சென்னையில் எனது புகைப்படக்கண்காட்சி

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அல்லியன்ஸ் ப்ரான்ஸே எனப்படும் ப்ரென்சு கலைக்கழகத்தில் எனது புகைப்படக்கண்காட்சி வரும் ஆகஸ்டு 3-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்...
நன்றி :)

மே மாத நாட்காட்டிகள்

படங்களை க்ளிக்கி பெரியதாக்கிக்கொள்ளலாம்
ஏப்ரல் மாத நாட்காட்டிகள்மைலாப்பூர் திருவிழா- கோலப்போட்டி மற்றும் மேடை நிகழ்ச்சிகள் - சில படங்கள்

கடந்த ஜனவரியில் மைலாப்பூரில் நடந்த மைலாப்பூர் திருவிழாவின் போது எடுக்கப்பட்ட சில படங்கள்
.
அந்த சமயத்தில் நடந்த தெருக்கூத்து படங்கள் சிலவற்றை முன்னமே பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.


காஞ்சி கைலாயநாதர் கோவில் சில படங்கள்

இது 1200 வருடங்களுக்கு முன் பல்லவர்களால் கட்டப்பட்ட பழமையான கோவில்.


தேவர் மகன் படத்தில் நான் மிகவும் ரசிக்கும் காட்சி

நான் தமிழ் சினிமாவை பற்றி பெருமைப்பட வைக்கும் காட்சித்தொடர் இது.

நம் நாட்டுக்கு நம்மாலான கடமையை செய்வதற்கான தெளிவு தருவதாகவும் , “இந்த நாட்டுக்கு எவ்வளவு செஞ்சாலும் போறாது பா” என்று அங்கலாய்ப்பவருக்கு பதிலாகவும்,”சிங்கப்பூர்ல எல்லோரும் எப்படி இருக்காங்க தெரியுமா,அமெரிக்கால எல்லோரும் எப்படி இருக்காங்க தெரியுமா??நம்ம மக்கள் எல்லாம் திருந்தாத ஜென்மங்கள்!! இவங்களை திருத்தவே முடியாது”அப்படின்னு எதிர்மறையாக பேசும் போது மேற்கோள் காட்டவும்,நான் வெளிநாட்டில் இருக்கும் போது என்னை அறியாமல் எனக்கு தேசப்பற்றும்,மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை ஊட்டி என்னை உணர்ச்சிப்பெருக்க்காகிய காட்சித்தொடர் இது.

நீங்களும் கொஞ்சம் பாருங்களேன்.இந்தக்காட்சியில் எதை பாராட்டுவது??? தமிழ்நாட்டின் இரு பெறும் மிகச்சிறந்த நடிகர்களின் நடிப்பையும்,வார்த்தை உச்சரிப்பையுமா??? அருமையான பிண்ணனி இசையையா?? ஒவ்வொரு வார்த்தையும் ஊசி போல் மனதில் பதிந்து சிந்திக்க வைக்கும் வசனத்தையா??இந்த அற்புதமான காட்சித்துண்டை
ரசிக்கும்படியான ஒளி ஓவியமாக்கியிருக்கும் காட்சியமைப்பயா???

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த காட்சியின் வசனங்களை கீழே கொடுத்துள்ளேன். எவ்வளவு பொருள் பொதிந்தவை என்று சற்றே நிதானமாக கேட்டு/படித்துப்பாருங்கள்..

*********************
சிவாஜி : டேய்!! சத்தி....நாந்தேன்...(கையை அசைத்து அழைக்கிறார்)

கமல் சிவாஜியை நோக்கி செல்கிறார்..அவர் பின்னால் நின்று கொள்கிறார்.

சிவாஜி:இங்கிட்டு வா..
கமல் சிவாஜியின் முன் சென்று நிற்கிறார்.

சிவாஜி: ஆஸ்பத்திரிக்கு போனீகளா??

