வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2

வணக்கம் மக்களே!
இரண்டாவது பாகம் போடுறதுக்கு இவ்வளவு நேரம் ஆக்கியதற்கு முதலில் மன்னிக்கனும்.இசை இன்பத்துல கொஞ்சம் வேலை இருந்ததால இந்த பக்கம் வர முடியலை. (ஹி ஹி ,சும்மா ஒரு விளம்பரம்தான்!! :-D)

போன பாகத்துல சூரியன் எப்படி உருவாச்சு அப்படின்னு பார்க்க போய்,பொதுவா நட்சத்திரங்கள் எப்படி உருவாகுது,கிரகங்கள்,துணை கோள்கள் எல்லாம் எப்படி உருவாச்சு அப்படின்னு பார்த்தோம். எதை கேட்டாலும் எல்லாத்துக்கும் தூசு மேகக்கூட்டங்கள் தான் காரணம் அப்படின்னு நானும் சொல்லிட்டு தப்பிச்சிட்டு இருந்தேன் . நீங்களும் டென்ஷனாகி "எலே!! எல்லாத்துக்கும் மேகக்கூட்டம் மேகக்கூட்டம்னு கதை சொல்லுதியேலே!!!இந்த மேகக்கூட்டம் எங்கிட்டு இருந்து வந்துச்சு????"அப்படின்னு அறிவுபூர்வமா ஒரு கேள்வி கேட்டீங்க. அப்போதான் நானும் எஸ்கேப் ஆகிட்டேன்.

இந்த அண்ட வெளியில் இருக்கும் பொருட்கள் எல்லாம் எங்கே இருந்து வந்தது என்பது வெகு காலமாக யாருக்கும் தெரியாமல் இருந்தது. உலகெங்கிலும் உள்ள பல மதங்கள் எல்லாம் தங்கள் கோட்பாட்டுக்கு ஏற்றார்போல் படைப்பின் கதைகளை சொன்னாலும்,விஞ்ஞானப்பூர்வமாக விண்வெளி எப்படி உருவாகியது என்ற தெளிவான அறிவு மனிதனிடம் இருபதாவது நூற்றாண்டு வரை இல்லை. மக்கள் சொல்லி வந்த ஒன்றிரண்டு கோட்பாடுகள் கூட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் இருபதாவது நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க வான்வெளி அறிவியல் புனைவான (invention) "ஹப்பில் தொலைநோக்கி" (Hubble's telescope) முலமாக இந்த விஷயத்தில் ஓரளவு ஒற்று கருத்து ஏற்பட்டது.

அப்படி என்ன தில்லாலங்கடி வேலையை இந்த தொலைநோக்கி செய்து விட்டது என்று கேட்கிறீர்களா?? இப்போ உங்க வீட்டு வாசலுக்கு வந்து வெளியிலே பார்க்கறிங்கன்னு வெச்சுக்கோங்க அப்போ என்ன தெரியும்?? அது வீடு இருக்கற இடத்தை பொருத்தது. பக்கத்து வீடு தெரியும்,நம்ம வீதி தெரியும்,கொஞ்சம் தள்ளி இருக்கற வீதி தெரியலாம். நம்ம வீடு மாடியிலே ஏறி பார்த்தா இன்னும் கொஞ்சம் தள்ளி இருக்கற வீடு எல்லாம் தெரியும். அப்படியே ஊரு பக்கத்துல இருக்கற மலையில ஏறி பார்த்தா ஊரே தெரியும்!!! இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் ஹப்பில் தொலைநோக்கியையே உருவாக்கினாங்க.

எவ்வளவு நாள் தான் கீழே இருந்து வான்வெளியை பார்த்துட்டு இருக்கறது அப்படின்னு மலை முட்டுல போய்ட்டு பெரிய பெரிய தொலைநோக்கிகள் எல்லாம் மக்கள் முதலில் கட்டினார்கள். அங்கேயும் கூட சரியா பார்க்க முடியலைன்ன உடனே,நாம ஏன் வான்வெளிக்கே ஒரு தொலைநோக்கியை அனுப்பி அங்கே இருந்து பார்க்க கூடாதுன்னு முடிவெடுத்தாங்க. அப்படி அனுப்பப்பட்டது தான் ஹப்பில் தொலைநோக்கி. ஹப்பில் தொலைநோக்கியை பத்தியே ஒரு பதிவை போடலாம்,அதனால அதை அப்புறம் பார்க்கலாம். இப்போ நம்ம கதைக்கு வருவோம். இந்த ஹப்பில் தொலைநோக்கி மூலமாக என்ன கண்டுபிடிச்சாங்கன்னா, நம்ம அண்ட வெளியில் உள்ள பொருட்கள் எல்லாம் விரிவடைஞ்சிட்டே இருக்குன்னு.

