காதல் ஒரு சிறப்பு பார்வை - பாகம் IV

கடந்த சில பகுதிகளில் நாம காதல்னா என்ன,அது எப்படி உருவாகும், காதல் உருவாகிவிட்டதா என்று எப்படி கண்டுகோள்வது போன்ற விஷயங்களை பற்றி அலசி இருந்தோம். இன்றைக்கு காதலை பற்றி மக்களின் கண்ணோட்டம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

நான் சிறிய வயதில் இருக்கும்பொழுது காதல் என்ற சொல் ஒரு கெட்ட வார்த்தை. அதற்கு அர்த்தம் என்ன என்று தெரியாது ஆனால் காதல் என்றாலே ஆணும் பெண்ணும் மிக நெருங்கி பழகி கொள்வார்கள் ,ஆடி பாடி மகிழ்வார்கள் என்று தொலைக்காட்சியில் பார்போம். அதில் என்ன தப்பு ஏன் அதை தவறான செயல் என்று சொல்கிறார்கள் என்று எல்லாம் யோசித்ததில்லை. ஆனால் இது போன்ற நெருக்கமான காட்சிகள் வந்தால் அலைவரிசை மாற்றும்படி தாய்தந்தை அறிவுருத்துவார்கள். யாராவது நண்பன் ஒருவன் தெரியாத்தனமாக காதல் என்று சொல்லிவிட்டால் டீச்சரிடம் சொல்லிவிடுவேன் என்று பயமுறுத்திக்கொண்டு திரியும் கூட்டங்களை பார்த்திருக்கிறேன்.

பின் உடல் வளர்ச்சி அடைந்த பின் காதல் என்பது ஒரு உல்லாசமான விஷயம். பெண்களிடம் அதிகமாக பழகாமல் ஆண் நண்பர்கள் முட்டுமே எனக்கிருந்த காலம் இது. “The unseen is the most wonderful” என்ற கூற்றுக்கு ஏற்ப எனக்கு பரிச்சயமில்லாத பெண் சகவாசம் எனக்கு ஒரு இன்பத்தின் உச்சம் என்று தோற்றமளித்தது. பின் வேலையில் சேர்ந்த பிறகு பெண் நண்பர்கள் ,ஆண் நண்பர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் நட்பின் சுவை மட்டுமே பெரிதாக தெரிந்தது,இதனால் எனக்கு காதல் மேல் இருந்த பிரமிப்பு குறைந்து அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவ்லே கூடியது.
இந்த நிலையில் நண்பர்கள் பலர் காதல் வலையில் மாட்டிகொண்டதை பார்க்க முடிந்தது.காதலித்து வெற்றி கண்டவர்கள் சிலர், காதலித்து நிராகரிக்கப்பட்டவர்கள் சிலர்,காதலித்து பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளாததால் வலியில் தவித்த சிலர்,அவர்களை சமாதனபடுத்திய சிலர்,காதலை வெளியிலேயே சொல்லாமல் புழுவாய் தவித்த பலர்.............. இப்படி கோடிக்கணக்கான கதைகளை சினிமாவிலும் நேரிலும் பார்த்து இப்பொழுது காதல் என்பது மகிழ்ச்சியின் உச்சத்தையும்,நரகத்தின் கொடுமை இரண்டையும் தரக்கூடிய பொருளாக தெரிகிறது. முன்னே இருந்தது போல் ஆர்வமும்,ஆசையும் போய் ஒருவித பயமும் சந்தேகமுமே விஞ்சி நிற்கிறது.
மக்களிடையே எனக்கு தெரிந்த வரை காதல் பற்றி ஒரு குழப்பமான மன நிலையே இருந்து வருகிறது. இளைஞர்களை பொருத்த வரையில் பெரும்பாளானவர்கள் காதலுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள் ,அது ஏன் என்று விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். காதல் வயபட்டிருக்கும் ஒரு ஆணோ பெண்ணோ முற்றிலும் வேறு ஒரு உலகத்திற்கு போய் விடுகிறார்கள் என்ற நினைப்பு பல இளைஞர்களிடையே உள்ளது. சினிமா மற்றும் இலக்கியங்களில் விவரிக்கப்படும் இந்த நிலையை பார்த்து இளைஞர்களிடம் காதல் என்றாலே அது ஒரு தேவலோக உணர்வு என்று எண்ணம் மேலோங்கி இருக்கிறது.அதனால் நூற்றுக்கு , தொன்னூற்றொன்பது இளைஞர்களிடையே காதலென்றால் பச்சை கொடி தான்.

