நில் கவனி கேன்சர் - பாகம் 4 (நிறைவு பாகம்)

போன பகுதியில் இந்த நோய்க்கான சிகிச்சை முறைகளையும்,இந்த நோய் வந்தா அதன் அறிகுறிகள் என்னென்ன மற்றும் இந்த நோய் உள்ளதென்று எப்படி உறுதிப்படுத்திக்கலாம் என்பதையும் பாத்தோம்.
இந்த பகுதியில இந்த நோயிடம் இருந்து தப்பிக்க நாம என்னெவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள்:
கேன்சரை தவிர்க்கவேண்டும் என்றால் கேன்சருக்கு காரணமான carcinogens-களை முடிந்த அளவுக்கு தவிர்ப்பது தான் புத்திசாலித்தனம்.அப்படி நாம் சிந்திக்கும்போது நமது நினைவில் முதலில் வரும் பொருட்கள் இந்த குடிப்பழக்கம் மற்றும் புகை பழக்கமும் தான். நுறையீரல் புற்றுநோய் வந்த ஆண்களின் 90% பேர் புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. புகைப்பழக்கம் மட்டுமல்லாது குட்கா,பன்மசாலா போன்ற புகையிலை சம்பந்தமான மற்ற பழக்கங்களையும் அறவே நிறுத்துவது இந்த நோயை தவிர்ப்பதில் பெரிய பங்கு வகிக்கின்றன.

உணவப்பழக்கம்:
ஒழுங்கா வேளைக்கு சாப்பிடறது நாம நிறைய பேர் அலட்சியமா எடுத்துக்கற ஒரு விஷயம்.ஆனா நாம எளிமையா கையாளக்கூடிய இந்த பழக்கத்தினாலேயே பல நோய்கள் அண்டாம நிம்மதியா ஆரோக்கியத்தோட வாழலாம்.உணவில் கனி காய்கறிகளை சேர்த்துக்கொள்வது,நொருக்கு தீனியை குறைத்து ஒழுங்கான உணவு வகைகளை சாப்பிடுவது,நிறைய தண்ணீர் குடிப்பது போன்றவை நமது உணவுமுறையில் நாம் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டிய பழக்கங்கள்.உணவுமுறை பற்றி ஷாலினி அவர்கள் போட்டிருக்கற பதிவையும் அதில் அவங்க கொடுத்திருக்கற சுட்டிகளையும் வேணா ஒரு சுத்து பாத்துட்டு வந்திருங்க! :-)

உடல் பருமன்:
மாறி வரும் நமது வாழ்க்கை சூழலில் நாம் அன்றாடம் இங்கும் அங்கும் நடந்து போவதே மிகவும் குறைந்து விட்டது.கடைசியாக எப்பொழுது ஓடினோம் என்றே நினவில் இல்லை.அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் நிலை இன்னும் மோசம்.வீட்டிலிருந்து கார்,காரிலிருந்து அலுவலகம்,அலுவலகத்தில் இருந்து கார் என்று எண்ணி ஒரு நாளுக்கு 100 - 200 அடிகளுக்கு மேல நடப்பதே இல்லை.இதனால் உடல் பருமன் அதிகமாக நம் உடல் வாகு மோசமாவதோடு புற்றுநோய் போன்ற வியாதிகளுக்கும் உங்கள் உடல் தோரணம் கட்டி வரவேற்க ஆரம்பித்து விடுகிறது.
வளர்ந்த நாடுகளில் உள்ளது போல் உடற்பயிற்சி பற்றி அவ்வளவாக நம் நாட்டில் விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. ஜிம் என்றாலே ஏதோ ஆர்னால்டு ஷிவாஜிநகர்(:P) போன்ற பயில்வான்கள் மட்டுமே செல்லும் இடம் என்ற எண்ணம் இன்னும் பலர் நெஞ்சில் உறுதியாக உள்ளது. உடற்பயிற்சி கூடம் செல்ல முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் நடைபழக்கமாவது தொடர்ந்து செய்யும் பழக்கத்தை உருவாக்கிக்கொண்டால் நீரிழிவில் இருந்து புற்றுநோய் வரைக்கும் பல நோய்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டலாம்.
கூடவே தொப்பையையும் குறைக்கலாம்!!

