நான் சின்ன வயசா இருக்கும் போது எங்க அப்பா என்னை "இண்டிபென்டென்ஸ் டே" (Independence Day) அப்படின்னு ஒரு படத்துக்கு கூட்டிக்கிட்டு போனாரு. படத்தோட கதை என்னனா வேற்று கிரகத்துல இருந்து மக்கள்ஸ் எல்லாம் வந்து நம்ம ஊரு மக்கள்ஸ் எல்லோரையும் அழிக்கறது தான் கதை. வழக்கம் போல கடைசியிலே நம்ம கதாநாயகன் இல்லாத தில்லாலங்கடி வேலை எல்லாம் பண்ணி கடைசியிலே நம்ம பூமியை காப்பாத்திருவாரு. படத்தோட திரைவிமர்சனம் வேணும்னா வேற ஒரு பதிவுல போடறேன் ஆனா நான் முக்கியமா இந்த விஷயத்தை எதுக்காக சொன்னேன்னு கேட்டீங்கன்னா,படத்துல ஒரு அம்சமான சீன் ஒன்னு வரும் (மனசுல ஏதாவது தப்பா நினைச்சுக்கிட்டீங்கன்னா அது உங்க தவறு)
சீன் தொடங்கும் போது நிலாவுல இருந்து நம்ம பூமியை காட்டுவாங்க. சத்தமே இல்லாம அமைதியா நிலவோடு பரப்பு இருக்கும் அதுல இருந்து பூமி நீல கலருல ரொம்ப சமத்தா சாந்தமா தெரியும் (நம்ம தமிழ்மணத்துல நடக்கற சண்டை எல்லாம் அங்கிட்டு இருந்து தெரியறது இல்லை) . அப்படியே கேமெராவை திருப்பி நிலாவோட மேல்பரப்பை காட்டுவாங்க. சூரியனோட லேசான வெளிச்சத்துல அதுல மணல்பரப்பு விரிஞ்சு இருக்கறது தெரியும். கொஞ்சமா க்ளோஸ் அப் போக போக நிலா மேல பூமி மனிதன் விட்டு போன காலடி தடங்கள் தெரியும் (சில பேரு அமெரிக்கர்கள் நிலாவுக்கு போகவே இல்லை,எல்லாம் சும்மா ஊரை ஏமாத்திட்டு இருக்காங்கன்னு சொல்றானுங்க!! ஆனா நாம அதை பத்தி அப்புறமா பார்க்கலாம்) நிலாவுல நம்ம பூமியில இருக்கறா மாதிரி காற்று வெளி மண்டலம் கிடையாது. காற்றே அவ்வளவா கிடையாதுங்கறதுனால என்னிக்கோ விட்டு போன காலடி தடம் கூட அழியாம பத்திரமா இருக்கும்.அச்சு அசலான அந்த காலடி தடத்தை நாம பார்த்துட்டு இருக்கும் போதே அங்க மணல்பரப்பு லேசா நில நடுக்கம் மாதிரி நடுங்க ஆரம்பிக்கும் . என்னடா இது?? இங்க எப்படி நடுக்கம் வந்துச்சுன்னு நாம யோசிக்கும் போதே நடுக்கம் அதிகமாகிடும். கொஞ்ச நேரத்துல அந்த நடுக்கத்துல மனிதனின் காலடித்தளமே மறைஞ்சு போயிடும்,கூடவே பெருசா சத்தம் வேற கேட்க ஆரம்பிச்சுடும். இப்போ அப்படியே கேமராவை மேல தூக்கி காட்டுனா திரை முழுவதும் மறைத்து முதல் எது,முடிவு என்பதே தெரியாத அளவுக்கு பெரியதான ஒரு பறக்கும் தட்டு பூமியை நோக்கி போய்க்கொண்டிருக்கும்.. கூடவே பெரிதான ட்ரம்பெட் சத்தத்தோட கலக்கலா அந்த சீனை முடிச்சிருப்பாங்க!!
