பிப்ரவரி மாத நாட்காட்டி

ஒவ்வொரு மாதமும் என்னுடைய புகைப்படங்களில் இரண்டை நாட்காட்டியாக உங்களுக்கு வழங்கலாம் என்ற எனது திட்டத்தை இந்த இடுகையின் மூலம் அறிந்திருப்பீர்கள்!!

இந்த மாதத்திற்கான நாட்காட்டிகள் இதோவழக்கம் போல ஒரு டிஸ்கி:
வேண்டும் என்றால் இந்த நாட்காட்டியை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.இதை பிரிண்ட் அவுட் எடுத்து நீங்கள் வேலை செய்யும் (?!) இடத்தில் ஒட்டிக்கொள்ளலாம்,உங்கள் நண்பர்களிடத்தில் அனுப்பி வைக்கலாம்(பெயரை மட்டும் எடுத்துவிட்டுராதீங்கப்பு! :-))!!

சொர்க்கத்தின் வாசற்படி

எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.யேசுதாஸின் காந்தக்குரலுக்கு நான் அடிமையாகிப்போன பாடல்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது,அதில் ஒன்று இந்த பாடல்.
பாடலின் இசை மெட்டு,பாடப்பட்ட விதம்,வரிகள் இவை யாவும் எனக்கு மிகவும் பிடித்தமானது!!
இன்றைக்கு ஏதோ ஒன்றிற்காக இந்த பாடல் வரிகளை இணையத்தில் தேட சரியாக கிடைக்கவில்லை,அதனால் வழமை போல் நாமே பதிவிட்டுவிடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல்!!உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்! :-)Unnai Solli Kutram...


பாடல் : சொர்க்கத்தின் வாசப்படி
படம் : உன்னை சொல்லி குற்றமில்லை
இசை : இளையராஜா
பாடகர்கள் : யேசுதாஸ்,சித்ரா
பாடசாசிரியர் : வாலி

(ஆண்)
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
பெண்ணல்ல நீ எனக்கு,வண்ணக்களஞ்சியமே
சின்ன மலர்க்கொடியே,நெஞ்சில் சிந்தும் பனித்துளியே

(பெண்)
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்

(ஆண்)
உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள்,ஒன்றிரண்டு அல்லவே
(பெண்)
ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே
(ஆண்)
சிற்றன்னவாசலின் ஓவியமே,சிந்தைக்குள் ஊரிய காவியமே
(பெண்)
எங்கே நீ அங்கேதான் நான் இருப்பேன்,எப்போதும் நீ ஆட தோள் கொடுப்பேன்
(ஆண்)
மோகத்தில் நான் படிக்கும் மாணிக்கவாசகமே,
நான் சொல்லும் பாடலெல்லாம்,நீ தந்த யாசகமே

(பெண்)
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு,வண்ணக்களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே, நெஞ்சில் சேரும் இளங்கிளியே

(ஆண்)
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்

(பெண்)
உன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்
(ஆண்)
கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன்
(பெண்)
மின்சாரம் போல் எனை தாக்குகிறாய்,மஞ்சத்தை போர்க்களம் ஆக்குகிறாய்
(ஆண்)
கண்ணே உன் கண் என்ன வேலினமோ,கை தொட்டால்,மெய் தோட்டால்,மீட்டிடுமோ
(பெண்)
கோட்டைக்குள் நீ புகுந்து,வேட்டைகள் ஆடுகிறாய்
நான் இங்கு தோர்த்துவிட்டேன்,நீ என்னை ஆளுகிறாய்


(ஆண்)
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
(பெண்)
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
(ஆண்)
பெண்ணல்ல நீ எனக்கு,வண்ணக்களஞ்சியமே
(பெண்)
சிந்தும் பனித்துளியே, என்னை சேரும் இளங்கிளியே

(ஆண்)
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
(பெண்)
சொர்க்கத்தின் வாசற்படி.......


பி.கு:பாடலை தேடித்தந்த ரசிகனுக்கும்,அதை பெற்றுத்தந்த துர்கா அக்காவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!! :-)

On his blindness-உம் அதனால் தோன்றிய என் எண்ணங்களும்

என்னுடைய பள்ளிக்கூட நாட்களில் ஆங்கிலம் எனக்கு எப்பவுமே விருப்பமான பாடம்!! ஆங்கில வகுப்புகள் என்றாலே எனக்கு குஷியாகிவிடும்,அதுவிமில்லாமல் பனிரெண்டாவது வகுப்பு வரையிலும் எல்லா வகுப்பிலும் எனக்கு ஆங்கில ஆசிரியைகள் பிடித்தமான ஆசிரியைகளாக இருந்தனர்.நான் இப்பொழுதும் பசுமையாக நினைத்து பார்க்கும் ஆசிரியர்கள் என்றால் ஆங்கில வகுப்பு எடுத்த டீச்சர்கள் தான் கண் முன்னே வருகிறார்கள் (அதுவும் எமிலி வெர்கீஸ் டீச்சரின் பெயரை கண்டிப்பாக இங்கே சொல்லியே ஆக வேண்டும்).அப்படி ஒரு நாள் முன் எப்போதோ நடந்த ஆங்கில வகுப்பில் நான் கேட்ட விஷயங்கள் நான் பல முறை நினைத்து பார்த்து என்னை யோசிக்க வைத்த விஷயமாக இருந்திருக்கிறது். அப்படிப்பட்ட ஒரு தலைப்பை தான் இன்று பார்க்கப்போகிறோம்.

