விசித்திரமான மனிதர் ஐயா நீர்!! :-)

ஏதோ நான் உண்டு என் மடிக்கணிணி உண்டுனு எப்பவும் போல வலைபதிவுகள்ல நேத்து மூழ்கி இருந்தேங்க !! மானாவாரியா பதிவெல்லாம் படிச்சிட்டு அப்பப்போ லூசு மாதிரி தனக்கு தானே சிரிச்சிட்டு பாத்துக்கிட்டு இருந்த போது நம்ம அருமை நண்பர் (அறுவை நண்பர் இல்ல) ஜி அவர்களின் பதிவு கண்களில் பட்டுது!! அவர் பதிவை விரும்பி படிக்கும் வாசகன்றதுனால சிரிச்சு ரசிச்சு படிச்சிட்டு இருக்கும்போது ரொம்ப பரிச்சயமான காமெடி நடிகர் ஒருவரின் பெயர் கண்ணில் பட்டது. இந்த பெயரை எங்கேயோ கேட்டது மாதிரி இருக்கேன்னு யோசிக்கும்போது தான் உறைத்தது.
அது என் பெயர்!!! :O

அட பாவிகளா !! ஆட்டை கடிச்சு,மாட்டை கடிச்சு கடைசியில சும்மா காமெடி பண்ணிக்கிட்டு திரிஞ்சிக்கிட்டு இருந்தவனையே கடிச்சிட்டாங்களாடா அப்படின்னு நெனைச்சிக்கிட்டேன்!!
அது ஒன்னும் இல்லைங்க, நம்மல பத்தி ஒரு ஐந்து விசித்திரமான விஷயங்கள் பற்றி எழுதனுமாம்!! நானே ஒரு விசித்திர பிறவிதான் இதுல ஐந்து என்ன ஐயாயிரமே எழுதலாம் அப்படின்னு எழுத ஆரம்பிச்சுட்டேன்.

லெட்ஸ் ஸ்டார்ட் த மீசிக்!!!

1.)தனிமையிலே இனிமை காண முடியுமா??
அது என்னவோ தெரியலைங்க ,எனக்கு தனிமையா இருக்கறது புடிச்சு போயிருச்சு!! நான் வீட்ல தனியா வளர்ந்ததாலேயோ என்னவோ ( எனக்கு சகோதர சகோதரிகள் யாரும் கிடையாது!! உங்களை தவிர!! :D ) , எனக்கு தனியா இருப்பது பழகி போச்சு. இங்க வந்து அறை நண்பர்கள் இல்லாமல் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது தான் தனியாக இருப்பதில் உள்ள சுதந்திரம் எனக்கு முழுமையா தெரிஞ்சுது. நம்ம இஷ்டப்படியான நேரத்தில் எழுந்திருக்கலாம்,சமைக்கலாம்,வெளியே கிளம்பலாம். எப்போ வேனும்னாலும் குளிக்க,முகம் கழுவ பாத்ரூம் காலியா இருக்கும்!! நேரத்தை கச்சிதமா திட்டமிடலாம்,கூட யாராவது இருந்தா அவங்க தயாராகறதுக்கு ஏத்தா மாதிரி நம்ம திட்டங்களும் மாறும்,ஆனா தனியா இருந்தா அந்த பிரச்சினை இல்லை!! நம்மளுக்கு வேண்டிய அளவுக்கு சமையல் பண்ணிக்கலாம்,சாப்பாடு வீணாகற சந்தர்ப்பங்கள் கம்மி. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

இதுக்காக எனக்கு மனிதர்களே பிடிக்காது,எனக்கு தனியா இருந்தா தான் பிடிக்கும் அப்படின்னு அர்த்தம் அல்ல. நான் 24 மணி நேரமும் ஏதாவது நண்பரிடம் சாட் பண்ணிக்கொண்டுதான் இருப்பேன். பெற்றோர்களிடம் ஒரு நாள் பேசவில்லை என்றால் கூட ஏதோ குறையா இருக்கும். ஆனா எனக்கு தெரிஞ்ச சில பேர் “நீ எப்படி ஒருத்தரும் இல்லாமல் வீட்ல தனியா இருக்க?? என்னால நினைத்து கூட பாக்க முடியாது” அப்படின்னு எல்லாம் சொல்லுவாங்க.ஆனா எனக்கு அப்படி இல்லை. ஒழுங்கான வீடும்,சாப்பாடும், இணையத்தொடர்பும் இருந்தால் தனிமையில் இனிமை கண்டிப்பாக காணலாம் என்பது என் கருத்து!! :-)