இந்த சீனை பார்த்த கொஞ்ச நேரத்துக்கு நான் திறந்த வாயை மூடல. பாட புஸ்தகத்துல சூரியன்,பூமி,நிலா, பூமி சூரியனை சுத்தி வருது, நிலா பூமியை சுத்தி வருது அப்படின்னு எல்லாம் படிச்சாலும் மொத முறையா இது மாதிரி அப்போ தான் பாக்குறேன். அன்னிக்கு ஆரம்பிச்சது தாங்க நமக்கு அண்ட வெளி மேல் உள்ள காதல். இன்னைக்கு வரைக்கும் தொடர்ந்துட்டு இருக்கு. நான் வாழ்க்கையிலே பெரிய ஆளா ஆனா என்னவா ஆகனும்னு இரண்டு விஷயத்துல தான் தீவிரமா இருந்தேன். ஒன்னு கிரிக்கெட் ஆட்டக்காரனாகனும்னு, இன்னொன்னு விண்வெளி வீரன் ஆகனும்,நாஸாவுல போய் வேலை பார்க்கனும்னு எனக்கு சின்ன வயசுல ரொம்ப ஆசை. அப்போ எல்லாம் இப்போ இருக்கறா மாதிரி இந்திய விண்வெளி கழகம் அவ்வளவா பிரசித்தி கிடையாது. அப்துல் கலாம்னு சொன்னா யாருன்னு கேப்பாங்க. அப்போ எனக்கு எல்லாம் நாஸாதான் தெரியும். பேப்பர்ல அவிங்க செவ்வாய் கிரகத்துக்கு விட்ட விண்கலமும்,சனி கிரகத்துக்கு விட்ட விண்கலமும் என்ன ஆச்சுன்னு ஆவலா செய்திகளை பின்பற்றுவேன். சரி சரி அதை பத்தி எல்லாம் இப்போஎதுக்கு. நம்ம விண்வெளி ஆர்வத்தின் உந்துதளால இப்போ விண்வெளி பற்றிய சுவையான விஷயங்களை என் பதிவுல தொடரா எழுதலாம்னு பாக்கறேன். நம்மளுக்கு பெருசா ஒன்னும் விஷயம் தெரியாட்டாலும் இருக்கவே இருக்கு விக்கிபீடியா. திக்கற்றவருக்கு விக்கிபீடியாவே துணைனு பழங்காலத்து வழக்குச்சொல் இருக்குல.அதான் ஆரம்பிச்சாசு!! :-)
என்னிக்காவது கரண்ட் போயிடிச்சுனா வீட்டுக்கு வெளிய வந்து உட்கார்ந்திருக்கீங்களா?? நான் வீட்டுல கரண்ட் இருந்தா கூட அப்பப்போ எங்க வீட்டு வெளியில வந்து உட்கார்ந்துருவேன். அதுவும் மொட்டை மாடி தண்ணீர் தொட்டியில மல்லாக்க படுத்துக்கொண்டு வானத்தில் நட்சத்திரங்களை வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு. அதுவும் மிக சிறியதாக இருந்து கொண்டு எப்பொழுதும் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களை கண்டால் சில சமயம் எனக்கு பாவமாக கூட இருக்கும். ஆனால் இவ்வளவு சாதுவாக இருக்கும் நட்சத்திரங்கள்தான் அண்ட வெளியிலேயே ஜாம்பவான்கள்.
இந்த நட்சத்திரங்கள் எல்லாம் என்ன?? இதெல்லாம் எப்படி உருவாகிறது?? எப்போ வெளியே வந்தாலும் நம்மை பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கின்றனவே ,இதற்கெல்லாம் அழிவே கிடையாதா??
முதலில் இந்த நட்சத்திரம்னா என்னதுங்க?? எப்படி அதுல இருந்து மட்டும் இவ்வளவு ஒளியும் , சூடும் வெளி வருகிறது?? அதற்கு இவ்வளவு சக்தியை யார் அளித்தார்கள்??