எப்பொழுதும் ஏதாவது விஷயத்தை எழுதுவதாக இருந்தால் இணையத்தில் அலசி நான்கு இடத்தில் தேடிப்பார்த்து அறிந்துக்கொண்டு எழுதுவேன்,ஆனால் இந்த பதிவில் நான் எழுதுபவை முழுக்க முழுக்க என் நினைவில் இருந்தே எழுதுபவை (அதனால் தப்பு இருந்தா என் கிட்ட சண்டைக்கு வராதீங்க ! :-))

ஆங்கிலம் உலகத்திலேயே அதிகம் பேசப்படுகிற மொழியாக இருந்தாலும் அதில் புகழ்பெற்ற காவியங்கள்னு பாத்தா என்னவோ இரண்டே இரண்டு காவியங்கள் தான். ஒன்று பேரடைஸ் லாஸ்ட்(Paradise lost),இன்னொன்று பேர்டஸ் ரீகெயிண்ட்(Paradise Regained). இது இரண்டையும் எழுதியவரின் பெயர் ஜான் மில்டன்(John Mil்ton). பேரடைஸ் லாஸ்ட் என்பது ஆதாமும்,ஏவாளும் எப்படி தங்கள் தவறினால் சொர்க்கத்தை இழந்தார்கள் என்று கூறும் கதை.அதனால் தான் அதன் பெயர் பேரடைஸ் லாஸ்ட(இழக்கப்பட்ட சொர்க்கம்)். பேரடைஸ் ரீகெயிண்ட் என்பது ஏசு கிருஸ்துவின் கதை. ஏசுவின் பிறப்பினால் மற்றும் இறப்பினால் எப்படி மனிதர்கள் சொர்க்கத்திற்கு செல்ல நேர்ந்தது என்பது பேரடைஸ் ரீகெயிண்ட(திரும்ப பெறப்பட்ட சொர்க்கம்)்.

இப்படி பக்திமயமான எழுத்துக்களை எழுதியிருந்தாலும் நம்ம ஜான் மில்டன் எப்பவுமே இப்படி இல்ல.சின்ன வயசுல எல்லாம் கன்னாபின்னான்னு அரசியல் பிரசுரங்கள் (political pamphlets) எல்லாம் எழுதிட்டு இருந்தாரு.அதுக்கு அப்புறம் வயசான பிறகு அவருக்கு கண் பார்வை போயுடுச்சு!! கண்கட்டின அப்புறம் சூரிய நமஸ்காரம் மாதிரி அவருக்கு அப்போதான் திடீர்னு ஞானோதயம் வந்திருக்கு!! அடடா!!! நம்ம திறமையெல்லாம் போயும் போயும் அரசியல் பிரசுரங்கள் எழுதவே வீனடிச்சுட்டோமே.மனுஷன் இன்னைக்கு இருப்பான் நாளைக்கு போவான்,ஆனால் ஆண்டவனை பற்றி எழுதாமல் நமக்கு இந்த திறமை கிடைத்து என்ன பிரயோஜனம் அப்படின்னு டென்ஷன் ஆகிட்டாரு!! அதுக்கு அப்புறம் எழுத ஆரம்பிச்சது தான் இந்த பேரடைஸ் லாஸ்ட் ,பேரடஸ் ரீகெயிண்ட். இதை அவரு சொல்லிக்கொண்டே போக அவரின் இரு பெண்கள் எழுதுவாங்களாம்.நம்ம ஆளூ திடீர் திடீர்னு மூட் வரும்போதெல்லாம் அவரோட பெண்களை தொந்தரவு பண்ணி எழுத சொல்லுவாராம்.அவங்களும் தூக்க கலக்கத்துல எல்லாம் கண்ணா பின்னா தப்பு தப்பா எழுதுவாங்களாம்.அப்படி எழுதியே அந்த காவியங்கள் ரொம்ப சிறப்பாக அமைந்தது என்று என் டீச்சர் சொல்லுவாங்க.

