அமெரிக்காவில் இலையுதிர்காலம் - படங்கள்

இந்த ஊருல இலையுதிர்காலம் வந்தா ஃபால் சீசன் (Fall season) அப்படின்னு ஒரே அமர்க்களமா போயிடும். மரங்களில் தங்கம் பூசி வெச்சா மாதிரி தக தகன்னு இலைகள் எல்லாம் ஆரஞ்சு கலரா மாறிடும்.
இதற்கென்றே சில சிறப்பான இடங்களுக்கு மக்கள் விடுமுறை எடுத்து சுற்றுலா போய் கொண்டாடுவாங்க.

ஆனா,இந்த வருஷம் ஃபால் ஃப்ளாப்(flop) ஆகிப்போச்சுன்னு சொல்றாய்ங்க. இலையெல்லாம் நிறம் மாறுவதற்கு முன்பாகவே உதிர ஆரம்பித்ததாக சொல்கிறார்கள். இருந்தாலும் நேற்றைக்கு ஏதோ ஒரு மூடில் காலங்கார்த்தால கேமராவை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். வெளில -2 டிகிரி தட்பவெட்பம்னு போட்டிருந்தாங்க.ஆனாலும் வெளியில் போனதுக்கு சில படங்களை சுட்டுக்கொண்டு வந்தேன்.
அதான் உங்களுக்கு கொஞ்சம் காட்டலாம்னு!! :-)














பி.கு:படங்களின் பெரிய அளவு கோப்பு எனது Flickr தளத்தில் கிடைக்கும்.அதற்கான இணைப்பு இந்த தளத்தின் சைடிபாரில் உள்ளது. :-)

Related Posts Widget for Blogs by LinkWithin