போன பாகத்தை முடிக்கும் போது
"இவ்வளவு பெரிய அண்ட வெளியில் தம்மாத்தூண்டு பூமியில் மட்டும் எப்படி உயிர் உருவானது?? மற்ற இடங்களில் ஏன் உருவாக வில்லை??? உருவாக சாத்தியக்கூறுகள் உள்ளனவா??? இருந்தும் நாம் அறியாமல் இருக்கிறோமா?? இல்லை தெரிந்தும் மறைக்கப்பட்டுள்ளதா??? "இப்படி சராமாரியா கேள்விகளை அள்ளித்தெளிச்சிருந்தேன்.பதிவை அச்சேற்றும் போதுதான் "கேள்வி கேக்கறது ரொம்ப சுலபம் தான்,ஆனா பதில் சொல்றதுதான் ரொம்ப கஷ்டம்" அப்படின்னு பஞ்ச தந்திரம் கமலஹாசன் காதுல வந்து சொல்லிட்டு போனா மாதிரி ஒரு உணர்வு. அடாடா!! நாம பாட்டுக்கு தீபாவளி தள்ளுபடி மாதிரி கேள்விகளை அள்ளி வீசிக்கிட்டு இருக்கோமே ,இதுக்கு எல்லாம் பதிலும் சொல்லியாகனுமே அப்படின்னு நினைக்கும் போது தான் நம்ம கே.ஆர்.எஸ் ஒளி வருடம் பற்றி அடுத்த பதிவுல போடுன்னு குறிப்பிட்டு இருந்தாரு. சரி அதுல இருந்தே ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
எனக்கு சின்ன வயசுல இருந்த சந்தேகம் உங்க எல்லோருக்குமே இருந்திருக்கும்னு நினைக்கிறேன். வருடம் எனபது நேரத்தை அளக்க உதவும் ஒரு அளவுகோல்,அதை வைத்துக்கொண்டு தூரத்தை ஏன் கணக்கிடுகிறார்கள்?? அதுவும் விண்வெளி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் இந்த அளவுகோல் ஏன் உபயோகப்படுத்தப்படுகிறது என்பதுதான். எனக்கும் இந்த சந்தேகம் நெடு நாட்களாக இருந்து வந்தது. சிறிய வயதில் ஒரு முறை பிர்லா கோலரங்கம் சென்ற போதுதான் இந்த சந்தேகம் விடு பட்டது.
பொதுவாகவே இந்த அண்டத்திலேயே ஒளி தான் மிக வேகமாக செல்லக்கூடிய பொருள் என்று விஞ்ஞான உலகில் ஒத்துக்கொள்ளப்பட்ட விஷயம். ஒளியின் வேகம் என்பது மணிக்கு 1079252848.8 கிலோமீட்டர்கள். அதாவது ஒரு மணித்துளியில் ஒளி 299792.458 கிலோமீட்டர்கள் பயனப்பட்டு விடும்,குத்துமதிப்பாக 3 லட்சம் கிலோமீட்டர்கள். தலை சுற்றுகிறதா?? கொஞ்சம் பொறுங்கள்,நான் இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறேன்.
ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞான மேதைகளின் கணிப்புப்படி இந்த அண்டத்திலேயே ஒளியை விட வேகமாக போகக்கூடிய பொருள் வேறு எதுவும் இல்லை. "யாமறிந்த வரையிலே ஒளியை போல வேகமானது வேறொன்ரும் காணோம்" என்கிறார்!! :-)
அப்படிப்பட்ட ஒளி ஒரு வருடம் நிற்காமல் பயனப்பட்டால் எவ்வளவு தூரம் செல்லும்?? அதிகம் இல்லை ஜென்டில்மேன்,வெறும் 5,879,000,000,000 மைல்கள் தான்,அதாவது 9,460,730,472,580.8 கிலோமீட்டர்கள். சில பேருக்கு ரத்தத்தை கண்டால் மயக்கம் வருவது போல்,எனக்கு கணக்கு,எண்கள் போன்ற விஷயங்களை கண்டாலே மயக்கம் வரும். இவ்வளவு பெரிய எண்களை எல்லாம் எழுதும்போதே கண்ணைகட்டுகிறது.
