முதல் பனி என்னை நனைத்ததே

முந்தா நாள் ராத்திரியில இருந்து நேத்து முழுக்க நம்ம ஊர்ல நல்ல பனி.இந்த வருட பனிக்காலத்தின் முதல் தீவிரமான பனிப்பொழிவு இது என்பதால் என் செல்போன் கேமராவில் சில படங்களை பத்திரமாக தேக்கி வைத்துக்கொண்டேன்!
அந்த படங்கள் உங்கள் பார்வைக்கு!!
வழக்கம் போல, செல்போன் படங்கள் என்பதால் பிக்சல் தரத்தை கண்ட்டுக்கொள்ள வேண்டாம்!! :-)

மு.கு: படங்களின் மீது க்ளிக்கி பெரியதாக்கி பார்த்துக்கொள்ளுங்கள்!! :-)

:-)
படங்கள் பாத்துட்டு என்ஜாய் பண்ணு அது இதுன்னு சொல்லி வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க!! குளிரு உயிரை எடுத்துடும்!! இனிமே மூனு நாலு மாசத்துக்கு House arrest தான்!! :-P

செல்போன் சித்திரங்கள் சில

வணக்கம் மக்களே,
ரொம்ப நாள் கழிச்சு செல்போன் படங்கள் சில உங்கள் பார்வைக்கு.
செல்போனில் எடுத்ததால் பிக்செல்(pixel) தரம் குறைந்திருக்கும்.அதுவும் இல்லாமல் நான் பிற்தயாரிப்பு(post production) செய்கிறேன் பேர்வழி என்று நோண்டியதில் மேலும் குறைந்து விட்டது.வழக்கம்போல் அட்ஜஸ்ட் செய்துக்கொள்ளுங்கள்! :-)மேலே இருக்கறது எங்க அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ் வாசலிலே இருக்கற பலகை. வெளி வாகனங்களை நிறுத்தினால் அலேக்கா தூக்கிட்டு போயிருவோம்,அதுக்கு காசும் வண்டியின் உரிமையாளர்கள் தான் தரணும் அப்படின்னு டீஜெண்டா சொல்லியிருக்காய்ங்க!


எங்க ஆபீஸு சாப்பிடும் கூடத்தில் (Atrium) சாப்பிட்டு விட்டு கதைக்கும் போது என்னுள் ஒளிந்திருக்கும் புகைப்பட கலைஞன் அங்கே இங்கே நோட்டம் விட ஆரம்பித்து விடுவான். அப்பொழுது தலையை மேல் நோக்கி திருப்புகையில் பக்கத்தில் இருக்கும் விளக்கும்,தலைக்கு மேல் இருக்கும் கண்ணாடி கூரையும் இப்படியாக தெரிந்தது!!! விட்டு வைக்க முடியுமா??? :-)


எங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் நூலகத்துக்கு நான் அடிக்கடி நடந்து சென்று வருவது வழக்கம். போகும் வழியில் உள்ள இந்த மேம்பாலத்தின் மேல் நின்றுக்கொண்டு கீழே போய் வரும் வாகனங்களை வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. இந்த படத்தில் நிழலாக நிற்பது நான் தான் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா?? :-)

எங்க சாப்பாட்டு கூடத்தின் மேல் உள்ள கண்ணாடி கூரை!! நான் முன்பே குறிப்பிட்டது போல ,விட்டு வைக்க முடியாத அழகு!! அதான் சுட்டு விட்டேன்! :-)

ஒரு மாலை நேரத்தில் எங்கள் ஊர் விமான நிலையத்தின் (சும்மா பேருக்கு ஒன்னு இருக்குங்க!) பக்கத்தில் இருந்து மேகங்களின் விளையாட்டால் கவரப்பட்டு எடுத்தது!!

வரட்டா?? :-)

Related Posts Widget for Blogs by LinkWithin