தசாவதாரம் - சில எண்ணங்கள்

வெகு நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்து ,நேற்றுதான் தசாவதாரம் படம் பார்க்க முடிந்தது.
படத்தை பார்த்த பின் எனக்கு தோன்றிய சில எண்ணங்கள் எழுத்துக்களாய்.

இந்த படம் வந்ததில் இருந்து ஒலகத்தரம் என்ற வார்த்தை பெரிதும் அடிபட்டது.
இது ஒலகத்தரம் வாய்ந்த படம் என்று சொல்ல முடியாது. ஆரம்ப காட்சிகளில் கேமரா கோணங்கள் நன்று ,ஆனால் தேவைக்கு சற்றே அதிகப்படியான சுற்றல் என்று தோன்றியது. கிராபிக்ஸ் மிகவும் ஏமாற்றமளித்தது.
இந்த கிராபிக்ஸ் முயற்சியை என்னால் ஒலகத்தரம் என்று விஷயம் தெரிந்த யாரிடமும் கண்டிப்பாக பீற்றிக்கொள்ள முடியாது...
12-ஆம் நூற்றாண்டு கிராபிக்ஸ் காட்சிகளும் ,கடைசியில் சுனாமி கிராபிக்ஸ் காட்சிகளும் , மிகவும் தரம் குறைந்தவையாக இருந்தன.ஆனால் ஒன்றாக தோன்றும் காட்சிகளில் கிராபிக்ஸ் கலக்கல்.பல இடங்களில் பிசிறு இல்லாமல் பார்க்க முடிந்தது(ஆனால் சில இடங்களில் அதுவும் சொதப்பல் தான்). சில இடங்களில் 5-6 கமல்கள் வருவது போன்ற காட்சியமைப்புகள் உள்ள இடங்களில் இதில் அனைவரும் வேறு வேறு கதாபாத்திரங்களே என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது.அதற்கு கமலஹாசனின் மேன்மையான நடிப்பும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பும் தான் காரணம்.

அதுவும் கடைசியில் இரண்டு கமல்கள் சண்டை போடும் காட்சியெல்லாம் எப்படி செய்தார்கள் என்று நினைத்தே பார்க்க முடியவில்லை.அதுவும் ஒரு இடத்தில் இருவரும் சண்டை போடும் போது தண்ணிரில் காலை சுழற்றி அடிக்க,தண்ணீர் தெறிக்கும்!! அதெல்லாம் கிராபிக்ஸ் என்று சொல்ல முடியாத அளவுக்கு தத்ரூபமாகவே தான் இருந்தது(நான் கவனித்த வரை,படத்தை ஒரே முறை தான் பார்த்திருக்கிறேன் என்பதை கருத்தில் கொள்க).
இந்த கிராபிக்ஸ் முயற்சி கண்டிப்பாக உலகத்தரம் வாய்ந்தது தான்(சில இடங்களைத்தவிர)
சும்மா இரண்டு படங்கள் எடுத்து அதை ஒன்றாக இணைப்பது எவ்வளவு சிரமம் என்று தெரிந்தால் இதை பாராட்ட முடியும்.முயன்று பார்க்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்...


படத்தில் 10 கமல்கள் கண்டிப்பாக தேவையில்லை தான். சில கதாபாத்திரங்கள் முற்றிலுமாக திணிக்கப்பட்டவை என்றும் மேலும் பல கதாபாத்திரங்கள் கமல் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதும் தெள்ளத்தெளிவு.ஆனால் படத்தின் major selling point இந்த பத்து வேடங்கள்தான் என்பதால் இந்த compromises செய்திருக்கிறார்கள் தெரிகிறது. Compromises-கள் இல்லாமல் எடுக்கப்பட்ட "அன்பே சிவம்" என்ன ஆகியது என்று நாம் அனைவரும் அறிவோம். தான் சொல்ல வந்த கருத்தை முடிந்த வரை பரப்ப வேண்டும் என்பதற்காக இதை ஒரு முடிந்த வரை ஒரு கமர்சியல் படமாக எடுக்க கமல் முனைந்திருப்பது புரிகிறது. அதற்காக பத்து வேடங்கள் என்ற selling point-உம் ,அதனால் compromises-களும் தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று நினைக்கிறேன்.
ஆனாலும் இத்தனை கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு திரைக்கதை எங்கேயும் தேங்கிவிடாமலும் பெரிதாக ஒட்டல்கள் இல்லாமல் சீராக கதை செல்லுமாறு பார்த்துக்கொண்ட கமலின் திரைக்கதைக்கு பாராட்டுக்கள்.