அவரு கண்ணு போன அப்புறம் எழுதின ஒரு கவிதை தான் இந்த "On his blindness". ஆங்கிலத்தில் பதினான்கு வரிகள் கொண்ட கவிதையை சொன்னெட் (Sonnet) என்று சொல்லுவார்கள்.அப்படி சொன்னெட் வகையை சேர்ந்த ஒரு கவிதை தான் இந்த "On his blindness".இதுல மில்டன் தான் குருடாகி போகறதுக்கு ரொம்ப பீல் பண்ணுறாரு,கண் பார்வை இருந்த போது எல்லாம் நம்ம திறமையை வீனாக்கிட்டோமே அப்படின்னு புலம்பறாரு. ஆனா கடைசியில தன்னுடைய புலம்பலுக்கு தானே சமாதானம் சொல்லிகிறாரு,அதுக்கு அவரு தர உதாரணம் எனக்கு ரொம்ப பிடித்தமானது.
அதாவது,சொர்க்கத்துல பாத்தீங்கன்னா கடவுளின் ஆணையை நிறைவேற்ற பல தேவதைகள் காத்துகிட்டு இருப்பாங்களாம்.கடவுள் ஏதாச்சும் வேலை ஆகனும்னா ஏதாவது ஒரு தேவதைக்கு வேலை குடுப்பாராம்.அவரு வேலை குடுக்கற வரைக்கும் மத்த தேவதைகள் எல்லாம் சும்மா ஒரு வேலையும் செய்யாம தான் இருப்பாங்க.ஆனா அவங்க எல்லாம் வெட்டியா இருக்காங்கன்னு அர்த்தம் கிடையாது!! அப்படி காத்துக்கிட்டு இருக்கறதும் வேலை தான். அதே மாதிரி நான் கடவுளை பத்தி எழுதாவிட்டாலும் என் வழியில் எனக்குண்டான கடமையை செய்துக்கொண்டிருந்து தான் இருந்தேன். அப்படின்னு சமாதானம் சொல்லிக்கிறாரு.

When I consider how my light is spent
Ere half my days in this dark world and wide,
And that one Talent which is death to hide
Lodged with me useless, though my soul more bent
To serve therewith my Maker, and present
My true account, lest He returning chide,
"Doth God exact day-labour, light denied?"
I fondly ask. But Patience, to prevent
That murmur, soon replies, "God doth not need
Either man's work or his own gifts. Who best
Bear his mild yoke, they serve him best. His state
Is kingly: thousands at his bidding speed,
And post o'er land and ocean without rest;
They also serve who only stand and wait.

இதை பற்றி நான் பல சமயங்களில் யோசித்து பார்த்திருக்கிறேன்.இப்படி யோசிக்கும் போது என்னுள்ளே பல அர்த்தங்கள் எனக்கு புலப்பட்டிருக்கின்றன.இவர் சொல்லுவது மாதிரி நாம எல்லோருமே உலகத்துல ஏதாவது வேலை பண்ணுறோம்.எந்த ஒரு வேலை இருந்தாலும் அதில் உயர்வு தாழ்வு எதுவும் கிடையாது. எல்லோருமே தங்களால் இயன்ற வரையில் இந்த சமுதாயத்திற்கு ்தரம்ததா தரம் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரி வகுப்பில் 90% எடுப்பவர் மட்டும் தான் படிக்கிறார்கள் என்று கிடையாது ,மிக முக்கியமான வேலை செய்பவர்தான் உழைக்கிறார் என்றில்லை,எல்லோர் வேலையிலும் அர்த்தம் உண்டு.
நல்ல தலைவர்களை போலவே நல்ல தொண்டனாக இருப்பதும் நாம் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை,நல்ல மேலாளர்கள் மட்டுமில்லாமல் நல்ல தொழிலாளர்கள் இருப்பதும் இந்த உலகில் மேன்மை பெருக மிக முக்கியம்.
we all have a role to play.

அதே போல நாம எல்லோரும் புத்தர்,காந்தி மாதிரி முழுக்க முழுக்க சத்தியம் அஹிம்சைன்னு இருந்தாதான் சமுதாயத்தை மாற்ற முடியும் என்று இல்லை.நம்மால் முடிந்த வரை உண்மையை கடைபிடிக்கலாம்,சமுதாய அவலங்களை எதிர்க்கலாம்,மனிதனின் வாழ்வு வளம்பெற முயற்சி செய்யலாம். சிக்னல்ல பச்சை விளக்கு எரியற வரைக்கும் காத்துக்கிட்டு இருக்க முடிஞ்சா இருங்க.பின்னாடி யாரு என்ன கத்தினால கண்டுக்காம இருக்க முடிஞ்சா சந்தோஷம்,முடியலன உங்களால ஆன வரை 5 நொடிகளோ,10 நொடிகளோ நிந்துட்டு போங்க!!
Just because you cant do everything doesnt mean you dont have to do anything.Just do whatever little you can do.Every bit counts!

நம் கடமை/capacity என்ன என்பதை புரிந்துக்கொண்டு அதன் முக்கியத்துவத்தை அறிந்துக்கொண்டு நம் மனசாட்சிக்கு உண்மையாக நம் வேலையை நாம் செய்ய பழகிக்கொண்டாலே பூமியில் பல நல்ல மாறுதல்கள் ஏற்படும் என்றெல்லாம் கன்னா பின்னாவென்று யோசித்துக்கொண்டிருப்பேன்.
நண்பர்கள் பலரிடம் Roles பற்றியும், அவர்கள் தாங்கள் செய்யும் வேலை பற்றியும்,அதில் முக்கியத்துவமே இல்லாதது போல் தோன்றுவது பற்றியும் சலிப்படையும் போது எனக்கு இந்த சொன்னெட் பற்றி சொல்லத்தோன்றூம்.
நிறைய பேரிடம் இது பற்றி பேசியிருப்பதாலும் ,இனிமேலும் நிறைய பேரிடம் இதை சொல்லக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என்று தோன்றியதாலும் பதிவாகவே வடிக்க முடிவெடுத்தேன்!
இந்த பதிவு உங்கள் எண்ண ஓட்டத்திற்கு தீனியாக இருந்தால் சந்தோஷம்!

