திருமணம் வாழ்க்கைக்கு அவசியமா??

இன்றைக்கு ஒரு வலைப்பதிவு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது பேச்சு திருமணம் பற்றி திரும்பியது.
நிறம்ப பேசிய பின் எங்கள் பேச்சின் சாராம்சம் இது தான்.

திருமணம் நாமே வகுத்துக்கொண்டே ஒரு ஆடிமைத்தனம்,மனிதன் தானே வைத்துக்கொண்ட சொந்த செலவு சூன்யம். தனக்கு வேண்டிய எல்லாவற்றையும் திருமணம் என்ற சங்கிலி இல்லாமலே மனிதனால் அனுபவிக்க முடியும்.உடன் இருப்போர் நிர்பந்தத்தால் (peer pressure) மட்டுமே மனிதன் திருமணத்திற்கு ஒற்றுக்கொண்டும் பிறகு காலம் முழுதும் அதற்கு கட்டுப்பட்டும் இருக்கிறான்.

இது என் நண்பர்.

கட்டாயத்தினால் நிறைய பேர் திருமணத்துக்கு ஒற்றுக்கொண்டாலும் முக்கால்வாசிப்பேருக்கு திருமணத்தால் மகிழ்ச்சியே தான் மிஞ்சுகிறது. காதலை கொண்டாடுவதற்கும், வாழ்க்கையை துணையோடு கழிப்பதற்கும் இது அவசியம்.குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்களுக்கு திருமணம் ஒரு நல்ல ஏற்பாடு.
பிரச்சினைகள் இருந்தாலும் இப்போதைய தலைமுறை அவற்றை களைந்துக்கொண்டு வருகிறது என நம்புகிறேன்

இது நான்!


நண்பர் ஒற்றுக்கொள்வதாக இல்லை.
கடைசியாக எது எப்படியோ "It works for most people" என்று சொல்லி முடித்தேன்!!
அதற்கு அவர்! "அப்படியென்று நீ நினைக்கிறாய்,ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இதனால் தொந்தரவு தான்,ஏதோ மாட்டிக்கொண்டு விட்டோமே என்ற கட்டாயத்தில் தான் அவர்கள் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்" என்று கூறி விட்டார்!!

அட!! என்ன இப்படி சொல்லிட்டீங்க!!!வாங்க நம்ம தமிழ் வலையுலக அன்பர்கள் கிட்டேயே கேட்டுருவோம் என்று ஒரு கருத்துக்கணிப்புக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சுட்டேன்!!!
கருத்து கணிப்பு எல்லாம் கேட்டா எல்லாம் பொய் தான் சொல்வாங்க!! நம்ப மக்கள் கடைந்தெடுத்த "hypocrites" என்று சொல்லி சிரித்தார்!!

எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல!! ஆனா ஏற்பாடு பண்ணியாச்சேன்னு பதிவை போட்டுரலாம்னு எழுத ஆரம்பிச்சிட்டேன்!!! Hypocrism இல்லாம உண்மையா பதில் சொல்லங்க மக்கா!!
யார் ஓட்டு போட்டாங்கன்னு சத்தியமா தெரியப்போறதில்ல,அதனால் அவங்கவங்க தங்கமணி மற்றும் ரங்கமணிகள் பற்றி பயப்படாம தைரியமா ஓட்டு போடுங்க!!
அது சரி!! இந்த hypocrism-னா என்னன்னு கேக்கறீங்களா???
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது!! :-)

பி.கு: "Other" ஆப்ஷனை தேர்வு செய்தால் அதன் பக்கத்தில் கொடுத்திருக்கும் field-இல் தமிழில் எழுதி வைத்தால் பார்க்க முடியவில்லை. :-( (font problem)
அன்பர்கள் ஏதாவது சொல்ல நினைத்தால் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்!! :-)

படம் : http://www.serendipitycakes.co.uk/graphics/wedding-cakes3.jpg

42 comments:

Dreamzz said...

ஹிஹி! நான் எந்த கட்சி என்று உங்களுக்கு முதல்லயே தெரியும்.

வாழ்க்கையை நெறி படுத்த, துணை இருக்க, காதல் அவசியம். அந்த காதலை முறைபடுத்த சமுதாயத்தின் கட்டமைப்பு தான் திருமணம். As always, It is individual Vs Species. And I always side with the eternal good, the species. The individual can lose, but the species cannot afford too....

சீனு said...

'ஓட்டு'ட்டேன்.

G3 said...

திருமணம்ங்கறத இப்படி வெறும் குழ்ந்தை வளர்ப்ப மட்டும் மையமா வச்சு பாக்கறது சரியான்னு தெரியல. ஆனா உங்கள் நண்பர் சொல்ற மாதிரி வாழ்ந்தா பிற்காலத்துல குடும்பம்-ன்ற ஒரு கான்ஸெப்டே இல்லாம போயிடும். திருமணம் அடிமைத்தனமாவும் கஷ்டமாவும் தெரியறதுக்கு காரணமே அவங்கவங்க கண்ணோட்டம் தான். ஒருத்தனுக்கு ரத்தம் பாத்தாலே அருவருப்பா இருக்கலாம்.. ஆனா மருத்துவர்கள் தினம் தினம் அந்த ரத்தத்தை பாத்து தான் ஆகனும். அதுல எல்லாருக்கும் ரத்தத்தை பாக்குறது புடிக்கும்னு நிச்சயமா சொல்ல முடியாது. ஆனா அதுக்காக இப்படி ஒரு தொழில் அவசியமான்னு கேக்கறது எவ்வள்வு பெரிய பைத்தியக்காரத்தனம் :-(

சில விஷயங்கள பேசி புரிய வைக்கறது ரொம்ப கஷ்டம். இந்த டாபிக் அதுல ஒன்னு..

காட்டாறு said...

அண்ணாச்சீ, நல்ல கேள்வியைத்தான் சுதந்திர தினத்தன்று கேட்டு இருக்கீங்க!

Syam said...

