காஞ்சி மற்றும் வேலூர் பயணக்குறிப்புகள்

இந்தியா வருவதற்கு முன்னாலேயே நண்பர்களுடன் பல இடங்களுக்கு சென்று நிறைய படம் பிடிக்க வேண்டும் என்று யோசித்திருக்கிறேன்.
ஒன்றிரண்டு சிறு சிறு படம் பிடிக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்து வந்தாலும் முழுமையான புகைப்படக்கலை பயணம் ஒன்று சமீபத்தில் தான் கிடைத்தது. விழியனின் திருமணம் வேலூரில் நடைபெறப்போகிறது என்று தெரிந்தவுடனேயே இதை சாக்காக வைத்துக்கொண்டு ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்யும் மும்முரம் நண்பர் வட்டத்தில் தொற்றிக்கொண்டு விட்டது.இந்த முயற்சியின் பயனாக மே மாதம் 9 - 10 வார இறுதியில் காஞ்சிபுரம் மற்றும் வேலூர் செல்வதாக ஏற்பாடு ஆகியிருந்தது.
நிறைய மாற்றங்களுக்கு பின் கடைசியில் சென்னையிலிருந்து நான்,லக்ஸ் மற்றும் ஆதி காஞ்சிபுரத்திற்கு சனிக்கிழமை காலையில் பேருந்தில் போய் சேர்ந்தோம்.
பெங்களூரில் இருந்து பீவி மற்றும் அவரின் நண்பர் ஒருவர் வந்திருந்தனர். சென்னையில் இருந்து ரேவேஜஸ்(Ravages) எனும் புனைப்பெயர் கொண்ட சந்திரசூடன் தனது புல்லட் மூலமாக வந்து எங்களை சந்தித்தார்.

முதல் வேலையாக ஒரு அறை ஏற்பாடு செய்துக்கொண்டு ,பின் எங்கள் கேமராக்களை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டோம்.
சரவணபவனில் பொங்கல்,இட்லி உள்ளிட்ட காலை உணவுகளை கபளீகரம் செய்துவிட்டு ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டு வரதராஜஸ்வாமி கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.கோயில் வாசலிலேயே நண்பர்கள் தங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். கதவினோரம் வேடிக்கை பார்த்த ஒரு சுட்டிப்பெண்,பழைய காலத்து வீடு ஒன்று என்று கண்ணில் கிடைத்ததை எல்லாம் படம் பிடிக்க ஆரம்பித்து என்னையும் மூட் ஏற்றி விட்டனர் என் நண்பர்கள்.அப்படியே வழியில் சென்றுக்கொண்டிருந்த ஒரு ஒரு பெரியவரிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார் பீவி.தனது கைவண்டியில் தேங்காய் எண்ணெய் முதல் பல் துலக்கும் பேஸ்ட் வரை விற்கும் தொழில் செய்யும் அந்தப்பெரியவர் உற்சாகமாக தனது வண்டியை பற்றியும் அவரின் தொழிலைப்பற்றியும் விவரிக்க ஆரம்பித்து விட்டார்.
தெருப்புகைப்படக்கலையில் (Street photography)முன்பின் தெரியாத ஒருவரிடம் எப்படி பேச்சுக்கொடுத்து படம் பிடிக்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் தெளிவாக கற்றுக்கொண்டேன்.
சிறிது நேரத்திற்குப்பின் அந்தப்பெரியவரிடமிருந்து உருக்கமான ஒரு வழியனுப்பலுக்குப்பின் பிரம்மாண்டமான வரதராஜஸ்வாமி கோயிலின் கோபுரதினுள் நுழைந்தோம்.
நுழைந்த உடன் அழகான சிற்பங்கள் உடைய நூத்துக்கால் மண்டபம் எங்களை வரவேற்றது.
எத்தனை சிற்பங்கள்,எவ்வளவு வேலைப்பாடு.பார்க்கப்பார்க்க பிரமிப்பு அடங்கவில்லை.இத்தனை சிரத்தையும் கடமையுணர்ச்சியும் தமிழனிடமிருந்து என்று சென்றது என்று என்னால் யோசிக்காமல் இருக்க முடிஅயவில்லை. அங்கு படங்களை பிடித்துக்கொண்டே கோயிலுக்குள் நுழைந்தோம்.நூற்றுக்கணக்கான வருடங்கள பழமையான கோயிலின் வடிவமைப்பு,தூண்கள்,அதில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் என்று அனைத்தையும் ரசித்துக்கொண்டு படங்கள் பிடித்த படி வெளியே வந்தோம்.