2.)வலது கையில் கடிகாரம் கட்டுவது
எனக்கு பொதுவாகவே கடிகாரம் கட்டுவதே பிடிக்காது. கையை உறுத்திட்டே இருக்கறாப்போல இருக்கும். எப்பயாச்சும் கடிகாரம் ரிப்பேர் ஆகிடிச்சுன்னா சனியன் ஒழிஞ்குதுன்னு ரொம்ப நாளைக்கு சரி செய்யாமலே வெச்சிருப்பேன்!! அப்படியே கட்டினாலும் வலது கையிலேதான் கட்டிப்பேன். அது என்னமோ சின்ன வயசுல இருந்து அதுவே பழகிபோச்சு. கடிகாரத்தை இடது கையிலே தான் கட்டனும்னு யார் யாரோ சொல்லி பாத்துட்டாங்க!! நான் எப்பவும் கேட்டதே இல்லை.ஒரு தடவை ஒரு கடிகார கடைக்காரர் என்கிட்ட சண்டைக்கே வந்து விட்டார். நிறைய பேர், வலது கையில எல்லாம் பெண்கள்தான் கட்டுவாங்க,ஆண்கள் எல்லாம் இடது கையிலதான் கட்டனும் அப்படின்னு சொல்லுவாங்க. எனக்கு எது சௌகரியப்படுதோ அப்படி நான் கட்டிக்கறேன்,உங்களுக்கு என்ன?? எம்,ஜி.ஆர்,நரசிம்மராவ் இப்படி நிறைய பேர் வலது கையிலதான் கட்டிப்பாங்களாம் தெரியுமா?? அப்படி இப்படின்னு சொல்லி மழுப்பிடுவேன்!!

3.)நேரில் சந்திப்பதில்,போனில் பேசுவதில் தயக்கம்.
எனக்கு வலை நண்பர்கள் (online friends) பலர் உண்டு. ஒரு காலத்துல நிறைய கதை எல்லாம் எழுதிட்டு இருந்ததால என் கம்பெனியில நிறைய பேர் பரிச்சயம் ஆனாங்க. எல்லாம் மின் அஞ்சல் மூலமாதான்!! அதுக்கு அப்புறம் தமிழ் வலைப்பதிவு, ஒர்குட் அப்படின்னு ஆயிரம் நண்பர்கள். ஒருத்தரையும் நேரில் பார்த்தது கிடையாது. எல்லோர்கிட்டேயும் வள வளனு அரட்டை அடிப்பேன் (சாட்ல தான்) ஆனா ஒருத்தரையும் நேரில பாக்க ஆசைபட்டது கிடையாது. அது என்னமோ நேர்ல பார்த்தா நம்ம மேல முன்ன இருந்தா மாதிரி மரியாதை,அன்பு இருக்காதுன்னு ஒரு எண்ணம். நான் எப்பவும் ஒரு ஆங்கில சொற்றொடரை சொல்லிக்கொண்டே இருப்பேன். “The unseen is the most wonderful” அப்படின்னு.
அதாவது நாம ஒருத்தர பாக்கலைன்னா அவர் மேல் ஒரு தனி மரியாதை,சிரத்தை இருக்கும். ஆனால் நேரில் பார்த்து விட்டால் அந்த பிரம்மிப்பு போய்விடும் என்பது என் கருத்து. இந்த கருத்து பற்றி விளக்கமாக இந்த கதையில் கூறி இருப்பேன்.
அதே மாதிரி போனில் பேசுவதை விட சாட் மூலம் அரட்டை அடிப்பதையே நான் பெரிதும் விரும்புவேன். போனில் பேசும் போது இருவரில் ஒருவர் ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் திடீரென்று மௌனமாகி விடும். தொடர்பை நிறுத்தியாக வேண்டும்.ஆனால் சாட்டில் அப்படி அல்ல.நம் இஷ்டப்படி பேசிக்கொள்ளலாம். பேச ஒன்றும் இல்லையென்றால் கொஞ்ச நேரம் சும்மா இருக்கலாம்,ஏதாவது தோணிச்சுனா சும்மா தட்டி விடலாம்!!
எப்பா!! எவ்வளவு சௌகரியம்!! இப்படியே சொல்லிட்டே போகலாம். அதனால தான் எனக்கு வெட்டி அரட்டைக்கு (வெட்டியோட மட்டும் அரட்டைன்னு அர்த்தம் இல்ல!!  ) தொலைபேசியை விட சாட் தான் பிடிக்கும்.
அதுக்காக போன் பேசவே பிடிக்காதுன்னு அர்த்தம் இல்ல,பச சமயங்கள்ல பல விஷயங்களுக்கு போன்ல எடுத்தோமா முடிச்சோமான்னு இருக்கும் ஆனா அரட்டைக்கு சாட்டை (chat-ஐ) அடிச்சிக்க முடியாது என்பது என் கருத்து!!

