வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7

போன பதிவுல வேற்று கிரக உயிர்கள் கூட தொடர்பு கொள்ள முடியுமா என்பதை பற்றியும்,அவை சம்பந்தமான மனிதனின் நம்பிக்கைகளையும் பார்த்தோம். பதிவுல கடைசில

"எல!!! வேற்றுகிரக மக்கள் எங்க இருக்காய்ங்கன்னு இங்கேயும் அங்கேயும் பாத்துகிட்டு இருக்க?? அவிங்க ஏற்கெனெவே நம்ம உலகத்துல வந்துட்டாய்ங்கப்பா!!"
என்று சில பேர் நம்புகிறார்கள் என்று கூட சொல்லி இருந்தேன். இன்றைக்கு ஏன் அப்படி ஒரு நம்பிக்கை மக்களிடையே வந்தது என்று பார்க்கலாம்.
பறக்கும் தட்டுக்கள் அல்லது அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை் (UFO - Unidentified flying objects) பற்றி நாம் போன பகுதியிலேயே பார்த்தோம். நாம் வானத்தில் பல விதமான பொருட்களை பார்க்கிறோம்.பறவைகள்,பல விதமான விமானங்கள் என நமக்கு அடையாளம் தெரியக்கூடிய பல பொருட்கள் உண்டு. ஆனால் நீங்கள் என்றைக்காவது வானத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது என்னவென்றே புரியாத மாதிரி ஏதாவது பொருளை பார்த்திருக்கிறீர்களா?? அது அங்குமிங்கும் ஆட்டம் போடும் ஒளி பிழம்பாக இருக்கலாம் ,அல்லது பறக்கும் தட்டு போன்ற விசித்திரமான விண்ணூர்தியாக இருக்கலாம். இது போல் நம்மால் அடையாளம் காண முடியாத பறக்கும் பொருட்களை தான் UFO என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். வேற்று கிரக ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்குமே இந்த UFO-க்கள தான்் முக்கியமான தடையங்கள்.

இவை இன்று நேற்று அல்லாமல் பல காலங்களாகவே மனிதர்களால் கவனிக்கப்பட்டு வந்திருக்கிறது. மாவீரன் அலெக்சாந்தர் காலத்திலேயே (கி.மு 0329) அவரின் படைகளை அடையாளம் காணமுடியாத ஒரு பறக்கும் ஒளிப்பேழை விளையாட்டு காட்டி இருப்பதாக ஒரு வரலாற்று ஆசிரியர் குறிப்பெடுத்து இருக்கிறார். நாம் நினைத்துக்கொண்டிருப்பது போல் இல்லாமல் இது போன்ற பறக்கும் தட்டுக்கள் அமெரிக்காவில் மட்டும் இல்லாமல் உலகெங்கெங்கிலும் மக்களால் பார்த்ததாக கூறப்படுகிறது. அந்த பட்டியலை நீங்கள் விக்கியின் இந்த இணைப்பை சுட்டி தெரிந்து கொள்ளலாம்.உலகெங்கிலும் வேற்று கிரக உயிர் தொடர்பான ஆதாரங்களின் கிடங்கு என்று கூறிக்கொண்டே ஒரு இனையதளம் இயங்கி வருகிறது. இந்த தளத்தில் உள்ள விஷயங்களை படிக்க வேண்டும் என்றாலே பல நாட்கள் பிடிக்கும் போல இருக்கிறது. இது தவிர இணையத்தில் கூகிலாண்டவரை துணைக்கு அழைத்தால் நாளாபுறங்களில் இருந்தும் தகவல்கள் வந்து கொட்டுகின்றன.எதை எடுப்பது ,எதை விடுப்பது என்றே தெரியவில்லை. சுத்தமாக உண்மையே இல்லாமல் இவ்வளவு பேர் குழம்பி போவார்களா?? என்று என் மனம் கேள்வி கேட்டு ,விடை தெரியாமல் முழிக்கிறது.

