நில் கவனி கேன்சர் - பாகம் 1

இவனுக்கு என்ன ஆச்சு?? எதுக்கு திடீர்னு கேன்சர் பத்தி எல்லாம் ஏதோ சொல்லிட்டு இருக்கான்னு பாக்கறீங்களா???

எனக்கு கேன்சரை பற்றி சின்ன வயசுல சினிமாக்களில் தான் பார்த்த நியாபகம்!! ஏதாச்சும் காதல் ஜோடி இருப்பாங்க,அவிங்க அநியாயத்துக்கு லவ் பண்ணிட்டு இருப்பாய்ங்க,ஒரு பிரச்சினையும் இருக்கறா மாதிரி தெரியாது,என்னடா ஒரு மேட்டரும் இல்லையேன்னு பாத்தா கரீட்டா இந்த கேன்சர் வியாதி வந்துரும்.ஒன்னு ஹீரோக்கு வரும் இல்லை ஹீரோயின்க்கு வரும்,இல்லை ரெண்டு பேருக்கும் வந்துரும்,அப்புறம் சால்வையை போத்திகிட்டு யேசுதாஸ் குரல்ல ரெண்டு பாட்டு போட்டுவிட்டு படத்தை முடிச்சிருவாய்ங்க!!

இது மாதிரி சினிமா கதாசிரியர்களுக்கு கற்பனை பஞ்சம் வரும்போது எல்லாம் கை கொடுப்பது இந்த கேன்சர் தான்!! அது தவிர எனக்கு பெருசா தெரியாது!! பயங்கர வியாதி,வந்தா சிகிச்சை எல்லாம் கஷ்டம் அப்படின்னு மட்டும் தான் தெரியும். அதுக்கு மேல பெரிய அளவுக்கு விழிப்புணர்வு வந்ததுன்னா அது இந்த பதிவை பார்த்த அப்புறம் தான். மார்பகப்புற்று நோய் வந்து அந்த அம்மா என்ன என்ன சிகிச்சை எடுத்துக்கிட்டாங்க,என்ன என்ன பக்க விளைவுகள்/கஷ்டங்கள் எல்லாம் பட்டாங்க அப்படின்னு கூட இருந்து பாத்தா மாதிரி ஒரு உணர்வு!! அப்போ கூட நாம் ஏதோ உடைக்க முடியாத கோட்டைல இருக்கறா மாதிரியும,் நமக்கோ நம்மல சுத்தி இருக்கறவங்களுக்கோ கேன்சர் எல்லாம் வராது அப்படின்னு ஒரு குருட்டு நம்பிக்கை இருந்துச்சு.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்னுடைய நண்பர் ஒருவர் தனது தாய்க்கு புற்றுநோய் இருப்பதாக சொன்ன போது தான் எனக்கு உறைத்தது.அவரின் கஷ்டம் கேட்டு என் மனது வருத்தப்படும் போது தான் நாம் ஒன்னும் எட்டாத கோட்டையில் இல்லை,இவரை போலவே எவரும் இது போன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படலாம் என்று என் மனதில் தோன்றியது.இதை பற்றி என் அம்மாவிடம் பேசிய போது தான்,அவர் வேலை செய்யும் இடத்திலும் அவரின் மேலாளருக்கும் இந்த நோய் வந்ததாக கூறினார்.பிறகு என்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு நண்பரின் ஒன்றரை வயது குழந்தை இந்த நோய்க்கு இறையானதை கேள்வி பட்டேன். இது தவிர சுற்றமும் நட்பும் என்று பல இடங்களில் அங்கே இங்கே இந்த நோயின் பாதிப்பை பார்த்துவிட்டு ,நாம் நினைப்பதை விட அதிகமாகவே நம்மை சூழ்ந்துள்ளது என்று புரிந்துக்கொண்டேன். அதற்கு பின் இதை பற்றி அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த போது ,இந்த நோய் பற்றி நமக்கு பெரிதாக ஒன்றுமே தெரியாது என்று இடித்தது.

