எடுத்ததில் பிடித்தது 2007 - படத்தொடர்

பதிவர் வெங்கட்-இன் அழைப்பை ஏற்று இந்த பதிவு.

1. சென்ற வருடத்தில் (2007) நீங்கள் எடுத்த ஒரு படத்தை இட வேண்டும்
2. பிடித்ததற்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் (செய்நேர்த்தி, கலையம்சம், சுயவிருப்பம்…)
3. ஏன் பிடித்தது என்று நாலு வரி எழுதவேண்டும்.

இந்த அழைப்பை பார்த்தவுடன் எனக்கு மிக மிகப்பெரிய குழப்பம்!! 2007-இல் வரைமுறையில்லாமல் படங்கள் எடுத்து குவித்துவிட்டிருக்கிறேனே இதில் எதை எடுப்பது என்று தான் குழப்பம்!! என் கூட சேர்த்து அண்ணாச்சி ஜீவ்ஸின் தலையையும் உருட்டிவிட்டு கடைசியில் 2007-இல் நான் Flickr-இல் கடைசியாக வலையேற்றிய படத்தையே பதிவிட்டு விடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.



எப்பவும் போல ஒரு விடுமுறை நாளில் போர் அடிச்சிகிட்டு இருந்த போது வெளியில் இருந்து வந்த மெல்லிய ஒளியை பார்த்தவுடன் மனதில் ஒரு பொறி.புகைப்படக்கலை சார்ந்த ஒரு Caption போடவல்லவாறு ஒரு படம் எடுக்கவேண்டும் என்று வெகு நாட்களாக நினைத்து வந்தேன். புகைப்படக்கலை சம்பந்தமான படம் என்பதால் கேமராவை ஒரு நல்ல ஒளி அமைப்போடு படம் பிடிக்க வேண்டும் என்பது தான் என் திட்டம்.
இந்த மெல்லிய ஒளியை பார்த்தவுடன் மனதில் உற்சாகம் தொற்றிக்கொண்டது!! உடனே பழைய கேமராவை எடுத்து அதை நாற்காலியின் மீது சற்றே சாய்ந்தவாறு இருத்தி என் மனதில் நான் நினைத்து வைத்திருந்தவாரு படம் எடுப்பதில் முனைந்தேன். எப்பொழுதும் போல நிறைய backup படங்களோடு சேர்த்து எடுத்து,கணிணியில் ஏற்றிவிட்டு,நிறைய யோசித்து ஒவ்வொன்றாக கழித்துக்கொண்டு வந்தேன்.அப்புறம் அப்படி இப்படி என்று picasa, GIMP-இல் விளையாடிய பின் கிடைத்த படம் தான் நீங்கள் மேலே பார்ப்பது.

படத்தை பற்றின சில விபரங்கள் கீழே.

Camera: Canon EOS Digital Rebel XTi
Exposure: 0.3 sec (3/10)
Aperture: f/5.6
Focal Length: 55 mm
ISO Speed: 100
Exposure Bias: 0/3 EV
Flash: Flash did not fire

Post production : Contrast adjustment and sepia in Picasa
Bordering and watermarking in GIMP.

இன்றைக்கு இணையத்தில் உலவிக்கொண்டிருந்த போது ஒரு சுவையான தளம் கிடைத்தது.
http://bighugelabs.com

இதை வைத்துக்கொண்டு நாம் நமக்கு விரும்பிய ஒரு படத்தை வைத்துக்கொண்டு நாட்காட்டியை உருவாக்கிக்கொள்ளலாம்.
அந்த தளத்தின் மூலம் நமது படத்தை வைத்து உருவாக்கப்பட்ட ஜனவரி மாத நாட்காட்டி!! :-)

இதை உருவாக்கிவிட்டு உற்சாகம் தாங்காமல் நண்பர்களுக்கு எல்லாம் அனுப்பி வைத்துவிட்டேன்.மக்களுக்கு பிடித்திருந்தால் மாதம் ஒன்றை உருவாக்கி அனுப்பி விடலாம் என்று பார்க்கிறேன்!! ;)
இதே மாதிரி நான் உருவாக்கிய இன்னொரு நாட்காட்டி போனஸாக உங்கள் பார்வைக்கு.



நீங்களும் வேண்டும் என்றால் இந்த நாட்காட்டியை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.இதை பிரிண்ட் அவுட் எடுத்து நீங்கள் வேலை செய்யும் (?!) இடத்தில் ஒட்டிக்கொள்ளலாம்,உங்கள் நண்பர்களிடத்தில் அனுப்பி வைக்கலாம்(பெயரை மட்டும் எடுத்துவிட்டுராதீங்கப்பு! :-))!!

சரி இப்பொழுது இந்த தொடருக்கு யாராவது மூன்று பேரை சேர்த்துவிடும் நேரம். நம் "தமிழில் புகைப்படக்கலை"நண்பர்களான
1.)சர்வேசன்
2.)AN&
மற்றும்
3.)ஜீவ்ஸ்

ஆகியோரை இந்த தொடரை தங்கள் பதிவில் இட அழைக்கிறேன்.