இவை பற்றி எல்லாம் அமெரிக்க அரசு சட்டை செய்வதே இல்லை (மற்ற அரசுகளை எல்லாம் மக்கள் கேள்வி கேட்க லஞ்சம் , ஏமாற்றுவேலை போன்ற விஷயங்கள் இருப்பதால் யாரும் இது பற்றி கவலை கொள்வதில்லை).
அமெரிக்க அரசை கேட்டால் விண்ணுயிர் எல்லாம் சும்மா உங்க "மனப்பிராந்தி", லைட்டா குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்துக்கோங்க.நாளைக்கு காலையில எழுந்தா எல்லாம் சரியாகிடும்,என்று சொல்றாங்க. இதெல்லாம் ஒரு விதமான கூட்டு பைத்தியக்காரத்தனம் (Mass hysteria) என்றும்,இவர்களின் ஆதாரங்கள் எல்லாம் ஜோடிக்கப்பட்டவை என்று சொல்கிர்கள்.
ஆனா வேற்று கிரக ஆர்வலர்களின் கூற்று என்னவென்றால், வேற்று கிரக உயிர் பற்றி எல்லாம் அரசாங்கத்துக்கு நல்லா தெரியும். அதுவுமில்லாமல் அவர்கள் விண்ணூர்திகள் எல்லாம் கூட அரசாங்கத்தின் வசம் உள்ளது. அது தவிர வேற்று கிரக உயிர்களோடு கூட அவை பேச்சு நடத்திக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் மக்கள் பீதி கொள்வார்கள் என்பதால் அரசாங்கம் மறைத்து வருகிறது. அதுவுமில்லாமல் விண்ணுயிர் களுடன் நாம் முதன்முதலில் தொடர்பு கொண்டது பனிப்போர் நடந்து கொண்டிருந்த சமயம். அந்த சமயம் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் எதிரி நாடுகள் இதை எப்படியாவது சாதகமாக்கிகொள்ள முயலும் என்பதால்,அந்த சமயத்தின் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அரசாங்கம் பல பொய்களை சொல்ல வேண்டி இருந்தது. பிறகு தான் சொன்ன பொய்களை மறைக்கும் பொருட்டு மேலும் பல பொய்கள் சொல்லி இந்த விஷயத்தையே ஒரு அதி ரகசிய மேட்டராக ஆக்கிவிட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

"ஒன்னுமே புரியல ....ஒலகத்துல......" என்ற பாட்டுதான் ஞாபகம் வருகிறது.

சரி இந்த பறக்கும் தட்டு கதைகள் பல இருக்கின்றனவே,இவையெல்லாம் எப்பொழுது இவ்வளவு பெரிய தலைப்பாக உருவெடுத்தது என்று பார்க்கலாமா??
நான் முன்னமே சசொன்னா மாதிரி பல சமயங்களிலும் மக்கள் இந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை பார்த்தாக கூறியிருக்கிறார்கள். ஆனால் 1947-இல் நடந்த இரு சம்பவங்கள் இந்த வேற்று கிரக உயிர் பற்றி மக்களிடையே பெறும் அர்வத்தை ஏற்படுத்திவிட்டு சென்றன. 1947-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி கென்னெத் ஆர்னால்ட் எனும் அமெரிக்க தொழிலதிபர் தன் சொந்த விமானத்துல வாஷிங்டன் அருகில் மவுண்ட் ரைனியர் (Mount rainier) எனும் இடத்தில் பறந்துகிட்டு இருந்தாராம் . அப்போ அவரு நல்லா ஜெகஜ்ஜோதியா ஒரு 9 தட்டுக்கள் மாதிரியான விண்ணூர்திகள் மவுண்ட் ரைனியர்ல இருந்து மவுண்ட் ஆடம்ஸ் நோக்கி பறந்துகிட்டு இருந்தத பார்த்தாராம். மணிக்கு 1200 மைல் வேகத்தோட பறந்திருக்கும் அப்படின்னு குத்துமதிப்பா தோணிச்சாம்.அதை அவரு செய்தியாளார்களிடம் தெரிவிச்சாரு. அது அந்த சமயத்துல பெறும் பரபரப்பை ஏற்படுத்திச்சு. இதை பத்திரிக்கைல படிச்சுட்டு உலகத்தின் எல்லா மூலையில இருந்தும் மக்கள் ,நானும் இதே மாதிரியான ஊர்திகளை பாத்திருக்கேன் என்று கொஞ்ச கொஞ்சமா சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. அட எனக்கு தான் ஏதோ தோணிச்சுன்னூ நெனைச்சேன்,எங்க வெளியில் சொன்னால் எல்லோரும் கேலி பண்ணுவாங்கன்னு சொல்லாம இருந்தேன். இப்போ நீங்க சொன்ன அப்புறம் எனக்கும் சொல்லனும்னு தோணிச்சு,அப்படின்னு அமெரிகாவுல பல பகுதிகளீல் இருந்தும் ,ஒன்னு ஒன்னா நிறைய பேரு தன்னுடைய அனுபவங்களை சொல்ல அரம்பிச்சாங்க.