அதாவ்து பூமிக்கும் நிலாவுக்கும் நடுவுல இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தூரம் இருக்குன்னு வெச்சிக்கோங்க,இதையே நாளைக்கு போய் பார்த்தோம்னா தூரம் அதிகமாகி இருக்கும்,அடுத்த வருஷம் போய் பார்த்தோம்னா இன்னும் அதிகமாகி இருக்கும். இப்படி விரிவடைஞ்சிகிட்டு இருக்கற வேகம் சொற்பமாக இருந்தாலும் காலப்போக்கில் இதன் தீவிரம் அதிமாக தெரியும். இது நிலாவுக்கும் பூமிக்கும் மட்டும்மல்லாது எல்லா வான்வெளி பொருளுக்கும் பொருந்தும். இப்படி எல்லாம் விரிவடைஞ்சிக்கிட்டே போய்ட்ருக்கே அப்போ இன்னைய விட நேத்து பூமியும் நிலாவும் கிட்டக்க இருந்திருக்கும் இல்லையா???
உண்மைதான் இருந்திருக்கும்!!
அப்போ கொஞ்சம் கொஞ்சமா பின்னாடி போய்ட்டே இருந்தா இன்னும் இன்னும் கிட்டக்க போய்ட்டே இருக்கும்ல.
ரைட்டுதான்!!
அப்போ இப்படியே போய்ட்டு இருந்தா என்னிக்காவது ஒரு நாள் இந்த அண்ட வெளியில் உள்ள அனைத்து கோள்கள்,கிரகங்கள்,மேகங்கள் எல்லாமே ஒரு பொருளா பிணைந்து இருக்கும் இல்லையா??
ஆமாம்!!!

அப்போ நாம இப்போ நம்மை சுத்தி பார்த்திருக்கற பொருள் எல்லாமே ஒன்றாக பிணைந்து இருந்து என்னிக்காவது ஒரு நாள் வெடித்து சிதறி இருக்கும். அப்படி வெடித்து சிதறின பொருட்கள்தான் இப்பவும் பல கிரகங்களாகவும்,நட்சத்திரங்களாகவும்,கோள்களாகவும்,தூசு மேகங்களாகவும் பல விதமாக இருந்துகொண்டு, தங்களூடே இடித்துக்கொண்டு,பிணைந்துக்கொண்டு பலவேறு பொருட்களாகவும், நட்சத்திர மண்டலங்கலாகவும் உருமாறிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறது. இப்படி நம்பப்படும் கோட்பாடு தான் "பேரிடி கோட்பாடு"(இதற்கு வேறு தமிழ்ச்சொல் இருக்கிறதா என்று தெரியவில்லை) எனப்படும் "Big bang theory".

இன்றைய நிலையில் அண்டத்தின் உருவாக்கம் பற்றி முக்கால்வாசி அறிஞர்களாலும், விஞ்ஞானிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிந்தாந்தம் இதுதான். இதை விட ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு சிந்தாந்தம் இல்லையே என்பதானால் தான் இதை எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களே தவிர,இது எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் கோட்பாடு அல்ல. இதை பற்றி கேள்வி கேடக வேண்டும் என்றால் பல நூறு கேள்விகள் கேடகலாம்,ஆனால் எல்லாவற்றிற்கும் விடை இருக்குமா?? என்றால் இல்லை!! :-(