ஒரு கொடிய எதிரி நம்மை வீட்டை சுற்றி குழுமியிருக்கும் போது அவனை பற்றி தெரிந்துக்கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டிருப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்று அப்பொழுது பட்டது.உடனே இந்த நோய் பற்றிய அடிப்படை அறிவையும் விழிப்புணர்வையும் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்கி விட்டேன்.அப்பொழுதுதான் நான் பார்த்து படித்து ஒரு தொடரின் மூலம் உங்களிடமும் அதை பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.சர்வேசனின் இந்த பதிவை பார்த்த பின் என் உந்துதல் உறுதியானது!


கேன்சரின் காரணங்கள் என்னவென்று தெளிவாக இது வரை மருத்துவர்களால் கூற முடியாவிட்டாலும்,என்னை பொருத்தவரை கேன்சரின் பாதிப்புக்குகளுக்கு முக்கிய காரணம் விழிப்புணர்வுயின்மை என்றே சொல்லுவேன் . தொடக்கத்திலேயே கண்டுபிடித்தால் இதன் பாதிப்புகளை பெருமளவு குறைக்கலாம்,சிகிச்சையிலும்நிறைய பலன்களை பெறலாம். அதுவுமில்லாமல் நம் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் கவனமாக இருப்பதன் மூலம் இந்த நோய் வருவதை தவிர்க்கலாம்.நமது கவனமின்மையால் முற்றிப்போன பிறகு கண்டுபிடித்துவிட்டு மல்லுக்கட்டும் நிலையை தவிர்த்தாலே,இந்த நோயின் கொடூரத்தை எதிர்க்கொள்ள பெருமளவு வசதியாக இருக்கும்!
அதற்கான விழுப்புணர்வையும்,அறிமுக அறிவையும் இந்த தொடர் உங்களுக்கு அளித்தால்,நான் இதை எழுதியதற்கான பலனை பெற்றதாக உணர்வேன்.

சரி சரி!! மொக்கை போட்டது போதும்,தொபுகடீர்னு மேட்டருல குதிக்கலலாமா??? இந்த கேன்சர்னா என்னபா மொதல்ல??? இரத்த புற்றுநோய்,மார்பக புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய் இப்படி உடம்புல ஒரு இன்ச் விடாம எங்கிட்டு பாத்தாலும் வருது??அப்படி என்னதான் நடக்குது ஒடம்புல??? ஏன் அதை குணப்படுத்த இவ்வளவு கஷ்டமா இருக்கு??
நம்ம உடம்பு அப்படின்னு எடுத்துக்கிட்டா என்னன்ன இருக்கு?? கை,காலு,கண்ணு,மூக்கு....உடம்புக்குள்ளாரன்னு பாத்தா இதயம்,மூளை,நுரையீரல்,சிறுநீரகம் அப்படின்னு எத்தனையோ உறுப்புகளை பார்க்கிறோம்.ஆனா அடிப்படையா நம்ம உடம்புல எல்லாமே உயிரணுக்களால(cells) ஆனது. எலும்பு சதை ரத்தம் எல்லாமே கடைசியா பாத்தீங்கன்ன உயிரணுக்களால ஆனதுதான். ஆனா ஒவ்வொறு உறுப்புக்கும் உயிரணுக்கள் வித்தியாசமா இருக்கும்.அதாவது நுரையீரல்ல இருக்கற உயிரணுக்கள் மூளையில இருக்கற உயிரணுக்களை விட சற்றே மாறுபட்டு இருக்கும்.இந்த உயிரணுக்கள் பல கோடி எண்ணிக்கைல நம்ம உடம்பு முழுக்க இருக்கு.இவைகள் தினமும் நம் உடலில் உருவாகிக்கொண்டும் அழிந்துக்கொண்டும் இருக்கின்றன்.ஒவ்வொரு உயிரணுவும் இப்படி தான் இருக்கனும் அப்படின்னு ஒரு நியதி இருக்கு.அது நமது மரபணுவை(Genes) பொருத்து அமையும்.அதுக்கு ஏத்தா மாதிரி தான் ஒவ்வொரு உயிரணுவும் உருவாகிட்டு இருக்கும்.


