2007-இல் எழுதியதில் பிடித்தது

"எடுத்ததில் பிடித்தது" பதிவு ஏற்கெனவே பாத்திருப்பீங்க. அந்த விளையாட்டின் சூட்டோடு எழுதியதில் பிடித்தது அப்படின்னு ஒரு புது விளையாட்டுல நம்ம சர்வேசன் அண்ணாச்சி சேத்து விட்டுட்டாரு.
திரும்பவும் எந்த பதிவை போடுவது என்று ஏக குழப்பம்!! ஏனென்றால் 2007 நான் முதல் முதலாக தமிழில் கன்னா பின்னாவென்று எழுதி தள்ளிய ஆண்டு.
என் சொந்த பதிவு,
இசை இன்பம்,
இசையரசி,
தமிழில் புகைப்படக்கலை,
சற்றுமுன் செய்தித்தளத்தில் ஆறிவியல் சம்பந்தப்பட்ட செய்திகள்
என்று இந்த ஒரு வருடத்தில் போரடிக்கும் போதெல்லாம் நிறைய எழுதிக்குவித்து விட்டேன்

வருடத்தின் கடைசியில் எழுதுவதில் கொஞ்சம் ஃபோகஸ் வேண்டும் என்பதற்காக இசை இன்பம் மற்றும் இசையரசி ஆகிய பதிவுகளில் இருந்து விலகி விட்டேன்.சற்றுமுன்னிலும் அறிவியல் செய்திகள் போட முடியவில்லை . இப்பொழுதெல்லாம் முக்கியமாக புகைப்படக்கலையில் பதிவுகள் இட்டுக்கொண்டு வருகிறேன்.
நகைச்சுவை போட்டியில் ஒரு பரிசும், சற்றுமுன் நடத்திய செய்திக்கட்டுரை போட்டியில் ஒரு பரிசும் (அப்பொழுது நான் சற்றுமுன்னில் உறுப்பினர் ஆகியிருக்கவில்லை) இந்த வருடத்தில் சொல்லிக்கொள்கிறார் போல் நடந்த இரு நிகழ்வுகள்.
இப்படியாக 2007-இல் என் பதிவுலக பயணத்தை (டேய் !! போதும்டா) அசை போட்டுக்கொண்டிருக்கும் போது இதிலெல்லாம் ஒரூ பதிவை தேர்ந்தெடுப்பது என்பதை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. அதனால் நண்பர்களிடமே கேட்டு விடலாம் என்று என் தமிழ் பதிவர் வட்டத்தில் உள்ள நண்பர்களிடம் ஒரு மடல் அனுப்பி வைத்தேன்.
அதில் ஒரு ஒன்பது பேர் பதில் அனுப்பி இருந்தார்கள்.
அவர்களின் தேர்வுகள் என்ன என்ன என்று பார்க்கலாமா??

* படம் செய்ய விரும்பு - பாகம் 2 - DOF என்றால் என்ன?? - (DOF மற்றும் அதை சார்ந்த தலைப்புகள் பற்றி தமிழில் புகைப்படக்கலை கட்டுரை

* தொலைந்து போன நட்பு (இணைய நட்பு பற்றிய சிறுகதை) (3)

* சினிமா காரம் காபி (தமிழ் திரையுலகில் இசையில் காபி பற்றிய தொடர்)

* ட்யூலிப் மலர் கண்காட்சி (ஒரு மலர் கண்காட்சியின் புகைப்பட பதிவு)

* சோகமான கோவளம் கடற்கரை (சென்னையில் உள்ள கோவளம் கடற்கரை - புகைப்பட பதிவு)

* வானுக்குள் விரியும் அதிசயங்கள்(விண்வெளி ஆய்வு கட்டுரை தொடர்) (2)

* நான் மாமாவிடம் மாட்டிக்கொண்ட கதை(வா.வா.ச போட்டியில் பரிசு பெற்ற நகைச்சுவை பதிவு)

* நீ எந்தன் பக்கம் வந்தால்(காதல் கவிதை)

* காதல் ஒரு சிறப்புப்பார்வை்(காதலை பற்றிய ஆய்வுக்கட்டுரை தொடர்)