உதாரணத்திற்கு எல்லாமே இந்த அண்ட முட்டையான "cosmic egg" இல் இருந்து வெடித்து சிதறியது என்றால் இந்த அண்ட முட்டை எங்கிருந்து வந்தது??? இதற்கு முன்னால் ஏன் சிதற வில்லை?? சிதற வைத்தது எது?? ஏன் இந்த வெளி இவ்வளவு வேகமா விரிவடைந்து கொண்டு இருக்கிறது????
என்று எல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இப்படியே விரிவடைந்து கொண்டே இருந்தால் கடைசியில் என்னதான் ஆகும்???
வல்லுனர்களின் கணிப்பு படி அண்டம் இப்படி விரிவடைந்து போய்க்கொண்டே இருக்குமாம். அண்டத்தின் நிறை (mass) மற்றும் அடர்த்தி(density) இப்படி குறைந்து கொண்டே போக போக ஒரு சமயம் அண்டத்தின் விரிவடைதல் நின்று போகுமாம். பின் விரிவடைந்துக்கொண்டிருந்த அண்டம் சுருங்க ஆரம்பித்து விடும் இப்படியே சுருங்கி சுருங்கி திரும்பவும் அண்ட முட்டையாகி விடும் என்று சில பேர் கூறுகிறார்கள்.
இதற்கு எல்லாம் என்ன சான்று?? நீங்கள் சொல்வது சரி என்று நான் எப்படி நம்ப முடியும்?? என்றால்,எல்லாம் ஒரு நம்பிக்கை தான்!!
ஏன் என்றால் இந்த கோட்பாட்டை தெளிவாக நிரூபிக்க சான்று ஒன்றும் கிடையாது ,முழுமையாக நிரூபிக்கவும் முடியாது.(ஏன் என்பது மிக பெரிய கதை,அதனால் அது இப்பொழுது வேண்டாம்)
விஞ்ஞானத்தின் மூலம் எல்லாவற்றிற்கும் ஆதாரம் தேடும் மனிதனுக்கு சில சமயங்களில் சில விஷயங்களுக்கு ஆதாரமே தராமல் இயற்கை தண்ணி காட்டி விடுகிறது. மனிதனும் முயன்று கொண்டு தான் இருக்கிறான்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் படைப்பின் ரகசியம் பற்றி மனிதனுக்கு சுத்தமாக தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். "பேரிடி கோட்பாடு" போன்ற விஷயங்கள் அதை புரிந்துக்கொள்ள விழையும் முயற்சியே தவிர இது படைப்பை பற்றிய முழுமையான அறிவாக கருத முடியாது. வருங்காலத்தில் வரும் விஞ்ஞானிகளாவது இதற்கான புரிதலை உலகுக்கு அளிப்பார்களா என பொருத்திருந்து பார்ப்போம்.


இரவில் நட்சத்திரங்களோடு மௌன மொழி பழகும் நாட்களில் நான் யோசித்த இன்னொரு விஷயம் என்னவென்றால்,நமக்கு தெரிந்து கோடான கோடி ஒளி வருடங்கள்* வரை எங்கேயும் உயிர் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. அப்படி இருக்கும் போது எதற்காக இவ்வளவு பெரிய அண்டத்தை கடவுள் படைக்க வேண்டும்?? என்பது.

இதையே வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால்,இவ்வள்வு பெரிய அண்ட வெளியில் தம்மாத்தூண்டு பூமியில் மட்டும் எப்படி உயிர் உருவானது?? மற்ற இடங்களில் ஏன் உருவாக வில்லை??? உருவாக சாத்தியக்கூறுகள் உள்ளனவா??? இருந்தும் நாம் அறியாமல் இருக்கிறோமா?? இல்லை தெரிந்தும் மறைக்கப்பட்டுள்ளதா???

இப்படி பல கேள்விளுக்கான அலசல்களை எதிர்வரும் பதிவுகளில் பார்ப்போம்!! :-)
வரட்டா??

*ஒளி வருடம் : நட்சத்திரங்கள் நடுவில் இருக்கும் மிக அதிமான தொலைவுகளை அளக்க உதவும் ஒரு அளவுகோல்.

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1 (பிரபஞ்சம் உருவானது எப்படி)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2(Big bang theory)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3(Light years)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4(Black holes)
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5(Extra terrestrial life)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6(Alien communication)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7(UFOs)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8(Roswell - part 1)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9(Roswell - part 2)

37 comments:

Anonymous said...

தம்பி நீங்க பெரிய அறிவாளிதான்.இவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சுலபமாக சொல்லிட்டு போயிட்டீங்களே!

துளசி கோபால் said...

//இந்த அண்ட வெளியில் இருக்கும் பொருட்கள் எல்லாம்
எங்கே இருந்து வந்தது.....?//

நாந்தான் எப்பவோ ஒரு ஜென்மத்துலே அங்கே விட்டுட்டு வந்தேன்னு
சொல்லலாம்:-)))

//இந்த ஹப்பில் தோலைநோக்கி

என்ன இப்படித் தோலை உரிச்சுப்புட்டீங்க? :-)


//பேரிடிக் கோட்பாடு//
தமிழ் அவ்வளவா தெரியாதுன்னு எங்கியோ சொல்லி இருந்தீங்க!!!!!