I second G3...pinnadi varavanga ellaam 3rd la irundhu aarambinga...

ennoda karuthu wedding naala sila pala kastangal irundhaalum...sila nallathum irukku...vaalkaina medu pallam rendum irukkum...

athu sari CVR oru friend ah paartha rendu figure pathi pesi ensoi panratha vitutu ithu ellaam ethukku :-)

MSATHIA said...

ஒட்டு போட்டுட்டேன்.
முதல்ல வெட்டி இப்போ CVR சரி ஏதோ நடக்குது.கல்யாணத்தைப்பத்தி பல பேருக்கு சந்தேகங்கள் அடிக்கடி வருது இப்பல்லாம். ;-)

வேதா said...

இந்த தலைப்பை பார்த்துட்டு கருத்து சொல்லலாம்னு வந்தா நமக்கு முன்னாடியே வந்து கருத்து சொன்ன காயத்ரிய பார்த்துட்டு கொஞ்சம் டென்சன் ஆகிட்டேன் :) திருமணம் அவசியமா என்பதே அவரவர் கண்ணட்டோத்தை பொறுத்தது தான் என்பதே என் கருத்து :)

/சில விஷயங்கள பேசி புரிய வைக்கறது ரொம்ப கஷ்டம். இந்த டாபிக் அதுல ஒன்னு.. /
எப்டி காயத்ரி எப்டி இப்டியெலலம் சூப்பரா சொல்ட :)

நாட்டாமை என்னது இது? திருமணம் பத்தி பதிவு போட்டா தான் வருவீங்களா? :)

சரி ரொம்ப பேசிட்டேன் என் ஓட்டு போட்டுட்டு போறேன் :)

Senthil Alagu Perumal said...

திருமணம் என்பது இரு மனங்கள் சம்மந்தப் பட்ட விஷயம். இது ப‌லருக்குத் தேவைப் படுகிறது, சிலருக்குத் தேவைப் படாது. இது அவசியம் அனாவசியம் என்று சொல்ல முடியாது. தேவைப் பட்டால் செய்து கொள்ளுங்கள் தேவை இல்லை என்று நினைத்தால் ஒரு அப்துல் கலாம் போலவோ ஒரு வாஜ்பாய் போலவோ இருந்து கொள்ளலாம் தவறில்லை. ஹி ஹி ஹி நான் முதல் Category.

Anonymous said...

கட்டுப்பாடே இருக்கக்கூடாதுன்னா என்ன?

அவரோட அப்பா அம்மா அப்படி இருந்திருந்தாங்கன்னா

அவர் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்னு


யோசிச்சுப் பார்க்கச் சொல்லுங்க! இது


தனி மனித தாக்குதலா எடுத்துக்க வேண்டாம்.

திருமணமே வேண்டாம்னா, குழந்தைகள


உலகத்துக்கு கொண்டு வராதீங்க!

CVR said...

@Dreamzz
கருத்துக்களை கச்சிதமாக கக்கிவிட்டீர்கள் போங்கள் (க.க.க.போ)!!
nice points தலைவா
பகிர்ந்தமைக்கு நன்றி!! :-)

@சீனு
நன்றி சீனு!! :-)

@G3
அடாடா!!!!
உங்க குள்ள தூங்கிகிட்டு இருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிட்டேனா??? :-D
கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அக்கா!!

@காட்டாறு
கேள்வி கேக்கறதுதான் ரொம்ப சுலபமாச்சே,அதான் கேட்டு போட்டேன்.
நீங்க உங்க கருத்துக்களை கொஞ்சம் சொல்லுறது!!!
அது சரி!! மொதல்ல ஓட்டு போட்டீங்களா?? :-)

@ஷ்யாம்
//.ennoda karuthu wedding naala sila pala kastangal irundhaalum...sila nallathum irukku...vaalkaina medu pallam rendum irukkum...///
ஆஹா!!
நாட்டமையே தீர்ப்பு வழங்கிட்டாரு!! இனிமே இந்த பேச்சுக்கு மறு பேச்சு ஏதாவது இருக்கா?? :-D
//athu sari CVR oru friend ah paartha rendu figure pathi pesi ensoi panratha vitutu ithu ellaam ethukku :-)//
நியாயமான பேச்சு!! :-P

@சத்தியா
//ஒட்டு போட்டுட்டேன்.//
உங்க ஜனநாயக கடமையை நிறைவேத்துனதுக்கு நன்றி தலைவா!! :-D

//
முதல்ல வெட்டி இப்போ CVR சரி ஏதோ நடக்குது.கல்யாணத்தைப்பத்தி பல பேருக்கு சந்தேகங்கள் அடிக்கடி வருது இப்பல்லாம். ;-)
///
சந்தேகம் எல்லாம் இல்ல தல!! மக்கள் என்ன நினைக்குறாங்கன்னு பாக்கலாமேன்னு தான்!!! :-)

@வேதா
//நாட்டாமை என்னது இது? திருமணம் பத்தி பதிவு போட்டா தான் வருவீங்களா? :)//

நாட்டாம்ம மட்டும் இல்ல வேதாக்கா,இன்னும் சில பேரும் அப்படிதான்!! ;-)))

வாக்களித்தமைக்கு மிக்க நன்றி!! :-D

@செந்தில் அழகு பெருமாள்

சரிதான் தல!! வேறு ஒரு நண்பனிடத்தில் சாட்டிங் செய்ய்யும் போது இருவரும் இதைத்தான் ஒப்புக்கொண்டோம்!! :-)

வருகைக்கு மிக்க நன்றி! :-)

Karthikeyan Rajasekaran said...

தலைவா,

திருமணம் இல்லாத ஒரு வாழ்க்கைய கற்பனை செஞ்சு பாருங்க...
மனிதர்கள் எல்லாம் வெறும் ஐந்தரிவு மிருகஙளா மட்டும் தான் தெரிவாங்க.....
அந்த மிருகங்களுக்குள்ள கூட திருமணம் இருக்குன்னு பேசிக்கறாங்க..
அப்படி இருக்கப்போ மனித இனத்தோட ஆணி வேரான திருமணத்த போய் தேவையான்னு கேக்றிங்கலே தலைவா...

சரி....