இது மாதிரி ஒழுங்கா உருவாகிட்டு அழிஞ்சிகிட்டு இருந்தா பிரச்சினையே இல்ல. ஆனா சில சமயம் இந்த மாதிரி நியதியை விட்டு சில உயிரணுக்கள் வித்தியாசமாக உருவாக ஆரம்பிக்கும்.அது மட்டும் இல்லாமல் தன்னை போலவே வித்தியாசமான உயிரணுக்களை அசுர வேகத்தில் உருவாக்கித்தள்ளிக்கொண்டே போகும்.
அட!!அது பாட்டுக்கு உருவாக்கிட்டு போகட்டும்,அதனால என்ன?? இதனால லேசா அங்கிட்டு இங்கிட்டு வீங்கி வேணா போகலாம்,இதனால உயிருக்கு ஆபத்து வர அளவுக்கு அப்படி என்ன பிரச்சினை அப்படின்னு கேக்கறீங்களா???
அடுத்த பகுதியில சொல்றேன் பொறுங்க! :-)

நில் கவனி கேன்சர் - பாகம் 2

நில் கவனி கேன்சர் - பாகம் 3

நில் கவனி கேன்சர் - பாகம் 4 (நிறைவு பாகம்)

28 comments:

கோபிநாத் said...

நல்ல பதிவு...நல்ல முயற்சி..

பாராட்டுக்கள் சிவீஆர் ;)

Dreamzz said...

மீண்டும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை! உபயோகமுள்ளதா இப்படி பல விஷயங்களை எழுதும் உங்களுக்கு நன்றிகள் :)

Dreamzz said...

நல்ல முயற்சி.. சீக்கிரன் நெக்ஸ்ட் பதிவும் போடுங்கப்பு!

துளசி கோபால் said...

மொழி அலங்காரமில்லாமல் எளிய சொற்களால் சொல்வது ரொம்பப் பிடிச்சிருக்கு.

பாராட்டுகள்.
பயன் உள்ள பதிவு.

கப்பி | Kappi said...

அருமையான முயற்சி! வாழ்த்துக்கள்!!

அனுசுயா said...

நிஜமாலுமே உடயோகமுள்ள பகுதி. நம்ம குடும்பத்துல ஒருத்தருக்கு வரும் வரைக்கும் யாருக்கும் அதை பத்தி அக்கறை இருக்காது. அதே சமயம் ஆரம்பத்துலயே கண்டுபிடிச்சா அதை குணப்படுத்தும் சாத்தியமும் அதிகம். நல்ல பதிவு. தொடருங்கள்.

Anonymous said...

//நல்ல முயற்சி.. சீக்கிரன் நெக்ஸ்ட் பதிவும் போடுங்கப்பு!//

ரிப்பீட்டேய்.....

SurveySan said...

good start.

சுலபமா இருக்கு படிக்க. வாழ்த்துக்கள்.
கலக்குங்க.

இந்த மாதிரி பதிவுகள் தான் இன்றைய தேவை.

சாம் தாத்தா said...

"அறிவுச்சீவியார்"-னு நான் சரியாத்தான் சொல்லியிருக்கேன்.

"துளசி கோபாலை" நான் வழிமொழியறேன்.

இது எனக்கும் வர வாய்ப்பிருக்குடா பேராண்டி.

(பின்னே இப்ப்டி ஊதித் தள்ளினா என்னாகுமாம்.)

ஷாலினி said...

விழிப்புணர்ச்சி ஊட்டும் பதிவு :)
மிகவும் உபயோகமான தகவல்கள் எளிதான முறையில்..
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் CVR!

புதுமை பித்தன் said...