இப்படி ஒளி ஒரு வருடத்தில் பயனப்படும் தூரத்தை தான் ஒரு ஒளி வருடம் என்ற அளவுகோலின் மூலம் அறியப்படுகிறது. அப்பப்பா!!! எதற்கு இவ்வளவு பெரீஈஈஈஈஈஈஈஈய அளவுகோல் என்கிறீர்களா??? நம் அண்டத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் லேசுப்பட்ட தூரத்திலேயா இருக்கிறது??? உதாரணமாக நம் சூரியனுக்கு "மிக பக்கத்தில்" உள்ள நட்சத்திரமான பிராக்சிமா செஞ்சுரி (Proxima Centauri) 4.3 ஒளிவருடங்கள் தள்ளி இருக்கிறது. அதாவது 4.3 X 9,460,730,472,580.8 = 40681141032097.44 கிலோமீட்டர்கள்!!!!!!! இந்த தூரத்தை எல்லாம் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.இதுதான் நம் சூரியனுக்கு மிக பக்கத்தில் உள்ள நட்சத்திரம் என்பதை திரும்பவும் நினைவு கூர விரும்புகிறேன்.
நம் இப்போதைய விண்களங்கள் போகும் வேகத்தில்(?!) போனால் ஒரு ஒளி வருடத்தை அடைவதற்கு 40,000 வருடங்கள் பிடிக்குமாம். அதாவது நமது "நெருங்கிய" நட்சத்திரமான பிராக்சிமா செஞ்சுரிக்கு போக வேண்டும் என்றால் தற்போதைய நிலையில் 172000 வருடங்கள் பிடிக்கும்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்,பிராக்சிமா செஞ்சுரிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 4.3 ஒளி வருடங்கள் என்று சொன்னேன் அல்லவா. அதாவது பிராக்சிமா செஞ்சுரியில் இருந்து புறப்படும் ஒளி நம்மை வந்து சேர 4.3 வருடங்கள் பிடிக்கும். அதாவது பிராக்ஸிமா செஞ்சுரியில் இப்பொழுது ஏதாவது பிரச்சினை உண்டாகி அந்த நட்சத்திரமே இருண்டு போய் விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள்,அந்த செய்தியே நமக்கு 4.3 வருடங்களுக்கு பின்னால் தான் தெரியும்!!!!!!!
அதே போல் நமது சூரியனிற்கும் பூமிக்கும் உள்ள தூரம் 8.317 ஒளி நிமிடங்கள். அதாவது சூரியனில் ஏதாவது மாறுதல் உண்டானால் அதன் ஒளி நம்மை வந்து சேர 8 நிமிடங்கள் பிடிக்கும்.
நான் சென்ற பதிவில் பேரிடி கோட்பாடு (Big Bang theory) பற்றி சொல்லும்போது,இந்த கோட்பாட்டை முழுமையாக நம்மால் நிரூபிக்க முடியாது என்று சொல்லி இருந்தேன் அல்லவா??? அதற்கான காரணம் இதுதான். விண்வெளியில் நாம் தெரிந்துகொள்ளும் எல்லாமே நம்மை தேடி வரும் ஒளியை பொருத்து தான் இல்லையா. தூரம் போக போக ஒளி நம்மை வந்து சேரும் நேரமும் கூடிக்கொண்டே போகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் நம்முடைய மிக "நெருங்கிய" அண்டமான (Galaxy) ஆண்ட்ரோமேடா (Andromeda galaxy) நம்மை விட 2.5 மில்லியன் ஒளி வருடங்கள் தள்ளி இருக்கிறது.(இதை கிலோமீட்டர் கணக்கில் தயவு செய்து நீங்களே மாற்றிக்கொள்ளுங்கள் :-))
அதாவது நாம் இப்பொழுது பார்த்துகொண்டிருக்கும் ஆண்ட்ரோமேடா அண்டம் 2.5 மில்லியன் வருடங்களுக்கு முன் இருந்த அண்டம். நம் மிக "மிக நெருங்கிய" அண்டத்துக்கே இந்த கதி என்றால் நம்மை தள்ளி அதிக தூரம் கொண்ட விண்வெளி பொருட்களை எல்லாம் பார்க்க பார்க்க நாம் காலத்தில் பின் நோக்கி பார்த்துக்கொண்டே போகிறோம் என்று தான் பொருள். இப்படியே போக போக ஒரு சமயம் ஒளியே உருவாகாத நேரத்திற்கே நாம் போய்விடுவோம்.