வரட்டா?? :-)

பி.கு: எங்கேயோ எழுத ஆரம்பிச்சு எப்படி எப்படியோ போய் அநியாயத்துக்கு மொக்கையாகிடுச்சுன்னு நெனைக்கறேன் அதனால இந்த பதிவை கப்பி பயலின் இந்த tag-க்கு காணிக்கையாக்குகிறேன்!!

இதையாவது ஒத்துக்கோ ராசா!! :-P

கவிதை வரி பெறப்பட்ட தளம்:
http://www.sonnets.org/milton.htm#002

இரு கண்ணும் தூங்காமலே

இத்தனை நாளாக இந்த பாட்டை எப்படி கேட்காமல் விட்டேன் என்று தெரியவில்லை.
மிக மிக இனிமையாக மனதை வருடிவிடும் இசை!! ஹரிஹரன் மற்றும் சுஜாதாவின் குரலில் மாற்றி பாடப்படும் அழகான வரிகளில் மனம் கரைந்து போய் விடுகிறது.

பாடலை திரும்ப திரும்ப ஓட விட்டு பாடலின் ஓட்டத்தில் என்னை தொலைத்துவிட்டேன்!!
இது "காதல் வேதம்" எனும் ஆல்பத்தில் வெளிவந்த பாடலாம்! இந்த ஆல்பத்தின் எல்லா பாடலுமே நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள்! (பின்னூட்டத்தில் இந்த செய்தியை சொன்ன இவான் அவர்களுக்கு நன்றி! :-))

இன்னொரு பாட்டும் நன்றாகத்தான் இருந்தது.ஆனால் இந்த பாட்டை மிஞ்ச முடியாது!! வரிகளின் மென்மை மற்றும் கதகதப்பில் உங்களை மூழ்கடிக்க விருப்பட்டால் இந்த பாடலை ஓட விட்டு கண்களை மூடிவிட்டு உலகை மறந்துவிடலாம்.
வெறும் கிதார் ஆங்காங்கே வீணை மட்டுமே வைத்துக்கொண்டு ,மெட்டின் மேன்மையை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் இசை அமைப்பாளர். இசை அமைப்பாளர் பெயரை கேள்வி பட்டார்போலவே இல்லை!! என்ன கொடுமை சார் இது!! குறைந்தபட்சம் ஒன்றிரண்டு படங்களாவது அவருக்கு கிடைத்திருக்கலாம் :-(


என்னை போலவே உங்களுக்கும் உங்களுக்கும் இந்த பாட்டு அமைதியை தந்தால் மகிழ்ச்சி!! :-)


Get Your Own Music Player at Music Plugin


ஆல்பம் : காதல் வேதம்
பாடல் : இரு கண்ணும் தூங்காமலே
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா
இசை : ஜி.தேவராஜன் (யாருப்பா இவரு?? கலக்கியிருக்காரு))
பாடலாசிரியர் : வைரமுத்து


(பெண்)இரு கண்ணும் தூங்காமலே
ஒரு சொல்லும் பேசாமலே
வாழ்வோம் ஆயிரம் காலம்
மெளனங்கள் தானே
காதலின் வேதம்

(ஆண்)இரு கண்ணும் தூங்காமலே
ஒரு சொல்லும் பேசாமலே
வாழ்வோம் ஆயிரம் காலம்
மெளனங்கள் தானே
காதலின் வேதம்

(பெண்)இரு கண்ணும் தூங்காமலே

(ஆண்)உரையாடவே மொழி தேவையே
உறவாடினால் மொழி ஊமையே
மனதோடு தான் பல ஆசையே
விரல் பேசுமே பரி பாஷையே
விரல் பேசுமே பரி பாஷையே

(பெண்)இரு கண்ணும் தூங்காமலே
ஒரு சொல்லும் பேசாமலே
வாழ்வோம் ஆயிரம் காலம்
மெளனங்கள் தானே
காதலின் வேதம்

(ஆண்)இரு கண்ணும் தூங்காமலே

(பெண்)ஓசையே கொஞ்சம் ஓய்வெடு
மௌனமே வந்து பாய் கொடு
வார்த்தையே நீ போய்விடு
மன்மதா உன் வில் எடு

(ஆண்)இரு கண்ணும் தூங்காமலே
ஒரு சொல்லும் பேசாமலே
வாழ்வோம் ஆயிரம் காலம்
மெளனங்கள் தானே
காதலின் வேதம்

(பெண்)இரு கண்ணும் தூங்காமலே

(ஆண்)உடல் சேரும் இன்பம் ஏனடி
உயிர் தேடும் தேடல் தானடி
மொழி தீர்ந்து போகும் வேளையில்
மோட்சங்கள் தோன்றும் பாரடி
மோட்சங்கள் தோன்றும் பாரடி