தனியா இருக்கது தான் சிரியான தீர்வுன்னு வெசுக்குவோம்..
அப்படி உங்க அய்யா தனியா enjoy பண்ணி இருந்தா நீங்க இன்னைக்கு blog எழுதிட்டு இருக்க முடியுமா...???
இல்ல எங்க அய்யா தனியா enjoy பண்ணி இருந்த..
நான் தான் அந்த blog'க்கு comment எழுதிட்டு இருக்க முடியும...??

குழந்தை பெத்துக்க திருமணம் தேவை இல்லன்னு சொல்ற கும்பல ஒன்னுமே செய்ய முடியாது they are the real hypocrites..

திருமணம்ங்றது விஞ்யானம் சார்.... அது உங்க உடம்புல நடக்குற வேதியல் மாற்றத்துக்கான சரியான அணுகுமுறை...
இல்ல நான் தனியா தான் இருப்பேன் I know how to manage my chemistry'ன்னு சொல்றவங்கல ஒன்னுமே செய்ய முடியாது...
நலமடைய நல்ல மருத்துவரை அணுகவும்.....

காதல், கர்ப்பம் , குழந்தை, குடும்பம் இந்த எல்லாமே திருமணம்ங்கர frame உள்ளார fit பண்ணினோம்ன ஒரு அழகான வாழ்க்கை உங்களுக்கே தெரியும்..

எங்க...!!!!
இது எல்லாத்தயும் திருமணம் இல்லாம தனித்தனியா யோசிச்சு பாருங்க.....!!!!!

ஒன்னு கூட சந்தோஷமா தெரியாது.....

தனிமைங்கறது ஒரு ஹைக்கூ கவிதை மாதுரி...
ரொம்ப நாளைக்கு அத ரசிச்சிட்டே இருக்க முடியாதுங்க...
ஒரு முறை ரசிக்கலாம்..
இரண்டாம் முறை ஆச்சரிய படலாம்..
மூன்றாம் முறை..
அழுத்து போகும்...

ஆனா திருமணம் மெல்லிசையோட கலந்து வரும் பாடல் மாதுரி
புரியாதவங்க கூட திரும்ப திரும்ப ரசிக்கலாம்..

SurveySan said...

Avasiyam.

Kooottik kazhichu ellaam paaakkak koodaadhu.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

CVR

இந்தப் பதிவில் இருந்து உங்கள் வீட்டுக்கு ஏதாச்சும் மெசேஜ் சொல்ல விரும்புறீங்களா? :-)))

நண்பர்களின் வாக்குகளைக் காட்டி, பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் ஆதரவு பெற்றதை வீட்டுக்குக் காட்டி, ஹூம் சீக்கரம், சீக்கரம்!


என்று நீங்கள் சொல்லப் போவதாக மலேசியாவில் இருந்து உங்க அக்காப் பட்சி சொல்லியதாக என் பட்சி கனவு கண்டதாக நான் கனவு கண்டேன்! :-))))

Adiya said...

i follow Dreamzz.
Marriage makes man mature. its not about peer handling its about culture. its about way of leaving.

comming to your friends argument.
throwing out a question - a person can live with marriage. yes absolotely any body can do that.
but holistically thats not the purpose of thing. i earn, i leave and i die means i-factor doesnt know the relationships like brother, sister, daughter, son, son-in-law, brother-in-law, lullaby.

every relationship will have a problem it can be categorize as sweet problem or sour problem by n large we can definitely solve it.

ethu en karuthu.
:)

துளசி கோபால் said...

திருமணம்:

அவசியம் - கல்யாணம் ஆகாதவங்க நினைச்சுக்கறது.

அனாவசியம் - கல்யாணம் ஆனவங்க நினைக்கிறது.

CVR said...

@கார்த்தி
அட அட அட!!
மடை திறந்த வெள்ளம் போல கொட்டித்தீர்த்துட்டீங்க போல!!
கருத்துக்களுக்கு மிக்க நன்றி தலைவரே!!


@Surveysan
வாங்க சர்வேசன்
வாக்குப்பதிவுக்கு தலைமை தேர்தல் அதிகாரியே வந்தது விசேஷம் தான்!!:-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

@கே.ஆர்.எஸ்.
நான் ஏதாச்சும் சொல்லனும்னா நேரடியாவே சொல்லிடுவேன் அண்ணா!! :-)
வோட்டு போட்டீங்களா??? இல்லை எப்பவும் போல பேசி மழுப்பிட்டு இருக்கீங்களா?? :-D

@அடியா (சரியான உச்சரிப்பா இது?? :-))
வாங்க!!
ட்ரீம்ஸோட நண்பர்னு நல்லாவே தெரியுது!! அவரை போலவே பிச்சி உதர்ரீங்க!!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!! :-))

@துளசி டீச்சர்
ஓஹோ!!!
பண்ணிக்காத வரைக்கும் அது அவசியம் என்றும்,பண்ணிக்கிட்ட பிறகு அது தேவை இல்லை என்றும் தோன்றுமா???

சரி அப்போ உங்க ஓட்டு என்ன?? தேவையில்லையா?? :-)

வெற்றி said...

CVR,

உணர்வுகளை, எண்ணங்களை, உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாழ்க்கைத் துணை அவசியம் என நினைக்கிறேன்.

அதற்காகத் திருமணம் செய்துதான் ஆகவேண்டும் என்றில்லை என நம்புகிறேன்.

மேலைத் தேசங்களில் 'ஒன்றாக கூடி வாழுதல்' எனும் முறையும் இருப்பதை அறிந்திருப்பீர்கள். எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் அந்த முறையில்தான் வசிக்கிறர்கள்.

அரை பிளேடு said...

திருமணம் என்பது கட்டாயம் வேணும்.

ஏன்னா வெறுமனே சந்தோஷம் மட்டும் இருந்தா வாழ்க்கை போரடிச்சிடும்.

:)

Thamizhan said...

இந்தக் கேள்விக்குப் பதில் பதிலளிப்பவரின் வயதைப் பொறுத்து இருக்கிறது.இள வய்திலே காதல் ஏக்கம்(காமம் அல்ல!அது அனைவர்க்கும் வந்து போவது தான்).பின்னர் துணை,பகிர்ந்து கொள்வதற்கு.ஒரு நம்பிக்கையுடன் நல்லது,கெட்டது,இன்பம்
துன்பம் அனைத்தயும்!அடுத்து பிள்ளைகள்.