அதென்ன ஒளியே உருவாகாத நேரம்???
பேரிடி கோட்பாட்டின் படி எல்லா பொருளும் ஒன்று சேர்ந்து இருந்து பின் வெடித்து சிதறின என்று சொல்கிறார்கள் அல்லவா?? அவர்களின் கூற்றுப்படி பேரண்டம் உருவாக ஆரம்பித்து முதல் 100000 வருடங்களுக்கு ஒளியே கிடையாது,ஒளி எங்குமே செல்ல முடியாத படி பிண்ணிப்பிணைந்து இருந்ததாம். ஓளியே இல்லை என்றால் அதை நாம் எப்படி பார்ப்பது?? பார்க்கவே முடியவில்லை என்றால் வேறு எப்படி நிரூபிப்பது???
இதனால் தான் பேரிடி கோட்பாட்டை முழுமையாக நிரூபிக்க முடியாது என்று போன பதிவில் சொல்லி இருந்தேன்.
என்ன தலை சுற்றுகிறதா?? பாவம்!!நானும் உங்களை ரொம்பவே குழப்பிவிட்டேன். பதிவை ஒரு முறைக்கு நான்கு முறை படித்துவிட்டு புரிகிறதா என்று சொல்லுங்கள். வானில் இது பல நூறு அதிசயங்கள் பரந்து விரிந்து இருக்கின்றன. அதை அடுத்த முறை தொடர்கிறேன்.
வரட்டா?? :-)
References :
http://school.discovery.com/schooladventures/universe/itsawesome/lightyears/
http://answers.yahoo.com/question/index?qid=20070501080843AADJMQg&show=7
http://www.nasa.gov/lb/facts/Space/space_facts_archives.html
http://starchild.gsfc.nasa.gov/docs/StarChild/questions/question19.html
http://www.howstuffworks.com/question94.htm
http://hypertextbook.com/facts/KathrynTam.shtml
http://curious.astro.cornell.edu/question.php?number=84
படங்கள் :
www.astrocruise.com/m31.htm
http://en.wikipedia.org/wiki/Speed_of_light
http://img.dailymail.co.uk/i/pix/2007/05_01/
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1 (பிரபஞ்சம் உருவானது எப்படி)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2(Big bang theory)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3(Light years)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4(Black holes)
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5(Extra terrestrial life)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6(Alien communication)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7(UFOs)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8(Roswell - part 1)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9(Roswell - part 2)
37 comments:
தல! எனக்கு தல சுத்தி போச்சு......... ஆனாலும் இவ்வளோ complex ஆன விஷயத்த இவ்வளோ லேசா சொல்றதுக்கு தனி திறமை வேண்டும்..........
Hats Off......
ஹூம்,பலமாக சுத்துகிறது தலை.
இருந்தாலும் வானை பார்க்கும் போது அதிசியமாக தான் இருக்கிறது.
கடைசியில் பார்க்கும் போது நம்மால் எதையும் முழுமையாக தெரிந்துகொள்ள முடியாது போலிருக்கிறது.
@சத்தியப்பிரியன்
வாங்க தலைவரே!! எழுதினது புரிஞ்சுதா?? புரிஞ்சுதுனா சந்தோஷம்!! :-)
@வடுவூர் குமார்
ஆமாம் குமார்,நமக்கு பணிவு,பொறுமை,தெளிவு இது போன்ற பல உணர்வுகளை ஒரு சேர தரவல்லது இந்த விண்வெளி. :-)
Nanba, vaan oru athisayam ental, athai patiya article paddithu purinthu eluthum unkalai ponta varkalum oru athisayamthaan - ippadi niraiya perukku sila speciality irrukkathaan seikirathu -viyakkathakka maantharkal -
iravil vaan veliyai vurttu noki paarthaal ethanai ethanai athisayam - iyarkkayin padaipu oru puriyaatha puthir - ithuthaan irai sakthiyo - friend
CVR, சத்யா சொன்னதுக்கு ரிப்பீட்டே!