கமல்: ஆமா ஐய்யா..

சிவாஜி: கோயில் கும்புடறதுக்கு இதா இருக்கேன்னு ச்ண்டை போட்டீகளே.இப்போ இந்த ஊரோட நெலமை புரிஞ்சுதா??

கமல்: நல்லாவே புரியுது.நான் செஞ்ச தப்பும் புரியுது..அதுக்கு தண்டனையா இந்த ஊர விட்டே போயிரலாம்னு இருக்கேன்

சிவாஜி துனுக்குற்று எழுகிறார்
சிவாஜி:ஊர...ஊர விட்டு போறீகளா??..ஹ..நடந்ததுக்கு பரிகாரம் தேடாம..ஊர விட்டு போறேன்னு சொல்லுறது கோழைத்தனும் இல்லை??

கமல்(உடனே):அதுக்காக....

சிவாஜி:அதுக்காக???

கமல்: அதுக்காக ..நடக்கற காட்டுமிராண்டித்தனத்தை வீரம்னு நெனைச்சுகிட்டு`இருக்கறது முட்டாள்தனம்.

சிவாஜி: இந்த காட்டுமிராண்டிப்பய கூட்டத்துல உங்கப்பனும் ஒருத்தந்தாங்குறத மறந்துறாத..

கமல்: அப்படி பாத்தா நானும்தான்ய ஒருத்தன்.ஆனா அதை நெனச்சு பெருமைப்பட முடியல.இரநூறு வருஷம் பின்தங்கியிருக்கற இந்த கிராமத்துல நான் படிச்ச படிப்பை எல்லாம் வேஸ்ட் ஆக்க விரும்பலைய்யா.

சிவாஜி:இரநூறு வருஷம் பின் தங்கிதான் போயிட்டோம் ஒத்துக்கறேன்.ரெண்டாயிரம் வருஷமா வேல்கம்பையும் அறுவாலையும் தூக்கிக்கிட்டுவெற்றிவேல் வீரவேல்னு சுத்திகிட்டு இருந்த பயக.நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சண்டைக்கு ஆள் வேணும்னு கேட்டப்போ,ஓடிப்போய் மொத வரிசைல நின்ன பய முக்காவாசிப்பய நம்ம பய தான்.திடீர்னு அவன வேல் கம்பை தூக்கிப்போட்டுட்டு விஞ்ஞானம் பேச வாடான்னா எப்படி வருவான்?? நீ படிச்சவனாச்சே...கூட்டிகிட்டு வா..அங்கே கூட்டிகிட்டு வா..ஆனா அந்தப்பய மெதுவாதான் வருவான்..மெதுவாதான் வருவான்.

கமல்:மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா??அதுக்குள்ள நான் செத்துருவேன் போல இருக்கே!!

சிவாஜி:போ...செத்துப்போ..நான் தடுக்க முடியுமா??...எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் சாக வேண்டியதுதான். வாழறது முக்கியம் தான் ..இல்லைன்னு சொல்லல.ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்து போனா அந்த சாவுக்கே பெருமை. வெத வெதைச்ச வுடனே பழம் சாப்பிடனும்னு நெனைக்க முடியுமோ...இன்னைக்கு நான் வெதைக்கறேன்.நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ..அப்புறம் உன் பையன் சாப்பிடுவான்..அதுக்கப்புறம் அவன் பையன் சாப்பிடுவான்...அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன்.ஆனா வெத..நான் போட்டது.இதெல்லாம் என்ன பெருமையா??? கடமை ஒவ்வொருத்தரோடைய கடமை!!!.


கமல்: ஆனா இந்த மண்ணுல தண்ணிக்கு பதிலா ரத்தத்தை ஊத்தர வரைக்கும் எத வெதச்சாலும் வெளங்காதைய்யா..என்ன விட்டுருங்கையா நான் போறேன்.
சிவாஜி ஆவேசமாகி கமலின் சட்டையை பிடிக்கிறார்.
பின்பு விடுகிறார்.