மருத்துவ பரிசோதனை:
முறையாக மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்வது இந்த நோயை சீக்கிரமே அறிந்துக்கொள்ள பெருமளவு உதவும். இரண்டாம் பகுதியின் பின்னூட்டத்தை பார்த்தால் இந்த நோய்க்கு அவ்வளவாக பெரிய அறிகுறிகள் இல்லாததால் இதை சீக்கிரமே அறிய முடிவதில்லை என்று பலர் கூறியிருப்பதை பார்க்கலாம்.இதனால் நாமே சென்று அவ்வப்போது பரிசோதனை செய்துக்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகிவிடுகிறது.போன பதிவின் பின்னூட்டத்தில்,் நியூசீலாந்தில் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை பெண்கள் கட்டாயமாக மார்பகப்புற்று நோய்க்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ,ஐம்பது வயது மேற்பட்டோருக்கு இந்த பரிசோதனையின் செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்றும துளசி டீச்சர் தெரிவித்தார்.பரிசோதனை மையத்திற்கு போகாவிட்டாலும் சென்ற பதிவில் குறிப்பிட்டது போல் பெண்கள் தாமாகவே பரிசோதனைகளை செய்துக்கொள்வது இந்த நோயை சீக்கிரம் கண்டுபிடிக்க உதவும்.

தொடர்ந்து வரும் அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்:
ஒருவருக்கு தொடர்ந்து இருமல் ,பேதி,எடை குறைவு,காரணமில்லாமல் உடல் சோர்வு போன்றவை இருந்தால் அலட்சியப்படுத்தாமல் இருப்பது நன்று.எனக்கு தெரிந்த ஒரு நண்டரின் உறவினர் ஒருவர் மார்பகப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவர் முதலில் தன் உடலில் கொஞ்சம் வீக்கம் இருப்பதை தெரிவித்தபோது ஏதாவது கட்டியாக இருக்கும் என்று தட்டிக்கழித்து விட்டார்களாம்.என்னடா ஒரே பூச்சாண்டி காட்டுகிறானே என்று நினைக்க வேண்டாம்.நம்மிடையே விழிப்புணர்வு இல்லாததால் தவிர்க்கக்கூடிய பல வலிகளை நாம் தேவையில்லாமல் வரவைத்துக்கொண்டிருக்கிறோம் என்று தெளிவுபடுத்தவே இதை கூறுகிறேன்.
இதற்காக நாளையே ஏதாவது தும்மல் இருமல் வந்தால் புற்றுநோயாக இருக்குமோ என்று பயந்து விடவேண்டும் என்று அர்த்தமில்லை.ஆனால் நாளைக்கே இந்த நோய் வந்தாலும் கூட தைரியமாக போராடவும்,அதை தவிர்க்ககூடிய வழிமுறைகளை தெளிவாக தெரிந்துக்கொண்டு சந்தோஷமாக வாழவும்தான் இந்த பதிவு.

இந்தப்பதிவை நிறைவு செயவதற்குமுன் இன்றைக்கு நான் பெற்ற ஒரு செய்தி.காயத்ரி என்ற இரண்டு குழந்தைகளின் தாய் ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவரின் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இவரை பற்றி மேலும் தகவல் அறிய இந்த சுட்டிக்கு சென்று பார்க்கவும் .
இந்த பெண்மணிக்கு அமெரிக்காவில் இருக்கும் எவரேனும் உதவி செய்ய விரும்பினால்ஆர்க்குட் அமெரிக்க தமிழர்கள் குழுமம் மூலமாகவும் உதவலாம்!!

இந்த பதிவுத்தொடர் உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.மேலும் வருங்காலத்தில் கேன்சரை பற்றி யாரேனும் அறியவிரும்பினால் அவர்களுக்கு முழுமையான அறிமுகப்பதிவாகவும் மற்றும் பொதுவான விழிப்புணர்வு பதிவாகவும் இந்த தொடர் அமைந்தால் மகிழ்ச்சி!!
ஒவ்வொரு பதிவுக்கு ஆதரவளித்து ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது கோடானுகோடி நன்றிகள்!!
வாழ்க வளமுடன்,வாழ்க வையகம்! :-)

நில் கவனி கேன்சர் - பாகம் 1

நில் கவனி கேன்சர் - பாகம் 2

நில் கவனி கேன்சர் - பாகம் 3

25 comments:

கப்பி | Kappi said...

இந்த தொடர்ல பயனுள்ள பல தகவல்களை எளிமையா சுவாரசியமான முறையில் தந்திருக்கீங்க..நன்றி அண்ணாத்த!!