CVR, நமக்கு இதெல்லாம் ரொம்ப தலைசுத்தல் விஷயம்.. வகுப்புல அட்டென்டன்ஸ் போடுறதுக்காக மட்டும் தான் இந்த வகுப்பெல்லாம் அட்டென்ட் பண்ணினேன்.. ஆனா இந்த அறிவியல் விஷயத்தை தாண்டி பார்த்தா, இந்த வானம், அதன் அகண்டம், அதிலிர்யுக்கும் அதிசயங்கள் என்னிக்கும் அழகு
நல்லா எழுதியிருக்கப்பா CVR
@anony
என்னோட பல இடுகைகளுக்கு வந்து பின்னூட்டம் போட்டிருக்கீங்க!!!
என் மனமார்ந்த நன்றிகள் :-)
@கார்த்தி
வாங்க தல!!
தலை சுத்தற விஷயம்னு எல்லோரும் ஒதுக்காம படிக்கறா மாதிரி சுவாரஸ்யமாவும்,எளிமையாவும் எழுதனும்னு தான் முயற்சி பண்றேன் தல!!
இந்த முயற்சியில் ஏதாவது குறை இருந்தால் தயங்காமல் சுட்டி காட்டுங்கள்!! :-)
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி! :-)
CVR,
சிம்பிளா மேட்டர சொல்லி இருக்கீங்க.. ரொம்ப எளிமை நடையில அருமையா இருக்கு.. வாழ்த்துக்கள்.. Keep it up!!
காலக்கப்பல் (timemachine) கதை படிச்சிருக்கீங்களா?? அதுகூட ஒரு விதத்துல இதனால் சாத்தியம்னு அருமையான கட்டுரை ஒன்று கல்லூரியில் படிக்கும் போது படிச்சிருக்கேன்... (theoretical thaan.. practically impossible).
ஒரு 100 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சிய பாக்கனும்னா, அதற்கேற்ற தொலவு சென்றால், காணலாம்ங்கரது தான் அந்த கட்டுரையோட சாராம்சம்..
//நம் சூரியனுக்கு "மிக பக்கத்தில்" உள்ள நட்சத்திரம் 4.3 ஒளிவருடங்கள் தள்ளி இருக்கிறது. அதாவது 4.3 X 9,460,730,472,580.8 = 40681141032097.44 கிலோமீட்டர்கள்!!!!!!!//
சிவிஆர் அண்ணா...
தெரியாம ஒளி வருடம் பற்றிக் கேட்டு விட்டேன் அண்ணா...அதுக்காக இப்படியா ஒரே நம்பர் நம்பரா போட்டு பயமுறுத்தறது அண்ணா!
பணத்தை, இப்படி நம்பர் நம்பரா போட்டாக் கூட எண்ணுவேனான்னு தெரியாது அண்ணா :-)))
ரொம்ப எளிமையா விளக்கியிருக்கீங்க CVR...இப்படி இம்மாம் பெரிய நம்பரைச் சொன்னா அடிக்க வருவாங்கன்னு தான், சுலபமாக்கி இருக்காங்க! 4.3 ஒளிவருடம் கொஞ்சம் பாக்கவும் படிக்கவும் ஈசியா இருக்குல்ல!
//அதாவது சூரியனில் ஏதாவது மாறுதல் உண்டானால் அதன் ஒளி நம்மை வந்து சேர 8 மணித்துளிகள் பிடிக்கும்//
அப்படின்னா...இந்த ராகுகாலம், நாள், திதி, நட்சத்திரம் எல்லாத்துக்கும் 8 மணித்துளிகள் கூட்டினா தான்... உண்மையான திதி, நட்சத்திரம் எல்லாம் கிடைக்கும்-னு கிளப்பி விடலாமா? :-)
CVR தான் புதுசா இப்படிக் கணித்துச் சொன்னார்-னும் சொல்லிடலாம். ஜனங்க CVRஐ என்ன செய்யறாங்கன்னு பார்ப்போம்! :-)
ஹிஹி..சும்மாங்க...அவை எல்லாம் பூமியையும் சந்திரனையும் மையமாக வைத்து கணிக்கப்பட்டவை!
A correction
Light from the sun reaches Earth in about eight minutes;
மணித்துளிகள் என்று போட்டிருக்கிறீகள்.
சரியா?
வினாடிகள் தானே சரி?
தவறு இருந்தால் சரி செய்துவிடவும்.
@சிங்கம்லே ACE
வாங்க ACE!!!