இந்த மாதிரியான சமயத்துல தான் நான் சொல்ல போகிற இரண்டாவது சம்பவம் நடந்தது. வேற்று கிரக உயிர் சம்பந்தப்பட்ட விஷயங்களிலேயே மிக பிரபலமானதும்,மிக சுவாரஸ்யமானதுமான மேட்டர் இது.
அமெரிக்காவில் ந்யூ மெக்சிகோ(New Mexico) எனும் மாநிலத்தில் ராஸ்வெல்(Roswell) எனும் ஊர் உண்டு. ஒரே பாலைவனம் நிறைந்த பிரதேசம் இதுன்னு சொல்லலாம். பெரிதாக ஏதும் செடி கொடிகள் ,காடுகள் ஏதும் இல்லாத வெறுமையான பிரதேசம் அது.இந்த இடத்துல மாக் ப்ரேஸல் (Mack Brazel) என்பவர் ஒரு பண்ணை நடத்திக்கொண்டு வந்திருந்தார். ஜூலை 2ஆம் தேதியிலிருந்து 4ஆம் தேதிகளில் அந்த பகுதிகளில் நல்ல புயல் மழை இருந்து வந்ததாம்,அதனால் 4ஆம் தேதி இரவு பெருத்த வெடிச்சத்தத்தை அவர் கேட்டிருக்கிறார். அதனால் அடுத்த நாள் காலை என்ன நடந்தது என்று அறிய தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பியிருக்கிரார் (அவரின் பண்ணை 8000 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது்மிகமிகம). அப்பொழுது அவர் தன் வீட்டிலிருந்து 7-8 மைல்கள் தள்ளி ஒரு விண்ணூர்தி விழுந்து நொறுங்கி கிடப்பதை கண்டார். அவரின் பண்ணையில் பல முறை வானிலை ஆராய்ச்சி பலூன்கள் விபத்துக்குள்ளாகியிருப்பதை அவர் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த விண்ணூர்தி சற்றே வித்தியாசமாக அவருக்கு பட்டது.
உடனே பத்து மைல் தொலவில் இருக்கும் தன் பக்கத்து(?!) பண்ணைக்காரர் லொரெட்டா ப்ராக்டர் (Loretta Proctor)என்பவர் வீட்டிற்கு தான் கண்டுபிடித்த பொருட்களை எடுத்து போட்டுக்கொண்டு போயிருக்கிறார். அவர் கொண்டு வந்த பொருட்கள்் சற்றே வித்தியாசமாக இருந்ததாம். அதாவது பார்ப்பதற்கு சாம்பல் நிறத்திலான சாதாரண உலோகப்பொருள் போன்று்று இருந்ததாம். தொட்டுப்பார்த்தால் மரமோ அல்லது பிளாஸ்டிக் பொருள் போல் லேசாக இருந்ததாம். அந்த பொருளை வெட்டவோ,உடைக்கவோ முடியவில்லை. அந்த பொருளை கசக்கினா திரும்பவும் விரிஞ்சுக்குது,கசக்கின சுருக்கம் எதுவும் தெரியல்ல!!
இதெல்லாம் பாத்துட்டு அவிங்க செம டென்சன் ஆயிட்டாய்ங்க!!
கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான நம்ம தொழிலதிபர் கென்னெத் அர்னால்ட ஏதோ பறக்கும் தட்டு பார்த்தேன்னு சொன்னாருல!! அதனால நீ பேசாம அதிகாரிகள் கிட்ட இதை ஒப்படைச்சிடு. இது பத்தி ஏதாவது தகவல் கொடுத்தா ஏதோ பரிசு தரேன்னு வேற சொன்னாங்க அப்படின்னு பிராக்டர் நம்ம ப்ரேசலை உசுப்பேத்தி விட்டுட்டாரு. சரி இவரு சொல்லுறதும் சரிதான் அப்படின்னு நம்ம ப்ரேசல் அடுத்த நாள் 6ஆம் தேதி ராஸ்வெல் நகரத்துக்கு பயணப்படுறாரு.
அங்கே என்ன ஆச்சுன்னா...........