4.) பெரிதாக வருங்காலத்தை பற்றி திட்டமிடாதது
எனக்கு எல்லாமே சீராக திட்டமிட்டு செய்ய வேண்டும் என்று தோன்றும். ஆனால் இந்த திட்டமிடுதல் எல்லாம் நிகழ்காலத்துக்கு தான்!!நாளைக்கு வெளியே போக வேண்டுமா,சரி இந்த மணிக்கு எழுந்திருக்கலாம்,பின் இதை செய்யலாம்,பின் இந்த மணிக்கு கிளம்பலாம் என்று என்னை அறியாமல் மனதில் திட்டங்கள் தோன்றி விடும். ஆனால் நேர்முக தேர்வில் கேட்பது போல “3 வருடங்களுக்கு பிறகு நீ உன்னை என்னவாக காண்கிறாய்??”, “5 வருடத்திற்கு பிறகு என்னவாகா இருக்க ஆசைபடுகிறாய்??” “7.5 வருடங்களுக்கு அப்புறம் வெங்காயத்தின் விலையில் எவ்வளவு மாற்றம் இருக்கும்??” என்பது போல கேள்விகள் கேட்டால் எனக்கு பதில் தெரியாது!! நானும் வருங்காலத்தில் என்ன செய்ய வேண்டும்,எப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று எல்லாம் தீவிரமாக திட்டமிட்ட ஆசாமிதான். ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் நடப்பது எதுவும் நம் கையில் இல்லை,எல்லாம் இறைவன் செயல் என்ற சிந்தனை என்னில் வேரூன்றி விட்டது. அதனால் நான் வருங்காலம் பற்றி எல்லாம் யோசிப்பது இல்லை. அடுத்த வாரம் போக போகும் சுற்றுலாவில் என்ன செய்ய வேண்டும்,அடுத்த மாதம் இந்தியா அனுப்பி விட்டால் “external hard disk” வாங்கிக்கொண்டு போகலாமா?? என்பது வரைக்கும் தான் என் திட்டங்கள் எல்லாம்!!
தொந்தரவு இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும்.பெறோர்களை முடிந்த வரைக்கும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்,முடிந்த வரை மற்றவைகளுக்கு உதவ வேண்டும்,முடிந்தால் இந்த தகவல் தொழில்நுட்ப வேலையில் இருந்து எஸ்கேப் ஆகி அனிமேஷன்,புகைபடத்துறை, எழுத்து சம்பந்தமான தொழில் இது மாதிரி கலை திறன் சம்பந்தப்பட்ட தொழிலில் இறங்கிவிடவேண்டும் என்பது போன்ற மேலோட்டமான சிந்தனைகளை தவிர வேறெந்த லட்சியமோ குறிக்கோளோ எனக்கு கிடையாது.