* மாலைப்பொழுதின் மயக்கத்திலே(செல்பேசியில் எடுத்த சில புகைப்படங்களின் பதிவு)

* உட்புற படப்பிடிப்பு(Indoor photography) குறிப்புகள்(உட்புற படப்பிடிப்பு பற்றிய தமிழில் புகைப்படக்கலை பதிவு)

* Taare zameen par - அம்மா பாட்டு்்(தாரே ஜமீன் பர் என்ற இந்தி திரைப்படத்தில் வந்த ஒரு பாட்டின் தமிழாக்கம்)

நிறைய பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை சிபாரிசு செய்திருந்தார்கள்.எல்லாமே மேலுள்ள பட்டியலில் உண்டு.
எல்லா பதில்களிலும் அதிகபட்சமாக மூன்று பேர்களிடம் சிபாரிசு பெற்ற
* தொலைந்து போன நட்பு (இணைய நட்பு பற்றிய சிறுகதை)

போன வருடத்தில் என்னுடைய பிடித்தமான பதிவாக அறிவிக்கிறேன்!! :-)

இப்பொழுது இந்த விளையாட்டில் ஐந்து பேரை சேர்த்து விடவேண்டிய நேரம்.
நான் சேர்த்து விடப்போகும் ஐந்து பேர்.

1.)ட்ரீம்ஸ்
2.)கப்பி பய
3.)குசும்பன்
4.)கானா பிரபா
5.)வற்றாயிருப்பு சுந்தர்

இந்த பதிவுல அநியாயத்துக்கு விளம்பரமா போச்சுன்னு நெனைக்கறேன்!!மன்னிச்சுக்கோங்கா! :-)

2007-இல் நான் எழுதியதில் உங்களுக்கு பிடித்தமான பதிவு எதாவது இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.பதிவில் சேர்த்து விடுகிறேன்!
அத்தோடு எனக்கும் உங்களின் விருப்பு வெறுப்புகள் தெரிந்தது போல இருக்கும்!
வரட்டா??
:-)

பி.கு:
இந்த பதிவில் ஒரே சுய புராணமாக இருப்பதினால் கப்பி பயலின் மொக்கை Tag-க்கு இதை காணிக்கையாக்குகிறேன்!
ஏற்கெனவே மக்கள்ஸ்ஸ் ஏகப்பட்ட மொக்கைஸ் எழுதி தள்ளிட்டு இருப்பதினால் நான் வேற தனியா நாலு பேரை இழுத்துவிட்டுட்டு தமிழ் பதிவுலகில் மொக்கை வளருவதற்கு காரணமாக இருக்க விரும்பவில்லை!! :-P

14 comments:

கானா பிரபா said...

தல

ஒரு கல்லில ரண்டு மாங்காயா?

என்னையும் ஆட்டத்தில் சேர்த்ததுக்கு நன்றி, என்னாலான பணியைச் செய்றேன் ;-)

SurveySan said...

:) லேட்டஸ்ட் போஸ்ட்ட ஞாபகம் வச்சு சொல்லிட்டாங்க போல.

எனக்கு அந்த ஹிந்தி மொழிபெயர்ப்பு பிடிச்சிருந்தது. உபயோகமான பதிவு.

ஏற்கனவே சொன்ன மாதிரி பழைய ஹிந்தி பாட்டெல்லாம் மாசத்துக்கு ஒண்ணு அவுத்து விட்டீங்கன்னா, தூளாயிருக்கும்.

:)

Dreamzz said...

ஆஹா ஆஹா! கேப்ல ஆப்பா?

Dreamzz said...

உங்க எல்லா பதிவுமே நல்லா தான் இருக்கும் தல. :)

நம்மளையும் டேக் செய்தமைக்கு நன்றி!

கோபிநாத் said...

\\Dreamzz said...
உங்க எல்லா பதிவுமே நல்லா தான் இருக்கும் தல. :)\\

ரீப்பிட்டேய்ய்ய்ய்

கோபிநாத் said...