வாழ்க! வளர்க!!

கோபிநாத் said...

நன்றி தல ;)

துளசி கோபால் said...

நல்ல பதிவு. நன்றி.

ரத்தப்புற்றுநோய்ன்னதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருது. இங்கே ஒரு அக்காவின் மகனுக்கு வந்து சிகிச்சை எடுத்துக்கிட்டார். இப்ப நல்லா இருக்கார்.
அஞ்சுவருசம் முன்பு நெட்லே சந்திச்ச பொண்ணைக் கல்யாணம் கட்டி இருக்கார்.

இன்னொரு தோழியின் மாமியார் நுரையீரல் புற்று. அவர்களுக்குப் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை. பயாப்ஸியில் விவரம் தெரிஞ்சது. எண்ணி மூன்றே மாதங்கள். அந்த சமயம் நான் தினமும் அவுங்களுக்கு சிலமணிநேரம் கம்பெனி கொடுத்துக்கிட்டு இருந்தேன். அவுங்க பட்ட சிரமத்தைக் கண்ணால் பார்த்தது எனக்கு ரொம்பக் கஷ்டமாப்போச்சு.

நோய் வராம முன் ஜாக்கிரதையா இருக்கணும் என்பது முக்கியமுன்னா, தப்பித்தவறி நோய் வந்துட்டா....மனம் கலங்காம தைரியமா இருக்கணும் என்பது அதைவிட முக்கியம்.

SathyaPriyan said...

//
இந்த பதிவுத்தொடர் உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
//
நிச்சயமாக. அதில் சந்தேகமா என்ன?

//
மேலும் வருங்காலத்தில் கேன்சரை பற்றி யாரேனும் அறியவிரும்பினால் அவர்களுக்கு முழுமையான அறிமுகப்பதிவாகவும் மற்றும் பொதுவான விழிப்புணர்வு பதிவாகவும் இந்த தொடர் அமைந்தால் மகிழ்ச்சி!!
//
கேன்சர் எயிட்ஸை போலவே மிகவும் கொடியதொரு நோய். அதனை பற்றிய ஒரு விழிப்புணர்வு தொடராக இது நிச்சயம் அமையும். கல்வி, செல்வம், புகழ், பதவி போன்றவற்றைவிட விலை மதிப்பில்லாதது ஆரோக்கியமான உடல் நலமே. இதனை படிக்கும் ஒருவராவது புகை பிடிப்பது போன்ற உடலுக்கு தீங்கான பழக்கங்களை கைவிட்டால் அதுவே இந்த தொடரின் வெற்றி.

இதை போன்ற பல தொடர்களை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன்.

Anonymous said...

As usual you done an excellent post. Lots of good info.

Ravi

Divya said...

தெளிவான தகவல்கள்,
எளிமையான நடையில்...
பயனுள்ள பதிவாக,
விழிப்புணர்வை ஏற்படுத்தியது..
மனமார்ந்த பாராட்டுக்கள் சிவிஆர் !!

சிரமெடுத்து நீங்கள் செய்யும் இவ்வித பதிவு முயற்சிகள் தொடரட்டும்....பலர் பயனடையட்டும்!! வாழ்த்துக்கள்.

Sanjai Gandhi said...

அண்ணே.. என்னங்ணே இப்படி பயமுறுத்தறிங்க? குடி மற்றும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லைனு சந்தோஷ பட்டு முடிக்கிறதுகுள்ள இந்த உணவு மற்றும் உடற்பயிற்சி பழக்கத்த பத்தி சொல்லி வயித்துல புலிய கரைச்சிட்டிங்களே. :( இனியாவது சரியான நேரத்துக்கு சாப்பிட முயற்சிக்கிறேன். 8.30கு எழுகிற பழக்கத்த மாத்தி 7 மணிக்கு எழுந்து நடக்க முயற்சி பன்றேன். விழிப்புணர்வு உண்டாக்கும் அருமையான பதிவு. ஒரு பெரிய சபாஷ் உங்களுக்கு. :)

Dreamzz said...

//இந்த தொடர்ல பயனுள்ள பல தகவல்களை எளிமையா சுவாரசியமான முறையில் தந்திருக்கீங்க..நன்றி அண்ணாத்த!!
//
ரிப்பீட்டு!

நிவிஷா..... said...

nice informative post.

natpodu
nivisha

ஷாலினி said...

//அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் நிலை இன்னும் மோசம்.வீட்டிலிருந்து கார்,காரிலிருந்து அலுவலகம்,அலுவலகத்தில் இருந்து கார் என்று எண்ணி ஒரு நாளுக்கு 100 - 200 அடிகளுக்கு மேல நடப்பதே இல்லை.//


சரியா சொன்னீங்க..
பாகத்து தெருல gym வச்சிகிட்டே போக சோம்பேரித்தனப்படுறது மன்னிக்க முடியாத குற்றம் ;)

புரியுறவங்களுக்கு புரிஞ்சா சரி :P

பல நல்ல உபயோகமான தகவல்கள் புற்றுநோய் பற்றி அலசி அராய்ந்து போட்டிருக்கீங்க.. நன்றியும் வாழ்த்துக்களும்!

CVR said...

@கப்பி பய
ரொம்ப டேங்க்ஸு பா!!
உங்களுக்கு எல்லாம் உபயோகமா இருந்தா ,அதுதான் வேணும்! :-)

@கோபிநாத்
வாங்க தல :-)

@துளசி டீச்சர்
வாங்க டீச்சர்
ரொம்ப சந்தோஷம்!!

//நோய் வராம முன் ஜாக்கிரதையா இருக்கணும் என்பது முக்கியமுன்னா, தப்பித்தவறி நோய் வந்துட்டா....மனம் கலங்காம தைரியமா இருக்கணும் என்பது அதைவிட முக்கியம்.////
மிகச்சரியாக சொன்னீர்கள்!!

நிறைய தகவல்கள் பகிர்ந்துக்கிட்டு இருக்கீங்க!! மிக நன்றி!! :-)

@சத்தியப்ரியன்
//இதனை படிக்கும் ஒருவராவது புகை பிடிப்பது போன்ற உடலுக்கு தீங்கான பழக்கங்களை கைவிட்டால் அதுவே இந்த தொடரின் வெற்றி.///
அதே அதே!! :-)

//இதை போன்ற பல தொடர்களை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன்.///
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! பின்னூட்டங்களால் இது போன்ற பதிவுகள் போட ஊக்கம் கிடைக்கிறது! :-)

@ரவி
//As usual you done an excellent post. Lots of good info.
//
Thanks Ravi

@திவ்யா
வாங்க திவ்யா
//சிரமெடுத்து நீங்கள் செய்யும் இவ்வித பதிவு முயற்சிகள் தொடரட்டும்....பலர் பயனடையட்டும்!! வாழ்த்துக்கள்.///
என் ஆசையும் அதுதான்!! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)

CVR said...

@சஞ்சய்
வாங்க!! நானும் உடற்பயிற்சி எதுவும் தொடர்ந்து செய்ய முடியவில்லை, ஆனால் முடிந்த போது ஜிம் சென்று ட்ரெட்மில்லில் நடப்பது உண்டு.இங்கு குளிர்காலத்தில் வெளியே செல்ல முடியாததால் வேறு வழி இல்லை!! இந்தியா வந்த பிறகு தினமும் நடப்பதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்!! நீங்களும் முயற்சி செய்யுங்கள்!! :-)

@ட்ரீம்ஸ்
:)

@நிவிஷா
நன்றி நிவிஷா

@ஷாலினி
//சரியா சொன்னீங்க..
பாகத்து தெருல gym வச்சிகிட்டே போக சோம்பேரித்தனப்படுறது மன்னிக்க முடியாத குற்றம் ;) ///
ஆமாமாம்!! யாராச்சும் இது மாதிரி செய்தால் அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்றே பொருள்!

//
பல நல்ல உபயோகமான தகவல்கள் புற்றுநோய் பற்றி அலசி அராய்ந்து போட்டிருக்கீங்க.. நன்றியும் வாழ்த்துக்களும்!////

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஷாலினி! :-)

G.Ragavan said...

ரொம்ப அருமையாச் சொல்லீருக்கீங்க.

புகைப்பழக்கம் எனக்கு இருந்ததில்லை. ஆனா குடிப்பழக்கம் இருந்தது. மிகமிக அதிகமாகவே. ஆனா அதையும் விட்டாச்சு.

நீங்க சொன்ன மாதிரி உடற்பயிற்சி மிக முக்கியம். இங்க உடற்பயிற்சி நிலையங்கள்ள...வயதானவங்க கூட வந்து முடிஞ்ச பயிற்சிகளைச் செய்றாங்க. மிகவும் பாராட்டுக்குறியது.

