பூமியின் குறிக்கோள் என்ன??

இந்த பிரபஞ்சம் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு மிக மிகப்பெரியது.
இதில் எண்ண முடியா அளவுக்கு நட்சத்திரங்களும்,கிரகங்களும்,அண்டங்களும் நிறம்பியுள்ளன!!

இவ்வளவு பெரிய பேரண்டத்தில் ஒரு மூலையில் மிக மிகச்சிறிய ஒரு நீலப்புள்ளி உண்டு.அதில் உலவும் சிறு உயிர்கள் தான் நாம். நம் வாழ்க்கை,இயற்கை,பிரபஞ்சம்,படைப்பு இப்படி பல்வேறு விஷயங்கள் பற்றி புரியாமல் வியந்திருக்கிறேன்.
அந்த வியப்பின் பரிமாணங்களே, வானுக்குள் விரியும் அதிசயங்கள் எனும் தொடர்.
இப்படிப்பட்ட என் யோசனைகளுக்கு தீனியாக,என் வியப்பின் தோழனாக நான் பார்க்கும் ,கேட்கும்,படிக்கும் சில விஷயங்கள் அமைவதுண்டு.
அப்படி நான் ரசித்த ஒரு நிகழ்படம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்! :-)

Chicago - திரைப்பட விமர்சனம்

Singing in the rain படத்தை பார்த்ததில் இருந்து Musicals எனப்படும் படவகை மேல் ஒரு தனி மரியாதை மற்றும் ரசிப்பார்வம் ஏற்பட்டது.
அந்த படத்தை பற்றி நான் எழுதியிருந்த விமர்சனத்திலேயே American in Paris மற்றும் Chicago ஆகிய இரு படங்களை பற்றி நண்பர் கே.ஆர்.எஸ் குறிப்பிட்டிருந்தார்.American in Paris என்னை அவ்வளவு கவரவில்லை என்றாலும் ,இன்று பார்த்த Chicago திரைப்படம் என்னை இந்த பதிவு எழுத தூண்டிவிட்டது.

சிறந்த திரைப்படம் உட்பட ஆறு ஆஸ்கர் விருதுகளை அள்ளிச்சென்ற இந்த படத்தில் Richard Gere,Catherine Zeta Jones,Renee Zellweger அகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் பரவிய ஜாஸ் கலாசாரத்தை பற்றியும் அதனால் மக்களிடையே இருந்த celelbrity craze பற்றியும் மிக அழகான விமர்சனமாக இந்த படம் நம் கண் முன்னே விரிகிறது.

Musicals எனப்படும் பாடல்களுக்கு முக்கியத்துவம் தரும் மேடை நாடங்களில,் நடிக்க வாய்ப்ப்பு தருகிறேன் என்று சொல்லிவிட்டு ஏமாற்றும் தன் கள்ளக்காதலனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுகிறார் கதாநாயகி ராக்ஸி ஹார்ட் (Roxie Hart-Renee Zellweger). ஜெயிலில் அடைபட்டிருக்கும் போது இருவேறு கொலைகள் செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறைக்குள் இருக்கும் வெல்மா கெல்லி (Velma Kelly - Catherine Zeta Jones) எனும் புகழ்பெற்ற மேடைபாடகி/நடிகையை சந்திக்கிறார். ஜெயிலின் வார்டனின் துணையோடு சிகாகோ நகரின் புகழ்பெற்ற வக்கீலான பில்லி ஃப்லின் (Billy Flynn - Richard Gere) என்பவறை தன் வழக்கை நடத்த ஒப்பந்தம் செய்கிறார். மக்களின் நாடித்துடிப்பை அக்கு வேறு ஆணி வேறாக தெரிந்து வைத்திருக்கும் அந்த வக்கீல் மக்கள் ஆதரவை பெற ஊடகங்களின் உதவியோடு ஒரு புனித பிம்பத்தை ராக்சியை சுற்றி எழுப்புகிறார்.இதனால் வெல்மா கெல்லிக்கு இருக்கும் முக்கியத்துவம் குறைகிறது.
இந்த நிலையில் வேறு ஒரு கொலை வழக்கில் மக்களின் கவனம் திரும்புவதை கண்டு தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு புது செய்தியை அவிழ்த்து விடுகிறார ராக்ஸி்.இதன் மூலம் ஊடகங்களின் கவனம் இவர் மேல் திரும்பிவிடுகிறது. இப்படி ஒன்றின் மேல் ஒன்றாய் பொய்யும் புரட்டும் சேர்ந்துக்கொண்டே போக ராக்சியால் விடுதலை ஆக முடிகிறதா??வெல்மாவால் தன் மேல் மக்களின் கவனத்தை திரும்பவைக்க முடிகிறதா?? மக்களின் நட்சத்திர மோகம் எந்த அளவுக்கு உண்மையையும் நியாயத்தையும் மழுங்கடிக்கக்கூடியது என்ற பல கேள்விகளை சிறப்பாக விவரிக்கிறது இந்த படம்.