மற்ற மக்களிடையே காதல் என்பதை பற்றி ஒரு விசித்திரமான ஒரு கருத்து உண்டு.அதாவது கல்யாணத்திற்கு பின் ஏற்படும் காதல் தெய்வீகமானதென்றும், கல்யாணத்திற்கு முன் ஏற்படும் காதல் ஒழுக்கமற்ற செயல் என்றும் ஒரு எண்ணம்.சில பேர் கல்யாணத்திற்கு பின் கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கத்தை காதல் என்றே கூப்பிட மறுக்கிறார்கள் , காதல் என்றாலே பொறுப்பற்ற இளைஞர்கள் சல்லாபிப்பதற்கான பெயர் என்பது அவர்களின் கருத்து.ஆனால் திரையில் அஜீத்தும்,விஜயும்,சூர்யாவும் துரத்தி துரத்தி காதலித்தால் அதை ஆதரிப்பார்கள். தன் குடும்பத்தில் நடந்தால் மட்டும் அது தாங்கமுடியாத செயல் ஆகிவிடும்.

இந்த விஷயம் ஏன் என்று நாம் புரிந்துகொள்ளக்கூடிய காரணம் உண்டு. காதல் என்ற போர்வையில் பல ஆண்களும் பெண்களும் தன் வாழ்க்கையை பாழாக்கிக்கொள்வதை பார்த்து பார்த்து இவர்கள் இந்த கருத்துகளுக்கு பழக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்கள் என்றால் ஏமாற்றிவிட்டு போகும் பெண்ணுக்காக தேவதாஸாக மாறி குடித்து,பற்றில்லாமல் அலைந்து குட்டிச்சுவராக போவது. பெண்ணாக இருந்தால் ,யாராவது ஏமாற்றி விட்டால் கர்ப்பிணியாக துவளும் அவல நிலைமை. இதெல்லாம் தூசியை போல் தட்டி விட்டு வாழ்க்கையை நடத்தி செல்வது மிகவும் கடினம். பள்ளியிலோ ,கல்லூரியிலோ முதிர்ச்சியற்ற நிலையில் காதலிப்பதாக நினைத்து கொண்டு திரியும் பிள்ளைகளை பெற்றோர்கள் கோபப்படுவது இயற்கை.ஆனால் நன்கு படித்து,வேலைக்கு சென்று, சாமர்த்தியமான இளைஞர்கள் கூட,தாங்கள் காதலிக்கிறோம் என்றால் பெரியவர்கள் அதை சாதாரணமாக பார்ப்பதில்லை.ஒருவித கண்டிப்புடனும்,பயத்துடன் தான் அதை அனுகுகிறார்கள்.
ஆனால் இப்பொழுதெல்லாம் அறிவில் முதிர்ந்து , சுயமாய் சிந்தனை செய்யும் ஒரு ஆணோ,பெண்ணோ தான் காதலிப்பதாக சொன்னால் அதை கண்மூடித்தனமாக எதிர்க்கும் பெற்றொர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. உடன் இருப்போர் நிர்பந்தம் (peer pressure) காரணமாக நீடித்து வரும் ஜாதி,இனம்,அந்தஸ்து போன்ற காரணங்களால் முதலில் தயங்கினாலும்,முன்னை விட குழ்ந்தைகளுக்காக விட்டு கொடுக்கும் பெற்றோர்கள் அதிகமாகி விட்டார்கள். மேலும் மேலும் எல்லார் குடும்பங்களிலும் காதல் திருமணங்கள் ஆக ஆக அதற்கேற்றார்போல் உடன் இருப்போர் நிர்பந்தமும் மாறி கொண்டே போகும். இன்னும் பத்து வருடங்களில் இப்பொழுது இருப்பதை போல் காதல் திருமணங்களை ஆதரிக்க தயங்க வேண்டாம். ஏன் என்றால் எல்லோர் வீட்டிலும் இது போன்ற ஏதாவது நடப்பதால் எவராலும் கேள்வி கேட்க முடியாது.