படைப்புப் பல படைத்து
பலரோடுண்ணும் உடைபெருஞ் செல்வராயினும்,இடைப்படக் குறு குறு நடந்து இட்டுந்தொட்டும் கவ்வியும் துழ்ந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே!

அடுத்து குழந்தைகளின் ஒவ்வொரு சாதனைகளும்(வேதனைகள் விரைவில் மறந்து விடும்)அதில் அடையும் இன்பங்களும்.
அடுத்து பேரக் குழந்தைகள்.வயதானவர்களிடம் கேட்டால் அதற்கு ஈடு,இணையே இல்லை என்பார்கள்.ஒவ்வொரு குறும்பும் சொல்லிச் சொல்லி மகிழ்வார்கள்.
வய்தானவர்கட்கு அவரவர் துணை மாதிரி வேறு எதுவும் இல்லை!

இதையெல்லாம் புரட்சிக் கவிஞரின் "குடும்ப விளக்கு" படித்தால் நன்கு புரியும்.முதியோர் காதல்,கண்களில் கண்ணீர் வர வழைக்கும்.

முடிந்தால் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும், மற்றவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டால் புரிந்து கொள்ள் முழு முயற்சி செய்ய வேண்டும்.ஒரு வழி யல்ல,இரு வழி கொடுக்கலும் வாங்கலும்!

திருமணம் உடலுறவுக்கு மட்டு மென்றால் வேண்டியதில்லை.உள்ள உறவுக்கென்றால் ஈடு,இணையற்ற இன்பப் பயணம்!

ஜீவி said...

யாருக்கு அவசியம்னு நீங்க சொல்லலையே?
ஆணுக்கா? இல்லை பெண்ணுக்கா?
உங்கள் கேள்வி, ஆணுக்கு என்கிற
தோரணையில் இருப்பதாகத் தோன்றுவதால் தான், எனது இந்தக் கேள்வி.
'இரண்டு பேருக்கும் தான்' என்பது
உங்கள் பதிலாக இருக்குமேயானால்,
விவாதித்த இருவருமே ஆண்களாக இருப்பின், இதுவே ஒரு 'மேல்சாவானிச' கேள்வியாகி,
சில சவுகரியங்களே முக்கியமாகப்
போய், மூலக்கேள்வியிலேயே
நீங்கள் இருவரும் மழுப்புகிறீர்கள்
என்றுத் தெளிவாகிப்போகிறது.

CVR said...

@வெற்றி
//மேலைத் தேசங்களில் 'ஒன்றாக கூடி வாழுதல்' எனும் முறையும் இருப்பதை அறிந்திருப்பீர்கள். எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் அந்த முறையில்தான் வசிக்கிறர்கள்.//
எனக்கு என்னமோ இந்த முறையால் பிற்பாடு நிச்சயமாக பிரச்சினைகள் வரும் என்று தோன்றும்!!
ஏதோ அப்படி இருப்பவர்களுக்கு அது ஒத்து போச்சுனா சந்தோஷம்!! :-)

@அரை பிளேடு
//ஏன்னா வெறுமனே சந்தோஷம் மட்டும் இருந்தா வாழ்க்கை போரடிச்சிடும்.

:)///
அண்ணி ஊருக்கு போய்ட்டாங்க்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன் தல!!
அதான் சவுண்ட் நல்லா வருது!! :-D

நடத்துங்க!!

@தமிழன்
//வய்தானவர்கட்கு அவரவர் துணை மாதிரி வேறு எதுவும் இல்லை!//
நல்ல வாதம்!! எனக்கும் கூட வயதான சமயத்தில் வாழ்க்கை இனிமையாக இருக்க திருமணம் அவசியம் என்று அவ்வப்போது தோன்றும்!!

கருத்துக்களுக்கு மிக்க நன்றி தமிழரே!! :-)

@ஜீவி
நாங்கள் பேசும் பொழுது பொதுவான கண்ணோட்டத்தில் பேசிக்கொண்டோம்,ஆனால் sub-consciously ஆண்கள் கண்ணோட்டம் புகுந்திருக்குமா என்று தெரியவில்லை!!

//'இரண்டு பேருக்கும் தான்' என்பது
உங்கள் பதிலாக இருக்குமேயானால்,
விவாதித்த இருவருமே ஆண்களாக இருப்பின், இதுவே ஒரு 'மேல்சாவானிச' கேள்வியாகி,
சில சவுகரியங்களே முக்கியமாகப்
போய், மூலக்கேள்வியிலேயே
நீங்கள் இருவரும் மழுப்புகிறீர்கள்
என்றுத் தெளிவாகிப்போகிறது.///

சுத்தமா பிரியல!!! :-ஸ்
இவ்வளவு ஆழமா எல்லாம் ஒன்னும் சிந்திக்கல தலைவா!!
யாரையும் ஏமாற்ற வேண்டும் என்றோ ,மழுப்ப வேண்டும் என்றோ எனக்கு நோக்கம் இல்லை.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஜீவி!! :-)

வடுவூர் குமார் said...

நிஜமாக சொல்கிறேன்.
கல்யாணத்துக்கு முன்பு இது எனக்கு பயங்கரமான கேள்வியாக இருந்தது.(எனக்கு என்று ஒரு ஆள் இல்லாத்தால் கூட இருந்திருக்கலாம்)
யாரிடமும் இருந்து ஒத்துக்கொள்கிறமாதிரியான பதில் இல்லை.
இப்ப யாராவது என்னிடம் கேட்டாலும் சரியான பதில் கொடுக்கமுடியாது.
வேண்டுமென்றால் இப்படி சொல்வேன்.
"முயற்சித்து தெரிந்து கொள்".
இது QUIZ நிகழ்ச்சி அல்ல,விடை தெரிந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு.:-))

Anonymous said...

நல்ல கேள்வி!சிவிஆர் உங்களுக்கு அடிக்கடி திருமணத்தை பற்றி கேள்விகள் எழுகின்றன.கல்யாண கலை வந்துவிட்டதோ :D

Anonymous said...

