அமெரிக்காவில் இலையுதிர்காலம் - படங்கள்

இந்த ஊருல இலையுதிர்காலம் வந்தா ஃபால் சீசன் (Fall season) அப்படின்னு ஒரே அமர்க்களமா போயிடும். மரங்களில் தங்கம் பூசி வெச்சா மாதிரி தக தகன்னு இலைகள் எல்லாம் ஆரஞ்சு கலரா மாறிடும்.
இதற்கென்றே சில சிறப்பான இடங்களுக்கு மக்கள் விடுமுறை எடுத்து சுற்றுலா போய் கொண்டாடுவாங்க.

ஆனா,இந்த வருஷம் ஃபால் ஃப்ளாப்(flop) ஆகிப்போச்சுன்னு சொல்றாய்ங்க. இலையெல்லாம் நிறம் மாறுவதற்கு முன்பாகவே உதிர ஆரம்பித்ததாக சொல்கிறார்கள். இருந்தாலும் நேற்றைக்கு ஏதோ ஒரு மூடில் காலங்கார்த்தால கேமராவை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். வெளில -2 டிகிரி தட்பவெட்பம்னு போட்டிருந்தாங்க.ஆனாலும் வெளியில் போனதுக்கு சில படங்களை சுட்டுக்கொண்டு வந்தேன்.
அதான் உங்களுக்கு கொஞ்சம் காட்டலாம்னு!! :-)


பி.கு:படங்களின் பெரிய அளவு கோப்பு எனது Flickr தளத்தில் கிடைக்கும்.அதற்கான இணைப்பு இந்த தளத்தின் சைடிபாரில் உள்ளது. :-)

22 comments:

நளாயினி said...

சுவிசிலும் இலையுதிர்வு அப்படியே தான் காலம் தப்பி பெய்த மழையே இதற்கு காரணம். இப்போது இங்கும் இலைகள் உதிரத்தொடங்கிவிட்டன. வழமைக்கு மாறாக வெய்யிலோ வெய்யில். இலைகள் பசுமையாகவே உதிர்கின்றன.

இலவசக்கொத்தனார் said...

ஏம்பா சிவீஆர், என்னதான் இலைகள் விழுந்து மரங்கள் இளைத்துப் போய் காணப்பட்டாலும் அது இலையுதிர்காலம்தானே!! அதைப் போய் இப்படி இளையுதிரா மாத்திட்டீங்களே!!

இந்த வருடம் ப்ளாப்தான்.

CVR said...

@நளாயினி
வாங்க நளாயினி!!
அங்கேயும் இதே நிலைமை தானா??
அடப்பாவமே! :-)

@இலவசக்கொத்தனார்
எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
இப்போ மாத்தியாச்சு!! :-)

Divya said...

Exlnt photos CVR!

Dreamzz said...

வாவ், ரசிச்சி எடுத்து இருக்கீங்க்! சூப்பரா இருக்கு..

இராம்/Raam said...

Awesome pictures.... :)

நாகை சிவா said...

நல்லா இருக்கு தல...படங்கள் எல்லாம்.

குசும்பன் said...

செம கலக்கலா இருக்கு முதல் படமும் ஆறாவது படமும் செம ரகளையா இருக்கு!

ILA (a) இளா said...

எங்க ஊர்ல எல்லாம் இலை காய்ஞ்சு கீழே கிடக்குது. ஆனா பழுப்பு வண்ணத்தைக் கொஞ்சம் கூட காணோம்.

கப்பி | Kappi said...

சூப்பர் தல! :)

CVR said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மக்களே!! :-)

துளசி கோபால் said...

இலையுதிர்காலம் எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

எதோ பத்திக்கிட்டு எரியுறாப்போல அப்படியே செக்கச்செவேல்ன்னு ஆகிரும் மரங்களில் இலைக்கூட்டங்கள்.

அதுக்கப்புறம் காய்ஞ்ச இலைகள் பரவிக்கிடக்கும் தரையில் முழங்கால்வரை புதையப்புதைய நடக்கும்போது வரும் 'சரசர' சப்தம்கூட ரொம்பப்பிடிக்கும்.

படங்கள் நல்லா இருக்கு.

கோபிநாத் said...

அழகான படங்கள் தல ;)

ராஜ நடராஜன் said...

இப்பவெல்லாம் கண்ணுல படறதெல்லாம் அழகாக இருக்கு.உங்க கூட்டங்களோடு சேர்ந்ததால் வந்தவை.இலைகளின் சர சரப்பையெல்லாம் பரிசித்த காலங்கள் மகத்தானவைதான்.

Unknown said...

cvr, படங்கள் நல்லா இருக்கு!

டீச்சர், சரசர சத்தமெல்லாம் சரி, எல்லா இலைகளும் விழுந்த பின் மாங்கு மாங்குனு கூட்டி அள்ளனுமே, அதுக்குப் பேரு ... இம்சை!!

அமெரிக்காவுல, டிசி, ஃபால்ல நல்லா இருக்கும்னு சொல்வாங்க. இன்னும் போனது இல்ல. மின்னெசோட்டாவுல, டுலுத் (Duluth) அப்டினு ஒரு ஊர், லேக் சுப்பீரியர் கரையில இருக்கு. இந்த இலையுதிர்காலத்தில் ரொம்ப அழகா இருக்கும்.

It's me....NAAN.....Nanae thaan said...

superb photos

கோபி said...

http://உதாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்
http://உதாரணம்.பரிட்சை/தமிழ்

Raji said...

pictures ellam superb thala:)

delphine said...

nice pictures CVR

Unknown said...

வாழ்க்கையில் முதல் தடவையா ஐரோப்பிய இலையுதிர்காலத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்

நானானி said...

ஹலோ! சிவீஆர்!
போன வருடம் இளையுதிர்....இலையுதிர்காலத்தில் கலிபோர்னியாவிலிருந்தேன்.மிகவும் ரசித்த காட்சிகள் அவை. நாள் முழுதும் உதிர்ந்த இலைகளை மறுநாள் காலையில் ப்ளோயர் கொண்டு ஓரிடதில் குவிப்பதும் பிறகு அவைகளை ட்ராஷ் பையில் அள்ளுவதும் கூட சுவையான காட்சிகள்.
எல்லாத்தையும் என் காம்கார்டரில் எடுத்திருக்கிறேன்.மூவி போட கற்றுக்கொண்டதும் பதிகிறேன்.

sri said...

kabhi alvida naa kehana apdeennu oru padam ungalukku theriyumnnu nenaikkaren, adhudhan gyabagam varudhu endha pictures partha udaney, nalla erukku.

Maram marudhani puusiyadho !

Related Posts Widget for Blogs by LinkWithin