நட்சத்திரம் என்பது வானவெளியில் காணப்படும் மிக பெரிய ஒளிப்பிழம்பு. நட்சத்திரங்களுக்கு இவ்வளவு ஒளியும் சூடும் இருப்பது அதன் உள்ளே சதா சர்வ காலமும் நடந்து கொண்டிருக்கும் அணுக்கரு சேர்க்கையினால் (nuclear fusion) உண்டாவது. வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கற நாலு பசங்க ஒன்னா சேர்ந்தா சும்மா இருக்க முடியுமா?? எதாவது வெவகாரமா பண்ண ஆரம்பிப்பாய்ங்கல?? அதே மாதிரி வெண்வெளியில் சும்மாவேனும் சுற்றிக்கொண்டிருக்கும் மேகக்கூட்டங்கள் புவியீர்ப்பு விசையால் ஒன்றாக சேர்ந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள் அப்பொழுது அந்த அந்த மேகங்களில் உள்ள ஹைட்ரொஜென் வாயு ஹீலியம் வாயுவாக மாற ஆரம்பிக்கிறது. அது ஏன் தனியா இருந்தா மாற முடியாதா-னா முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவு மேகக்கூட்டம் சேர்ந்த பின் தான் இந்த ரசாயன மாற்றங்கள் ஆரம்பிக்கின்றன. இந்த ரசாயன மாற்றத்தால் ஏற்படும் சூடு ,வெளிச்சம் மற்றும் கதிர்வீச்சுகள் நாலா புறமும் பெரும் வேகத்துடன் வீசப்படுகின்றன. நம்மூருல இப்போ வெயில் கொளுத்துதுல?? எல்லாத்துக்கும் அணுக்கரு சேர்க்கைதான் காரணம்.
சரி நட்சத்திரம்ங்கறது ஒன்னா சேர்ந்த ஹைட்ரோஜென் மேகக்கூட்டங்கள் சும்மா இருக்கமுடியாம ஆட்டம் போடறதுனால உருவாகுதுன்னு சொல்றீங்க,அப்போ கிரகங்கள் எல்லாம் எப்படி உருவாகுது??
சும்மா சுத்திட்டு இருக்கற இந்த வாயுக்கூட்டம் ஒன்னா சேர்ந்தா நட்சத்திரம் ஆகும் ஆனா அதுவே ஒரு நட்சத்திரத்தால ஈர்க்கப்பட்டு அதை சுத்தி வர ஆரம்பிச்சுதுன்னு நினைச்சுக்கோங்க,அதுக்கு பேருதான் கிரகங்கள். அதுல பார்த்தீங்கன்னா பூமியை போல சில கிரகங்கள் தான் திண்ம பொருளா (solid state)இருக்கும். வாயுக்கள் எல்லாம் குளிர்ந்து போய்,பல ரசாயன மாற்றங்கள் எல்லாம் ஆகி சில கிரகங்கள்தான் இப்படி திண்மப்பொருளாகிடுது (solid state),மத்தபடி பார்த்தீங்கன்னா பெரும்பாலான கிரகங்கள் எல்லாம் வாயு நிலையில் தான் இருக்கும் (உதாரணத்துக்கு வியாழன் (Jupiter)).
சரி கிரகங்கள் எப்படி உருவாகுதுன்னு பார்த்தாச்சு,அப்போ துணைக்கோள்கள் (satellites)எல்லாம் ??
இப்போ நட்சத்திரங்கள் ஆகாத மேகங்கள் எல்லாம் பக்கத்துல இருக்கற நட்சத்திரங்களால ஈர்க்கப்பட்டு கிரகங்கலா சுத்துதுல?? அது மாதிரி சில குட்டி மேகங்கள் எல்லாம் கிரகங்களின் ஈர்ப்பு விசையினால் கவரப்பட்டு அதை சுத்தி துணைகோள்களா சுத்திட்டு இருக்கு. இங்கேயும் ரசாயன மாற்றங்களால் சில துணைகோள்கள் திண்ம நிலையில் இருக்கலாம்,சிலது வாயு நிலையில் இருக்கலாம். இதுல கவனிக்கவேண்டிய விஷயம் என்னனா நம்ம பூமிக்கு மட்டுமே ஒரே ஒரு துணைக்கோள் (நிலா) இருக்கே தவிர எல்லா கிரகங்களுக்கும் அப்படி இருக்கனும்னு அவசியம் இல்லை.