Theriyalaye :( ...

Ellarum sollaradha paatha.. avasiyam thaano nu thonudhu..

Padmapriya said...

sari ungaluku mattum epdi ippdi ellam yosikka thonudhu??????

Vote potuten :)

d4deepa said...

நல்ல தலைப்பு தான், திருமணம் அவசியம் குழந்தை வளர்ப்புக்கு மட்டும் இல்லை.இதெல்லாம் அனுபவம்படும் போது புரியும்.வாழ்க்கையில் இன்பம் துன்பம் வரும் போது இருவராக இருந்து சமாளித்து செல்லும் போது வாழ்க்கை சுவாரஸ்யமாக தான் இருக்கும்.

Anonymous said...

உயிர் வாழவும், உயிர் குடுப்பதையும், கொடுத்த உயிருக்கு உயிர் வாழ கத்துக்கொடுப்பதையும் படைப்பின் நோக்கமா எடுத்துகிட்டா, சமுதாயம் அவசியமாகிறது! உயிர் வாழ குட்டிகளுக்கு கத்து தருவது எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது! ஆதி காலத்தில் திருமணத்திற்கு கண்டிப்பாக அவசியம் இல்லை. ஆனால் இந்த வேளைக்கு பிரதிநிகள் கண்டிப்பா தேவைப்படும், குட்டிகளின் எண்ணிக்கை அதிகமானாள். அதானால் ஒவ்வொரு பிரதிநிதிகளுக்கும் ஒரு அடையாளம் இருந்தால் எளிதாக தெரிந்துவிடும் யாருக்கு யார் பொருப்பு என்று!

அந்த அடையாளமாக திருமணத்தை நான் பார்க்கிரேன்! கலாம் மாதிரி வாழ்வின் நோக்கம் வேறு என்று அர்த்தபடுத்திக்கொண்டால் சத்தியமாக தவறில்லை. ஆனால் அதற்கு உங்கள் சமூகம் ஒத்துக்கொள்ளவேண்டும்!

ஒன்னும் புரியவில்லை என்றால் ஒரு சின்ன உதாரணம். கார எடுத்துகிட்டு ரோட்டுல போகனும்னா விதிகளை மதிக்கனும். ரோடு போட்டது எதுக்கு? காரு ஓட! காரு எதுக்கு? காலத்தை இலகுவாக கையாள! விதிகள் எதுக்கு? நெரிசல் குழப்பத்தையும், மரணத்தையும் தவிர்க்க!

- பாபு

பின்குறிப்பு: உங்கள் வாழ்வின் நோக்கம் வேறு என்றால் கண்டிப்பா திருமணம் தேவையில்லை. இந்த சமுதாயம் தேவையில்லை நான் இமயமலையில் வாழ்ந்கொள்வேன் என்றாலும் திருமணம் தேவையில்லை!

Anonymous said...

LOVE IS NOT A RELATIONSHIP. Love relates, but it is not a relationship. A relationship is something finished. A relationship is a noun; the full stop has come, the honeymoon is over. Now there is no joy, no enthusiasm, now all is finished. You can carry it on, just to keep your promises. You can carry it on because it is comfortable, convenient, cozy. You can carry it on because there is nothing else to do. You can carry it on because if you disrupt it, it is going to create much trouble for you… Relationship means something complete, finished, closed.

Love is never a relationship; love is relating. It is always a river, flowing, unending. Love knows no full stop; the honeymoon begins but never ends. It is not like a novel that starts at a certain point and ends at a certain point. It is an ongoing phenomenon. Lovers end, love continues– it is a continuum. It is a verb, not a noun.

And why do we reduce the beauty of relating to relationship? Why are we in such a hurry? Because to relate is insecure, and relationship is a security. Relationship has a certainty; relating is just a meeting of two strangers, maybe just an overnight stay and in the morning we say goodbye. Who knows what is going to happen tomorrow? And we are so afraid that we want to make it certain, we want to make it predictable. We would like tomorrow to be according to our ideas; we don't allow it freedom to have its own say. So we immediately reduce every verb to a noun.

You are in love with a woman or a man and immediately you start thinking of getting married. Make it a legal contract. Why? How does the law come into love? The law comes into love because love is not there. It is only a fantasy, and you know the fantasy will disappear. Before it disappears settle down, before it disappears do something so it becomes impossible to separate.

In a better world, with more meditative people, with a little more enlightenment spread over the earth, people will love, love immensely, but their love will remain a relating not a relationship. And I am not saying that their love will be only momentary. There is every possibility their love may go deeper than your love, may have a higher quality of intimacy, may have something more of poetry and more of godliness in it. And there is every possibility their love may last longer than your so-called relationship ever lasts. But it will not be guaranteed by the law, by the court, by the policeman. The guarantee will be inner. It will be a commitment from the heart, it will be a silent communion.

If you enjoy being with somebody, you would like to enjoy it more and more. If you enjoy the intimacy, you would like to explore the intimacy more and more. And there are a few flowers of love which bloom only after long intimacies. There are seasonal flowers too; within six weeks they are there, in the sun, but within six weeks again they are gone forever. There are flowers that take years to come, and there are flowers that take many years to come. The longer it takes, the deeper it goes. But it has to be a commitment from one heart to another heart. It has not even to be verbalized, because to verbalize it is to profane it. It has to be a silent commitment; eye to eye, heart to heart, being to being. It has to be understood, not said.

Forget relationships and learn how to relate.

Once you are in a relationship you start taking each other for granted– that's what destroys all love affairs. The woman thinks she knows the man, the man thinks he knows the woman. Nobody knows either! It is impossible to know the other, the other remains a mystery. And to take the other for granted is insulting, disrespectful.

To think that you know your wife is very, very ungrateful. How can you know the woman? How can you know the man? They are processes, they are not things. The woman that you knew yesterday is not there today. So much water has gone down the Ganges; she is somebody else, totally different. Relate again, start again, don't take it for granted.

