தொடக்கம் பாரதியுடன்

நான் தமிழில் ஒன்று ஆரம்பிக்கும் பொழுது அதில் பாரதி இல்லாமல் இருக்க முடியுமா??என் "Orkut" தோற்றத்தில் (profile) கூட இந்த கவிதையை பார்க்கலாம்!!மனுஷன் என்னமா எழுதியிருக்கான்!!!!


நீங்களும் படித்து மகிழுங்கள்

----------------------------------------


தேடிச் சோறு நிதந்தின்று -பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம்

வாடி துன்பமிக உழன்று - பிறர்

வாடப் பல செயல்கள் செய்து - நரை

கூடி கிழப்பருவம் எய்தி - கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல

வேடிக்கை மனிதரை போலே - நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ?!

- மகாகவி சுப்ரமணிய பாரதி

2 comments:

Pradeep said...

சி வி ஆர் .. இந்த வரிகள் பாரதியின் எந்த பாடலில் வருகின்றன ?

CVR said...

எனக்கு தெரிந்த வரை இது ஒரு பாடலின் பகுதி அல்ல ,இதுவே ஒரு தனி கவிதைதான்.இது "மகாநதி" திரைபடத்தில் கூட கமலஹாசன் பாரதியின் கவிதையை படிப்பதாக இடம் பெறும். :)

Related Posts Widget for Blogs by LinkWithin