On his blindness-உம் அதனால் தோன்றிய என் எண்ணங்களும்

என்னுடைய பள்ளிக்கூட நாட்களில் ஆங்கிலம் எனக்கு எப்பவுமே விருப்பமான பாடம்!! ஆங்கில வகுப்புகள் என்றாலே எனக்கு குஷியாகிவிடும்,அதுவிமில்லாமல் பனிரெண்டாவது வகுப்பு வரையிலும் எல்லா வகுப்பிலும் எனக்கு ஆங்கில ஆசிரியைகள் பிடித்தமான ஆசிரியைகளாக இருந்தனர்.நான் இப்பொழுதும் பசுமையாக நினைத்து பார்க்கும் ஆசிரியர்கள் என்றால் ஆங்கில வகுப்பு எடுத்த டீச்சர்கள் தான் கண் முன்னே வருகிறார்கள் (அதுவும் எமிலி வெர்கீஸ் டீச்சரின் பெயரை கண்டிப்பாக இங்கே சொல்லியே ஆக வேண்டும்).அப்படி ஒரு நாள் முன் எப்போதோ நடந்த ஆங்கில வகுப்பில் நான் கேட்ட விஷயங்கள் நான் பல முறை நினைத்து பார்த்து என்னை யோசிக்க வைத்த விஷயமாக இருந்திருக்கிறது். அப்படிப்பட்ட ஒரு தலைப்பை தான் இன்று பார்க்கப்போகிறோம்.

எப்பொழுதும் ஏதாவது விஷயத்தை எழுதுவதாக இருந்தால் இணையத்தில் அலசி நான்கு இடத்தில் தேடிப்பார்த்து அறிந்துக்கொண்டு எழுதுவேன்,ஆனால் இந்த பதிவில் நான் எழுதுபவை முழுக்க முழுக்க என் நினைவில் இருந்தே எழுதுபவை (அதனால் தப்பு இருந்தா என் கிட்ட சண்டைக்கு வராதீங்க ! :-))

ஆங்கிலம் உலகத்திலேயே அதிகம் பேசப்படுகிற மொழியாக இருந்தாலும் அதில் புகழ்பெற்ற காவியங்கள்னு பாத்தா என்னவோ இரண்டே இரண்டு காவியங்கள் தான். ஒன்று பேரடைஸ் லாஸ்ட்(Paradise lost),இன்னொன்று பேர்டஸ் ரீகெயிண்ட்(Paradise Regained). இது இரண்டையும் எழுதியவரின் பெயர் ஜான் மில்டன்(John Mil்ton). பேரடைஸ் லாஸ்ட் என்பது ஆதாமும்,ஏவாளும் எப்படி தங்கள் தவறினால் சொர்க்கத்தை இழந்தார்கள் என்று கூறும் கதை.அதனால் தான் அதன் பெயர் பேரடைஸ் லாஸ்ட(இழக்கப்பட்ட சொர்க்கம்)். பேரடைஸ் ரீகெயிண்ட் என்பது ஏசு கிருஸ்துவின் கதை. ஏசுவின் பிறப்பினால் மற்றும் இறப்பினால் எப்படி மனிதர்கள் சொர்க்கத்திற்கு செல்ல நேர்ந்தது என்பது பேரடைஸ் ரீகெயிண்ட(திரும்ப பெறப்பட்ட சொர்க்கம்)்.