And the man that you slept with last night, look at his face again in the morning. He is no more the same person, so much has changed. So much, incalculably much has changed. That is the difference between a thing and a person. The furniture in the room is the same, but the man and the woman, they are no more the same. Explore again, start again. That's what I mean by relating.

Relating means you are always starting, you are continuously trying to become acquainted. Again and again, you are introducing yourself to each other. You are trying to see the many facets of the other's personality. You are trying to penetrate deeper and deeper into his realm of inner feelings, into the deep recesses of his being. You are trying to unravel a mystery which cannot be unraveled. That is the joy of love: the exploration of consciousness.

And if you relate, and don't reduce it to a relationship, then the other will become a mirror to you. Exploring him, unawares you will be exploring yourself too. Getting deeper into the other, knowing his feelings, his thoughts, his deeper stirrings, you will be knowing your own deeper stirrings too. Lovers become mirrors to each other, and then love becomes a meditation. Relationship is ugly, relating is beautiful.

Hence I say relate. By saying relate, I mean remain continuously on a honeymoon. Go on searching and seeking each other, finding new ways of loving each other, finding new ways of being with each other. And each person is such an infinite mystery, inexhaustible, unfathomable, that it is not possible that you can ever say, "I have known her," or, "I have known him." At the most you can say, "I have tried my best, but the mystery remains a mystery."

In fact the more you know, the more mysterious the other becomes. Then love is a constant adventure.

Voice on Wings said...

திருமணம் வாழ்க்கைக்கு அவசியமில்லை.

ஜீவி said...

அன்பு CVR,
எனது பின்வூட்டப் பதிவில் 'மழுப்புகிறீர்கள்' என்கிற எனது வார்த்தைப் பிரயோகம் உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால்
அதற்காக வருந்துகிறேன்.

CVR said...

@வடுவூர் குமார்
//இது QUIZ நிகழ்ச்சி அல்ல,விடை தெரிந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு.:-)) //

அட!!
அப்போ தேவையா ,இல்லையான்னு தெரியாமலே கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறமா தெரிஞ்சுக்கனும்னு சொல்றீங்களா??
சரிதான்!! :-D

@துர்கா அக்கா
//நல்ல கேள்வி!சிவிஆர் உங்களுக்கு அடிக்கடி திருமணத்தை பற்றி கேள்விகள் எழுகின்றன.கல்யாண கலை வந்துவிட்டதோ :D //

அம்மா தாயே!! மலேசிய மாரியாத்தாவே!!
ஆளை விடுங்க!! :-D

@அனானி
//Anonymous said...
Theriyalaye :( ...

Ellarum sollaradha paatha.. avasiyam thaano nu thonudhu..
///

நம்மளுக்கு தேவையான்னு நாமதான் முடிவு செஞ்சுக்கனும் தலைவா!! மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுக்கொள்ளத்தான் இந்த கருத்துக்கணிப்பு!! :-)


@பத்மப்ரியா
//Padmapriya said...
sari ungaluku mattum epdi ippdi ellam yosikka thonudhu??????

Vote potuten :)
//

எல்லாம் ஆன் ஆர்பர்ல ரூம் போட்டு யோசித்ததின் பலன்!! :-D
வோட்டு போட்டதுக்கு நன்றி அக்கா!! :-)

@D4Deepa
//திருமணம் அவசியம் குழந்தை வளர்ப்புக்கு மட்டும் இல்லை.இதெல்லாம் அனுபவம்படும் போது புரியும்.//


குழந்தை வளர்ப்பு பற்றி நான் அங்கே குறிப்பிட்டது சும்மா ஒரு வாதத்திற்காக தான்!!
நான் பதிவில் குறிப்பிட்டது போல காதல்,உறவு,வாழ்க்கை துணை போன்ற பல விஷயங்கள் இதில் வரும்!!
பெரும்பாலான விஷயங்களை வார்த்தைகளால் சொல்லி புரிய வைக்க முடியாது என்றும் அறிவேன்!! :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தீபா!! :-)

@பாபு
நல்ல வாதம்!! அப்போ திருமணம் என்பது சமுதாயத்திற்காகத்தான் அல்லவா???
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ விருப்பப்பட்டால் அதற்கு திருமணம் தான் ஒரே வழியா என்பதும் இங்கு ஒரு கேள்வி!! இந்த சமுதாயத்தோடு ஒத்து வாழ வேண்டும் என்றால் ஆம் என்று நீங்கள் சொல்வதாக எடுத்துக்கொள்கிறேன்.
சரியா???


@ஓஷோ!!!
அழகான விளக்கம்!!!
திருமணம் ஆன பின்பும் அந்த காதலும் , adventure-உம், relating எல்லாம் தொடர்ந்திருக்க வேண்டும்!!
இதை நான் முழுமையாக ஒத்துக்கொள்கிறேன்.
we should stop taking things for granted after marriage and continue to love/explore/relate to your partner even after the marriage.
Marriage should not be a full stop,but should rather be a comma,organising and guiding the flow of love!!!
Beautiful!!
புரிதலில் தவறு இருந்தால் திருத்தவும்!!

relationship என்றாலே constraining தான்!! அதனால் திருமணமே வேண்டாம் என்றும் உங்கள் கருத்துக்களை எடுத்துக்கொள்ளலாம்!!
ஆனால் I prefer the interpret it the former version!! :-)


@ஜீவி
பரவாயில்ல தல!!
உண்மையாகவே யாரையும் மழுப்பவோ,ஏமாற்றவோ முயலவில்லை!
:-)

அடிக்கடி நம்ம பதிவுக்கு வந்துட்டு போங்க!! :-)

இராம்/Raam said...

அரைபிளேடு கமெண்ட்'ஐ படிச்சிட்டு கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சிட்டேன்.... :)

இராம்/Raam said...

CVR,

ஓட்டு போட்டாச்சு... :)

பஜ்ஜியும்,கேசரியும் தந்த கரங்கள் போன் பண்ணியதினால் வந்த பதிவா இது??? :)

தி. ரா. ச.(T.R.C.) said...

ஓட்டு போட்டாச்சு

Anonymous said...

//ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ விருப்பப்பட்டால் அதற்கு திருமணம் தான் ஒரே வழியா என்பதும் இங்கு ஒரு கேள்வி!!//

இல்லை! உங்கள் சுற்றமும் நட்பும் ஆதரிக்கும் என்றால் திருமணம் தேவையில்லை. விரைவில் மேலைநாட்டு கலாச்சாரம் இங்கும் (தமிழ்நாடு) பரவலாகிவிடும் என்பது என் எண்ணம். ஆனால் திருமணம் பண்ணாமல் குழந்தை வேண்டும் என்றால் சிரமம் என்று தோன்றுகிறது! ஏன் என்றால் குழந்தை வளர்ப்பில் சமுதாயத்தின் பங்கு பெரிது. எனவே சமுதாயதின் கண்ணோட்டம் மாரும் வரை சிரமம்! எனக்கு தெரிந்தவரை, மேலைநாடுகளில் கூட வெகு சில ஜனங்களே இந்த இக்கட்டில் சிக்குவார்கள், அதுவும் கூட உணர்ச்சி மிகுந்த வயதில் மட்டுமே!

//இந்த சமுதாயத்தோடு ஒத்து வாழ வேண்டும் என்றால் ஆம் என்று நீங்கள் சொல்வதாக எடுத்துக்கொள்கிறேன்.
சரியா???//

நூறு சதவீதம் சரி! (எனது பார்வையில்)

உங்கள் திருமண வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள் - Babu

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வோட்டு போட்டீங்களா???//

போட்டாச்சுங்கண்ணா!

//இல்லை எப்பவும் போல பேசி மழுப்பிட்டு இருக்கீங்களா?? :-D//

மழுப்ப வேண்டிய அவசியம் இது வரைக்கும் அடியேனுக்கு வந்ததில்லை CVR அண்ணா! மன்னிக்கவும்!

ஆனாப் பாருங்க...இந்தப் பேசி மழுப்புதல் கூடத் திருமண வாழ்வுக்குத் தேவைப்படும் சில டெக்னிக்குகளில் ஒன்று! கோபதாபங்களைக் கூர் மழுங்கச் செய்யும் இந்த அன்பாகப் பேசி மழுப்பும் கலை! அதுக்காகப் பொய் பேசி எல்லாம் மழுப்பக் கூடாது! செல்லமாக வேணுமானால் மழுப்பலாம்!

சரி...திருமணம் என்றால் தேவைப்படுவது ஒரு ஆணும் பெண்ணும் அல்லவா?
திருமணம் வாழ்க்கைக்கு அவசியமா - இதில்
ஆண்களின் கருத்து என்ன?
பெண்களின் கருத்து என்ன??
இது பற்றித் தனியாக ஒரு Vote வையுங்களேன்!

இரு பாலருக்கும் ஒருவர் மீது இன்னொருவருக்கு உள்ள குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள், இன்னும் பல விடயங்களை நீங்கள் ஒரு தொடராகவே தரலாம்! Love Scientist நீங்க சொல்லும் போது, முன்னோர்கள் மற்றும் வாழ்வியல் வல்லுநர்கள் சொல்வதை விட சுவாரஸ்யமாக இருக்கும்!

CVR said...

@இராம்!
சிரிங்க சிரிங்க!!
நல்லா சிரிங்க!!!

இப்பவே சிரிச்சாதான் உண்டு!! :-D

@தி.ரா.ச
வாங்க தல!! ஓட்டு போட்டதுக்கு நன்றி! :-)

@பாபு
//உங்கள் திருமண வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள் - Babu //
வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி பாபு!! :-)

@Voice on the wings
இத்தனை பேருல நீங்க ஒருத்தருதான் உங்க எதிர்ப்பை சுத்தி வளைக்காம நச்சுனு சொல்லி இருக்கீங்க!!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! :-)

@கே.ஆர்.எஸ்
அடாடா!!
மொதல்ல தயவு செய்து என்னை அண்ணான்னு கூப்பிடுவதை நிறுத்துங்களேன்! :-)
நான் எல்லாம் சின்ன பையன்.இது மாதிரி விஷயங்களை உங்களை மாதிரி பெரியவர்கள் சொன்னால் தான் சரியா இருக்கும் தலைவா!!
அதுவும் உங்களுக்கே உரித்தான சர்க்கரை எழுத்துக்களில் வெளி வந்தால் படிப்பதற்கு எங்களுக்கு என்ன கசக்குமா?? :-)

k4karthik said...

ஆமா, இதெல்லாம் ஒரு டாபிக்கு...அதுக்கு வோட்டு வேற..

அட.., என் தங்கமணியும் ஏதோ கமெண்டிருக்காங்க... என்னனு பாத்துட்டு வந்துடுறேன்..


//வாழ்க்கையில் இன்பம் துன்பம் வரும் போது இருவராக இருந்து சமாளித்து செல்லும் போது வாழ்க்கை சுவாரஸ்யமாக தான் இருக்கும்.//

ஆஹா... அவ்வ்வ்வ்வ்வ்வ்.... என்னமா சொல்லிருக்காங்க கோல்ட் டைம்..
இதெல்லாம் கல்யாணம் பண்ணி அனுபவிங்கய்யா... போங்க.. போங்க..

k4karthik said...

@g3
//சில விஷயங்கள பேசி புரிய வைக்கறது ரொம்ப கஷ்டம். இந்த டாபிக் அதுல ஒன்னு..//

அஹா.. G3 அக்கா வாய தொறந்துட்டாங்கய்யா... சாப்பாட்டுக்கு மட்டும் தான் தொறப்பீன்கனு தப்பால நினச்சுட்டேன்...

சூப்பரா சொல்லிருக்கீங்கக்கா....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

எனக்கு g3 சொன்னதும் ஓஷோ சொன்னதும் மிகவும் பிடித்தது. ஓஷோ சொன்னது மிகவும் விரும்பத்தக்க Ideal State! அதன் நடைமுறைச் சாத்தியத்துக்கு இரண்டு மனங்கள் வேண்டும்!

ஆணுக்குப் பெண் தேவை. பெண்ணுக்கு ஆண் தேவை. ஆனால் ஆனால் இது சாத்தியப்படுவதற்கு திருமணம் என்னும் ஒன்று தேவையா?
மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமாவது திருமணம் செய்து வாழ்கிறதா?