(பெண்)இரு கண்ணும் தூங்காமலே
ஒரு சொல்லும் பேசாமலே
வாழ்வோம் ஆயிரம் காலம்
மெளனங்கள் தானே
காதலின் வேதம்

(ஆண்)இரு கண்ணும் தூங்காமலே
ஒரு சொல்லும் பேசாமலே
வாழ்வோம் ஆயிரம் காலம்
மெளனங்கள் தானே
காதலின் வேதம்

(பெண்)இரு கண்ணும் தூங்காமலே

2007-இல் எழுதியதில் பிடித்தது

"எடுத்ததில் பிடித்தது" பதிவு ஏற்கெனவே பாத்திருப்பீங்க. அந்த விளையாட்டின் சூட்டோடு எழுதியதில் பிடித்தது அப்படின்னு ஒரு புது விளையாட்டுல நம்ம சர்வேசன் அண்ணாச்சி சேத்து விட்டுட்டாரு.
திரும்பவும் எந்த பதிவை போடுவது என்று ஏக குழப்பம்!! ஏனென்றால் 2007 நான் முதல் முதலாக தமிழில் கன்னா பின்னாவென்று எழுதி தள்ளிய ஆண்டு.
என் சொந்த பதிவு,
இசை இன்பம்,
இசையரசி,
தமிழில் புகைப்படக்கலை,
சற்றுமுன் செய்தித்தளத்தில் ஆறிவியல் சம்பந்தப்பட்ட செய்திகள்
என்று இந்த ஒரு வருடத்தில் போரடிக்கும் போதெல்லாம் நிறைய எழுதிக்குவித்து விட்டேன்

வருடத்தின் கடைசியில் எழுதுவதில் கொஞ்சம் ஃபோகஸ் வேண்டும் என்பதற்காக இசை இன்பம் மற்றும் இசையரசி ஆகிய பதிவுகளில் இருந்து விலகி விட்டேன்.சற்றுமுன்னிலும் அறிவியல் செய்திகள் போட முடியவில்லை . இப்பொழுதெல்லாம் முக்கியமாக புகைப்படக்கலையில் பதிவுகள் இட்டுக்கொண்டு வருகிறேன்.
நகைச்சுவை போட்டியில் ஒரு பரிசும், சற்றுமுன் நடத்திய செய்திக்கட்டுரை போட்டியில் ஒரு பரிசும் (அப்பொழுது நான் சற்றுமுன்னில் உறுப்பினர் ஆகியிருக்கவில்லை) இந்த வருடத்தில் சொல்லிக்கொள்கிறார் போல் நடந்த இரு நிகழ்வுகள்.
இப்படியாக 2007-இல் என் பதிவுலக பயணத்தை (டேய் !! போதும்டா) அசை போட்டுக்கொண்டிருக்கும் போது இதிலெல்லாம் ஒரூ பதிவை தேர்ந்தெடுப்பது என்பதை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. அதனால் நண்பர்களிடமே கேட்டு விடலாம் என்று என் தமிழ் பதிவர் வட்டத்தில் உள்ள நண்பர்களிடம் ஒரு மடல் அனுப்பி வைத்தேன்.
அதில் ஒரு ஒன்பது பேர் பதில் அனுப்பி இருந்தார்கள்.
அவர்களின் தேர்வுகள் என்ன என்ன என்று பார்க்கலாமா??

* படம் செய்ய விரும்பு - பாகம் 2 - DOF என்றால் என்ன?? - (DOF மற்றும் அதை சார்ந்த தலைப்புகள் பற்றி தமிழில் புகைப்படக்கலை கட்டுரை

* தொலைந்து போன நட்பு (இணைய நட்பு பற்றிய சிறுகதை) (3)

* சினிமா காரம் காபி (தமிழ் திரையுலகில் இசையில் காபி பற்றிய தொடர்)

* ட்யூலிப் மலர் கண்காட்சி (ஒரு மலர் கண்காட்சியின் புகைப்பட பதிவு)

* சோகமான கோவளம் கடற்கரை (சென்னையில் உள்ள கோவளம் கடற்கரை - புகைப்பட பதிவு)

* வானுக்குள் விரியும் அதிசயங்கள்(விண்வெளி ஆய்வு கட்டுரை தொடர்) (2)

* நான் மாமாவிடம் மாட்டிக்கொண்ட கதை(வா.வா.ச போட்டியில் பரிசு பெற்ற நகைச்சுவை பதிவு)

* நீ எந்தன் பக்கம் வந்தால்(காதல் கவிதை)

* காதல் ஒரு சிறப்புப்பார்வை்(காதலை பற்றிய ஆய்வுக்கட்டுரை தொடர்)

* மாலைப்பொழுதின் மயக்கத்திலே(செல்பேசியில் எடுத்த சில புகைப்படங்களின் பதிவு)

* உட்புற படப்பிடிப்பு(Indoor photography) குறிப்புகள்(உட்புற படப்பிடிப்பு பற்றிய தமிழில் புகைப்படக்கலை பதிவு)