//நீங்கள் சொல்வது சரி என்று நான் எப்படி நம்ப முடியும்??
என்றால்,எல்லாம் ஒரு நம்பிக்கை தான்!!//

வாழ்க்கையில் சில விஷயங்களை ஏன், எப்படின்னு கேள்வி கேக்காம நம்பணுமாம்.:-)

கலக்கலா இருக்கு பதிவு.

Anonymous said...

சகோதரா !
கடினமான விஷயத்தை எளிமையாகச்
சொல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
ஒருநாள்
சூரியனும் சந்திரனும் ஒன்றாய்ச் சேரும் . சூரியன் மேற்கில்
உதயமாகும். இவையெல்லாம்
ஒரு முடிவுக்கு வரும் என்றும்
பரிசுத்தக் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது.

MyFriend said...

//"எலே!! எல்லாத்துக்கும் மேகக்கூட்டம் மேகக்கூட்டம்னு கதை சொல்லுதியேலே!!!இந்த மேகக்கூட்டம் எங்கிட்டு இருந்து வந்துச்சு????"அப்படின்னு அறிவுபூர்வமா ஒரு கேள்வி கேட்டீங்க. //

இந்த கேள்வி நாந்தான் கேட்டேன்.. இன்னும் நீங்க பதில் சொல்லலை.. ம்ம்

MyFriend said...

//அது வீடு இருக்கற இடத்தை பொருத்தது. பக்கத்து வீடு தெரியும்,நம்ம வீதி தெரியும்,கொஞ்சம் தள்ளி இருக்கற வீதி தெரியலாம். நம்ம வீடு மாடியிலே ஏறி பார்த்தா இன்னும் கொஞ்சம் தள்ளி இருக்கற வீடு எல்லாம் தெரியும். அப்படியே ஊரு பக்கத்துல இருக்கற மலையில ஏறி பார்த்தா ஊரே தெரியும்!!! //

ஆஹா.. என்ன ஒரு கண்டுபிடிப்பு(!)

:-P

CVR said...

@துர்கா
ஏதோ சொல்ல வந்தது நாலு பேருக்கு புரிஞ்சா சரிதான் அக்கா!! :-)
நன்றி அக்கா! :-)

@துளசி
//நாந்தான் எப்பவோ ஒரு ஜென்மத்துலே அங்கே விட்டுட்டு வந்தேன்னு
சொல்லலாம்:-)))
//
இதை நீங்க என் கிட்ட சொல்ல்வே இல்லையே டீச்சர்!! :-)

//என்ன இப்படித் தோலை உரிச்சுப்புட்டீங்க? :-)
//
எழுத்துப்பிழையை எடுத்துக்காட்டியதற்கு நன்றி டீச்சர். சரி செய்து விடுகிறேன்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி டீச்சர்!! :-)

@ibnuzubair
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே. மத நூல்களில் பிரபஞ்சம் பற்றிய குறிப்புகளையும் அவ்வப்போது குறிப்பிடலாமா என்று நானும் யோசித்திருந்தேன்!! ஆனால் ஏன் வம்பு என்று விட்டு விட்டேன். நீங்கள் சொன்ன செய்தியை கூட நான் விக்கிபீடியாவில் பார்த்ததாய் ஞாபகம். :-)

@மை ஃபிரண்ட்
இவ்வளவு பெரிய கதையே சொல்லி இருக்கேன்,கேள்விக்கு பதில் சொல்லலைனு சொல்றீங்க!! :-)
பேரிடி கோட்பாட்டின் படி, அண்ட முட்டையில் இருந்து வெடித்து சிதறிய பொருட்கள்தான் மேகக்கூட்டங்களாக உலவி கொண்டிருப்பதாக சொல்லி இருந்தேன்!!
மலாய் பாடம் எல்லாம் எடுக்கறீங்க,ஆனால் மத்தவங்க பாடம் எடுத்தா ஒழுங்கா கவனிக்க மாட்டீங்களா?? :-)

Dreamzz said...

மீண்டும் ஒரு அற்புதமான பதிவு!! கலக்கறீங்க!

Dreamzz said...

உங்க உரை நல்லா இருக்கு!!

SathyaPriyan said...

இந்த பதிவிலும் பல புதிய அறிவியல் சொற்கள்.

