

ஐயோ அக்கா!! நீங்க ஏன் கோபப்படறீங்க!! நீங்க கொடுக்கற ஊக்கத்துக்கும் உற்சாகத்துக்கும் சாதாரணமா ஒரு நன்றி சொன்னா "understatement"-ஆ போயிடுமேன்னுதான் அதை விட பெரிய வார்த்தையை தேடிக்கிட்டு இருக்கேன். ஆனா என் நன்றி உணர்வை சொல்லுவதற்கு எனக்கு வார்த்தையே கிடைக்கவில்லை.
நீங்க தயவு செய்து தப்பாக எடுத்துக்காதீங்க!! :-)

//ஓ நான் கூட நீங்க அடிக்கடி pub பக்கம் எல்லாம் போவீங்க இல்ல.அதுனாலதான் இந்த பாட்டை எல்லாம் பாடினீங்கன்னு நினைச்சேன் //
ஆஹா!! எனக்கு குடி பழக்கமே கிடையாது அக்கா!! ஏன் இப்படி புரளி எல்லம் கிளப்பி விடறீங்க!! :D

@கார்த்தி
//இளையராஜா, தேடிகிட்டு இருக்கார்ன்னு நினைக்கிறேன் CVR //
ஆஹா!! நீங்களும் இப்போ கலாய்க்க ஆரம்பிச்சுட்டீங்களா கார்த்தி!! :-)

Anonymous said...

//ரைட்தானே பிரேமா,நீங்களே சொல்லுங்க!! :-)//

துர்கா பொறுமை...!!

//ஐயோ அக்கா!! நீங்க ஏன் கோபப்படறீங்க!! நீங்க கொடுக்கற ஊக்கத்துக்கும் உற்சாகத்துக்கும் சாதாரணமா ஒரு நன்றி சொன்னா "understatement"-ஆ போயிடுமேன்னுதான் அதை விட பெரிய வார்த்தையை தேடிக்கிட்டு இருக்கேன். ஆனா என் நன்றி உணர்வை சொல்லுவதற்கு எனக்கு வார்த்தையே கிடைக்கவில்லை.
நீங்க தயவு செய்து தப்பாக எடுத்துக்காதீங்க!! :-)//

பெருசா சிங்கப்பூர் டாலர் கொடுக்கவும்.நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

//ஆஹா!! எனக்கு குடி பழக்கமே கிடையாது அக்கா!! ஏன் இப்படி புரளி எல்லம் கிளப்பி விடறீங்க!! :D//

வீட்டில் தண்ணி குடிப்பது எல்லாம் குடிப்பது இல்லையா?

////இளையராஜா, தேடிகிட்டு இருக்கார்ன்னு நினைக்கிறேன் CVR //

என்னை மாதிரிதான் இருக்கனும் தல.

CVR said...

@துர்கா
இன்னைக்கு ஒரு முடிவோட தான் கிளம்பியிருக்கீங்க போல இருக்கு?? :-)

Dreamzz said...

//எவன் இருக்கான்னு கண்டு பிடிச்சு அவன பாடு பாடுனு (கெட்ட வார்த்தை இல்லீங்கன்னா) ஓட்டி எடுக்க ஆரம்பிச்சிருவாங்க//

சரியா சொன்னீங்க! தாங்கமுடியாது!

Dreamzz said...

//எப்படிலே போய்ட்ருக்கு??”,”இன்னைக்கு குமுதத்துல நமீதா போட்டோ ஓன்னு போட்டுருக்காக,அதை பார்த்தியாலே??” அப்படின்னு அதிமுக்கியமான விஷயங்களை அவன் பாடிட்டு இருக்கும்போதே பேச ஆரம்பிச்சிருவாங்க!!//

இத விட வேற என்ன முக்கியமான விஷயம் இருக்கும் என நினைக்கிரீங்க?

Dreamzz said...

//ராத்திரிகள் வந்துவிட்டால்
சாத்திரங்கள் ஓடி விடும்//
அடப்பாவிகளா! இதயா பாடினிங்க!
கவுத்துபுட்டீங்களே!
//எது எப்படியோ இந்த மேட்டர் நடந்த அப்புறமா எவனும் என்னை பாட சொல்லி கேக்குறது இல்லை///
LOL!

MyFriend said...

@துர்கா|thurgah said...
////இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா தலைவா??
வருக்கைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி வெட்டி!
:-) //

நானும் ரெண்டு மறுமொழிகள் போட்டு இருக்கேன் எனக்கு இந்த 'மிக்க நன்றி' எல்லாம் கிடைக்க வில்லையே!!சிவிஆர் இந்த மாதிரி ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று பரபட்சம் பார்த்தால் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்
//

துர்கா, இது 100% ரைட்.. கொஞ்சம் நல்ல கேளுங்க இவரை....

கோபிநாத் said...

\\“எங்கேயும் எப்போதும்
சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால்
சாத்திரங்கள் ஓடி விடும்
கட்டழகு பொண்ணிருக்கு
வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை
ராராரரீரீரீ ஓஓஓஹோ"
அப்படின்னு பாடி முடிச்சேன்.\\

என்ன ஒரு அருமையான வரிகள் ;-)))
இந்த பாடல் Recording பற்றி எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஆனந்த விகடனில் சொல்லியிருப்பார்.

எம்.எஸ்.வி மெட்டை சொல்ல சொல்ல சும்மா டக்கு டக்குன்னு வரிகளை சொல்லிக்கிட்டே போவாறாம் கண்ணதாசன். அவர் சொன்ன வரிகளை அப்படியே எழுதிக் கொண்டுயிருந்தராம் பஞ்சு அருணசலாம் அவர்கள்.