* Taare zameen par - அம்மா பாட்டு்்(தாரே ஜமீன் பர் என்ற இந்தி திரைப்படத்தில் வந்த ஒரு பாட்டின் தமிழாக்கம்)

நிறைய பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை சிபாரிசு செய்திருந்தார்கள்.எல்லாமே மேலுள்ள பட்டியலில் உண்டு.
எல்லா பதில்களிலும் அதிகபட்சமாக மூன்று பேர்களிடம் சிபாரிசு பெற்ற
* தொலைந்து போன நட்பு (இணைய நட்பு பற்றிய சிறுகதை)

போன வருடத்தில் என்னுடைய பிடித்தமான பதிவாக அறிவிக்கிறேன்!! :-)

இப்பொழுது இந்த விளையாட்டில் ஐந்து பேரை சேர்த்து விடவேண்டிய நேரம்.
நான் சேர்த்து விடப்போகும் ஐந்து பேர்.

1.)ட்ரீம்ஸ்
2.)கப்பி பய
3.)குசும்பன்
4.)கானா பிரபா
5.)வற்றாயிருப்பு சுந்தர்

இந்த பதிவுல அநியாயத்துக்கு விளம்பரமா போச்சுன்னு நெனைக்கறேன்!!மன்னிச்சுக்கோங்கா! :-)

2007-இல் நான் எழுதியதில் உங்களுக்கு பிடித்தமான பதிவு எதாவது இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.பதிவில் சேர்த்து விடுகிறேன்!
அத்தோடு எனக்கும் உங்களின் விருப்பு வெறுப்புகள் தெரிந்தது போல இருக்கும்!
வரட்டா??
:-)

பி.கு:
இந்த பதிவில் ஒரே சுய புராணமாக இருப்பதினால் கப்பி பயலின் மொக்கை Tag-க்கு இதை காணிக்கையாக்குகிறேன்!
ஏற்கெனவே மக்கள்ஸ்ஸ் ஏகப்பட்ட மொக்கைஸ் எழுதி தள்ளிட்டு இருப்பதினால் நான் வேற தனியா நாலு பேரை இழுத்துவிட்டுட்டு தமிழ் பதிவுலகில் மொக்கை வளருவதற்கு காரணமாக இருக்க விரும்பவில்லை!! :-P

Yeh Ishq haaye - Jab we met (பாடல் மொழிபெயர்ப்பு)

இம்சையக்கா பதிவுல பாத்ததுல இருந்து எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிச்சு போயிருச்சுங்க.

பாடலின் இசை,பாடிய விதம்,கேமரா,வித்தியாசமான ஆடை அணிகலன்கள் அணிந்துக்கொண்டு நடனக்கலைஞர்களின் அழகான ஆட்டம் என இந்த பாடலின் பல அம்சங்கள் என்னை வெகுவாக கவர்ந்தன. அப்பொழுதே இந்த பாட்டுக்கு மொழிபெயர்ப்பை பதிவிட வேண்டும் என்று எண்ணினேன். இம்சை அக்கா வேறு இன்று கேட்டதால் எனக்கு தெரிந்த கொஞ்ச நஞ்ச இந்தியை வைத்துக்கொண்டு என்னால் முடிந்த மொழி பெயர்ப்பு!! :-)


Get Your Own Music Player at Music Plugin
பாடல் : யே இஷ்க்கு ஹாயே (Yeh Ishq Haaye)
படத்தின் பெயர் : ஜப் வீ மெட் (Jab We Met)
பாடகர்: ஷ்ரேயா கோஷல் (Shreya Goshal)
பாடலாசிரியர் : இர்ஷாத் கமீல் (Irshad Kamil)
இசையமைப்பாளர்: ப்ரீதம் சக்ரபோர்த்தி (Pritam Chakraborty)


Haan Hai Koi To Wajah
To Jeena Ka Maza Yun Aane Laga
வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று வந்தவுடன்
வாழ்க்கையை வாழ்வதற்கான ஆர்வமும் வந்ததே

Yeh Hawaon Mein Hai Kya
Thoda Sa Jo Naasha Yun Chane Laga
காற்றினிலே கொஞ்சம் கொஞ்சமா ஒரு புது வித மயக்கம் பரவுதே

Pucho Na Pucha Mujhe Kya
Hua Hai Teri Raahon Mein Aakar Pucho Na Pucha Na
உன்னுடைய வழியில் நான் வந்து சேர்ந்ததால் என்னென்ன ஆச்சுன்னு நீயும்தான் கேளேன்

Pucho Na Pucha Mujhe Kya
Milega Teri Bahon Mein Aakar
உன்னுடைய கைகளிலே நான் வந்து சேர்வதால் என்னென்ன கிடைக்கும் என்று நீயும்தான் கேளேன்

Yeh Ishq Haaye Baithe Bithaye
Jannat Dikhaye Haan
O Raama
Yeh Ishq Haaye Baithe Bithaye
Jannat Dikhaye Haan
இந்த காதல் வந்து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதே
அட ராமா
இந்த காதல் வந்து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதே

Todi Mene Sare Hi Bandhan Zamane Tere
Todongi Na Mein Vada
உலகத்தோட பல பிணைப்புகளை நான் உடைச்சிருக்கேன்,
ஆனா உன் கூட இருக்கும் உறவு மட்டும் நான் உடைக்க மாட்டேன்,இது சத்தியம்.