"அறிவியல் புனைவு" -- Invention
"பேரிடி கோட்பாடு" -- Big Bang
"அண்ட முட்டை" -- Cosmic Egg
"நிறை" -- Mass

கீழ்கண்ட இரண்டும் நான் முன்னரே அறிந்தது.

"தொலைநோக்கி" -- Telescope
"அடர்த்தி" -- Density

//
இரவில் நட்சத்திரங்களோடு மௌன மொழி பழகும் நாட்களில்
//
கவிதையாக அறிவியல் கற்பிக்க எப்படி முடிகிறது?

//
இவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சுலபமாக சொல்லிட்டு போயிட்டீங்களே!
//
ரிப்பீட்டே.... அட்டகாசமா போகுது.

ulagam sutrum valibi said...

கண்ணு நீ யாரு பெத்த புள்ளயோ நல்லாரு
இந்த பதிவு எனக்கு ஒரு புத்துணர்வு
கொடுத்த மாதிரி இருக்கு கடவுள் நம்பிக்கை
அதிகமாகுது.பரிசுத்த வேதாகமத்தில் இதைப்பற்றி நிறைய கூறுகிறது
கடந்த பதிவில் நீ ரசனை உள்ளவன் என்று கூறினேன்,
தான் அறிந்ததை கூற நினைப்பது,கூறும்விதம் ஒருவருடைய
ஆளுமையை போருத்தே அமையும்.உண்மையை சொல்ல
வேண்டுமானால்,நீ கவர்ச்சியான ஆளுமை உள்ளவன்.

MyFriend said...

//
இவ்வளவு பெரிய கதையே சொல்லி இருக்கேன்,கேள்விக்கு பதில் சொல்லலைனு சொல்றீங்க!! :-)//

நாங்க அப்படித்தான் சொல்லுவோம்.. அப்போதானே பரிட்சையில வர்ற கேள்விக்கு பதில் க்லாஸ்லே சொல்லிக்கொடுக்கலைன்னு போனஸ் மார்க் வாங்க முடியும்.. என்ன.. சரிதானே! :-D
அதுவும் நான் அறிவியல் பாடத்துல ரொம்ப ரொம்ப வீக்குப்ப்பா.. :-P

//மலாய் பாடம் எல்லாம் எடுக்கறீங்க,ஆனால் மத்தவங்க பாடம் எடுத்தா ஒழுங்கா கவனிக்க மாட்டீங்களா?? :-)//

க்லாஸுல தூங்குரதுக்கே டைம் பத்தலை. இதுல இதெல்லாம் வேற செய்யணுமா? :-P

Anonymous said...

////மலாய் பாடம் எல்லாம் எடுக்கறீங்க,ஆனால் மத்தவங்க பாடம் எடுத்தா ஒழுங்கா கவனிக்க மாட்டீங்களா?? :-)//

அக்கா ஒரு வார்த்தை சொல்லுங்க.சிவிஆரை டுரியான் பழத்தால் மண்டையை பிளந்து விடுகின்றேன்.எங்கள் அக்காவை பார்த்து என்ன கேள்வி கேட்டு விட்டீர்கள்?சிவிஆர் உங்கள் மண்டை ஜாக்கிரதை

ulagam sutrum valibi said...

பாப்பு,மண்டையில பாடம் ஏறுலேனா அந்த
நாத்தமடிச்ச பழத்தை ஏறாத தலையில அடிங்க.
அதை விட்டுபோட்டு.

CVR said...

@Dreamz
வாழ்த்துக்களுக்கு நன்றி தலைவா!! :-)

@சத்தியப்பிரியன்
வாங்க சத்தியப்பிரியன்! உங்க கூகிள் ரீடரை ஏற்பாடு செய்துவிட்டீர்களா??
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!! :-)

@உலகம் சுற்றும் வாலிபி
//இந்த பதிவு எனக்கு ஒரு புத்துணர்வு
கொடுத்த மாதிரி இருக்கு கடவுள் நம்பிக்கை
அதிகமாகுது.பரிசுத்த வேதாகமத்தில் இதைப்பற்றி நிறைய கூறுகிறது//

மற்ற எந்த விஞ்ஞான தலைப்பையும் விட வின்வெளி பற்றிய விஞ்ஞான தலைப்புகள் தான் கடவுளை பற்றியும்,வாழ்க்கையை பற்றியும் நம்மை யோசிக்க செய்து விடும். எனக்கு வின்வெளி ஆர்வம் வளர்வதற்கும் இது ஒரு பெரிய காரணம்.
பதிவு உங்களுக்கு பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி!! :-)

@துர்கா!!
ஐயோ அக்கா!! என்னை மன்னித்து விடுங்கள்!! :-) ஆன் ஆர்பரில் இருந்து நான் அசைக்கும் வெள்ளை கொடி தெரிகிறதா?? :-)))

@உலகம் சுற்றும் வாலிபி
அக்கா!! எல்லாம் நம்ம நெருங்கிய நண்பர்கள்தான் நீங்க எதுக்கு டென்ஷன் ஆகறீங்க??? எல்லாம் சும்மா விளையாடறாங்க!! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

CVR

படங்கள் அருமை!
பதிவோ எளிமை!