கமலின் நடிப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால்,பல நேரங்களில் நாம் பார்த்துக்கொண்டிருப்பது கமல் தான் என்பதே எனக்கு தோன்றவில்லை.அந்த அளவுக்கு கதாபாத்திரங்கள் பளிச்சிட வைத்திருக்கிறது அவர் நடிப்பு.பிளெட்சர் heavily inspired by Terminator 2 என்று தோன்றியது.ஆனால் I loved it!
பூவராகன் கதாபாத்திரத்திற்கு தான் கமல் அதிக்கபடியாக உழைத்திருப்பார் என்று எனக்கு தோன்றியது(among the really wanted characters,iam ignoring bush,japanese and stuff here).
ஏனென்றால் மற்ற கதாபாத்திரங்கள் எல்லாவற்றையும் கமல் முன்பு எப்போதோ செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.அட்லீஸ்ட் இது போல பண்ணிக்கொள்ளலாம் என்று ஒரு ரெபெரென்ஸாவது இருக்கும்.ஆனால் பூவராகன் was something unique.அந்த கதாபாத்திரத்தின் வசன உச்சரிப்பு மற்றும் மேனரிசம் இவற்றை கமல் நன்றாக நடித்திருந்தார்.படத்தில் உருத்தாத மேகப்புகளில் இந்த கதாபாத்திரமும் ஒன்று என்பதும் இங்கு சொல்லியாக வேண்டும்.

படத்தை பார்த்து முடித்த வுடன்,this movie deserved Shankar and A.R.Rahman என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை. தனது மனதில் தோன்றிய காட்சிகளை compromise இல்லாமல் திரையில் வடிக்கும் completeness,ஷங்கரிடம் நான் எப்போதும் பார்த்திருக்கிறேன்.ஜெண்டிமேனில் இருந்து அந்நியன் வர அவர் எடுத்திருக்கும் பாடல்காட்சிகளே இதற்கு சான்று. ஷங்கர் இருந்திருந்தால் நான் முன்பு குறிப்பிட்ட கிராபிக்ஸ் சொதப்பல்கள் இருந்திருக்காது என்று தோன்றியது! அதெல்லாம் சரியாக இருந்திருந்தால் இந்தப்படத்தை உலகத்தரம் வாய்ந்த படம் என்று நானும் சொல்லியிருப்பேன்.
அதே போல் படத்தின் பிண்ணனி மற்றும் பாடல்களும் very dissappointing!! Not fitting enough for a movie of this stature and hype!!
இது போன்ற படத்துக்கு ரஹமான் அல்லது இளையராஜா நிச்சயம் தேவை!

படத்தின் கருத்து ,கமலின் ஆத்திக நாத்திக பின்பற்றுதல்கள் பற்றி அறிந்தவர்களுக்கு ஆச்சரியமளிக்காது.

In a democratic country , a person has a right to express his opinion in whatever he chooses to present.
அதனால் அதை பத்தி ஒன்றும் சொல்வதற்கில்லை.

நாம் தூங்கி எழுந்திருக்கும் போது நமக்கு நாம் யார் என்ற உணர்வே இருக்காது. ஒரு சில மணித்துளிகளுக்குப்பின் நமது நிலை,நமது கவலைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நம் நியாபகத்துக்கு வந்து சேரும்.அதை போன்று ஒரு படம் முடிந்த பிறகு ஏற்பட்டால் அந்தப்படம் பாஸ் ஆகிவிட்டது என்பது எனது thumbrule.