// ஷாலினி said...
//அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் நிலை இன்னும் மோசம்.வீட்டிலிருந்து கார்,காரிலிருந்து அலுவலகம்,அலுவலகத்தில் இருந்து கார் என்று எண்ணி ஒரு நாளுக்கு 100 - 200 அடிகளுக்கு மேல நடப்பதே இல்லை.//


சரியா சொன்னீங்க..
பாகத்து தெருல gym வச்சிகிட்டே போக சோம்பேரித்தனப்படுறது மன்னிக்க முடியாத குற்றம் ;)

புரியுறவங்களுக்கு புரிஞ்சா சரி :P //

ரொம்பச் சரியாச் சொன்னீங்க ஷாலினி. குறிப்பா தமிழ் இளைஞர்கள் சோற்றுப் பானைக்குள்ள தலைய விட்டுட்டு வயிறையும் பானை மாதிரி ஆக்குறதுல குறியா இருக்காங்களே தவிர...உடற்பயிற்சியில ஆர்வம் காட்டுறதில்லை. அழகு முகத்துல மட்டும் இல்லை.. ஒடம்புலயும் இருக்குங்குற ஒவ்வொருவரும் உணரனும்.

மு.கார்த்திகேயன் said...

தமிழில் இது போல அறிவியல், மருத்துவம் சம்பந்தப்பட்ட பதிவுகள் இல்லை என்ற குறைகளை களைவதில் நீ முதல் ஆளப்பா, சிவிஆர்..

படிக்க நேரமில்லை.. ஆனால் படிக்கவேண்டிய பதிவு.. அவசியம் படிப்பேன்..

C.N.Raj said...

CVR,

Good article for Health awareness.
Dr.CVR MBBS,MS,MD,FRCS vaazhga..

C.N.Raj

CVR said...

@ஜிரா
//இளைஞர்கள் சோற்றுப் பானைக்குள்ள தலைய விட்டுட்டு வயிறையும் பானை மாதிரி ஆக்குறதுல குறியா இருக்காங்களே தவிர///
யாரும் வயிறை பானையா ஆக்கனும்னு எல்லாம் குறியா ஒன்னும் இல்லை!! இந்த காலத்தில் அவ்வளவா உடலுழைப்பு இல்லாத்தினால் அது அப்படி ஆகி விடுகிறது!! இந்தியாவில் உடற்பயிற்சி நிலையங்கள் செல்வது பிரசித்தமாகததால் இந்த நிலை உள்ளது.வருங்காலத்திலாவது அனைவரும் உடற்பயிற்சி நிலையம் செல்லும் நிலை வரும் என நம்புவோம்.


@கனவுலக கார்த்தி
//படிக்க நேரமில்லை.. ஆனால் படிக்கவேண்டிய பதிவு.. அவசியம் படிப்பேன்..///

கண்டிப்பா படிச்சுட்டு சொல்லுங்க அண்ணாச்சி!! :-)

@C.N.Raj
யப்பா ராசா!!
ஏன் இந்த கொலை வெறி??
நாலு வார்த்தை எழுதினா உடனே டாக்டரா?? :-))

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி C.N.Raj!! :-)

Arunkumar said...

Read all 4 parts..
Nice efforts man. Thx !!!

Arunkumar said...

annathe, parts 1,2 and 3-ku links kudunga.. usefula irukkum !!

காட்டாறு said...

அருமையா எல்லாருக்கும் எளிதில் புரியும்படி எழுதியிருந்தீங்க. பாராட்டுக்கள் சிவியார்.

ஒருசில விஷயங்களை பகிர்ந்துக்க விரும்புறேன்:
* மார்பகப் புற்று நோய் பெண்களுக்கு மட்டும் தான் வரும் என்று கொள்ள வேண்டாம். ஆண்களுக்கும் வரும் வாய்ப்பு இருக்கிறது.
* ஆண்களுக்கு Prostrate Cancer பற்றிய awareness இன்னும் சரிவர இல்லை.
* Colon Cancer வர முக்கிய காரணம் நெறைய காஃபி தான்.

காட்டாறு said...

ஒரு வேண்டுகோள்: Prostrate Cancer பத்தியும் பதிவுத் தொடர் எழுதலாமே.

sury siva said...