5.)குழந்தைதனத்தை விரும்பாதது
நீங்க பொதுவா யாரை கேட்டாலும் அவங்க குழந்தையா இருந்த சமயத்தை பெரிதும் விரும்புவதாக சொல்வார்கள். சில பேரை கேட்டால் “விட்டா ஸ்கூல்-ல படிச்ச பருவத்துக்கே திரும்பி போனா எவ்வளவு நல்லா இருக்கும்” அப்படி இப்படின்னு கதை அடிச்சிட்டு இருப்பாங்க. இன்னும் சில பேரு கேட்டீங்கனா சின்ன வயசுல,காலேஜ் வயசுல நான் இது பண்ணேன் அது பண்ணேன் அப்படின்னு அவங்களோட வீர சாகசங்களை பற்றி பேச ஆரம்பிச்சிடுவாங்க.ஆனா எனக்கு இதெல்லாம் அவ்வளவா பேச பிடிக்காது. ஏன்னா என் குழந்தை பருவத்துல எதுவுமே சுவாரஸ்யமா நடக்காதது தான் காரணமா அப்படின்னு தெரியல.
நான் என் நண்பர்களிடத்தில் கூட என்ன சொல்லுவேன்னா “சில பேரு சின்ன வயசுல நல்லா படிச்சு,மார்க் எல்லாம் வாங்கி பெரிய ஆள் ஆவாங்க,சில பேரு குறும்புத்தனம் பண்ணிக்கிட்டு,ஊரை சுத்துக்கிட்டு எஞ்சாய் பண்ணுவாங்க,சில பேரு ரெண்டும் பண்ணுவாங்க. ஆனா என்ன பொருத்த வரைக்கும் நான் எதுவும் பண்ணலை” அப்படின்னு சொல்லுவேன்.
பள்ளிக்கூடத்துலையும் சரி கல்லூரியிலும் சரி சொல்லிக்கறா மாதிரியோ ஞாபகம் வெச்சிருக்கா மாதிரி எதுவும் நடக்கவில்லை என்பதினால் எனக்கு என் பள்ளிக்கூட வழ்வை பற்றியோ,கல்லூரி வாழ்கையை பற்றியோ பேசுவது பிடிக்காது.

இது வரைக்கும் பொறுமையா படிச்சீங்கன்னா உங்க பொறுமைக்கு என் பாராட்டுக்கள்.
இந்த விளையாட்டுல இன்னும் அஞ்சு பேரை சேத்து விடனும்னு சொல்லி இருக்காங்க. எனக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச தமிழ் பதிவாளர்களும் ஏற்கெனெவே இந்த விளையாட்டுல சேர்ந்திருக்காங்க. அதனால எனக்கு தெரிந்த சில நண்பர்களை இதுல சேர்த்து விடரேன்.
அவங்க யாருன்னா
1.)கார்த்தி
2.)ஷ்ரவன்
3.)பெரி
4.)கோபிநாத்
4.)தீபா

PS: What can I say? I know iam a weirdo!! :-)

30 comments:

ஜி said...

அட.. வலது கைல கடிகாரம் கட்டுறது... இது என்னோட விசித்திர பழக்கமும்தான்... :)))

நீங்கதான் கரெக்ட்டா விசித்திர குணமா செலக்ட் பண்ணி போட்டிருக்கீங்க...

CVR said...

நன்றி ஜி!! ;-)

ChicagoCub said...

CVR..you have a very natural way of narration...please do keep writing......I am high on you :D

Anbudan

Bala

sravan said...

maati vitutiya? ezhudharen. solra madhiri 5 vishayam en kitta ennada iruku, yosikanum.

சுந்தர் / Sundar said...

அனுபவம் புதுமை ! ... இவனிடம் கண்டேன் !

peri said...

varraae vaa....But this is not-as-weired-as-I-expect !!!! Kidding
Simpile and nice narration...

Deepa said...

Thank you for tagging me
இந்த விளையாட்டுக்கு நிறைய யோசிக்கணுமே...ஹ்ம்ம்...சம்மர் ஹாலிடேஸ் வருதில்லே...யோசிச்சிடலாம் :D

கோபிநாத் said...

நீங்களுமா.....எல்லா குணங்களும் அட போடவைக்குது ;-))

இந்த கடிகார மேட்டரில் ஒர் அளவுக்கு ஓற்றுமை உண்டு....சனியன் ஓழிஞ்சான்னு ;-)))

\\ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் நடப்பது எதுவும் நம் கையில் இல்லை,\\

இது தாங்க உண்மை ;-)) நமக்கும் அப்படி தான்....

அப்புறம் என்னையும் ஆட்டத்துக்கு கூப்பிட்டதற்கு நன்றி.....ஆனா நான் ஏற்கனவே இந்த ஆட்டத்தை ஆடிட்டேன் (நம்ம பதிவுக்கும் கொஞ்சம் வாங்க) ;-))

CVR said...