வெளியே வந்து பிரசாதம் வாங்கி சாப்பிட்டு விட்டு சற்றே இளைப்பாறினோம்.அந்தச்சமையத்தில் சுற்றி இருந்த மக்களை எல்லாம் என் நண்பர்கள் படம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்படியாக கோயில் படப்பிடிப்பு முடித்துக்கொண்டு மத்தியானத்திற்கு மேல் பட்டு சேலைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுவோரை படம் பிடிக்க கிளம்பலாம் என்று முடிவு செய்தோம்.ஓட்டலுக்கு வந்து சற்றே பேட்டரி எல்லாம் சார்ஜ் செய்துவிட்டு ,சந்திரச்சூடன் எங்களை தனக்குத்தெரிந்த நெசவுத்தொழில் செய்யும் ஒரு நண்பர் வீட்டிற்கு அழைத்துச்சென்றார்.அங்கு எங்களை விட்டு விட்டு வேறொரு வேலை இருப்பதால் அவர் தனது வண்டியில் சென்னைக்குப்பயணப்பட்டார்.அங்கு சில மணி நேரங்கள் படம் பிடித்த பின் அங்கிருந்து துணிகளுக்கு சாயம் போடும் ஒரு வீட்டிற்கு சென்று படம் பிடிக்க ஆரம்பித்தோம்.இந்த இடங்களில் எங்களுக்கு அன்பு காட்டிய மக்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

சாயம் போடும் இடத்தில் படம் எடுத்துக்கொண்டிருக்கும் போதே மிகக்கடுமையான மழை பிடித்துக்கொண்டு விட்டது.
சற்று நேரம் பொறுத்திருந்துவிட்டு பின் மழை நின்றும் நிக்காமலும் ஒரு ஆட்டோவை தேடிப்பிடித்து ஓட்டல் வந்து சேர்ந்தோம்.அங்கிருந்து நேராக வேலூருக்கு பஸ் பிடித்து சென்றோம். பெங்களூரில் இருந்து பீவியுடன் வந்த நண்பர் அப்படியே பெங்களூர் சென்று விட நாங்கள் நால்வர் மட்டும் விழியனின் கல்யாண மண்டபத்திற்கு போய் சேர்ந்தோம்.அங்கே விழியனை சந்தித்து விட்டு பின் அவர் ஏற்பாடு செய்திருந்த ஏசி ஓட்டல் அறைக்கு வந்த்தோம்.அங்கே ஷைலஜா,சித்தார்த்,நிலா ரசிகன் போன்ற இணையத்தமிழ் எழுத்தாளர்கள்(முத்தமிழ் மன்ற கோஷ்டியாம்) சிலரை சந்தித்தேன்.
அடுத்த நாள் விடிகாலை கிளம்பி நாங்கள் வேலூர் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றோம்.
எதுக்கு என்றூ கேட்கிறீர்களா? படம் பிடிக்க தான்!! பின்ன என்ன காய்கறி வாங்கவா???
அங்கு என்ன எடுக்க இருக்கிறது என்கிறீர்களா??
மக்கள் தான்!! பீவி ஆரம்பித்து வைக்க பின் நாங்கள் அனைவரும் கட கடவென்று படம் பிடிக்க ஆரம்பித்துவிட்டோம்.

முதலில் சற்றே தயக்கத்துடன் எங்களை பார்க்க ஆரம்பித்த மக்கள் சிறிது நேரம் சென்ற பிறகு விரும்பி எங்களை அழைத்து எங்களை படம் பிடிக்கக்கேட்டுக்கொண்டார்கள்.எங்களின் படம் பிடிக்கும் மும்முரத்தில் நாங்கள் மூவரும் ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்துச்சென்றது கூட கவனிக்கவில்லை.
ஒன்று ஒன்றரை மணி நேர படப்பிடிப்புக்குப்பின் ஆட்டோ பிடித்து கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தோம்.அங்கே விழியனின் திருமணம் அமர்க்களமாக நடந்துக்கொண்டிருந்தது.அங்கே குழுமியிருந்த நண்பர்கள் எல்லோரையும் படம் பிடிப்பதிலேயே மீதி காலை செழவழிந்தது.
திருமணம் இனிதே நிறைவடைந்த பிறகு நாங்கள் அனைவரும் கிளம்பி வேலூர் கோட்டைக்குச்சென்றோம்.அங்கே உள்ளிருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நுழையும்போது காஞ்சிபுரம் கோயிலில் நுழையும்போது ஏற்பட்ட அதே பிரமிப்பு.இங்கேயும் உள்ளே ஒரு நூத்துக்கால் மண்டபம்.இங்கேயும் அழகழகாய் சிற்பங்கள்.ஆனால் இந்த கோயில் சில நூறு வருடங்கள் கழித்து கட்டப்பட்டதால் காஞ்சிபுரம் கோயிலை விட சிற்பங்கள் புதிதாக மூக்கும் முழியுமாக இருந்தன.தொடக்கத்தில் ரா (RAW)பார்மேட்டில் சிறிது நேரம் படம் பிடித்ததால் என் கேமராவில் மெமரி தீர்ந்துப்போய்விட்டது!! :-(
அதனால் பழைய படங்களை பார்த்துப்பார்த்து அழித்து அவ்வப்போது படம் எடுத்துக்கொண்டிருந்தேன்.
இதனாலேயே திருப்தியாக படம் எடுக்க இன்னொரு முறை கட்டாயம் வர வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்துவிட்டேன்.