அப்புறம் ஒரு விண்ணப்பம்
இந்த ஒளி ஆண்டு பற்றி அடுத்த பதிவில் கொஞ்சம் சொல்லுங்க!
தூரத்தைக் மைல் கணக்கில் அளக்காமல் ஏன் ஆண்டுக் கணக்கில் அளக்கறாங்கன்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்!
தீர்த்து வையுங்க தலைவா!

//இரவில் நட்சத்திரங்களோடு மௌன மொழி பழகும் நாட்களில்//

அட
உங்களுக்கும் இந்த கெட்ட பழக்கம் எல்லாம் இருக்கா?
சரி சரி, காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வச்சா சரியாயிடும். :-)

MyFriend said...

ம்ம்.. உங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேண்.. என் பின்னூட்ட்டத்துக்கு மட்டும் நீங்க பதில் போட மாட்றீங்க!!!!
ஏன்?
வய்?
கியூன்?
கெனாப்பா?

MyFriend said...

@துர்கா|thurgah said...

//அக்கா ஒரு வார்த்தை சொல்லுங்க.சிவிஆரை டுரியான் பழத்தால் மண்டையை பிளந்து விடுகின்றேன்.எங்கள் அக்காவை பார்த்து என்ன கேள்வி கேட்டு விட்டீர்கள்?சிவிஆர் உங்கள் மண்டை ஜாக்கிரதை //

பாவம் விட்டுடுன்னு சொல்லலாம்ன்னுதான் நினைத்தேன் துர்கா.. ஆனால், இப்போது வேலை இருக்கும்போல இருக்கு.. என்ன ரெடியா? ;-)

MyFriend said...

@ulagam sutrum valibi:

//பாப்பு,மண்டையில பாடம் ஏறுலேனா அந்த
நாத்தமடிச்ச பழத்தை ஏறாத தலையில அடிங்க.
அதை விட்டுபோட்டு. //

பாட்டி,

நீங்க என்னை ஆஸ்பத்திரீல அட்மிட் ஆகாம விட மாட்டீங்க போல.. :-P
நான் ஒரு சின்ன பாப்பா.. ;-)

ulagam sutrum valibi said...

பாப்புமா நானும் விளையாடா தான்
சொன்னேடா தப்பா நிளைக்காதேடா

MyFriend said...

@ulagam sutrum valibi said...

//பாப்புமா நானும் விளையாடா தான்
சொன்னேடா தப்பா நிளைக்காதேடா //

அய்யோ.. கண்டிப்பா தப்பா நினைக்கவே இலலிங்க.. ச்சும்மா விளையாட்டுக்குதான். :-D

என்ன சி.வி.ஆர்.. சத்ததையே காணோம்? வந்து சொல்லுங்க. ;-)

ulagam sutrum valibi said...

குட்டிபாபு மைஃரண்டு துர்கா என்னாடான
அக்கானு கூபிட்டு வெக்கபடவைக்கிரா?
அவகிட்ட சொல்லிவை நான் அமுமானு.
ஆமா எங்கபுள்ளய மாதிரம் பழத்தால் அடக்கலாமா
இதுஎன்னாடா கதை.

இராம்/Raam said...

CVR,


கஷ்டமான விஷயங்களை எளிதாக சொல்லப் பார்க்கிறீங்க... எங்களுக்கும் படிக்க நல்லாந்தான் இருக்கு.... :)

MyFriend said...

@ulagam sutrum valibi:

//குட்டிபாபு மைஃரண்டு துர்கா என்னாடான
அக்கானு கூபிட்டு வெக்கபடவைக்கிரா?
அவகிட்ட சொல்லிவை நான் அமுமானு.//

அவ நீங்களும் சின்ன பொண்ணுன்னு நெனச்சிட்டாபோல.. நான் சொல்லிடுறேன்.. நீங்க பல generation பார்த்த பாட்டின்னு.. :-D சரியா?