நான் படத்தை முடித்து விட்டு வெளியே வரும்போது தான் என் அலுவலக வேலை எரிச்சல்களும்,சனிக்கிழமை அலுவலகம் வர வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக நியாபகம் வந்தது....
பி.கு: படம் பார்த்து வீட்டிற்கு வர 3-3:30 ஆகியதால் அடுத்த நாள் சனிக்கிழமை அலுவலகத்திற்கு நான் செல்லவில்லை!! :P

19 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாம் இசைக்கு அவங்க ரெண்டுபேரில் யாராச்சும் போட்டிருக்கலாம் ... மூக்கால பாடறவன் அந்த ஹிமேஷை எப்படித்தான் கமல் தேர்ந்தெடுத்தாரோ

VIKNESHWARAN ADAKKALAM said...

//அலுவலகத்திற்கு நான் செல்லவில்லை!! :P//

பட்டை...

தமிழன்-கறுப்பி... said...

அட இன்னுமொரு தசாவதாரம் பதிவு...!

தமிழன்-கறுப்பி... said...

அதுவும் நம்ம CVR அண்ணன் கிட்டயிருந்து...:)

தமிழன்-கறுப்பி... said...

///வெகு நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்து ,நேற்றுதான் தசாவதாரம் படம் பார்க்க முடிந்தது.///

கொஞ்சம் லேட்தான் பரவாயில்லை..
ஆனா நான் இன்னும் படம் பாத்து முடிக்கலை..

Anonymous said...

AR Rahman, Alaipauthey la Manthirathoda Tune ai mathi potarunu periya pirachanaye vanthuthu,
athuku pirahu avar apadiyanatha avoide pani varar,
Boys padathula koda Aiyapan songuku Prave Mani than music,
athe karanathukukagathan intha padathuku BGM poda kamal ketathuku mudiyathunu soli irukar, ( get this news frm my friend, he s gv p's friend)
thast y we missed ARR :(

தமிழன்-கறுப்பி... said...

///In a democratic country , a person has a right to express his opinion in whatever he chooses to present.///

இதையும் தமிழ்ள சொன்னா என்னண்ணே...:)

(உண்மையில இதுக்கு என்ன அர்த்தம்...)

தமிழன்-கறுப்பி... said...

இவ்வளவு விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் பிறகு படம்பாத்ததில் உங்களுக்கும் கூட கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாகத்தான் இருந்திருக்கும் இல்லையா...?

Unknown said...

இறுதிக் காட்சியில் சுனாமி வந்து மனிதர்கள் எல்லாம் செத்துப் போய்க் கொண்டிருக்கையில் கமலும்,அசினும் காதல் வசனம் பேசிக் கொண்டிருப்பது பெரும் அபத்தம்.

Unknown said...

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடந்த நிகழ்வுக்கு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் விழா என்பதுவும் கொஞ்சம் இடிக்குது.

Unknown said...

//பி.கு: படம் பார்த்து வீட்டிற்கு வர 3-3:30 ஆகியதால் அடுத்த நாள் சனிக்கிழமை அலுவலகத்திற்கு நான் செல்லவில்லை!! :P //

ஆஹா...இது எத்தனையாம் அவதாரமப்பா?

Anonymous said...

பகுத்தறியும் தமிழன்

13 -ஆம் ஆழ்வார் கமல் வாழ்க ! ..

64 - ஆம் நாயன்மார் கலைஞர் வாழ்க !...

Sundar Padmanaban said...

சீவீயார்

எல்லாம் சரி.. ஆனா ஷங்கர் பத்திச் சொன்னதைத் தான் ஜீரணிக்கவே முடியலை :)) இதுக்கு நீங்க கமலையே நல்லாத் திட்டி மத்தவங்க மாதிரி 'விமர்சனம்' எழுதியிருக்கலாம்! :))

நன்றி

Anonymous said...

இப்படத்தில் உறுத்திய ஒரு விடயம்

மதம் , நம்பிக்கை என்பதற்கப்பால்

எதற்காக விஸ்ணு [ ஆரியக் கடவுள் ] முதலில் இருந்து கடைசி வரை வந்திருக்கிறார் ??????

12 ம் நூற்றாண்டில் கடலினுள் வீசப்பட்டு சுனாமியோடு மீண்டும் வந்தது போல் காட்டப்பட்டது ஏன் ??????