18 comments:

கோபிநாத் said...

நன்றாக இருக்கு சிவிஆர் ;))

\\.மக்களுக்கு பிடித்திருந்தால் மாதம் ஒன்றை உருவாக்கி அனுப்பி விடலாம் என்று பார்க்கிறேன்!! ;)\\\

கரும்பு தின்னக் கூலியா! ;) அனுப்புங்க ராசா ;)

SurveySan said...

interesting chain of posts :)

will come-in shortly.

கானா பிரபா said...

காமிரா கவிஞரே

சூப்பரு

//கரும்பு தின்னக் கூலியா! ;) அனுப்புங்க ராசா ;)//

ரிப்பீட்டே

G.Ragavan said...

ஆகா... இப்பிடியொரு சங்கிலித் தொடரா... தொடரட்டும். வாழ்த்துகள்.

k4karthik said...

//2007-இல் வரைமுறையில்லாமல் படங்கள் எடுத்து //

புரிஞ்சா சரி தான்..

k4karthik said...

போட்டோ சூப்பரு..

Dreamzz said...

சங்கிலி பதிவு போய் இப்போ போட்டோவா? சூப்பரு!

Dreamzz said...

படமும் நல்லா இருக்கு!

Dreamzz said...

//\.மக்களுக்கு பிடித்திருந்தால் மாதம் ஒன்றை உருவாக்கி அனுப்பி விடலாம் என்று பார்க்கிறேன்!! ;)\\\

கரும்பு தின்னக் கூலியா! ;) அனுப்புங்க ராசா ;)//
ரிப்பீட்டு!

Sanjai Gandhi said...

முதல் படம் தனியாக பார்ப்பதை விட கேலண்டரில் பார்ப்பதற்கு மிக அழகு.. வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. அவ்வளவு அருமை.:)
அது புகைப்படம் போல் தெரியவில்லை. கேமிராவை கேலண்டரில் ஒட்டி வைத்தது போல் இருக்கு. :)

CVR said...

@கோபிநாத்
//கரும்பு தின்னக் கூலியா! ;) அனுப்புங்க ராசா ;)////
ஆஹா!
வாழ்த்துக்களுக்கு நன்றி கோபிநாத்!

@சர்வேசன்
சூப்பரு!
உங்க பதிவு பாக்க ஆவலுடன் வெயிட்டிங்!!
:-)

@கானா பிரபா
நன்றி தல! :-)

@ஜிரா
//ஆகா... இப்பிடியொரு சங்கிலித் தொடரா... தொடரட்டும். வாழ்த்துகள்////
ஆமாம் அண்ணாச்சி !
வித்தியாசமான தொடரத்தான் இருக்கு!! :-)

@கே4கே
////2007-இல் வரைமுறையில்லாமல் படங்கள் எடுத்து //

புரிஞ்சா சரி தான்..////
புரியாம இல்ல! ஆனா காசா பணமா!!அது சுட்டு தள்ளிக்கிட்டு இருக்கேன்!! :-D
வாழ்த்துக்களுக்கு நன்றி!!

@ட்ரீம்ஸ்
வாப்பா!!
பனியெல்லாம் இப்போ எப்படி இருக்கு உங்க ஊருல??

@சஞ்சய்
வாங்க சஞ்சய்!
படம் உங்களுக்கு பிடித்தமையில் ரொம்ப சந்தோஷம்!! :-)

Iyappan Krishnan said...

naanga varusham muzusukkum calendar pannittOmilla ;)

varom vaarom... koodiya seekkiraththilaiyE vaarom

குசும்பன் said...

அருமையாக இருக்கு !

கானா பிரபா சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டேய்

ஜி said...

super CVR.. attakaasamaa irukuthu :))

இளைய கவி said...

2007 ல் நான் எடுத்த படங்கள் தங்கல் பார்வைக்காக.

http://dailycoffe.blogspot.com/2008/01/cvr-2007.html

என்றும் அன்புடன் இளையகவி

இளைய கவி said...

இது என்னுடைய புகைப்பட பதிவு தங்கள் போட்டி மற்றும் பார்வைகாக.


http://dailycoffe.blogspot.com/2008/01/cvr-2007.html

என்றும் அன்புடன்
இளையகவி

CVR said...

@ஜீவ்ஸ்
சீக்கிரமா வாங்க அண்ணாச்சி!
மீ த வெயிட்டிங்! :-)

@குசும்பன்
ஹி ஹி!!
நன்றி! :-)

@ஜி
டாங்க்ஸு பா

@இளையகவி
புகைப்படப்போட்டி "தமிழில் புகைப்படக்கலை" எனும் குழுப்பதிவால் நடத்தப்பட்டுவது!
அந்த பதிவில் உங்கள் படங்களை பின்னூட்டமாக இடவும்.
நன்றி

SurveySan said...

போட்டாச்சு :)

இங்க க்ளிக்கி பாருங்க

Related Posts Widget for Blogs by LinkWithin