அப்புறம்.. இன்னும் முளிச்சிருக்கீங்களே? தூங்கலையா?

//ஆமா எங்கபுள்ளய மாதிரம் பழத்தால் அடக்கலாமா
இதுஎன்னாடா கதை. //

அவ்ருக்கு டுரியான் பழம் வாங்கி தரலாம்னுதான் நாங்க நெனச்சோம்.. toungue slip ஆகி, வாய்ன்னு சொல்றதுக்கு பதிலா தலைன்னு சொல்லிட்டோம்.. ஹீஹீஹீ.. :-P

(இன்னைக்கு கும்மி இங்கதானோ? )

ulagam sutrum valibi said...

நான் அமொரிக்காவில் இருக்கேன் இப்ப
மதியம் 2.பைபை.

CVR said...

@கே.ஆர்.எஸ்
//தூரத்தைக் மைல் கணக்கில் அளக்காமல் ஏன் ஆண்டுக் கணக்கில் அளக்கறாங்கன்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்!
தீர்த்து வையுங்க தலைவா!
//
இந்த பதிவுல போடும்போதே இதை பத்தி விளக்கனும்னு நினைத்தேன்,ஆனால் பதிவு பெரிதாகி விட்டதால் எழுத முடிய வில்லை. அடுத்த முறை கண்டிப்பாக இதை பற்றி எழுதுகிறேன்!! :-)
//அட
உங்களுக்கும் இந்த கெட்ட பழக்கம் எல்லாம் இருக்கா?
சரி சரி, காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வச்சா சரியாயிடும். :-) //
எல்லோரும் ஒழுங்கா தானயா இருக்கீங்க !! திடீர்னு எங்கிட்டு இருந்துயா இந்த கொலவெறி வந்து தொத்திக்குது?? :-D

@மை ஃபிரண்ட்
உங்களுக்கு பதில் சொல்லாம வேற யாருக்கு பதில் சொல்ல போறேன் மெடம்!! நம்ம துர்கா அக்காவோட மிரட்டலால கொஞ்சம் வெளரி போய்ட்டேன்!! அதான்!! :-)

@உலகம் சுற்றும் வாலிபி
நீங்களும் இங்க தானா??
சந்தோஷம்!! :-)

@இராம்
நன்றி தலைவரே!! :-)

இராம்/Raam said...

CVR,

இதேமாதிரி நண்பர் செந்தில்குமரன் (குமரன் எண்ணம்) பதிவுகளையும் படித்துப்பாருங்கள்.

அவர் பதிவின் சுட்டி

இராம்/Raam said...

//நான் ஒரு சின்ன பாப்பா.. ;-)/

தங்கச்சிக்கா,

இதை படிச்சிட்டு சத்தம் போட்டு சிரிச்சேன், ஒங்களுக்கு சரியான பட்டமாதான் சங்கத்திலே கொடுத்து இருக்கோம்.....

என்ன சாதாரணமா காமெடி பண்ணுறீங்க... :))

MyFriend said...

@ulagam sutrum valibi:

//நான் அமொரிக்காவில் இருக்கேன் இப்ப
மதியம் 2.பைபை.
//

ஆமாம் ஆமாம்.. மறந்துவிட்டேன்.. மதிய உணவு சாப்டாச்சா?

MyFriend said...

//
உங்களுக்கு பதில் சொல்லாம வேற யாருக்கு பதில் சொல்ல போறேன் மெடம்!! நம்ம துர்கா அக்காவோட மிரட்டலால கொஞ்சம் வெளரி போய்ட்டேன்!! அதான்!! :-)//

இப்படி சாக்கு சொல்லி தப்பிக்க பர்க்குறீங்களா? நான் எப்போது உங்களுக்கு மேடம் ஆனேன்.. நம்ம பாட்டி சொன்ன மாதிரி நான் பாப்பாதான்.. :-D

MyFriend said...

@இராம் said...
////நான் ஒரு சின்ன பாப்பா.. ;-)/

தங்கச்சிக்கா,

இதை படிச்சிட்டு சத்தம் போட்டு சிரிச்சேன், ஒங்களுக்கு சரியான பட்டமாதான் சங்கத்திலே கொடுத்து இருக்கோம்.....

என்ன சாதாரணமா காமெடி பண்ணுறீங்க... :))//

ஆமா ஆமா..சங்கத்துல கூட எனக்கு பட்டம் கொடுத்துறுக்காங்க.. குட்டி பாப்பான்னு.. அதானே சொல்ல வர்றீங்க ராம்? ;-)

CVR said...

