திருமணம் வாழ்க்கைக்கு அவசியமா??

இன்றைக்கு ஒரு வலைப்பதிவு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது பேச்சு திருமணம் பற்றி திரும்பியது.
நிறம்ப பேசிய பின் எங்கள் பேச்சின் சாராம்சம் இது தான்.

திருமணம் நாமே வகுத்துக்கொண்டே ஒரு ஆடிமைத்தனம்,மனிதன் தானே வைத்துக்கொண்ட சொந்த செலவு சூன்யம். தனக்கு வேண்டிய எல்லாவற்றையும் திருமணம் என்ற சங்கிலி இல்லாமலே மனிதனால் அனுபவிக்க முடியும்.உடன் இருப்போர் நிர்பந்தத்தால் (peer pressure) மட்டுமே மனிதன் திருமணத்திற்கு ஒற்றுக்கொண்டும் பிறகு காலம் முழுதும் அதற்கு கட்டுப்பட்டும் இருக்கிறான்.

இது என் நண்பர்.

கட்டாயத்தினால் நிறைய பேர் திருமணத்துக்கு ஒற்றுக்கொண்டாலும் முக்கால்வாசிப்பேருக்கு திருமணத்தால் மகிழ்ச்சியே தான் மிஞ்சுகிறது. காதலை கொண்டாடுவதற்கும், வாழ்க்கையை துணையோடு கழிப்பதற்கும் இது அவசியம்.குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்களுக்கு திருமணம் ஒரு நல்ல ஏற்பாடு.
பிரச்சினைகள் இருந்தாலும் இப்போதைய தலைமுறை அவற்றை களைந்துக்கொண்டு வருகிறது என நம்புகிறேன்

இது நான்!


நண்பர் ஒற்றுக்கொள்வதாக இல்லை.
கடைசியாக எது எப்படியோ "It works for most people" என்று சொல்லி முடித்தேன்!!
அதற்கு அவர்! "அப்படியென்று நீ நினைக்கிறாய்,ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இதனால் தொந்தரவு தான்,ஏதோ மாட்டிக்கொண்டு விட்டோமே என்ற கட்டாயத்தில் தான் அவர்கள் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்" என்று கூறி விட்டார்!!

அட!! என்ன இப்படி சொல்லிட்டீங்க!!!வாங்க நம்ம தமிழ் வலையுலக அன்பர்கள் கிட்டேயே கேட்டுருவோம் என்று ஒரு கருத்துக்கணிப்புக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சுட்டேன்!!!
கருத்து கணிப்பு எல்லாம் கேட்டா எல்லாம் பொய் தான் சொல்வாங்க!! நம்ப மக்கள் கடைந்தெடுத்த "hypocrites" என்று சொல்லி சிரித்தார்!!

எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல!! ஆனா ஏற்பாடு பண்ணியாச்சேன்னு பதிவை போட்டுரலாம்னு எழுத ஆரம்பிச்சிட்டேன்!!! Hypocrism இல்லாம உண்மையா பதில் சொல்லங்க மக்கா!!
யார் ஓட்டு போட்டாங்கன்னு சத்தியமா தெரியப்போறதில்ல,அதனால் அவங்கவங்க தங்கமணி மற்றும் ரங்கமணிகள் பற்றி பயப்படாம தைரியமா ஓட்டு போடுங்க!!
அது சரி!! இந்த hypocrism-னா என்னன்னு கேக்கறீங்களா???
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது!! :-)





பி.கு: "Other" ஆப்ஷனை தேர்வு செய்தால் அதன் பக்கத்தில் கொடுத்திருக்கும் field-இல் தமிழில் எழுதி வைத்தால் பார்க்க முடியவில்லை. :-( (font problem)
அன்பர்கள் ஏதாவது சொல்ல நினைத்தால் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்!! :-)

படம் : http://www.serendipitycakes.co.uk/graphics/wedding-cakes3.jpg

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!! :-)

இன்றைக்கு என் நண்பர் ஒருவர் பகிர்ந்துக்கொண்ட ஒரு குறும்படத்தை உங்களிடம் காட்டலாம் என்று ஆசை!!!
அதி அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கும் படம். இசை,கேமரா,எடிட்டிங் என எல்லா அம்சங்களிலும் அசத்தியிருக்கிறார்கள்!!
பரத்பாலாவின் தயாரிப்பு என்றாலே இந்தியா பற்றிய அருமையான குறும்படங்கள் தயாரிப்பவர்கள் (இவர்களின் வந்தே மாதரம் குறும்படத்தை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது) என்று தெரிந்த எனக்கு இந்த படம் அவர்களின் திறமைக்கு இன்னொரு மிகச்சிறந்த உதாரணமாய் தெரிந்தது!!

மாலைப்பொழுதின் மயக்கத்திலே

இன்றைக்கு திடீரென ஏதோ எண்ணம் தோன்ற,கைப்பேசியை பொறுக்கிக்கொண்டு,பாடல் கருவியை காதில் செருகிக்கொண்டு காலார கிளம்பி விட்டேன். சிறிது தூரம் தள்ளி உள்ள ஒரு குட்டையின் பக்கத்தில் புல் தரையில் உலகை மறந்து அயர்ந்த போது அங்கு செழுமியிருந்த அழகை கண்கள் போதாதென்று கைப்பேசியிலும் தேக்கிக்கொண்டேன்.
அப்படி எடுத்த படங்களில் சிலவற்றை இதோ உங்கள் பார்வைக்கு!! :-)














பி.கு : அலைப்பேசியில் எடுத்ததால் பிக்ஸல் குவாலிட்டி அவ்வளவாக இருக்காது!! அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!! :-)

கோடை காலத்தில் ஒரு மதியம்

இன்றைக்கு ஏதோ மரம் வெட்டும்போது தெரியாத்தனமாக வயர் ஏதோ கட் ஆகி விட ,எங்கள் அலுவலகத்திலும் கரண்ட்டு கட் ஆகி விட்டது!!
சாட்டிங்,மெயிலிங் என அலுவலகத்தில் வழக்கமாக செய்யும் ஏதும் செய்ய முடியாமல் போனதால் சற்றே காலாற நடந்துவிட்டு வரலாம் என்று வெளியே கிளம்பினேன்.

கோடை கால வெப்பம் முகத்தில் அடிக்க (35-40 C) ,சிறிது நேரத்தில் திரும்பி விட்டேன்.
ஆனால் வருவதற்கு முன் அலைப்பேசியில் சில படங்களை க்ளிக்கினேன்!!
இப்பொழுதெல்லாம் ஒன்றுமே எழுத தோன்ற வில்லை ,அதான் கொஞ்சம் படம் போட்டு காலத்த ஓட்டலாமே என்று இரண்டு படங்கள் உங்கள் பார்வைக்கு!! :-)

வழக்கம் போல அலைப்பேசி புகைப்படம் என்பதால் படத்தின் தரம் (pixel quality) கொஞ்சம் கம்மி தான்!!
அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!! :-)

வரட்டா!! :-)

சொர்கத்தில் தனியாக



முதுமை



Related Posts Widget for Blogs by LinkWithin