//காலக்கப்பல் (timemachine) கதை படிச்சிருக்கீங்களா?? அதுகூட ஒரு விதத்துல இதனால் சாத்தியம்னு அருமையான கட்டுரை ஒன்று கல்லூரியில் படிக்கும் போது படிச்சிருக்கேன்... (theoretical thaan.. practically impossible).
ஒரு 100 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சிய பாக்கனும்னா, அதற்கேற்ற தொலவு சென்றால், காணலாம்ங்கரது தான் அந்த கட்டுரையோட சாராம்சம்.. //
காலப்பயணம் என்பது மிக சுவாரஸ்யமான ஒரு தலைப்பு!!
எனக்கு என்னமோ Linear travel-ஐ விட Wormholes அல்லது teleportation மூலமாக தான் விண்வெளி பயணம்,காலப்பயணம் போன்ற விஷயங்கள் சாத்தியமாகும் என தோன்றுகிறது! :-)
@மின்னுது மின்னல்
வாங்க மின்னல்!!
மத்த பதிவுல எல்லாம் ரவுண்ட் கட்டி கும்மி அடிக்கறீங்க,ஆனா இங்க இரண்டே வார்த்தை தானா??
ஏதோ!! முதன் முறையா பதிவுக்கு வந்திருக்கீங்க!!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! :-)
@கே.ஆர்.எஸ் தல
//சிவிஆர் அண்ணா...//
தலைவரே!! இது உங்களுக்கே ஓவரா தெரியலையா??? :-((
//CVR தான் புதுசா இப்படிக் கணித்துச் சொன்னார்-னும் சொல்லிடலாம். ஜனங்க CVRஐ என்ன செய்யறாங்கன்னு பார்ப்போம்! :-)//
என்னை உதை வாங்க வைக்க வேண்டும் என்று ரோம் போய்ட்டு யோசிப்பீங்களோ?? :-) :-P (எவ்வளவு நாளைக்கு தான் ரூம் போட்டு யோசிக்கறதா சொல்லுறது?? :-D)
உங்களால தான் இந்த பதிவையே எழுதினேன்!!
எல்லா புகழும் உங்களுக்கே!! :-)
@வடுவூர் குமார்
நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள்!!
நான் எப்படி இந்த தவறை செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை!! நீங்கள் சொல்வது சரிதான்,சூரியனின் ஒளி பூமியை சேர 8 நிமிடங்கள் தான் ஆகும். இந்த செய்தி எனக்கு முன்னமே தெரிந்திருந்தும் எப்படியோ தவறு செய்து விட்டேன்!! :-(
இதோ இப்பொழுதே சரி செய்து விடுகிறேன்.
attendence only.hehe.in class now.konjamavathu classil paadam padikanum illa.appuram vanthu padithu nalla comment poduren thambi
//மின்னுது மின்னல்
வாங்க மின்னல்!!
மத்த பதிவுல எல்லாம் ரவுண்ட் கட்டி கும்மி அடிக்கறீங்க,ஆனா இங்க இரண்டே வார்த்தை தானா??
ஏதோ!! முதன் முறையா பதிவுக்கு வந்திருக்கீங்க!!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! :-)//
hello,unga post ellam kummi adicha ungaluku pudikathu.that is why our thala gave a short comment.
///இவ்வளோ complex ஆன விஷயத்த இவ்வளோ லேசா சொல்றதுக்கு தனி திறமை வேண்டும்..........
//
எல்லாம் புளிச்சாதம் செய்த மகிமை.சரியா ராமா ;-))
//அப்படின்னா...இந்த ராகுகாலம், நாள், திதி, நட்சத்திரம் எல்லாத்துக்கும் 8 மணித்துளிகள் கூட்டினா தான்... உண்மையான திதி, நட்சத்திரம் எல்லாம் கிடைக்கும்-னு கிளப்பி விடலாமா? :-)
CVR தான் புதுசா இப்படிக் கணித்துச் சொன்னார்-னும் சொல்லிடலாம். ஜனங்க CVRஐ என்ன செய்யறாங்கன்னு பார்ப்போம்! :-)//
எங்க தல சொன்னா சரியாகதான் இருக்கும் என்று நாங்க அதை follow பண்ணுவோம் :-))
தம்பி நான் ஒரு விஷயம் கேள்விபட்டேன்,...யார் வீட்டிலேயோ ரசகுல்லா எல்லாம் சாப்பிட்டாங்களமே!!!புளிச்சாதம்,பஜ்ஜி எல்லாம் முடிந்து இப்பொழுது ரசகுல்லவா?.