@இராம்
மிக அருமையான சுட்டி!! பெரிய பெரிய விஷயம் எல்லாம் எழுதியிருக்கிறார் போல!! நேரம் கிடைக்கும் போது போய்ட்டு முழுக்க படிக்கனும்!! :-)

@மை ஃபிரண்ட்
நான் ஏதாவது சொன்னா துர்கா அக்கா என் மண்டையை உடைச்சிடுவாங்க!! அதனால நான் கப் சிப்!! :-))

Anonymous said...

////பாப்பு,மண்டையில பாடம் ஏறுலேனா அந்த
நாத்தமடிச்ச பழத்தை ஏறாத தலையில அடிங்க.
அதை விட்டுபோட்டு. //

யாருல்லா அது,இந்த சிவிஆர்க்கு ஒவாரா support பண்ணுறது?எங்க அக்கா ஒரு genius.என்ன கொஞ்சம் பிசி என்பதால் பாடத்தைச் சரியாக கவனிக்க முடியவில்லை.சிவிஆர்தான் tube light அவர் மண்டையைதான் உடைக்கனும்.சிவிஆர் மண்டை கவனம்!!

Anonymous said...

@ ராம்
//தங்கச்சிக்கா,

இதை படிச்சிட்டு சத்தம் போட்டு சிரிச்சேன், ஒங்களுக்கு சரியான பட்டமாதான் சங்கத்திலே கொடுத்து இருக்கோம்.....//

அண்ணா உங்களையே பாப்பான்னு கூப்பிடும் பொழுது எங்க அக்காவை கூப்பிட்ட என்ன குறைஞ்ச போகும்?

Raji said...

Nalla pathivu..Already, neenga sonna vishyamellam padichurukkaen but unga pathiva padikkum boadhu refresh senja maadhiri irundhuchu...

Neraya kaelvigalooda mudichurukeenga..Sikkiram next part ..Aarayuchigal thodarattum...
Nice post:)..

Anonymous said...

chha ithanai naala eppadi unka pathivai miss panninen - konjam arivai doondi vidukiramathiri iyarkaiyai parti sinthikka vaikirinka - nantaga irukkirathu padipatharkkum, therinthukolvatharkkum - muthalil oru print out edukkanum - engappapa irukkinga - friend

Anonymous said...

Matra valaipadhivarghal dravidam, hindutuva, paarpaniyam nu orutharuku oruthar sandai potukondu ore kuttaiyil oorikondu irukumpodhu ungha valai padhivu aayiram muraighal menmaiyaanadhu. adhan idughaighalum padipadharku rasanaiyaaghavum sindhanaiyai thoondum waghaiyilum ulladhu.waanweli mandalathai patri melum pala thaghavalghalai ariya aavala iruken. idhai ellam padithu irukiren. aanal namadhu pechu thamilil padikumpodhu adhanai elidhil purindhu kolla mudighiradhu. winweliyil matra graghathinarin parakkum thattughalai paarthirupadhagha pala welinaatinar therivithullanar. idhellam unmaiyaa illai udaansaa. endha tholil nutpa wasathiyum naveena tholainoku karuvighalum illaadha pandaiya kaalathil saasthiranghalil waanweli patri pala seidhighal koorapattullana. idhellam evvaaru mudindhadhu?

naan tamil valai padhivughalai oriru waaranghala dhaan padika aarampithullen. mudhan mudhalaa unghal walaiku dhaan comment seighiren. tamilil pilai irundhaal mannikiavum. (p.Ku)evvaru tamilil idughai padhipadhu?

CVR said...

@அனானி
தமிழ் வலைப்பதிவு ஆரம்பிக்க முதலில் Blogger,wordpress அல்லது blogspirit ஆகிய வலைதளங்கள் ஏதாவது ஒன்றில் கணக்கை ஆரம்பித்துக்கொள்ளுங்கள்.
எனக்கு தெரிந்து பலர் Blogger கணக்கை தான் வைத்துக்கொண்டிருக்கிரார்கள்.

பிறகு தமிழில் எழுதுவது பற்றி இந்த வலைபக்கத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.
http://www.thozhi.com/tamiltyping.htm

ஏதாவது சந்தேகம் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்!! :-)
வாழ்த்துக்கள்!! :-)

Related Posts Widget for Blogs by LinkWithin