உதாரணமா செவ்வாய் கிரகத்துக்கு 2 கோள்கள் உண்டு, வியாழன் கிரகத்துக்கு சின்னதும் பெரிசுமா 63 கோள்கள் இருக்கு!!! :O
என்னடா எல்லாத்துக்கும் வாயு,மேகக்கூட்டம்னு சொல்ற!! எங்கே இருந்து இந்த வாயு மேகம் எல்லாம் வந்திச்சுன்னு கேக்கறிங்களா???
அதை அடுத்த பதிவுல பார்க்கலாம்!!
வரட்டா?? ;-)
நன்றி:
1.)Star. (2007, May 1). In Wikipedia, The Free Encyclopedia. Retrieved 00:29, May 4, 2007, from http://en.wikipedia.org/w/index.php?title=Star&oldid=127445493
2.)Planet. (2007, May 3). In Wikipedia, The Free Encyclopedia. Retrieved 00:39, May 4, 2007, from http://en.wikipedia.org/w/index.php?title=Planet&oldid=127999397
3.)Satellite. (2007, May 3). In Wikipedia, The Free Encyclopedia. Retrieved 00:41, May 4, 2007, from http://en.wikipedia.org/w/index.php?title=Satellite&oldid=127837210
4.) http://www.fas.org/irp/imint/docs/rst/Sect19/Sect19_2a.html
பி.கு : எனக்கு தெரிந்த புரிதலுக்கு ஏற்றார்போல் இந்த பதிவை எழுதியிருக்கிறேன். பதிவில் ஏதாவது தவறு இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்கிறேன்.
நன்றி
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1 (பிரபஞ்சம் உருவானது எப்படி)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2(Big bang theory)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3(Light years)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4(Black holes)
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5(Extra terrestrial life)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6(Alien communication)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7(UFOs)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8(Roswell - part 1)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9(Roswell - part 2)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1
Labels:
ஆராய்ச்சி,
கட்டுரை,
வானுக்குள் விரியும் அதிசயங்கள்,
விண்வெளி
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
மீ தி ஃபர்ஸ்ட்டூ!!!! :-D
விண்வெளி ஆராய்ச்சியா? பேஷ் பேஷ்!!
எழுதுங்க எழுதுங்க.. ;-)
ஆரம்பமே அட்டகாசம். தொடர்ச்சியை விரைவில் எதிர்பார்க்கிறோம்.
@மை ஃபிரண்ட்
முதலில் மட்டும் கரெக்டா வந்துட்டீங்க! வாழ்த்துக்கள்!!
பதிவு எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே!! :-)
@மணி
நன்றி மணி!!
@வினையூக்கி
முதல் முறையா பதிவுக்கு வந்திருக்கீங்க!!
நல்வரவு!!
தொடர்ந்து பதிவுக்கு வருகை தாருங்கள்!!
வாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)
அட்டகாசமா போயிட்டு இருக்கு...
அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் :-)
நேற்று இரவே பதிவை பார்த்து விட்டேன். அப்பொழுது மொழி படம் பார்த்துக் கொண்டு இருந்ததால் படித்து பின்னூட்டம் இப்பொழுது.
//
மனசுல ஏதாவது தப்பா நினைச்சுக்கிட்டீங்கன்னா அது உங்க தவறு
//
தவறா இல்லீங்க உங்கள பத்தி சரியா புரிஞ்சதாலதான் அப்படி நினைச்சேன் :-)
//
என்னிக்காவது கரண்ட் போயிடிச்சுனா வீட்டுக்கு வெளிய வந்து உட்கார்ந்திருக்கீங்களா?? நான் வீட்டுல கரண்ட் இருந்தா கூட அப்பப்போ எங்க வீட்டு வெளியில வந்து உட்கார்ந்துருவேன். அதுவும் மொட்டை மாடி தண்ணீர் தொட்டியில மல்லாக்க படுத்துக்கொண்டு வானத்தில் நட்சத்திரங்களை வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு.
//
அட நானும் தாங்க. மொட்டை மாடியில் வெப்பம் இறங்க இரண்டு மூன்று பக்கெட்டுகள் தண்ணீர் தெளித்து விட்டு அங்கு இரவில் படுக்கும் சுகமே தனிதான்.
Solid State க்கு தமிழ் ஆக்கம் திண்ம பொருளா? புதிய வார்த்தை. நன்றி.