முதற்கண் எனது மனமுவந்த பாராட்டுக்கள்.
மருத்துவத் துறையில் தமிழ்ப்பதிவுகள் இல்லையே என
நான் நினைத்தபோது துளசி டீச்சர் பதிவு வழியாக இங்கு வந்தடைந்தேன்.
புற்று நோய் தவிர்க்க எதன் மேல் பற்று வைக்கவேண்டும் ?
எதன் மேல் உள்ள பற்றினை தவிர்க்கவேண்டும் என்ற செய்திகளை
சுவாரசியமாக தெரிவித்ததற்கு இளைஞர் சமூகம் முக்கியமாக தங்களுக்கு
நன்றி செலுத்தவேண்டும். காட்டாறு விண்ணப்பித்தது போல ப்ராஸ்டேட்
கான்ஸர் பற்றி எழுதினால், முதியோருக்கு பயன் தருவதாக அமையும்.
தொடர்ந்து எழுதவும்.
நன்றி . ஆசிகள்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பி.கு: நல்ல உணவு, நல்ல பாட்டு, நல்ல உறக்கம், நல்ல ஹாஸ்யம்,
(Good Food,Good Music,Good Humour, Good sleep and Good Business TOO)
எனும் எனது வலைப்பதிவில் இது போன்ற தகவல்களையும் அவ்வப்போது
தருகிறேன். இந்த வலைப்பதிவுக்கு அங்கிருந்து ஒரு இணைப்பு உங்கள்
அனுமதியுடன் தருகிறேன்.
http://menakasury.blogspot.com

CVR said...

@அருண்குமார்
நன்றி அருண்!! நீங்கள் சொன்னது போல சுட்டிகள் கொடுத்தாகிவிட்டது.

@காட்டாறு
நிறைய மேலதிக தகவல்கள் கொடுத்திருக்கீங்க காட்டாறு!!
மிக்க நன்றி!! :-)
prostate cancer பற்றி எழுதும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது!
புற்றுநோய் பற்றிய பொதுவான தகவல்கள் இணையத்தில் தேடி பதிவிட்டேன்,ஆனால் இது சற்றே சிறப்பான தலைப்பு என்பதால் எந்த அளவுக்கு எழுத motivation கிடைக்கும் என்று தெரியவில்லை!
பார்க்கலாம்!! :-)

@சூரி
மிக்க சந்தோஷம்!!
உங்கள் பதிவில் இணைப்பு தருவதற்கு மிக்க நன்றி!! :-)

sri said...

Cancer pathi neraya kathukitten, chinna vaysula ennoda relative auty orudhanga cancer la padhikka pataanga, romba azhga erupaanga, ambila madhir ella velayum seyvaanga, ana cancer vandhu mudi kotti olli ayi , romba kashta patten. appuram ennoda close friend orithyoda amma, avanga romba nalla veenai vasipaanga.avangalum nalla pazhakkam,nenaikkave kashtama erukku... medical field nalla valrudhey seekram marandhu kandu pidikattum.

Vins said...

Hi,

i'm new to your blog.
i'm the directly affected by this terrible Cancer.yes, Recently my husband passed away because of Stomach Cancer in his 32 years.he never smoked.he is not a drinker also.bt about this disease, i was with him during his treatment.

Please don't opt for allopathy treatment like chemotheraphy.since it'll not cure cancer fully or partly.it'll be helpful only when the cancer is in a single place.it its spred then u have to opt for homeopathy or herbal.
they are giving assurance for us.
we found out the disease only 2 and half months before his death.
we tried chemotheraphy and homeopathy in best hospitals only.bt no use.Allopathy doctors won't give u assurance for cancer patients.

its all depend on your body condition, nothing else.
i tell u the symptoms that he got.
first he suffered by nonstopping caugh,trouble in eating food and drinking water and then he felt severe back pain thats the last stage.for him its spread 80% of the body.then only we can find out th.
since before that we can't even a single symptom.and doctors told that they don't know reason for this and also when its started.


Finally i'm telling the best solution, please do regular medical check ups and avoid fatty food items.this will save u from every disease.

and also we can force our govt. to form a best research group for finding Cancer medicines this will save the future of many.Since till now the only that don't have proper medicine to save is cancer only.even for AIDS we found out medicines.but not for this terrible thing.............


if its nething wrong in my post,don't mind that.

capetrader said...

மிக்க நன்றி

Related Posts Widget for Blogs by LinkWithin