படிச்சுட்டேன் :-))
எளிமையான எழுத்து நடை.என்னைப் போல tube light க்கு நன்றாக புரிய வைக்கும் எழுத்துக்கள்.வாழ்த்துக்கள்
@மின்னுது மின்னல்
வாங்க மின்னல்!!
மத்த பதிவுல எல்லாம் ரவுண்ட் கட்டி கும்மி அடிக்கறீங்க,ஆனா இங்க இரண்டே வார்த்தை தானா??
ஏதோ!! முதன் முறையா பதிவுக்கு வந்திருக்கீங்க!!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! :-)
///
1.நல்ல பதிவுக்கு கும்மி அடிப்பதில்லை(விதிவிலக்கு உண்டு)
2.கும்மி உங்களுக்கு பிடிக்குமா என்பதும் தெரியாது
3.வான்வெளி பற்றி அதிகமாகவே ஆர்வம் அதனாலயே கும்மி இல்லை இங்கே...:)
@மின்னுது மின்னல்
//1.நல்ல பதிவுக்கு கும்மி அடிப்பதில்லை(விதிவிலக்கு உண்டு)
2.கும்மி உங்களுக்கு பிடிக்குமா என்பதும் தெரியாது
3.வான்வெளி பற்றி அதிகமாகவே ஆர்வம் அதனாலயே கும்மி இல்லை இங்கே...:) //
கும்மி அடிப்பதில் எனக்கும் பெரிய ஆர்வம் ஒன்றும் இல்லை தலைவா,மற்ற இடங்களில் நிறைய பின்னூட்டம் இடும் நீங்கள் இங்கு வெறும் இரண்டு வார்த்தைகள் மட்டுமே போட்டிருந்ததால் அப்படி கேட்டேன்.
தங்களுக்கும் வான்வெளி இருப்பது அறிந்ததில் பெரும் மகிழ்ச்சி!! :-)
அடிக்கடி பதிவுக்கு வந்துட்டு போங்க! :-)
//2.கும்மி உங்களுக்கு பிடிக்குமா என்பதும் தெரியாது
//
நான் சொல்லுறேன்.அவரு கும்மி அடிக்க மாட்டார்.ஆனால் அவரு பதிவுல நம்ப கும்மி அடித்தால் நம்மளை அடிக்க மாட்டார் ;-)
கும்மியின் தீவிர இரசிகர் சிவிஆர்.இப்பொழுது நான் அதைதான் செய்து கொண்டிருக்கின்றேன் ;-)
கும்மியின் தீவிர இரசிகர் சிவிஆர்.இப்பொழுது நான் அதைதான் செய்து கொண்டிருக்கின்றேன் ;-)
//
நடக்கட்டும் நடக்கட்டும்
M
நான் சொல்லுறேன்.அவரு கும்மி அடிக்க மாட்டார்.ஆனால் அவரு பதிவுல நம்ப கும்மி அடித்தால் நம்மளை அடிக்க மாட்டார் ;-)
///
இதுதான் மேட்டரா CVR லைட்டா ஒரு சிரிப்பான் போட்டு கும்மி புடிக்காதுனு சொல்லியிந்தா ஹிட் எகிறியிருக்குமிலே...:)
:)
M
துர்கா|thurgah said...
படிச்சுட்டேன் :-))
///
கும்மியில்
புடிக்காத
வார்த்தை
இது
உங்களை கும்மிகள் சார்பாக ஒரு மணிநேரம் சஸ்பெண்ட் செய்கிறேன்
M
கண்ணு,
சூரிய குடும்பத்தை கடவுள் உருவாக்குவதை Holy Bible
genesis-chapter-1-verse-1 to 18 லில்
மிக தெளிவாய் உள்ளது,உன்னுடைய இந்த முயற்ச்சியில் முழுமையடைய எல்லாம்வல்ல தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக ஆமென்..
//கும்மியில்
புடிக்காத
வார்த்தை
இது
உங்களை கும்மிகள் சார்பாக ஒரு மணிநேரம் சஸ்பெண்ட் செய்கிறேன்//
ஹிஹி.கும்மி அடிச்சதுக்கு அப்புறம் படிக்கலாம்.நான் அதைதான் செய்தேன்
@உலகம் சுற்றும் வாலிபி
வாங்க பாட்டி!!