எந்த ஒரு சிறப்பான படத்தை எடுத்துக்கொண்டாலும் அந்த படத்தின் திரைக்கதை சிறப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. இந்த படத்தின் மிகப்பெரிய பலமும் இதன் திரைக்கதைதான். அதுவும் பாடல்களூம் கதையும் அழகாக பின்னிப்பிணைந்து செல்வது மிக ரசிக்கும்படியாக இருந்தது. அதுவும் ராக்ஸி தன் கணவரை பற்றி பாடுவதாக வரும் பாடல்(Funny Honey) வரும்பொழுது ,ராக்ஸி கைது செய்யப்படும் காட்சி படமாக காட்டியிருக்கும் விதம் என்னை பெரிதும் கவர்தது. ராக்சியின் சிறையில் உள்ள வேறும் சில கைதிகளும் அவர்கள் சிறைக்கு வந்த கதையையும் விளக்கும் பாடலின் (Cell Block Tango) ஆரம்பம் அதி அற்புதம்.இதேபோல் நன்றாக கற்பனை செய்யப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கும் பாடல்கள் தான் இந்த படத்தை நாம் சலிப்பு வராமல் பார்க்க உதவுகிறது. அதுவும் கதையின் திருப்பங்கள் மிக வேகமாகவோ,மிக மெதுவாகவோ இல்லாமல் சரியான வேகத்தில் செல்வதால் பாடல்களுடன் சேர்ந்த திரைக்கதை இந்த படத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது.

படத்தில் நடிகர் நடிகைகளின்் ஆட்டம் ஜீன் கெல்லியின் படங்களை ஒப்பிடும்போது ஓன்றுமே இல்லை என சொல்லலாம். ஆனால் நடிப்பும் வசனங்களும் ,அவற்றை அவர்கள் சொல்லும் விதமும் மிக நேர்த்தியாக அமைந்திருக்கின்றன.
இந்த உலகமே ஒரு சர்க்கஸ் தான் எல்லாமே ஷோ பிசினஸ்,நீ எதற்கும் கவலை படாதே என்று பில்லி ராக்சியிடம் சொல்லும்போது நம் மனதிற்குள் ஆயிரம் கேள்விகளையும் எண்ணங்களையும் எழுப்பி விடுகிறார் இயக்குனர்்.
உன்னுடன் நான் வேலை செய்ய முடியாது ,ஏனென்றால் நான் உன்னை வெறுக்கிறேன் என்று ராக்சி சொல்கிறார்.நீ என்னை வெறுக்கலாம்,ஆனால் உலகத்தில் ஒரு தொழிலில் ஒன்றாக வேலை செய்ய தான் அது ஒரு பிரச்சினை யாக இருக்காது,அதுதான் ஷோ பிஸினஸ் என்று வெல்மா புன்னக்கைத்துக்கொண்டே சொல்வது நான் மிகவும் ரசித்த இன்னொரு காட்சி.ஷோ பிஸினசாகிப்போன இந்த உலகில் அன்பும் கோபமும் தேவைக்கேற்ப தான் அமைகிறது என்று நம்மை பார்த்து கேலி செய்யும் காட்சி அது. அதுமில்லாமல் கதையில் வரும் பாத்திர அமைப்பு ஒவ்வொரு பாத்திரங்களையும் நம் இதயத்தில் செதுக்கி வைத்து விடுகிறது. ராக்சியின் கணவர் பாத்திர அமைப்பும்,அவருக்கான பாடலும்,கதையின் முடிவில் அவரை பற்றி ஒன்றுமே குறிப்பிடாமல் விடுவதும் nice touch. எப்பவும் பிரச்சினை செய்கிறவர்களையும்,செய்தியில் இருப்பவரையும் பற்றி தான் இந்த உலகம் (நாம்) கவலைப்படும் என்றும் விளம்பரம் தேடாமல் அமைதியாக இருப்பவரை (அவருக்கு கஷ்டம் இருந்தாலும்) உலகம் கண்டுக்கொள்ளாது என்று நமக்கு உணர்த்துவதாக இது பட்டது.

ஒரு ம்யூசிகலில் வரும் பாடல்கள் பற்றி எழுத ஆரம்பித்தால் பதிவு நீஈஈஈஈஈஈஈஈஈண்டூகொண்டே போய்விடும் என்று "Singing in the rain" பதிவு எழுதிய பின் தெரிந்துக்கொண்டேன்.பாடல்கள் பற்றி சொல்லவேண்டும் என்றால் எல்லாமே ஒரே மாதிரியான வழமையான ஜாஸ் பாடல்கள். இசை பெரிதாக நம்மை கவராவிட்டாலும் பாடல்கள் எடுத்த விதம் நிச்சயமாக நம்ம கவரும்,அதுவும் கதையின் வெளிப்பாடாக ,திரைக்கதையோடு பாடல்கல்களை கலந்திருக்கும் விதமும்் மிக அருமை.
மொத்தத்தில் ம்யூசிகல் ரசிகர்களுக்கு Chicago ஒரு சிறந்த கலை விருந்தாக அமையும் என்பது என் கருத்து

Related Posts Widget for Blogs by LinkWithin