இது வரை காதலை பற்றி சாதகமான கண்ணோட்டங்களையே பார்த்து வந்தோம் இல்லையா, ஆனால் இதற்கு எதிர்மறையான எண்ணஓட்டங்களும் சமூகத்தில் உண்டு.
சிலர் காதல் என்று ஒரு விஷயமே இந்த உலகத்தில் இல்லை என்று கூறுவார்கள். “ஆயுத எழுத்து" படத்தை பார்த்திருந்தீர்கள் என்றால் இந்த கருத்தை பற்றி சூர்யா,இஷா டியோல் பைக்கில் பேசும் வசங்களை கவனித்திருப்பீர்கள். “காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா,இந்த எழவு எல்லாம் ஆர்மோன் செய்யும் கலகம் தானடா" என்று பொட்டில் அரைந்தார்போல் சொல்லும் சமீபத்திய சினிமா பாடல் ஒன்று.
இந்த வாதத்தை பற்றி விரிவாக நாம் நமது முந்தைய பகுதிகளில் பார்த்திருக்கிறோம். ஆக, காதல் என்று ஒன்று இல்லவே இல்லை என்றால் அது நல்லதா ,கெட்டதா என்ற பேச்சே எல்லை என்பது இவர்கள் வாதம்.

நம் உடல் உணர்ச்சியை போக்கி கொள்ள வேண்டும் என்றால் அதற்கு பல வழிகள் உண்டு இதற்காக வாழ்க்கை முழுவதும் ஒருவரை கட்டிக்கொண்டு அழ வேண்டுமா என்பது இவர்கள் வாதம்.”ஒரு பாட்டில் சாராயம் வேணும்கறதுக்காக ஒரு சாராய கடையையே எவனாவது வாங்குவானா" என்ற "ஆயுத எழுத்து"(திரும்பவும்) படத்தின் வசனம் தான் நியாபகத்திற்கு வருகிறது. காதல் என்பது எங்களை அடிமைபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு விஷயம் என்று ஆண்கள்,பெண்கள் இரு பாலரிடத்திலும் சிலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக தான் "free sex” எனப்படும் சிந்தாந்தம் மேற்க்கத்திய நாடுகளில் காணப்படுகிறது. நாம் இந்தியாவில் நினைத்து கொண்டிருப்பதை போல் இது பரவலாக இல்லாவிட்டலும்,குடும்ப வாழ்க்கையை விரும்பாததால் நெதர்லாந்து போன்ற சில நாடுகளில் இளைஞர்கள் இல்லாமல் தட்டுபாடு நிலவுகிறது.
பதிவு பெருசாகறது கவனிக்காம ரொம்ப பேசிட்டே போயிட்டேன்.இப்போதைக்கு என் அறுவையை நிறுத்திக்கரேன், அப்புறமா விஷயங்கள் இருக்கும் போது உங்க கிட்ட வரேன். நிறைய பேசலாம்.
என்ன வரட்டா??

காதல் ஒரு சிறப்பு பார்வை - பாகம் 1
காதல் ஒரு சிறப்பு பார்வை - பாகம் 3
காதல் ஒரு சிறப்பு பார்வை - பாகம் 4

10 comments:

Anonymous said...

//அதாவது கல்யாணத்திற்கு பின் ஏற்படும் காதல் தெய்வீகமானதென்றும், கல்யாணத்திற்கு முன் ஏற்படும் காதல் ஒழுக்கமற்ற செயல் என்றும் ஒரு எண்ணம்//

எனக்கும் ஒரு சந்தேகம்.எப்படி பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை மூன்று மாதம் பழகி கல்யாணம் செய்துக்கொள்ள முடியும்?மூன்று மாதத்தில் அந்த நபரிடம் காதல் வந்துவிடுமா?இல்லை கல்யாணம் முடிந்தாலும் அதன் பிறகு காதல் கண்டிப்பாக வருமா?

Anonymous said...

காமம் எது?காதல் எது?காமம் இல்லாத காதல் உண்டா?free sex இல் வெறும் காமம் மட்டும் இருக்கலாம்.காதல் இருக்குமா?நானே குழம்பி போய் இருக்கேன்.இன்னும் கேள்வி கேட்க வைச்சுட்டீங்களே!