@Bala
வாழ்த்துக்களுக்கு நன்றி பாலா

@ஷ்ரவன்
யோசி மா யோசி!! நமக்கே தெரியாத நிறைய விசித்திரமான விஷயங்கள் நம்ம கிட்ட அடங்கி இருக்கும்.நண்பர்கள் கிட்ட கேட்டு பாரு!! :-)

@சுந்தர்
வருகைக்கு நன்றி சுந்தர்!! இனிமே அடிக்கடி வந்துட்டு போங்க!! :-)

@Peri
ஏன் இதூகும் மேல பைத்தியக்காரத்தனமான விஷயங்கள் ஏதாவது எதிர்பார்த்தீங்களா?? அதை எல்லாம் நான் வெளியில் சொல்வது இல்லை!! :D

@தீபா
எழுதுங்க எழுதுங்க!! ஆவலுடன் காத்திருக்கிறேன்

@கோபிநாத்
நன்றி தலைவா!!
நீங்க ஏற்கெனெவே இந்த விளையாட்டுல கலந்துக்கிட்டீங்கன்னு எனக்கு தெரியாம்ம இருந்திச்சு!!
மன்னிக்கவும்!! :-)

Manivannan said...

CVR..Thats awesome blog dude..After reading the blog fully, I am beginning to think about my weirdness :)
Keep posting and keep fwding to me :)
Good 1

CVR said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மணி!! :-)

MyFriend said...

நான் வந்துட்டேன். :-)

MyFriend said...

தனிமையிலே இனிமை காண முடியுமே! நானும் தனிமை விரும்பிதான். ;-)

//கடிகாரத்தை இடது கையிலே தான் கட்டனும்னு யார் யாரோ சொல்லி பாத்துட்டாங்க!! //

யார் சொன்னது? அதை கட்டாமல் பாக்கெட்டிலே கூட வச்சிக்கலாம். :-)

MyFriend said...

// “The unseen is the most wonderful” //

I agree on it
:-)

//நீங்க பொதுவா யாரை கேட்டாலும் அவங்க குழந்தையா இருந்த சமயத்தை பெரிதும் விரும்புவதாக சொல்வார்கள். //

எனக்கு நான் குழந்தையாய் இருந்த சமயத்தை விரும்புவதைவிட மற்ற குழந்ததைகளை பார்ப்பது, கொஞ்சுவது, விளையாடுவதுதான் பிடிக்கும். :-)

CVR said...

கருத்துக்களுக்கு மிக்க நன்றி மை ஃபிரண்ட்
உங்க பின்னூட்டங்களை எல்லாம் படிக்கும் போது நம்மள மாதிரியே விசித்திரமா நிறைய பேரு உலகத்துல இருக்காங்கன்னு தோனுது!! :-)

Marutham said...

Vanakkam cvr,
:)
I wonder if this is the same cvr- chat box'la parthruken..if memory is not bad!
Z page'la ungalayum tag panirukanganu parthen.. :) parhtutu polamnu vandhen..
Very interesting... :)
Enjoyed reading abt u - weirder u ;)

Cheers!! :)
Marutham.

Marutham said...

and sometime back i was not able to visit ur page- 'access denied'nu vandhuchu.." aniyargal" varama irukavo enavo therila...but inaku fluke'la i was able to access!:)

CVR said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மருதம்
உங்கள் சாட் பாக்ஸில் பின்னூட்டமிட்டிருந்த அதே சீவீஆர் தான்!! :-)
என் ஆங்கில பதிவில் ஒரு கதைக்கு நீங்கள் இட்ட பின்னூட்டத்தின் மூலம் உங்கள் பதிவிற்கு வந்திருந்தேன்.
ஜி அவர்களின் வைர வரிகளில் தாங்கள் பாடியிருந்த அந்த சீன நாட்டு பாடல் அறுமை!! :-) வாழ்த்துக்கள். :-D

என் பதிவுக்கு ஆட்கள் வருவதே அரிது எனும் நிலையில் நானாக யார் வருவதையும் தடுப்பது இல்லை. :-)
"Access denied" பிரச்சினை
ஏதாவது செர்வர் தொந்தரவாக இருக்கும்!! :-)

Unknown said...

dear son un ennangal euththukkalaai mutthukkalaai irukkkinrana, keep it up, very good

Anonymous said...