உண்மையில் சுனாமியால் முருகக்கோவில் ஒன்று வெளி வந்ததாகக் கேள்விப்பட்டேன் ??????

CVR said...

@முத்துலெட்சுமி
வட இந்திய மக்களுக்கு இந்த படம் போய் சேர வேண்டும் என்று இப்படி செய்திருப்பாரோ என்னவோ!

@விக்னேஷ்
:P

@தமிழன்
ஒரு ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் தன் மனதில் இருப்பதை வெளிப்படுத்த உரிமை உண்டு என்று கூறியிருந்தேன்.
வேலை பளு காரணமாக நான் தசாவதாரம் குறித்த தமிழ்ப்பதிவுகள் அவ்வளவாக படிக்கவில்லை.எனினும் மின் அஞ்சலில் பல விஷயங்கள் வந்து குவிந்தன..
வருகைக்கு கருத்துக்களுக்கும் நன்றி :)

@சுபாஷ்
அடடா!! இந்த விஷயமெல்லாம் எனக்கு தெரியாதே.. :)

@ரிஷான்
///இறுதிக் காட்சியில் சுனாமி வந்து மனிதர்கள் எல்லாம் செத்துப் போய்க் கொண்டிருக்கையில் கமலும்,அசினும் காதல் வசனம் பேசிக் கொண்டிருப்பது பெரும் அபத்தம்.////
நான் அப்படி நினைக்கவில்லை...சுனாமி முடிந்து சில நேரம் கழித்து தான் அவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
I thought it was natural and understandable.

@பகுத்தறியும் தமிழன்
நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு புரியல!! மக்கள் சந்தோஷமா இருந்தா சரி! :-)

@வற்றாயிருப்பு சுந்தர்.
ஷங்கர் கதைகள்(ஒரே மாதிரி கதை),திரைக்கதை,இயக்கம் இது பற்றியெல்லாம் எனக்கும் விமர்சனங்கள் உண்டு.ஆனால் நான் இங்கு குறிப்பிட்டது அவர் சிரத்தை எடுத்து காட்சிகளை முழுமையாக்கும் திறமை தான்.
படம் பார்த்து முடித்த வுடன்,ஷங்கர் இருந்தால் படத்தின் perfectionism கூடியிருந்தது என்று எனக்கு கண்டிப்பாக தோன்றியது.

@Thamilan
உங்கள் அரசியல் சார்ந்த கருத்துக்களை விவாதிக்க அனேக பதிவுகள் தமிழ்மணத்தில் கிடைக்கும்.இந்தப்பதிவில் அதை பற்றி விவாதிக்க எனக்கு விருப்பமில்லை.அதனால் பதிவில் கூட அரசியல் சார்ந்த விஷயங்கள் பற்றி பேசவில்லை.
இனி வரும் அரசியல் சார்ந்த பின்னூட்டங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது!
புரிதலுக்கு நன்றி!! :-)

Ramya Ramani said...

\\இதில் அனைவரும் வேறு வேறு கதாபாத்திரங்களே என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது\\

இது ஒத்துக்கொள்ளவேண்டிய ஒன்று.நான் அந்த ஜப்பானிய காரக்டர் கமல் என்பதை நம்ப ரொம்ப நேரம் ஆச்சு :)


\\அதே போல் படத்தின் பிண்ணனி மற்றும் பாடல்களும் very dissappointing!! Not fitting enough for a movie of this stature and hype!!\\

இன்னும் கவனத்துடன் செய்து இருக்கலாம் என்பது என்னோட கருத்து. படத்தின் பாடல்களின் ரீச் எப்பவுமே அதிகம். பின்னனி இசை படத்துடன் ஒட்டாமல் இருந்தது பெரிய குறை :(

Anonymous said...

/படத்தை பார்த்து முடித்த வுடன்,this movie deserved Shankar and A.R.Rahman என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை./ me too felt the same. Actually 3 characters are not required kamal's acion (Avtaar, Kali"full"a, Bush) Arun

கோபிநாத் said...

நல்ல விமர்சனம் ;))

மருதநாயகம் said...

நல்ல விமர்சனம். வெரிகுட் வெரிகுட்

Related Posts Widget for Blogs by LinkWithin