கோபிநாத் said...

\\ஒரு அஞ்சு வயசு பெண் குழந்தை பிறந்தநாளுக்கு பாட வேண்டிய பாட்டாயா இது?? \\

CVR நகைச்சுவையில் கலக்குறிங்க ;-)))

CVR said...

@Dreamzz
//அடப்பாவிகளா! இதயா பாடினிங்க!
கவுத்துபுட்டீங்களே!//

எல்லாம் நம்ம நேரம்யா நேரம்!! :-D

@மை ஃபிரண்ட்
//துர்கா, இது 100% ரைட்.. கொஞ்சம் நல்ல கேளுங்க இவரை.... //

ஆகா!!!
இவிங்க ஒரு க்ரூப்பாதான்யா கிளம்பியிருக்காய்ங்க!! :-)))

@கோபிநாத்
//எம்.எஸ்.வி மெட்டை சொல்ல சொல்ல சும்மா டக்கு டக்குன்னு வரிகளை சொல்லிக்கிட்டே போவாறாம் கண்ணதாசன். அவர் சொன்ன வரிகளை அப்படியே எழுதிக் கொண்டுயிருந்தராம் பஞ்சு அருணசலாம் அவர்கள். //

அருமை!!
கண்ணதாசன் என்கிற மேதையை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு போகலாம்!! :-)

//CVR நகைச்சுவையில் கலக்குறிங்க ;-)))//
நன்றி கோபிநாத்!! :-) (துர்காக்கா கண்டுக்காதீங்க!! :-D)

Sowmya said...

First time into ur blog. Nice to see such a thamizh blog :)

Very good post too

CVR said...

@சௌம்யா
நன்றி!! :-)

Anonymous said...

எளிய நண்பனே..
என் முகத்தில்.. புன்னகை வந்தது..
உங்கள் பதிவு பார்த்து..!

:-)
நேசமுடன்..
-நித்தியா

Anonymous said...

////CVR நகைச்சுவையில் கலக்குறிங்க ;-)))//
நன்றி கோபிநாத்!! :-) (துர்காக்கா கண்டுக்காதீங்க!! :-D) //

முயற்சி பண்ணுறேன் தம்பி.வெட்டிக்கு நன்றி,கோபிக்கு நன்றி,மற்றும் இந்த பதிவு படித்தவர்களுக்கு எல்லாம் நன்றி.ஆனால் உங்களுக்காக உங்களைக் காலை வாரி விடும் அக்காவுக்கு மட்டும் நன்றியே இல்லை!!இதுதான் உலகம்

@மை ஃபிரண்ட்
//துர்கா, இது 100% ரைட்.. கொஞ்சம் நல்ல கேளுங்க இவரை.... //

அக்கா நான் உங்க தங்கச்சி.தப்பு செய்து கொண்டிருக்கும் தம்பிக்கு கண்டிப்பாக அந்த தவறை உணர்த்தியே தீருவேன் அக்கா.உங்கள் வார்த்தை எனக்கு வேத வாக்கு :-)))

//ஆகா!!!
இவிங்க ஒரு க்ரூப்பாதான்யா கிளம்பியிருக்காய்ங்க!! :-)))//

தம்பி நான் மட்டும்தான் இப்பொழுது இருக்கேன்.இன்னும் அதிகமாக பேசுங்கள்.ஒரு க்ரூப்பே வரும்.சொல்லிப்புட்டேன்.ஆமா!!

நாகை சிவா said...

ரொம்ப அருமையான பாட்டு அது, அடிக்கடி நான் கேட்கும் பாட்டும் கூட......

கடமைனு வரும் போது இடம், பொருள், ஏவல் எல்லாம் எதுக்கு....

சுப.செந்தில் said...

ஹா ஹா உண்மையிலயே இதப் படிக்கும்போது சிரிப்பு வந்து சிரிச்சிட்டேன் சுத்தி இருக்கிறவங்க எல்லாம் என்ன ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சாட்டாங்க!

சுப.செந்தில் said...

அதுலயும் அந்த கொலைவெறிப் படை மறுபடியும் உங்களை தேடி வந்ததை நெனச்சு சிர்ச்சேன் பாருங்க!
:) Nice Life Story

இம்சை அரசி said...

ஹி... ஹி...

படிக்க ஆரம்பிச்சதும் ஜி-யும் நானும் போடப் போற பாப் ஆல்பத்துல பாடறதுக்கு யாராவது கிடைப்பாங்களானு தேடிட்டிட்டு இருந்தோமே... பேசாம இவரையே பாட வச்சிடலாமானு ஒரு மாஸ்டர் ப்ளானே போட்டுட்டேன். கடைசிலதான் உண்மை தெரிஞ்சது. நல்லவேளை தப்பிச்சோம்டா சாமினு ;)

CVR said...

@துர்கா
ஐயோ அக்கா!! ஆளை விடுங்க!! :-))

@நாகை சிவா

ரைட்டுதான் தல!! எனக்கும் இது ரொம்ப பிடிச்ச பாட்டு!! அதுனால தான் எக்குதப்பா மாட்டிகிட்டேன்!! :-D

@செந்தில்
வாங்க செந்தில்!!
உங்களுக்கு இந்த பதிவு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி!! :-)

@இம்சை மேடம்
வாங்க வாங்க!! எங்கே ரொம்ப நாளா காணோம்?? அதான் உங்களுக்கு மருதம் மாதிரி நல்ல பாடகர்களே பாடறதுக்கு காத்துக்கிட்டு இருக்காங்களே,அப்புறம் எதுக்கு என்னை வம்புக்கு இழுக்கறீங்க?? :-)

Related Posts Widget for Blogs by LinkWithin