அருமையான கட்டுரை. படிக்கும் பொழுது அதன் நீளம் தெரியவில்லை. இதனை சற்றே மாற்றி தமிழ் விக்கிபீடியாவில் சேர்க்கலாமே?
நான் சிறுவனாக இருந்தபோது, பாவெல் குலுஷந்த் சேவ் ( ஒரு ரஷ்ய எழுத்தாளர் ) எழுதிய "தொலை நோக்கிகள் சொல்லும் கதை" படித்திருக்கிறேன். அதற்கு பிறகு அதில் ஆர்வம் அதிகம். தமிழில் படிக்க. உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
kalakkal pathivu! nalla vishayngala solli irukeenga!
independence day, ennoda muthal - CD padam - athaavathu CD la paatha padam :)
tamilil intha maari alaga eluthinathukku innoru nanri!
//வெட்டிப்பயல் said...
அட்டகாசமா போயிட்டு இருக்கு...
//
நன்றி வெட்டி!!
உங்க மாதிரி ஊக்குவிப்புனால தான் மேலே எழுத ஆர்வம் வருது.
@சத்தியப்பிரியன்
//தவறா இல்லீங்க உங்கள பத்தி சரியா புரிஞ்சதாலதான் அப்படி நினைச்சேன் :-)//
நம்ம கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீங்கறிங்கலே!! :-)
//அருமையான கட்டுரை. படிக்கும் பொழுது அதன் நீளம் தெரியவில்லை. இதனை சற்றே மாற்றி தமிழ் விக்கிபீடியாவில் சேர்க்கலாமே? //
விக்கிப்பீடியாவில் சேர்ப்பதற்கு எழுதிய வடிவத்தில் மாற்றங்கள் தேவை.பார்க்கலாம்!! :-)
வாழ்த்துக்களுக்கு நன்றி தலைவா! :-)
@ட்ரீம்ஸ்
//independence day, ennoda muthal - CD padam - athaavathu CD la paatha padam :) //
இன்டிபென்டென்ஸ் டே எல்லாம் சிடியில் பார்க்க வேண்டிய படம் இல்லை தலைவா,அட்டகாசமான ஒலி ஏற்பாட்டோடு திரை அரங்கில் பார்க்க வேண்டிய திரைப்படம்!! :-)
//kalakkal pathivu! nalla vishayngala solli irukeenga! //
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ட்ரீம்ஸ்!! :-)
இன்னிக்குத்தான் வர டயம் கிடைச்சது. வந்து பார்த்தா.............
அடடா......... என்னா ஜொலிப்பு என்னா ஜொலிப்பு.
அட்டகாசமான ஆரம்பம். இண்டிபெண்டன்ஸ் டே பார்த்தப்ப இதையெல்லாம்
ரொம்பக் கவனிச்சுப் பார்க்கலையேன்னு மனம் வருத்தமா இருக்கு எனக்கு.
போட்டும், நல்லா விவரமாச் சொல்லிட்டீங்க.
நானும் ஒரு நட்சத்திரப் பைத்தியம்தான். ஆன்னா ஊன்னா பைனோவை எடுத்துக்கிட்டு
வெளியிலே போய் குளிருலே உக்கார்ந்திருப்பேன்.
ஹாலீஸ் காமெட் பார்க்கன்னே அர்த்த ராத்திரிக்கு அலாரம் வச்சு எழுந்துபோயிருக்கென்.