சிவாஜி: தாடியும் மீசையயும் வெச்சுகிட்டு,நெஞ்சு நிமிர்ந்து ஐயாவை பேசற வயசுல்ல..

கமல்..இல்ல...அப்படி இல்லைய்யா...

சிவாஜி: வேற எப்படி?? வேற எப்படின்னு கேக்கறேன்.தாயில்லாத பிள்ளையாச்சேன்னு ஊட்டி ஊட்டி வளத்தேன்ல.இது வரைக்கும் ஒரு வார்த்தை பேசியிருபேனா உன் கிட்ட ....ஒரு வார்த்தை...என்ன?...நான் என் கடமைய செஞ்சுப்புட்டேன்,நீ உன் கடமைய செஞ்சியா??நீ பெருசா லண்டன்ல படிக்கறதுக்காக இந்த பூமியை பொன்னா வெளைச்சு அமிச்சோமே..அந்த காட்டுமிராண்டிப்பயலுக்கு என்ன பண்ண நீயி!!?? ஏதாவது பண்ணு..அதுக்கப்புறம் வீட்டை விட்டு போ..ஓட்டல் வையு..ரெஸ்டாரண்ட்டு வைய்யி..அந்த தெலுங்கச்சிய கல்யாணம் பண்ணிக்க..பணம் சம்பாரி..என்ன இப்போ...போயேன்...

கமல்:நல்லது இங்கேயிருந்துதான் செய்யனும்னு இல்லைய்யா..வெளியிருந்தும் செய்யலாம்...நான் போறேன்யா..

சிவாஜி:போயிட்டு வரேன்னு சொல்லுங்களேன்.அந்த நம்பிக்கைதான் வீட்டுல உள்ளவங்களுக்கு முக்கியம்...த!! எங்கேய்யா கணக்குபுள்ள?? எலே யார்ரா அவன்..எங்கே கணக்குப்புள்ள??(கணக்குப்பிள்ளையை கூப்பிடுகிறார்..)

கணக்குப்பிள்ளை ஓடி வந்து பணிவாக : ஐயா..

சிவாஜி: இங்கே தான் இருக்கியா..ஐயா யாவாரமா வெளியூர் போறாங்களாம்..ரொம்ப நாள் இங்கே இருக்க மாட்டாங்களாம்.. அவருக்கு டிக்கெட் போடு

கணக்குப்பிள்ளை: ஒரு பத்துநாள் சென்று எடுக்கட்டுங்களா??

சிவாஜி:ஏண்டாப்பு..பத்து நாள் தங்க மாட்டீங்களா??...
கணக்குப்பிள்ளையை அனுப்பி விட்டு கமலை கிட்டே அழைக்கிறார்.

சிவாஜி:பத்து நால் இருக்க மாட்டீகளா??என் பையன பக்கத்துலையே வெச்சு பாக்கனும்ங்கற ஆசை எனக்கு இருக்காதா??நீங்க ஊரெல்லாம் சுத்திட்டு வரும்போது ஐயா போயிட்டேன்னா என்ன பண்ணுவீங்க??

கமல்:ஐயா நான்..உங்கள விட்டுட்டு போலீங்கைய்யா...அங்கே போய் பிசினெசெல்லாம் ஓகேன்னதும் ..உங்களையும்...கூட்டிட்டு போறேங்கைய்யா...

சிவாஜி:என்னையா??..(தலையை ஆட்டுகிறார்) இந்தக்கட்டை இங்கேயே வெந்து எரிஞ்சு சாம்பலாகி இந்த மண்ணுக்கு ஒரமாகுமே தவிர வெளியே வராது.இந்த மரத்தை வேரோட சாய்ச்சிடாதப்பு அம்புட்டுதான் சொல்லுவேன்.புரியுதா??..