கோயிலின் அழகை ரசித்த பிறகு வெளியில் வந்து அனைவரும் அகழியில் படகுச்சவாரி செய்தோம்.அதன் பின் ஓட்டலுக்கு திரும்பி வந்து மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு பஸ் பிடித்து திரும்ப வந்தேன்....
இப்படியாக இனிய நினைவுகளையும் ,கூடை கூடையாக போட்டோக்களையும் அள்ளித்தந்த எந்தன் பயணம் முடிவுக்கு வந்தது.
எனது வாழ்க்கையின் புகைப்படக்கலை ஓட்டத்தில் இந்தப்பயணம் ஒரு முக்கியமான திருப்பமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.. :)

பி.கு:பதிவில் சில படங்கள் மட்டுமே உள்ளன,பயணத்தில் எடுத்த மேலதிகப்படங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்

18 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

சூப்பரு....படங்களை இன்னொருதரம் பார்த்தேன். :)

SurveySan said...

juper. andha lady photo kalakkal.

adhukku keezha irukkara, andha aalum smartaa irukkaaru.

ஆயில்யன் said...

//இந்தியா வருவதற்கு முன்னாலேயே நண்பர்களுடன் பல இடங்களுக்கு சென்று நிறைய படம் பிடிக்க வேண்டும் என்று யோசித்திருக்கிறேன்.//

இது போன்ற ஆசைகள் பிறகு சந்தர்ப்ப சூழ்நிலைகளில் கரைந்து போகும் அனுபவங்கள் நிறைய பேருக்கு இருக்கும்!

உங்களுக்கு நன்றாக அமைந்துவிட்டது வாய்ப்பு!
எங்களையும் அச்த்திவிட்டீங்க!
(முடிஞ்சா வார வாரம் டூர் போயி நிறைய படங்களையும் அள்ளிக்கிட்டு வரலாம்..!! வாங்க!:)

Anonymous said...

//இத்தனை சிரத்தையும் கடமையுணர்ச்சியும் தமிழனிடமிருந்து என்று சென்றது என்று என்னால் யோசிக்காமல் இருக்க முடிஅயவில்லை//

இன்னும் போகவில்லை, நீங்கள் எவ்வளவு சிரத்தையோடு படங்களை பிடித்து தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.. தொடருங்கள்.

SathyaPriyan said...

அட்டகாசமான தொகுப்பு. காலையிலேயே flickr ல் புகைப்படங்களை பார்த்து விட்டேன். பார்க்கும் பொழுது நினைத்தேன் ஒரு பயணக் கட்டுரை வரும் என்று. நினைத்தது நடந்து விட்டது.

மந்த்ராலயம் பயணக் கட்டுரையும் முடிந்தால் இடுங்களேன்.

பிரேம்ஜி said...

படங்களும் பயணக்கட்டுரையும் அருமையாக உள்ளன. அடிக்கடி பயணம் செய்யுங்கள்.

கப்பி | Kappi said...

ஜூப்பரு :))

//இந்த இடங்களில் எங்களுக்கு அன்பு காட்டிய மக்களுக்கு//

ஆமா ஆமா..ஊரே அப்படித்தான்..என்னைப் பார்த்தே தெரிந்திருக்குமே..ஹி ஹி :)))

அடுத்த முறை எல்லா கோயில்களையும் புடிச்சுட்டு வந்துடுவோம் :))

ரசிகன் said...

//இப்படியாக இனிய நினைவுகளையும் ,கூடை கூடையாக போட்டோக்களையும் அள்ளித்தந்த எந்தன் பயணம் முடிவுக்கு வந்தது.
எனது வாழ்க்கையின் புகைப்படக்கலை ஓட்டத்தில் இந்தப்பயணம் ஒரு முக்கியமான திருப்பமாக இருக்கும் என்பதில் எள்ளலவும் சந்தேகமில்லை.. :)//

காமிராக் கவிஞரிடம் ,கலைப்படைப்புக்கள் மாட்டினா சும்மாவா விடுவாரு?:))))
அருமை...

கானா பிரபா said...

//முடிஞ்சா வார வாரம் டூர் போயி நிறைய படங்களையும் அள்ளிக்கிட்டு வரலாம்..!! // repeatuuuu ;)

jeevagv said...