Aadha Hissa Mere To Dil Ki Kahani Ka Tu
Piya Mein Baaki Aadha
என் இதயத்தின் கதைகளில் பாதிக்கு பாதி நீதான்
மீது பாதி மட்டும்தான் நான் இருக்கேன் காதலனே

Dekho Na Dekho Mujhe Hua Hai
Teri Yaadhon Mein Kho Kar
உன்னுடைய நினைவுகளில் என்னை இழந்ததால் எனக்கு என்னென்ன ஆச்சுன்னு நீயும்தான் பாரேன்

Pucho Na Pucha Mujhe Kya
Milega Teri Baton Mein Jeekar
உன்னுடைய பேச்சுகளிலேயே உயிர் வாழ்வதால் எனக்கு என்னென்ன கிடைக்குதுன்னு நீயும்தான் கேளேன்

Yeh Ishq Haaye Baithe Bithaye
Jannat Dikhaye Haan
O Raama
Yeh Ishq Haaye Baithe Bithaye
Jannat Dikhaye Haan
இந்த காதல் வந்து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதே
அட ராமா
இந்த காதல் வந்து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதே

Mere Jaise Lakho Mile Honge
Tujhko Piya
Mujhe To Mila Tuu Hi
என்னை மாதிரி உனக்கு லட்சம் பேர் கிடைச்சிருக்கலாம்
ஆனா எனக்கு கிடைச்சது நீ மட்டும் தான்.

Tu Hi Mere Hooton Ki Khilti Hui Se Hasi
Gila Bhi Piya Tu Hi
என்னுடைய உதட்டின் ஓரம் பூக்கும் அழகான புன்னகைக்கு காரணம் நீ மட்டும் தான் காதலனே

Dekho Na Dekho Mujhe Kya Hua Hai
Tujhe Sapno Mein Lakar Dekho Na Dekho
உன்னை எந்தன் கனவுகளில் கொண்டு வந்ததால் எனக்கு என்னன்ன ஆச்சுன்னு நீயும்தான் பாரேன்

Pucho Na Pucha Mujhe Kya
Hua Hai Teri Baaton Mein Aakar
உன்னுடைய பேச்சுகளில் நான் வருவதால் எனக்கு என்னென்ன ஆச்சுன்னு நீயும்தான் கேளேன்.

Yeh Ishq Haaye Baithe Bithaye
Jannat Dikhaye Haan
O Raama
Yeh Ishq Haaye Baithe Bithaye
Jannat Dikhaye Haan
இந்த காதல் வந்து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதே
அட ராமா
இந்த காதல் வந்து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதே

Haan Hai Koi To Wajah
To Jeena Ka Maza Yun Aane Laga
வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று வந்தவுடன்
வாழ்க்கையை வாழ்வதற்கான ஆர்வமும் வந்ததே

Yeh Hawaon Mein Hai Kya
Thoda Sa Jo Naasha Yun Chane Laga
காற்றினிலே கொஞ்சம் கொஞ்சமா ஒரு புது வித மயக்கம் பரவுதே

Pucho Na Pucha Mujhe Kya
Hua Hai Teri Raahon Mein Aakar Pucho Na Pucha Na
உன்னுடைய வழியில் நான் வந்து சேர்ந்ததால் என்னென்ன ஆச்சுன்னு நீயும்தான் கேளேன்

Pucho Na Pucha Mujhe Kya
Milega Teri Bahon Mein Aakar
உன்னுடைய கைகளிலே நான் வந்து சேர்வதால் என்னென்ன கிடைக்கும் என்று நீயும்தான் கேளேன்

Yeh Ishq Haaye Baithe Bithaye
Jannat Dikhaye Haan
O Raama
Yeh Ishq Haaye Baithe Bithaye
Jannat Dikhaye Haan
இந்த காதல் வந்து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதே
அட ராமா
இந்த காதல் வந்து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதே

Yeh Ishq Haaye Baithe Bithaye
Jannat Dikhaye Haan
O Raama
Yeh Ishq Haaye Baithe Bithaye
Jannat Dikhaye Haan
இந்த காதல் வந்து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதே
அட ராமா
இந்த காதல் வந்து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதேLyrics reference:
http://www.gr8lyrics.com/en/songs/Yeh%20Ishq%20Haaye.html

எடுத்ததில் பிடித்தது 2007 - படத்தொடர்

பதிவர் வெங்கட்-இன் அழைப்பை ஏற்று இந்த பதிவு.

1. சென்ற வருடத்தில் (2007) நீங்கள் எடுத்த ஒரு படத்தை இட வேண்டும்
2. பிடித்ததற்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் (செய்நேர்த்தி, கலையம்சம், சுயவிருப்பம்…)
3. ஏன் பிடித்தது என்று நாலு வரி எழுதவேண்டும்.