கமல்: ஐயா நான் இந்த ஊருக்கு நல்லது ஏதாவது செய்வேன்யா...என்ன நம்புங்க..

சிவாஜி: உங்களத்தானே நம்பனும்!!இந்த வீட்டுல வேற யாரு இருக்கா நான் நம்பறதுக்கு........(அழுகிறார்)...போ...

கமல்:போகட்டுமாய்யா??

சிவாஜி:போ...

கமல் விலகி செல்கிறார்..போகும்போது மழை தண்ணீர் வழுக்குகிறது.

சிவாஜி:யப்பா மெல்ல...

கமல்: தண்ணீ...வழுக்....

என சொல்லிவிட்டு செல்கிறார்

கமல் போவதை சிவாஜி குனிந்து வாஞ்சையோடு பார்க்கிறார்.தூரம் சென்றதும் கமல் சிவாஜியை மறைந்திருந்து திரும்பி பார்க்கிறார்.சிவாஜி திரும்பிக்கொள்கிறார்.
அடுத்த காட்சி ஆரம்பமாகிறது.

**********************

மேலே ஒரு வார்த்தை கூட தேவையில்லாமல் இல்லை.ஒவ்வொரு வரிக்கும் ஒரு அர்த்தம் ஒரு மெசேஜ் உண்டு.
கடைசியில் ”உங்களத்தானே நம்பனும்!!இந்த வீட்டுல வேற யாரு இருக்கா நான் நம்பறதுக்கு” என்று சிவாஜி சொல்லும்போது எவ்வளவு திட்டினாலும் குறை கூறினாலும் நமது இளைய சமுதாயத்தை தானே நாம் நம்பியாக வேண்டும்..என்ன இருந்தாலும் அவர்கள் நம் பிள்ளைகள் தானே அவர்களை நல்வழிப்படுத்தி சரியான வழியில் போக வைப்பது தானே நாம் செய்ய வேண்டியது என்கிற செய்தியோடு அருமையாக முடித்திருப்பார் இயக்குனர்.

CLASSIC!!

ஒச்சப்பனோடு ஒரு நாள்

ஒச்சப்பன் (Oochappan)எனப்படும் ஹெங்க்.
பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர்.
இவரு இருபது வருஷத்துக்கு முன்னாடி இந்தியாவிற்கு வேலை நிமித்தமாக வந்திருந்தாரு.
வந்தவரு தமிழ்நாட்டை கண்டவுடன் காதல்.
அதுல இருந்து வருசா வருஷம் இந்தியாவுக்கு வந்து ஒரு 3-4 நாலு மாசம் தங்கியிருந்து உருண்டு பொறண்டு படம் பிடிக்கறாரு.
இந்தியாவின் பல இடங்களுக்கு சென்று இவர் படம் பிடித்திருந்தாலும்,தமிழ்நாடு குறிப்பா மதுரைல தான் இவரு நிறைய படம் எடுத்திருக்காரு.
இவரு அளவுக்கு அழகா தமிழ்நாட்டை வேறு எவரும் படம் புடிச்சு நான் பார்த்ததில்லை.இவரின் ஜல்லிக்கட்டு  படங்களை பார்த்து வாயை பொளந்தவன் கொஞ்சம் நேரத்திற்கு மூடவேயில்லை.
தெருப்புகைப்படக்கலை எனப்படும் street photography-ல அண்ணாத்த லெஃப்ட் டர்ன்,ரைட் டர்ன்,யூ டர்ன் எல்லாம் போட்டு வித்தை காட்டுவாரு.
அவரை பாக்கனும்,அவரு கூட படம் எடுக்கனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை!! அந்த ஆசை சமீபத்தில் நிறைவேறியது.
அவர் சமீபத்தில் மாமல்லபுரம் வந்திருந்த போது அவரை சென்று சந்தித்தேன்.அப்படியே பக்கத்திலிருக்கும் திருக்கழுகுன்றம் சென்று அங்கும் சில படம் படங்கள் பிடித்தோம்.அப்பொழுது எடுத்த படங்கள் சில...