பலரும் அவரவர் பார்வையில் இருந்து சொல்லியிருக்காங்க. நான் என் பார்வையைச் சற்றுப் பின்னுக்குத் தள்ளி, ஒரு குழந்தையின் பார்வையில் இருந்து சொல்ல விழைகிறேன்.

எப்படியோ குழந்தை வந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்! ஒரு குழந்தைக்கு அம்மாவும் அப்பாவும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்கிறார்கள் என்றால், அது அதன் மனத்தையோ, வளர்ச்சியையோ பாதிக்குமா?

நம்மில் எத்தனை பேருக்கு நம்முடைய அம்மா அப்பா திருமணம் செய்யாமல் வாழ்கிறார்கள் என்று கற்பனை செய்து பார்க்க தைரியம் உள்ளது?

இங்கு தான் யோசனை அதிகம் செய்ய வேண்டியுள்ளது.
குழந்தைக்காக மட்டும் தான் திருமணம் என்பது தவறு!
ஆனால் குழந்தை என்று வரும் போது, அதற்குத் திருமணமான தாய் தந்தையர் என்பது தான் சரியாக வரும்!

Biological father, Biological mother என்பது எல்லாம் இன்னும் மேற்கத்திய கலாச்சாரத்தில் கூட ஆழமாகப் பரவவில்லை!

Living Together எல்லாம் காலத்தின் கட்டாயம்...நாமே கண்கூடாகப் பார்க்கிறோம்! ஆனால் அப்படி Living Together ஆக இருந்து, எங்க ரெண்டு பேர் அன்பு எங்களுக்கு மட்டும் போதும். எங்க அன்பைத் தவிர வேறு எதுவும் இதில் முக்கியமில்லை என்றால், தயவு செய்து குழந்தைக் கனவுகள் வேண்டாம்.

எங்க ரெண்டு பேர் அன்பும் சங்கமித்து, அதை ஒன்றாக்கி, எங்கள் குழந்தைக்குத் தருவோம் என்றால் மட்டும் குழந்தை பற்றி யோசியுங்கள்!

உங்கள் இருவரின் அன்பும் உயர்ந்தது தான். தலை வணங்குகிறோம்.
ஆனால் எப்படி மற்றவர்கள் உங்கள் அன்பின் மீது சமுதாயச் சிந்தனைகளைத் திணிக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறீர்களோ,
அதே போல உங்க அன்புக் கொள்கையையும் உங்க குழந்தை மீது நீங்களே திணிக்கக் கூடாது என்பதிலும் கவனமாக இருங்கள்!

அறுபதாம் கல்யாணம் (மணி விழா) என்ற ஒரு நிகழ்வு சில சமூகங்களில் உண்டு. குழந்தைகள் இருந்து அம்மா அப்பாவின் கல்யாணக் காட்சியைக் காண்பார்கள்! இது ஒரு உளவியல் தத்துவம் தான்!

உங்கள் குழந்தை வளர்ந்து, அல்லல்பட்டு, பெரியவனாகி, உங்கள் அறுபதாம் கல்யாணத்துக்குப் பதிலாக, உங்கள் முதல் கல்யாணத்தையே நடத்தி வைக்கும் குழந்தை கையால் நடத்தி வைக்கும் அளவுக்கு நீங்கள் பெரும்பேறு எல்லாம் பெற வேண்டாம்! :-)

நம் அன்பு மட்டும் தான் முக்கியம் என்று நினைப்பது தன்னல அன்பு!
நம் அன்பு நம் குழந்தைக்கும் முக்கியம் என்று நினைப்பதே அன்பிலும் அன்பு!
இதை உணர்ந்தால் திருமணம் வாழ்விற்கு அவசியமா என்று விளங்கும்!


இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்று சொன்னவர்கள் நிச்சயம் புரட்சியாளர்கள் கிடையாது! அதே சமயம் அவர்கள் புண்ணாக்கும் கிடையாது, அல்லவா? :-)))

பின்னூட்டம் நீண்டு விட்டிருந்தால் மன்னிக்கவும். இன்னொரு நாள் தனிப் பதிவாகவும் இடுகிறேன்!

TBCD said...

CVR திருமணத்தில மாட்டுறா மாதிரி...பேசுங்கப்பா..

யான் பெற்ற இன்பம் (!?) பெறுக இவ்வையகம்

Athi said...

நான் ரொம்ப நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கும் ஒரு subject. அதுவும் arranged marriage என்றால் உதறல் அதிகமாகிறது. யார் என்றோ, char என்ன என்றோ தெரியாத ஒரு பெண்ணுடன் எப்படி marriage life'ஐ start செய்வது? நம்மளையோ(I mean myself) எந்த பொண்ணும் love பண்ணப் போவதில்லை. நம்ம வாய் அப்படிங்க! எந்த பொண்ணு வந்து பேசினாலும், அடுத்த 10 நிமிடத்தில் ஓடிப் போயிருது. :-) சரி.. உங்க கேள்விக்கு வருவோம்...

ஆண் logically driven. பெண் emotionally driven. வாழ்க்கையில் சில முடிவுகள் எடுக்க இந்த இரண்டும் அவசியம். எனவே நம்முடன் கடைசி வரை கூட வரும் நண்பர்களில் எதிர் பாலினரும் அவசியம். நண்பர்களாக இருக்கலாம் என்று முடிவெடுத்திருந்தாலும், உலகத்துக்காக கல்யாணம் என்று ஒன்று பண்னியே ஆக வேண்டும். இந்த விஷயத்தில் நான் நடிகர் பிரகாஷ்ராஜ் கட்சி. கல்யாணத்துக்குப் பின்னும் நல்ல நண்பர்களாகத் தொடரும் வரையில் கல்யாணம் ஒன்றும் அவிழ்க்க முடியாத விலங்கல்ல. எங்கேயோ படித்தது. "விட்டுக் கொடுத்து வாழ்வதல்ல வாழ்க்கை. புரிந்து கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை". :-)

Related Posts Widget for Blogs by LinkWithin