இந்த அழைப்பை பார்த்தவுடன் எனக்கு மிக மிகப்பெரிய குழப்பம்!! 2007-இல் வரைமுறையில்லாமல் படங்கள் எடுத்து குவித்துவிட்டிருக்கிறேனே இதில் எதை எடுப்பது என்று தான் குழப்பம்!! என் கூட சேர்த்து அண்ணாச்சி ஜீவ்ஸின் தலையையும் உருட்டிவிட்டு கடைசியில் 2007-இல் நான் Flickr-இல் கடைசியாக வலையேற்றிய படத்தையே பதிவிட்டு விடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.எப்பவும் போல ஒரு விடுமுறை நாளில் போர் அடிச்சிகிட்டு இருந்த போது வெளியில் இருந்து வந்த மெல்லிய ஒளியை பார்த்தவுடன் மனதில் ஒரு பொறி.புகைப்படக்கலை சார்ந்த ஒரு Caption போடவல்லவாறு ஒரு படம் எடுக்கவேண்டும் என்று வெகு நாட்களாக நினைத்து வந்தேன். புகைப்படக்கலை சம்பந்தமான படம் என்பதால் கேமராவை ஒரு நல்ல ஒளி அமைப்போடு படம் பிடிக்க வேண்டும் என்பது தான் என் திட்டம்.
இந்த மெல்லிய ஒளியை பார்த்தவுடன் மனதில் உற்சாகம் தொற்றிக்கொண்டது!! உடனே பழைய கேமராவை எடுத்து அதை நாற்காலியின் மீது சற்றே சாய்ந்தவாறு இருத்தி என் மனதில் நான் நினைத்து வைத்திருந்தவாரு படம் எடுப்பதில் முனைந்தேன். எப்பொழுதும் போல நிறைய backup படங்களோடு சேர்த்து எடுத்து,கணிணியில் ஏற்றிவிட்டு,நிறைய யோசித்து ஒவ்வொன்றாக கழித்துக்கொண்டு வந்தேன்.அப்புறம் அப்படி இப்படி என்று picasa, GIMP-இல் விளையாடிய பின் கிடைத்த படம் தான் நீங்கள் மேலே பார்ப்பது.

படத்தை பற்றின சில விபரங்கள் கீழே.

Camera: Canon EOS Digital Rebel XTi
Exposure: 0.3 sec (3/10)
Aperture: f/5.6
Focal Length: 55 mm
ISO Speed: 100
Exposure Bias: 0/3 EV
Flash: Flash did not fire

Post production : Contrast adjustment and sepia in Picasa
Bordering and watermarking in GIMP.

இன்றைக்கு இணையத்தில் உலவிக்கொண்டிருந்த போது ஒரு சுவையான தளம் கிடைத்தது.
http://bighugelabs.com

இதை வைத்துக்கொண்டு நாம் நமக்கு விரும்பிய ஒரு படத்தை வைத்துக்கொண்டு நாட்காட்டியை உருவாக்கிக்கொள்ளலாம்.
அந்த தளத்தின் மூலம் நமது படத்தை வைத்து உருவாக்கப்பட்ட ஜனவரி மாத நாட்காட்டி!! :-)

இதை உருவாக்கிவிட்டு உற்சாகம் தாங்காமல் நண்பர்களுக்கு எல்லாம் அனுப்பி வைத்துவிட்டேன்.மக்களுக்கு பிடித்திருந்தால் மாதம் ஒன்றை உருவாக்கி அனுப்பி விடலாம் என்று பார்க்கிறேன்!! ;)
இதே மாதிரி நான் உருவாக்கிய இன்னொரு நாட்காட்டி போனஸாக உங்கள் பார்வைக்கு.நீங்களும் வேண்டும் என்றால் இந்த நாட்காட்டியை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.இதை பிரிண்ட் அவுட் எடுத்து நீங்கள் வேலை செய்யும் (?!) இடத்தில் ஒட்டிக்கொள்ளலாம்,உங்கள் நண்பர்களிடத்தில் அனுப்பி வைக்கலாம்(பெயரை மட்டும் எடுத்துவிட்டுராதீங்கப்பு! :-))!!

சரி இப்பொழுது இந்த தொடருக்கு யாராவது மூன்று பேரை சேர்த்துவிடும் நேரம். நம் "தமிழில் புகைப்படக்கலை"நண்பர்களான
1.)சர்வேசன்
2.)AN&
மற்றும்
3.)ஜீவ்ஸ்

ஆகியோரை இந்த தொடரை தங்கள் பதிவில் இட அழைக்கிறேன்.

எங்கெங்கு காணினும் வெண்மையடா....

எங்க ஊருல இன்னைக்கு திரும்பவும் கடும் பனிப்பொழிவு!!
என்னால சும்மா இருக்க முடியுமா??? :-)அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! எங்க ஊருல இப்போதான் 1-ஆம் தேதி மக்கா!! :-D

Related Posts Widget for Blogs by LinkWithin