ஒச்சப்பன் எனபது இவரு மொத மொதல்ல இங்கிட்டு பாத்த ரிக்‌ஷா டிரைவர் ஒருத்தரோட பெயர்.அந்தப்பெயரையே இவரு புனைப்பெயரா வெச்சுக்கிட்டாரு

இவருதான் ஊச்சப்பன்


திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் குளத்துடன்


என்னோட தம்பி

இது போல ஒரு அக்கா இருந்தா நல்லாத்தான் இருக்கும்ல??..

கட்டத்துக்குள்ள கோபுரம்


இன்ஸ்டண்ட் காபி மாதிரி நொடிப்பொழுதில் ஒரு வெளிர் புன்னகை

எப்படி சின்ன பசங்களால மட்டும் டக்கு டக்குன்னு உண்மையான புன்னகை பூக்க முடியுதோ தெரியல..

குளத்தடி குளியல்


கோபுர தரிசனம்


என்ன சொல்லுதாரு இவரு??

ஏதாச்சும் மக்களை படம் எடுத்தா,எடுத்தவுடனே அதை அவரு யாரை எடுத்தாரோ அவிங்க கிட்ட காட்டுவாரு.அப்படி காட்டும் போது என்ன சொல்லுறாருன்னு புரியாம முழிக்கும் ஒரு இளைஞர் :)

எங்கள் அலுவலகத்தில் நடந்த புகைப்பட கண்காட்சி

 சமீபத்தில் எங்கள் நிறுவனத்தின் சென்னை கிளை ஊழியர்கள் ஒன்றாய் சேர்ந்து "D'light" என்கிற பெயரில் ஒரு புகைப்படக்குழு ஆரம்பித்திருந்தோம்.இந்த குழுவின் தொடக்கத்தை முன்னிட்டு எங்களின் படங்கள் சிலவற்றை கண்காட்சியாக வைத்திருந்தோம். கண்காட்சியின் போது எடுத்த படங்கள் சில.
ஒளி குறைவாக இருந்ததால் படங்கள் high ISO-வில் எடுக்கப்பட்டதால் படத்தின் தரம் அடிபட்டு போய்விட்டது :(


இந்த கண்காட்சியில் எனது 12 படங்கள் இடம் பெற்றன. அவை கீழ்வருமாறு...

1.) தெருக்கூத்து கலைஞர்
2.)ஒரே சிரிப்புதான்
3.)சென்னை மின் தொடர்வண்டி
4.)சந்தோஷம்
5.)நீலம்
6.)அஞ்சலி
7.)மாரியம்மா மாரியம்மா
8.) இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
9.)வாழ்வின் திருப்பங்கள்
10.)என்னையே ஏன் மொறைச்சு மொறைச்சு பாக்குறீங்க??
11.)ஆசீர்வாதம்
12.)அடையாளங்கள் அறியா வயது

மேலே உள்ள படங்களின் அச்சடிக்கப்பட்ட பிரதி வாங்க விருப்பப்படுவோர் என்னை தொடர்பு கொள்ளலாம் :)

மைலாப்பூரில் ஒரு மாலை

சமீபத்தில்(கடந்த சனிக்கிழமை) மயிலை நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடந்த குழந்தைகளுக்கான படம் வரைதல் போட்டியில் எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு...கிராமப்புற அழகு - படங்கள் சிலமுதல் படம் தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் சாலையில் எடுக்கப்பட்டது.மற்ற படங்கள் முடிச்சூரில் இருந்து ஸ்ரீபெரும்பூதூர் போகும் வழியில் இருக்கும் மணிமங்கலம் எனும் கிராமத்தில் எடுக்கப்பட்டது.

Related Posts Widget for Blogs by LinkWithin