இப்படி பக்திமயமான எழுத்துக்களை எழுதியிருந்தாலும் நம்ம ஜான் மில்டன் எப்பவுமே இப்படி இல்ல.சின்ன வயசுல எல்லாம் கன்னாபின்னான்னு அரசியல் பிரசுரங்கள் (political pamphlets) எல்லாம் எழுதிட்டு இருந்தாரு.அதுக்கு அப்புறம் வயசான பிறகு அவருக்கு கண் பார்வை போயுடுச்சு!! கண்கட்டின அப்புறம் சூரிய நமஸ்காரம் மாதிரி அவருக்கு அப்போதான் திடீர்னு ஞானோதயம் வந்திருக்கு!! அடடா!!! நம்ம திறமையெல்லாம் போயும் போயும் அரசியல் பிரசுரங்கள் எழுதவே வீனடிச்சுட்டோமே.மனுஷன் இன்னைக்கு இருப்பான் நாளைக்கு போவான்,ஆனால் ஆண்டவனை பற்றி எழுதாமல் நமக்கு இந்த திறமை கிடைத்து என்ன பிரயோஜனம் அப்படின்னு டென்ஷன் ஆகிட்டாரு!! அதுக்கு அப்புறம் எழுத ஆரம்பிச்சது தான் இந்த பேரடைஸ் லாஸ்ட் ,பேரடஸ் ரீகெயிண்ட். இதை அவரு சொல்லிக்கொண்டே போக அவரின் இரு பெண்கள் எழுதுவாங்களாம்.நம்ம ஆளூ திடீர் திடீர்னு மூட் வரும்போதெல்லாம் அவரோட பெண்களை தொந்தரவு பண்ணி எழுத சொல்லுவாராம்.அவங்களும் தூக்க கலக்கத்துல எல்லாம் கண்ணா பின்னா தப்பு தப்பா எழுதுவாங்களாம்.அப்படி எழுதியே அந்த காவியங்கள் ரொம்ப சிறப்பாக அமைந்தது என்று என் டீச்சர் சொல்லுவாங்க.

அவரு கண்ணு போன அப்புறம் எழுதின ஒரு கவிதை தான் இந்த "On his blindness". ஆங்கிலத்தில் பதினான்கு வரிகள் கொண்ட கவிதையை சொன்னெட் (Sonnet) என்று சொல்லுவார்கள்.அப்படி சொன்னெட் வகையை சேர்ந்த ஒரு கவிதை தான் இந்த "On his blindness".இதுல மில்டன் தான் குருடாகி போகறதுக்கு ரொம்ப பீல் பண்ணுறாரு,கண் பார்வை இருந்த போது எல்லாம் நம்ம திறமையை வீனாக்கிட்டோமே அப்படின்னு புலம்பறாரு. ஆனா கடைசியில தன்னுடைய புலம்பலுக்கு தானே சமாதானம் சொல்லிகிறாரு,அதுக்கு அவரு தர உதாரணம் எனக்கு ரொம்ப பிடித்தமானது.
அதாவது,சொர்க்கத்துல பாத்தீங்கன்னா கடவுளின் ஆணையை நிறைவேற்ற பல தேவதைகள் காத்துகிட்டு இருப்பாங்களாம்.கடவுள் ஏதாச்சும் வேலை ஆகனும்னா ஏதாவது ஒரு தேவதைக்கு வேலை குடுப்பாராம்.அவரு வேலை குடுக்கற வரைக்கும் மத்த தேவதைகள் எல்லாம் சும்மா ஒரு வேலையும் செய்யாம தான் இருப்பாங்க.ஆனா அவங்க எல்லாம் வெட்டியா இருக்காங்கன்னு அர்த்தம் கிடையாது!! அப்படி காத்துக்கிட்டு இருக்கறதும் வேலை தான். அதே மாதிரி நான் கடவுளை பத்தி எழுதாவிட்டாலும் என் வழியில் எனக்குண்டான கடமையை செய்துக்கொண்டிருந்து தான் இருந்தேன். அப்படின்னு சமாதானம் சொல்லிக்கிறாரு.

When I consider how my light is spent
Ere half my days in this dark world and wide,
And that one Talent which is death to hide
Lodged with me useless, though my soul more bent
To serve therewith my Maker, and present
My true account, lest He returning chide,
"Doth God exact day-labour, light denied?"
I fondly ask. But Patience, to prevent
That murmur, soon replies, "God doth not need
Either man's work or his own gifts. Who best
Bear his mild yoke, they serve him best. His state
Is kingly: thousands at his bidding speed,
And post o'er land and ocean without rest;
They also serve who only stand and wait.