\\இந்த பதிவில் ஒரே சுய புராணமாக இருப்பதினால் கப்பி பயலின் மொக்கை Tag-க்கு இதை காணிக்கையாக்குகிறேன்!\\

இதெல்லாம் செல்லாது..ராசா ;)

கப்பி | Kappi said...

வா.வி.அ-வும் சி.கா.கா-வும் தான் என் சாய்ஸ்..அதை ஏன்டா கேட்டப்ப சொல்லலைன்னு கேட்கப்படாது..கொஞ்சம் லேட்டா தான் வரும் :))

பழிக்குப் பழி ரத்தத்துக்கு ரத்தம் டேக்குக்கு டேக்கா...நல்லா இருங்க அண்ணாச்சி!!

cheena (சீனா) said...

எழுதியதில் பிடித்தது எனக் கேட்டால் படித்ததில் பிடித்தது எனக் கருதி பதிவர்களிடம் படித்ததில் பிடித்தது எதெனக் கேட்டு அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து .... ம்ம்ம்ம்ம் - அருமையான பதிவு

நம்மைப் பொறுத்தவரை நாம் எல்லாமே பிடித்துத்தானே எழுதுகிறோம்.

CVR said...

@கானா பிரபா!!
நன்றி அண்ணாச்சி!! :-D

@சர்வேசன்
இரண்டு இந்தி பாட்டுகள் மொழி பெயர்ப்பு வெஞ்சிருந்தேனே!
நீங்க எதை சொல்லுறீங்க??
இந்த பதிவு போட அழைப்பு விடுத்ததற்கு நன்றி சர்வேசன்!! :-)

@ட்ரீம்ஸ்
சூப்பரு!!
சீக்கிரம் பதிவு போட்டுட்டு சொல்லு பா!! :-)

@கோபிநாத்
வாழ்த்துக்களுக்கு ரொம்ப டாங்க்ஸு அண்ணாச்சி!! :-)

@கப்பி
//அதை ஏன்டா கேட்டப்ப சொல்லலைன்னு கேட்கப்படாது..கொஞ்சம் லேட்டா தான் வரும் :))///
சூப்பரு!!
எப்படியாவது வந்தா சரி!! ;)

@சீனா
//நம்மைப் பொறுத்தவரை நாம் எல்லாமே பிடித்துத்தானே எழுதுகிறோம்.////
அதென்னமோ சரி தான்!!
ஆனால் நாம் எழுதிய பின் மக்களிடையே கிடைத்த வரவேற்பு/மாற்றம் இவற்றை வைத்து நமக்கு என்ன பிடித்திருக்கிறது என்று கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன்!!
நமக்கு இதெல்லாம் ஒன்றும் யோசிக்க தோன்றவில்லை என்பதால் நண்பர்களையே கேட்டு விட்டேன் :-)

குசும்பன் said...

உங்கள் சொந்த கதையை வேறு பெயரில் எழுதினீர்களே, பாவனா போட்டோ எல்லாம் போட்டு அந்த பதிவு எனக்கு பிடித்தது:)

வெட்டிப்பயல் said...

தல,
எனக்கு பிடிச்சது உங்க படம் செய்ய விரும்பு பதிவு தான்...

//அதை ஏன்டா கேட்டப்ப சொல்லலைன்னு கேட்கப்படாது..கொஞ்சம் லேட்டா தான் வரும் :))//
ரிப்பிட்டே!!!

இம்சை அரசி said...

// தொலைந்து போன நட்பு (இணைய நட்பு பற்றிய சிறுகதை)//

இதுதான் எனக்கும் ரொம்ப பிடித்தது அண்ணா... ஆனா இனிமேல் சோகக்கதை எழுதக் கூடாது :)))

அப்புறம் ஹிந்திப் பாட்டு மொழிப்பெயர்ப்பு எல்லாம் பிடிக்கும். especially "Ye Ishq Hai" :)))

SathyaPriyan said...

முதலில் நான் பரிந்துரைத்த பதிவுகளை பற்றி.