ஐயா தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் நல்ல விசயங்களை தெரிவித்தமைக்கு நன்றி நன்றி நன்றி! ஆனா சீக்கிரம் அடுத்த பதிப்ப வெளியிடுஙக இங்கயும் ஒரு மெகா சீரியலா தாங்காது சாமி.

தொடரட்டும் உஙக்ள் ஆய்வு

ஜே கே | J K said...

நல்ல முயற்சி...

வாழ்த்துக்கள் cvr.

கைப்புள்ள said...

நல்ல முயற்சி. எளிய மொழியில் எல்லாருக்கும் புரியற மாதிரி எழுதிருக்கீங்க. தொடருங்கள்.

Anonymous said...

கேன்சர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் முயற்சிக்கு எனது பாரட்டுக்கள். மிக எளிமையாக, புரிந்து கொள்வதற்கு வசதியாக எழுதுவதற்கு மிக்க நன்றி. அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.

-அரசு

இராம்/Raam said...

CVR,

நல்ல தொடக்கம்..... அடுத்த பதிவுக்கு ஆவலுடன் வெயிட்டிங்... :)

SathyaPriyan said...

//
SurveySan said...
இந்த மாதிரி பதிவுகள் தான் இன்றைய தேவை.
//

வழி மொழிகிறேன்.

தேவையான நேரத்தில் தேவையான பதிவு. இந்நோயை பொன்றே இந்நோயின் சிகிச்சை கூட அவ்வளவு எளிதானதல்ல. ரணம் நிறைந்தது.

அடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

நந்து f/o நிலா said...

நல்ல முயற்சி. எவ்வளவு படித்தாலும் கேள்விப்பட்டாலும் வராத பயம் நெருங்கிய யாராவது ஒருவருக்கு கேன்சர் வரும்போதுதான் வருகிறது.

அதுவும் குழந்தைகள் கேன்சர் வார்டில் தலையில் முடியெல்லாம் கொட்டி கையில் குளுக்கோஸ் ஏற்றும் கட்டோடு ஓடி விளையாடும் குழந்தைகளை மட்டும் பார்த்துவிட்டால்.... ம்ஹூம்

உண்மையிலேயே அருமையான முயற்சி CVR. தொடருங்கள்

CVR said...

@கோபிநாத்
வாங்க அண்ணாச்சி! பாராட்டுக்களுக்கு மிக நன்றி

@ட்ரீம்ஸ்
நிச்சயம் ஒன்னு ரெண்டு நாளைக்கு ஒரு பதிவு போட்டுரலாம்னு இருக்கேன் ட்ரீம்ஸ்
வாழ்த்துக்களுக்கு நன்றி! :-)

@துளசி டீச்சர்
வாங்க டீச்சர்!
மோதிரக்கையால் குட்டுப்படுவதே பெருமை என்று சொல்வார்கள்,நீங்கள் தலை மேல் கை வைத்து தடவி குடுக்கறீங்க!!
ரொம்ப நன்றி டீச்சர்! :-)

@கப்பி பய
வாப்பா!!ஆதரவுக்கு மிக்க நன்றி! :-)

@அனுசுயா
//நம்ம குடும்பத்துல ஒருத்தருக்கு வரும் வரைக்கும் யாருக்கும் அதை பத்தி அக்கறை இருக்காது. அதே சமயம் ஆரம்பத்துலயே கண்டுபிடிச்சா அதை குணப்படுத்தும் சாத்தியமும் அதிகம்.////
சரியா சொன்னீங்க மேடம்!!
இந்த தொடர் எழுதுவதற்கான உந்துதலே அதான்!!
வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!! :-)

@நவன்
//Blogger நவன் said...

//நல்ல முயற்சி.. சீக்கிரன் நெக்ஸ்ட் பதிவும் போடுங்கப்பு!//

ரிப்பீட்டேய்.....////

வாங்க நவன்!
தங்கள் வரவு நல்வரவாகுக!! :-)

CVR said...