இதை பற்றி நான் பல சமயங்களில் யோசித்து பார்த்திருக்கிறேன்.இப்படி யோசிக்கும் போது என்னுள்ளே பல அர்த்தங்கள் எனக்கு புலப்பட்டிருக்கின்றன.இவர் சொல்லுவது மாதிரி நாம எல்லோருமே உலகத்துல ஏதாவது வேலை பண்ணுறோம்.எந்த ஒரு வேலை இருந்தாலும் அதில் உயர்வு தாழ்வு எதுவும் கிடையாது. எல்லோருமே தங்களால் இயன்ற வரையில் இந்த சமுதாயத்திற்கு ்தரம்ததா தரம் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரி வகுப்பில் 90% எடுப்பவர் மட்டும் தான் படிக்கிறார்கள் என்று கிடையாது ,மிக முக்கியமான வேலை செய்பவர்தான் உழைக்கிறார் என்றில்லை,எல்லோர் வேலையிலும் அர்த்தம் உண்டு.
நல்ல தலைவர்களை போலவே நல்ல தொண்டனாக இருப்பதும் நாம் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை,நல்ல மேலாளர்கள் மட்டுமில்லாமல் நல்ல தொழிலாளர்கள் இருப்பதும் இந்த உலகில் மேன்மை பெருக மிக முக்கியம்.
we all have a role to play.

அதே போல நாம எல்லோரும் புத்தர்,காந்தி மாதிரி முழுக்க முழுக்க சத்தியம் அஹிம்சைன்னு இருந்தாதான் சமுதாயத்தை மாற்ற முடியும் என்று இல்லை.நம்மால் முடிந்த வரை உண்மையை கடைபிடிக்கலாம்,சமுதாய அவலங்களை எதிர்க்கலாம்,மனிதனின் வாழ்வு வளம்பெற முயற்சி செய்யலாம். சிக்னல்ல பச்சை விளக்கு எரியற வரைக்கும் காத்துக்கிட்டு இருக்க முடிஞ்சா இருங்க.பின்னாடி யாரு என்ன கத்தினால கண்டுக்காம இருக்க முடிஞ்சா சந்தோஷம்,முடியலன உங்களால ஆன வரை 5 நொடிகளோ,10 நொடிகளோ நிந்துட்டு போங்க!!
Just because you cant do everything doesnt mean you dont have to do anything.Just do whatever little you can do.Every bit counts!

நம் கடமை/capacity என்ன என்பதை புரிந்துக்கொண்டு அதன் முக்கியத்துவத்தை அறிந்துக்கொண்டு நம் மனசாட்சிக்கு உண்மையாக நம் வேலையை நாம் செய்ய பழகிக்கொண்டாலே பூமியில் பல நல்ல மாறுதல்கள் ஏற்படும் என்றெல்லாம் கன்னா பின்னாவென்று யோசித்துக்கொண்டிருப்பேன்.
நண்பர்கள் பலரிடம் Roles பற்றியும், அவர்கள் தாங்கள் செய்யும் வேலை பற்றியும்,அதில் முக்கியத்துவமே இல்லாதது போல் தோன்றுவது பற்றியும் சலிப்படையும் போது எனக்கு இந்த சொன்னெட் பற்றி சொல்லத்தோன்றூம்.
நிறைய பேரிடம் இது பற்றி பேசியிருப்பதாலும் ,இனிமேலும் நிறைய பேரிடம் இதை சொல்லக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என்று தோன்றியதாலும் பதிவாகவே வடிக்க முடிவெடுத்தேன்!
இந்த பதிவு உங்கள் எண்ண ஓட்டத்திற்கு தீனியாக இருந்தால் சந்தோஷம்!

வரட்டா?? :-)

பி.கு: எங்கேயோ எழுத ஆரம்பிச்சு எப்படி எப்படியோ போய் அநியாயத்துக்கு மொக்கையாகிடுச்சுன்னு நெனைக்கறேன் அதனால இந்த பதிவை கப்பி பயலின் இந்த tag-க்கு காணிக்கையாக்குகிறேன்!!

இதையாவது ஒத்துக்கோ ராசா!! :-P

கவிதை வரி பெறப்பட்ட தளம்:
http://www.sonnets.org/milton.htm#002

Related Posts Widget for Blogs by LinkWithin