CVR said...

//எனக்கும் ஒரு சந்தேகம்.எப்படி பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை மூன்று மாதம் பழகி கல்யாணம் செய்துக்கொள்ள முடியும்?மூன்று மாதத்தில் அந்த நபரிடம் காதல் வந்துவிடுமா?இல்லை கல்யாணம் முடிந்தாலும் அதன் பிறகு காதல் கண்டிப்பாக வருமா? //
காதல் என்பது எப்படி வருகிறது என்பதிலேயே எனக்கு சந்தேகம் உண்டு,இதில் "பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை மூன்று மாதம் பழகி கல்யாணம் செய்துக்கொள்ள முடியும்?மூன்று மாதத்தில் அந்த நபரிடம் காதல் வந்துவிடுமா?இல்லை கல்யாணம் முடிந்தாலும் அதன் பிறகு காதல் கண்டிப்பாக வருமா? " என்றெல்லாம் சொல்வதற்கு என்னிடம் கண்டிப்பாக அறிவோ அனுபவமோ இல்லை. இதெல்லாம் தம்பத்தியத்தில் அனுபவம் உள்ள யாரேனும் சொன்னால்தான் உண்டு. இதே கேள்வியை நான் முந்தைய ஒரு பதிவில் கூட எழுப்பி இருக்கிறேன்.

//காமம் எது?காதல் எது?காமம் இல்லாத காதல் உண்டா?free sex இல் வெறும் காமம் மட்டும் இருக்கலாம்.காதல் இருக்குமா?நானே குழம்பி போய் இருக்கேன்.இன்னும் கேள்வி கேட்க வைச்சுட்டீங்களே! //

Free sex-இல் காதல் இருக்கிறது என்று யார் சொன்னார்கள்??? காதல் என்ற ஒன்று இல்லவே இல்லை,இதெல்லாம் ஆர்மோன் செய்யும் ஆட்டூழியம்தான் என்று சொல்பவர்கள் தான் இந்த free sex கொள்கையை கடைப்பிடிக்கிறார்கள்.

கருத்துக்களுக்கு மிக்க நன்றி துர்கா!! :-)

Unknown said...

Hi CVR..

Opposite SEX attracts each other...but its not at all a love..Its a pure Infactuation..
Nan vandhu idhuvaraikum oru 4,5 ponnungalai love pannirukken..
Avanga yarum love pannalangaradhu vera vishayam..
Athellam Love illannu ippo thriyudhu..And now love is like a Status symbol for the most of the youths here...Adhuvum indha Love pannitu avanga padara padu..thaangamudiyathu..ok, ithoda niruthikiren..Its going big like ur post..Keep updating..

CVR said...

@கமல்
இந்த love,infatuation இவற்றிற்கு நடுவில் உள்ள வித்தியாசத்தை எப்படி அறிவது?? :-)

Unknown said...

2 illa 3 varushathuku apparam..namma nenaikum podhu oru inimayana ninaivigala irundha adhu LOVE..Appadi iallama namma nenachu sirikara madhiri irundha ..thats infactuation..

CVR said...

@கமல்
அப்போ நடப்பது love-ஆ அல்லது Infatuation-ஆ என்று 2-3 வருடங்கள் கழித்து தான் புரிந்து கொள்ள முடியுமா?? :-)

குசும்பன் said...

CVR என்னமோ காதல்ங்கிறீங்க கத்திரிகாய்ங்கிறீங்க ஒன்னும் புரியல :(
என்ன மாதிரி சின்ன பிள்ளைங்களுக்கு புரியிரமாதிரி சொல்லுங்க...

CVR said...

@குசும்பன்
வாங்க குசும்பரே!!!
நல்லா பேருக்கு ஏத்தா மாதிரி தான் பின்னூட்டம் போட்டிருக்கீங்க!!!
நான் என்னத்த உங்களுக்கு சொல்லுறது!!
நீங்க தான் சொல்லனும்!! :-)

Unknown said...

I don't know CVR...but I feel love after marriage is always best...Athuvarikum beach poyi site adchitu vara vendiyathan..vera vazhiyae illa...

Related Posts Widget for Blogs by LinkWithin