//
ட்யூலிப் மலர் கண்காட்சி (ஒரு மலர் கண்காட்சியின் புகைப்பட பதிவு)

சோகமான கோவளம் கடற்கரை (சென்னையில் உள்ள கோவளம் கடற்கரை - புகைப்பட பதிவு)
//
இவை இரண்டும் ஒரு தொழில் முறை புகைப்படக்காரரை போன்ற நேர்த்தியுடன் படமாக்கப்பட்ட புகைப் படங்கள்.

//
வானுக்குள் விரியும் அதிசயங்கள்(விண்வெளி ஆய்வு கட்டுரை தொடர்) (2)
//
இதனை எழுத நீங்கள் எடுத்துக் கொண்ட உழைப்பு என்னை பிரமிக்க செய்தது. உதாரணமாக ஒரு வரலாற்று கட்டுரை எழுதுவதென்றால் இது தான் நிஅழ்ந்தது என்று எளிதாக கூறி விட முடியும். ஆனால் இதனை போன்ற அறிவியல் கட்டுரை எழுதும் பொழுது என்ன? என்று விளக்குவதுடன், அது ஏன்? எதற்கு? என்று அனைத்தையும் விளக்க வேண்டும்.

அவ்வாறு செய்யும் பொழுது தொடர்ச்சி விலகுதல் தவிர்க்க முடியாதது (continuity gap?). ஆனால் நீங்கள் நூல் பிடித்தால் போல் பிசிரு தட்டாமல் உங்கள் பானியில் நகைச்சுவையுடன் எடுத்து சொல்லிய விதம் அருமை.

//
நான் மாமாவிடம் மாட்டிக்கொண்ட கதை(வா.வா.ச போட்டியில் பரிசு பெற்ற நகைச்சுவை பதிவு)
//
நான் உங்கள் பதிவினை படிக்க தொடங்கியது இந்த பதிவில் இருந்து தான். நான் தங்களுக்கு எழுதிய முதல் பின்னூட்டமும் இதற்கு தான். எனக்கு ஒரு நல்ல நட்பு கிடைக்க காரணமானது இந்த பதிவு.

மற்ற பதிவுகளை இன்னும் படிக்க வில்லை. படித்து விட்டு சொல்லுகிறேன்.

CVR said...

@குசும்பன்!
அடங்க மாட்டீங்க போல!!
உங்க பதிவுகளில் உங்களுக்கு பிடிச்சது என்ன????
:-)

@வெட்டி
//Blogger வெட்டிப்பயல் said...

தல,
எனக்கு பிடிச்சது உங்க படம் செய்ய விரும்பு பதிவு தான்...

//அதை ஏன்டா கேட்டப்ப சொல்லலைன்னு கேட்கப்படாது..கொஞ்சம் லேட்டா தான் வரும் :))//
ரிப்பிட்டே!!!
////

கப்பிக்கு சொன்ன மறுமொழியையே உங்களுக்கு ரிப்பீட்டிக்கிறேன்!! :-)

@இம்சையக்கா
//இதுதான் எனக்கும் ரொம்ப பிடித்தது அண்ணா... ஆனா இனிமேல் சோகக்கதை எழுதக் கூடாது :)))

அப்புறம் ஹிந்திப் பாட்டு மொழிப்பெயர்ப்பு எல்லாம் பிடிக்கும். especially "Ye Ishq Hai" :)))////

நெம்ப டேங்க்ஸு யக்கோவ்!! இனிமேல் மெலும் இந்தி பாடல்கள் மொழிபெயர்க்க முயல்கிறேன்.

@சத்தியப்ரியன்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணாச்சி!! :-)


//நான் உங்கள் பதிவினை படிக்க தொடங்கியது இந்த பதிவில் இருந்து தான். நான் தங்களுக்கு எழுதிய முதல் பின்னூட்டமும் இதற்கு தான். எனக்கு ஒரு நல்ல நட்பு கிடைக்க காரணமானது இந்த பதிவு.///
ரொம்ப சந்தோஷம்.நான் இணையத்தில் பெரிதும் மதிக்கும் நண்பர்களில் நீங்களும் ஒருவர்.அந்த நட்பு கிடைக்க காரணமான இந்த பதிவு ,இனிமேல் எனக்கும் ஸ்பெஷல் பதிவு தான்!! :-)

Related Posts Widget for Blogs by LinkWithin