@சர்வேசன்
//சுலபமா இருக்கு படிக்க. வாழ்த்துக்கள்.
கலக்குங்க.

இந்த மாதிரி பதிவுகள் தான் இன்றைய தேவை.///
உங்கள் பதிவு தான் இதை நான் எழுதுவதற்கு மேலும் உந்துதல் அளித்தது!!
அதனால் உங்களுக்கு எனது சிறப்பு நன்றிகள்

@சாம் தாத்தா
//இது எனக்கும் வர வாய்ப்பிருக்குடா பேராண்டி.

(பின்னே இப்ப்டி ஊதித் தள்ளினா என்னாகுமாம்.)///
அய்யோ தாத்தா!!
தயவு செஞ்சு புகை பிடிக்கறது குறைக்க பாருங்க!! முடிஞ்சா முழுசா நிறுத்திருங்க!! இது உங்க பேராண்டி கிட்ட இருந்து ஒரு கோரிக்கை!! :-)

@ஷாலினி
//நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் CVR!///
வாங்க ஷாலினி!
மற்ற பகுதிகளையும் மறக்காம பாருங்க.

@புதுமை பித்தன்
//ஐயா தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் நல்ல விசயங்களை தெரிவித்தமைக்கு நன்றி நன்றி நன்றி! ஆனா சீக்கிரம் அடுத்த பதிப்ப வெளியிடுஙக இங்கயும் ஒரு மெகா சீரியலா தாங்காது சாமி.///
வாங்க அண்ணாச்சி!!
ஒன்றிரண்டு நாட்களுக்கு ஒரு பதிவு போட்டு விட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்,கவலை படாதீர்கள்! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)

@ஜேகே
வாங்க தல! மற்ற பகுதிகளையும் கண்டிப்பா பாருங்க! :-)

CVR said...

@கைப்புள்ள
நன்றி அண்ணாச்சி!! தங்களின் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி! :-)

@அரசு
//மிக எளிமையாக, புரிந்து கொள்வதற்கு வசதியாக எழுதுவதற்கு மிக்க நன்றி. அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.///

இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் போட்டு விடலாம்!! வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி! :-)

@இராம்
வாங்க தல!!
//அடுத்த பதிவுக்கு ஆவலுடன் வெயிட்டிங்... :)///
சீக்கிரமே போட்டுருவோம்!! :-)

@சத்தியப்பிரியன்
வாங்க பாஸ்
//தேவையான நேரத்தில் தேவையான பதிவு. இந்நோயை பொன்றே இந்நோயின் சிகிச்சை கூட அவ்வளவு எளிதானதல்ல. ரணம் நிறைந்தது. ///
மிகச்சரியாக சொன்னீர்கள்!! வலி,அசௌகரியங்கள் தவிர காசும் கண்டபடி செலவாகும்!!
வருமுன் காப்பது, இந்த நோயை பொருத்த வரை மிகவும் இன்றியமையாத விஷயம்!!

@நந்து f/o நிலா
//எவ்வளவு படித்தாலும் கேள்விப்பட்டாலும் வராத பயம் நெருங்கிய யாராவது ஒருவருக்கு கேன்சர் வரும்போதுதான் வருகிறது.
///
அதே அதே!

//அதுவும் குழந்தைகள் கேன்சர் வார்டில் தலையில் முடியெல்லாம் கொட்டி கையில் குளுக்கோஸ் ஏற்றும் கட்டோடு ஓடி விளையாடும் குழந்தைகளை மட்டும் பார்த்துவிட்டால்.... ம்ஹூம்///
படிக்கும்போதே மனது கனக்கிறது!! :-(
ஒரு முறை எக்மோர் குழந்தைகள் நல மருத்துவமனை சென்று அங்கிருக்கும் குழதைகளை பார்த்துவிட்டு மிகவும் கஷ்டமாவிட்டது !!
நம்மால் தவிர்க்க முடிந்தவற்றை முடிந்த வரை தவிர்ப்போம்,தவிர்க்கமுடியாத வலிகள் ஏகப்பட்டது இருக்கிறது இந்த உலகில்!! :-)

Divya said...