//நானே ஒரு விசித்திர பிறவிதான் இதுல ஐந்து என்ன ஐயாயிரமே எழுதலாம் அப்படின்னு எழுத ஆரம்பிச்சுட்டேன்.//
அட நீங்க நம்ப இனம்ப்பா!

Anonymous said...

//1.)தனிமையிலே இனிமை காண முடியுமா??//

இராமும் இதைதான் எழுதி இருந்தார்.அவரிடம் கேட்ட அதே கேள்வி உங்களிடமும்...கல்யாணம் ஆனால் எப்படி?

Anonymous said...

//3.)நேரில் சந்திப்பதில்,போனில் பேசுவதில் தயக்கம்//

இதிலும் என்கூட 100% ஒத்துப் போறீங்க!!

Anonymous said...

//4.) பெரிதாக வருங்காலத்தை பற்றி திட்டமிடாதது//

இதிலும் என்னை மாதிரியே இருக்கீங்களே!!நடக்குறதுதான் நடக்கும்,நடக்கதது நடக்காது!!just follow the flow.இதுதான் என்னோட policy/

Anonymous said...

//கல்லூரியிலும் சரி சொல்லிக்கறா மாதிரியோ ஞாபகம் வெச்சிருக்கா மாதிரி எதுவும் நடக்கவில்லை என்பதினால் எனக்கு என் பள்ளிக்கூட வழ்வை பற்றியோ,கல்லூரி வாழ்கையை பற்றியோ பேசுவது பிடிக்காது//

haha.in this i am totally opposite.I remember every single detail and i like to tell stories about it

CVR said...

@துர்கா
எனக்கு பொதுவாகவே கல்யாணம் எல்லாம் என் வயதிற்கு அப்பார்பட்ட விஷயம் என்ற எண்ண்மே இன்னும் இருக்கிறது!! அதனால் நான் இதை பற்றி எல்லாம் நினைத்து பார்த்தது இல்லை.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! :-)

Anonymous said...

Mr. CVR this is too late - now only (24-5-07 at 1 pm - as you are tellig staying alone more help ful in allways - then what attracted from your weird is `the unseen is the most wonderful - i fully agree it - i too have the same opinion - ok best wishes - friend

Unknown said...

அன்பின் CVR,

உங்கள் முதல் 4 கருத்துக்களிலும் எந்த வாதமுமின்றி ஒத்துப்போகின்றேன்.
அந்நான்கிலும் என்னை அப்படியே பிரதிபலிக்கின்றீர்கள்.

5 ஆம் கருத்துத் தான் இடருகிறது.
பால்யம் என்பது ஒவ்வொருவரும் கடந்து வந்த வசந்தகாலம்.
திரும்பிச் சென்று பார்க்கமுடியாத சுற்றுலாப்பயணம்.
நினைவுகள் மட்டுமே அழகிய புகைப்படங்களாய் எஞ்சி நிற்கும்.

Divya said...

\\( எனக்கு சகோதர சகோதரிகள் யாரும் கிடையாது!! உங்களை தவிர!! :D ) \\

touchingssss !!

:))

துளசி கோபால் said...

நானும் இந்த 1, 2, 4 தான்:-)

நாடோடி இலக்கியன் said...

1,3 மற்றும் 4 அப்படியே எனக்கும் பொருந்தும்.
குறிப்பாக இது அப்படியே.
//முடிந்தால் இந்த தகவல் தொழில்நுட்ப வேலையில் இருந்து எஸ்கேப் ஆகி அனிமேஷன்,புகைபடத்துறை, எழுத்து சம்பந்தமான தொழில் இது மாதிரி கலை திறன் சம்பந்தப்பட்ட தொழிலில் இறங்கிவிடவேண்டும் என்பது போன்ற மேலோட்டமான சிந்தனைகளை தவிர வேறெந்த லட்சியமோ குறிக்கோளோ எனக்கு கிடையாது.//

உங்களது எழுத்து நடை நன்றாக இருக்கிறது நண்பரே.வாழ்த்துகள்!

Related Posts Widget for Blogs by LinkWithin