நெசவர் படங்களும்,
நெஞ்சை நிமர்த்தும் சிற்பங்களும்,
நெகிழ்ச்சியைத் தந்தன,
வாழ்த்துக்கள்!

கோபிநாத் said...

படங்கள், பயணக்கட்டுரை கலக்கல் சி.வி ;))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றியோ நன்றி..

எங்க ஊரைக் கண்ணால பாத்த எபக்ட் கொடுத்ததுக்கு..

படங்களும் சூப்பர்.

ச.பிரேம்குமார் said...

நல்லதொரு பயணக்கட்டுரை சிவிஆர். அழகான படங்கள்.

பிரேம்குமார்
http://premkumarpec.blogspot.com

லக்கிலுக் said...

காஞ்சிபுரம் போய் உலகின் முதல் கற்கோயிலாம் கயிலாயநாதர் கோயிலுக்கு போகவில்லையா? அய்யகோ!!! என்ன கொடுமை இது??? :-(

வரதராஜ பெருமாள் கோயிலில் கல்லில் செதுக்கிய சங்கிலி சரம் தொங்குமே அதை படம் பிடிக்க வில்லையா? :-(

பரவாயில்லை. எடுத்த படங்கள் வரை நன்றாகவே வந்து இருக்கிறது!!

Arunkumar said...

picture perfect snaps.... too good CVR..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அடிக்கடி போயிட்டு வாங்க இப்படி.. நல்லபடங்கள் எடுத்து போடுங்க..

CVR said...

@மதுரயம்பதி
நன்றி தல.. ;)

@சர்வேசன்
அங்கிட்டு எடுத்த பல படங்கள நன்றாக வந்திருந்தன. படம் எடுக்க கேட்டுக்கொண்ட வேலூர் மக்களுக்கு நன்றிகள்.. ;)

@ஆயில்யன்
//(முடிஞ்சா வார வாரம் டூர் போயி நிறைய படங்களையும் அள்ளிக்கிட்டு வரலாம்..!! வாங்க!:)///
எனக்கும் அந்த ஆசைதான் ஆயில்ஸ் :D

@விக்னேஷ்வரன்
//இன்னும் போகவில்லை, நீங்கள் எவ்வளவு சிரத்தையோடு படங்களை பிடித்து தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.. தொடருங்கள்.////
என்ன இப்படி சொல்லிட்டீங்க!! நாம சும்மா நாலு படம் எடுத்தோமா சரியா இல்லைனா அழிச்சோமா,தப்பிதவறி ஏதாவது சரியா வந்தா வெளியே காமிச்சு சீன் போட்டமான்னு இருக்கோம்.
அவங்க எல்லாம் எவ்வளவு கலையார்வத்தோட,திறமையோட,உழைப்போட இதெல்லாம் செதுக்கியிருக்காங்க...ஒப்பீடே செய்ய முடியாதது,அவர்களின் உழைப்பு!! :-)

@சத்தியப்பிரியன்
//மந்த்ராலயம் பயணக் கட்டுரையும் முடிந்தால் இடுங்களேன்.///
அந்த பயணத்திலும் வெளியில் காட்டக்கூடிய அளவிற்கு ஒன்றிரண்டு படங்கள் இருக்கின்றன.நேரம் கிடைத்தால் அதையும் பதிவிடுகிறேன்.. :)

@பிரேம்ஜி
///படங்களும் பயணக்கட்டுரையும் அருமையாக உள்ளன. அடிக்கடி பயணம் செய்யுங்கள்.///
அடிக்கடி பயணம் அமைந்தால் எனக்கும் மகிழ்ச்சி தான்... அமைகிறதா என்று பார்ப்போம்.. :)

@கப்பி
//ஆமா ஆமா..ஊரே அப்படித்தான்..என்னைப் பார்த்தே தெரிந்திருக்குமே..ஹி ஹி :)))///

அது சரி!! :P

//அடுத்த முறை எல்லா கோயில்களையும் புடிச்சுட்டு வந்துடுவோம் :))///
எல்லா கோயிலையும் புடிக்க ஒரு முறை போராதுப்பா,இந்த கோயிலுக்கே முழுமையா படம் புடிச்ச திருப்தி இல்லை.நீ மொதல்ல ஊருக்கு வா ராசா,அப்புறம் அடிக்கடி வந்து எல்லா கோயில்களையும் கவர் பண்ணிரலாம்.. ;)

@ரசிகன்
வாழ்த்துக்களுக்கு நன்றி மாம்ஸ்! :-)

Divya said...

Gud post with an exlnt narration & nice pictures,

Pics hv come out really gud, gr8 work CVR:))

Related Posts Widget for Blogs by LinkWithin