எளிய முறையில் விளக்கங்கள் அளித்திருப்பது பாராட்டத்தக்கது!!
உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் சிவிஆர்!

G.Ragavan said...

மிகவும் தேவையான தகவல்களை நீங்கள் மிகவும் அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். உடல் நலம் என்பது பெரும்பேறு. எல்லாருக்கும் அப்பேறு வாய்ப்பதில்லை. அது நம்முடைய அலட்சியத்தினால் என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. சிறுவயதிலிருந்தே சீர்மையான உணவு..சீரான உடற்பயிற்சி என்று இருப்பதே நன்று.

புற்றுநோய் என்று இதற்குப் பெயர். புற்று வளரும் பொழுது கிடுகிடுவென்று வளரும். அதனால்தானோ என்னவோ அப்பெயரை வைத்தார்கள். நீங்கள் அடுத்து சொல்லப் போகும் தகவலுக்காகக் காத்திருக்கிறேன்.

நிவிஷா..... said...

Nice post. Usefull.
Looking forward to the next cvr

natpodu
nivisha

பத்மா அர்விந்த் said...

இன்று புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அமெரிக்காவில் கருதப்படுகிறது. எளிமையாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். நுரையீரல் புற்றுநோய் குறித்து இங்கே; http://reallogic.org/thenthuli/?p=259

CVR said...

@திவ்யா
//உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் சிவிஆர்!///
மிக்க நன்றி திவ்யா

@ஜிரா
வாங்க அண்ணாச்சி
//உடல் நலம் என்பது பெரும்பேறு. எல்லாருக்கும் அப்பேறு வாய்ப்பதில்லை. அது நம்முடைய அலட்சியத்தினால் என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. சிறுவயதிலிருந்தே சீர்மையான உணவு..சீரான உடற்பயிற்சி என்று இருப்பதே நன்று.////

முற்றிலும் சரி!!நாம் எவ்வளவு அதிர்ஷ்டமானவர்கள் என்று ஏதாவது நோய் வரும்வரை நமக்கு தெரிவதில்லை.இறைவனின் பரிசான உடல்நலத்தை கவனத்துடன் பேணிக்காப்பது நமது பொறுப்பு! :-)

@நிவிஷா
//Looking forward to the next cvr//
Thanks Nivisha.

@பத்மா அர்ரவிந்த்
//இன்று புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அமெரிக்காவில் கருதப்படுகிறது. எளிமையாக எழுதி இருக்கிறீர்கள்.///
அட!! சரியான நாளில் தான் பதிவை போட்டிருக்கிறேன் போல!! :-)
வாழ்த்துக்களுக்கு நன்றி பத்மா மேடம்! :-)

delphine said...

good start CVR. நான் புற்ரு நோய் ஆஸ்பத்திரியில் வேலை செய்தாலும் என்னால் உங்களை மாதிரி எழுத இயலவில்லை. நல்ல முயற்சி... all the best!

கையேடு said...

நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் திரு.CVR.
தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

CVR said...

@Delphine
//நான் புற்ரு நோய் ஆஸ்பத்திரியில் வேலை செய்தாலும் என்னால் உங்களை மாதிரி எழுத இயலவில்லை.///

சூப்பரு!!தங்களின் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி!! இனிமே ஏதாவது சந்தேகம் என்றால் உங்களை கேட்டு விடலாம் போல இருக்கிறதே?? :-)
தொடரின் மற்ற பகுதிகளுக்கும் வந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்!!
நன்றி! :-)

@கையேடு!
வாங்க கையேடு! திரு.CVR எல்லாம் எதுக்கு?? சாதாரணமா CVR - என்றே கூப்பிடலாம்!!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)

Related Posts Widget for Blogs by LinkWithin