என்னடா இவ்வளவு நேரமா காணோமே என்று பார்த்தேன்!! :-)
வாழ்த்துக்களுக்கு நன்றி
இரண்டு நாள B.P கொஞ்சம் அதிகம் கண்ணு.அதுதான்.
அனந்த சயனராய் பள்ளி கொண்டிருக்கும் கண்ணபிரான் ரவி சங்கர்அவர்களே cvr ஜோதிட கணிதம் போட்டா நம்ம மக்கள் ஆட்டு மந்தை
மாதிரி விழுவதை பார்க டமாச இருககும் சொல்லுரிங்களா?
Light years pathi vilakkam superaa irundhuchu...
Distance pathina info..amma..Thalai suthinaalum puriyum padi superaa solli irukeenga..VazhththukkaL
@உலகம் சுற்றும் வாலிபி
உடம்பை ஒழுங்கா பார்த்துக்கோங்க பாட்டி!! :-)
@ராஜி
வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜி
உங்கள் கணக்கு படி ஓளியை விட வேகமாக ஒரு கள் அல்லது கோள் பூமியை நோக்கி வந்தால் கடைசி நிமிடம் வரை அதை காண முடியாது அல்லவா ? :(
@Kalish
விஞ்ஞானிகளின் கணிப்பு படி ஒளியை விட வேகமான பொருள் இந்த பேரண்டித்திலேயே கிடையாது.
அதை நான் இந்த பதிவிலேயே கூட குறிப்பிட்டிருந்தேன்.
//பொதுவாகவே இந்த அண்டத்திலேயே ஒளி தான் மிக வேகமாக செல்லக்கூடிய பொருள் என்று விஞ்ஞான உலகில் ஒத்துக்கொள்ளப்பட்ட விஷயம். ஒளியின் வேகம் என்பது மணிக்கு 1079252848.8 கிலோமீட்டர்கள். அதாவது ஒரு மணித்துளியில் ஒளி 299792.458 கிலோமீட்டர்கள் பயனப்பட்டு விடும்,குத்துமதிப்பாக 3 லட்சம் கிலோமீட்டர்கள். தலை சுற்றுகிறதா?? கொஞ்சம் பொறுங்கள்,நான் இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறேன்.
ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞான மேதைகளின் கணிப்புப்படி இந்த அண்டத்திலேயே ஒளியை விட வேகமாக போகக்கூடிய பொருள் வேறு எதுவும் இல்லை. "யாமறிந்த வரையிலே ஒளியை போல வேகமானது வேறொன்ரும் காணோம்" என்கிறார்!! :-)
//
அதனால் பூமியை நோக்கி எந்த ஒரு பொருள் வந்தாலும் அதை விட சீக்கிரமாக அதன் ஒளி நம்மை வந்து சேர்ந்து விடும். ஆனால் ஒளியையே வெளியே விடாத ஒரு பொருள் நம் பேரண்டத்தில் இருக்கிறது தெரியுமா?? அதை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்!! :-)
ஆனால் ஒளியையே வெளியே விடாத ஒரு பொருள் நம் பேரண்டத்தில் இருக்கிறது தெரியுமா?? அதை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்!! :-)
///
கருந்துளைகள் பத்திதானே சொல்லுறிங்க ..:)
எழுதுங்க கேள்விகள் ரெடியா இருக்கு..:)
அஹா!!
பதிவு போடறதுக்கு முன்னாடியே பீதியை கிளப்பி விட்டுட்டீங்களே தலைவரே!! :-)
தலையைக் கெட்டியாப் புடிச்சுக்கிட்டு ( விட்டா அவ்ளோதான்............)
எல்லா எண்களையும் பார்த்தேன். ( படிக்கத் தெரியலைப்பா)
@துளசி
//தலையைக் கெட்டியாப் புடிச்சுக்கிட்டு ( விட்டா அவ்ளோதான்............)
எல்லா எண்களையும் பார்த்தேன். ( படிக்கத் தெரியலைப்பா)//
எழுதும் போது எனக்கே கண்ண கட்டுச்சு டீச்சர். எப்படியோ கண்ண மூடிக்கிட்டு ctrl+C,ctrl+V பண்ணிட்டேன்!! :-)
Post a Comment