@துளசி
வாங்க அக்கா!! எப்படி இருக்கீங்க?? :-)
//அட்டகாசமான ஆரம்பம். இண்டிபெண்டன்ஸ் டே பார்த்தப்ப இதையெல்லாம்
ரொம்பக் கவனிச்சுப் பார்க்கலையேன்னு மனம் வருத்தமா இருக்கு எனக்கு.//
அதுக்கு என்ன,இன்னொரு தரம் பார்த்துட்டா போச்சு!! :-)
//ஹாலீஸ் காமெட் பார்க்கன்னே அர்த்த ராத்திரிக்கு அலாரம் வச்சு எழுந்துபோயிருக்கென். //
நான் எப்பவும் ராத்திரி சீக்கிரம் தூங்கர பார்ட்டி. ஆனா ஷூ மேக்கர் லெவி எரி நட்சத்திரம் பார்க்கனும்னு நடு ராத்திரி எழுந்து உட்கார்ந்த்துகிட்டு (அப்போ எல்லாம் நான் அலாரம் வெச்சுக்க பிடிக்காது) ,எரி நட்சத்திரம் பார்க்க இன்னும் நேரம் இருக்கு போர் அடிக்குதுன்னேன்னு இயற்பியல் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருந்தேன். என் வாழ்க்கையிலேயே இரவில் கண் விழித்து படிப்பு சம்பந்தமான புத்தகம் படித்தது அந்த ஒரு முறை தான். எல்லாம் விண்வெளி காதலினால் வந்த வினை!! :-)
வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி அக்கா!! :-)
விண்வெளி வீரர் CVR அண்ணா...
சூப்பரா போகுதுங்க!
நீங்க சொன்னதுல மலரும் நினைவுகள். இன்று இரவு "இண்டிபென்டென்ஸ் டே" எடுத்துப் பாக்கப் போறேன்!
சரி, இந்த மாதிரி பதிவுக்கெல்லாம் வந்தா கேள்வி கேக்கணுமாமே!
//மத்தபடி பார்த்தீங்கன்னா பெரும்பாலான கிரகங்கள் எல்லாம் வாயு நிலையில் தான் இருக்கும் (உதாரணத்துக்கு வியாழன் (Jupiter)).//
அப்ப வியாழன் திண்மமாக இல்லையா? திண்மமாக இல்லாவிடில் எப்படி ஒரு உருவம் (ஷேப்) கிடைக்கிறது?
//
திண்மமாக இல்லாவிடில் எப்படி ஒரு உருவம் (ஷேப்) கிடைக்கிறது?
//
That is because of the gravitational centripetal force. The center of the planet attracts the liquid and gaseous masses to form the spherical structure.
@அனானி அக்கா/அண்ணா
உங்க பின்னூட்டத்துக்கு முன்னாடியே பதில் சொல்ல தவற விட்டுட்டேன்,
மன்னிக்கனும்.
நீங்க சொல்லுற அந்த புத்தகத்தை பத்தி கேள்வி ப்ட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்,ஆனால் படித்தது இல்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் படிக்கனும்.
@KRS
சத்தியப்பிரியன் சொல்லுறது கரெக்ட்தான் தலைவா. சூரியன் போனற மிகப்பெரிய வின்வெளி பொருளினால் இர்க்கப்பட்டு வட்டப்பாதையில் பல மில்லியன் வருடங்களாக அதி வேகமாக சுழன்று க்கொண்டிருப்பதால் அவை அவ்வாறு ஆகிவிடுகின்றன.
குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் எரி நட்சத்திரம் போன்ற சில வான்வெளி வஸ்துக்கள் சூரியனை சுற்றி அச்சு அசலான வட்டப்பாதையில் சுற்றாததால் அவை வட்டமான இருப்பதில்லை. அவை திண்மமாக இருக்கும் போதிலும் கூட!! :-)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தலைவா!! :-)
@சத்தியப்பிரியன்
சொல்ல மறந்துட்டேன்.
விளக்கத்துக்கு மிக்க நன்றி தலைவரே!! :-)
இப்போதுதான் படித்தேன் CVR. இப்போது பெரியவர்களுக்கே விளங்காத விஷயம் இந்த விண்வெளி மட்டுமே.. அமைதியாக எடுத்துக்காட்டுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள். அருமை.. தொடர்ந்து எழுதுங்கள்.. படித்துத் தெரிந்து கொள்கிறோம்..
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வின்வெளி சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் சுவாரஸ்யமானவை.
தொடர்ந்து வருகை தாருங்கள்!! :-)
சூப்பரா இருக்கு பாஸ்...
அடுத்த பகுதிக்காக வெயிட்டிங் :)
ரொம்ப சுவையா எழுதி இருக்கீங்க - வாழ்த்துக்கள்.
Independence day ரொம்பவே பாதிச்சிருக்கு போல? Star Wars, Star trek பாக்கிறதுண்டா?
Post a Comment