இது கொஞ்சம் பெரிய கதை மக்கா. முழுசா என்ன ஆச்சுன்னு பார்த்து,இரண்டு பக்கமும் என்ன சொல்லுறாங்கன்னு கேட்டு,இந்த சம்பவத்துனால என்ன எல்லாம் ஆச்சு,இது அடிப்படையா வெச்சு வேற்று கிரக உயிர்கள் பற்றிய நிறைய விஷயங்கள் எல்லாம் பாக்கனும்.அதெல்லாம் எழுத ஆரம்பிச்சா என் பதிவும் உண்மை தமிழன் பதிவு மாதிரி ஆகிடும் (அண்ணாச்சி கோச்சிக்காதிங்க!! :-))). அதனால கதையை அடுத்த பதிவுல தொடருகிறேன். அடுத்த பதிவு சீக்கிரமே போட்டுருவேன்,கவலை படாதீங்க!!
வரட்டா?? ;-)
--ராஸ்வெல் கதை தொடரும்
References:
http://en.wikipedia.org/wiki/Unidentified_flying_object
http://www.roswellproof.com/RoswellSummary2.html
http://www.crystalinks.com/roswell.html
http://ufo.whipnet.org/roswell/

படங்கள்:
http://en.wikipedia.org/wiki/Image:PurportedNJUFO1952.jpg
http://ufocasebook.com/tepoztlan1992large.jpg
http://en.wikipedia.org/wiki/Image:Arnold_crescent_1947.jpg
http://www.neilkate.legend.yorks.com/roswell/matt_brazel.jpg
http://www.crystalinks.com/roswelldebris.jpg

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1 (பிரபஞ்சம் உருவானது எப்படி)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2(Big bang theory)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3(Light years)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4(Black holes)
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5(Extra terrestrial life)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6(Alien communication)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7(UFOs)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8(Roswell - part 1)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9(Roswell - part 2)

17 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

CVR அண்ணா...

இன்று இரவு உங்கள் பதிவைப் படித்து விட்டு வெளியில் சென்றேன்! நல்ல காற்று! திடீர் என்று பளிச் பளிச் என்று ஏதோ வானத்தில் மின்னுது! ஆகா நம்ம CVR சொன்ன மாதிரியோன்னு நினைச்சு காரை வுட்டு இறங்கிப் பார்த்தா.....அடச்சே மின்மினிப் பூச்சி! :-)

தமிழில் UFO பற்றி அதிகம் தகவல்கள் இல்லை CVR. உங்கள் முயற்சி ஒரு முன் மாதிரி! தொடர்ந்து தாருங்கள்! படிக்க ஆவலாய் உள்ளோம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இது போன்ற பறக்கும் தட்டுக்கள் அமெரிக்காவில் மட்டும் இல்லாமல் உலகெங்கெங்கிலும் மக்களால் பார்த்ததாக கூறப்படுகிறது//

ஆனால் இது பற்றிய ஆர்வம், கதைகள், மற்றும் தகவல் களஞ்சியங்கள் எல்லாம் பெரும்பாலும் வட அமெரிக்காவையே அதிகம் சார்ந்துள்ளது ஏனோ?

Northern Hemisphereஇல் தெரிவது போல் Southern Hemisphere-லோ, இல்லை பூமத்திய ரேகை நாடுகளிலோ UFO அதிகம் அடையாளம் காணப்படவில்லை!
இதற்கு பரந்து விரிந்த, மரங்கள் இல்லாத நிலப்பரப்பு தேவையோ?

நெடுந்தூரக் கடல் பயணங்களில் கூட இவை காணப்படாதது ஏனோ?

வடுவூர் குமார் said...

யூ டியூபிலும்,கூகிள் வீடியோவிலும் சில சலனப்படங்கள் உள்ளன.
நம்மூரில் இந்த மாதிரி எதுவுமே கண்ணில் பட்டதாக குறிப்பு ஏதும் இல்லையே அல்லது எனக்கு தெரியவில்லை.

Anonymous said...

agent CVR from FBI(agent fox மாதிரி),
நானும் rosewell பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றேன்.ஆனால் இது எல்லாமே உண்மையா என்பது புரியாத புதிர் தான்.
உங்கள் கதையைக் கேட்க ஆவலுடன் இருக்கின்றோம் அண்ணா!

Dreamzz said...

மீண்டும் ஒரு தகவல்பூர்வமான பதிவு.

Dreamzz said...

சீக்கிரம் பேசுங்கய்யா.. உங்கள எல்ல, வேற்று கிரக மனிதர்கள்

CVR said...

@கே.ஆர்.எஸ்
//ஆனால் இது பற்றிய ஆர்வம், கதைகள், மற்றும் தகவல் களஞ்சியங்கள் எல்லாம் பெரும்பாலும் வட அமெரிக்காவையே அதிகம் சார்ந்துள்ளது ஏனோ?

Northern Hemisphereஇல் தெரிவது போல் Southern Hemisphere-லோ, இல்லை பூமத்திய ரேகை நாடுகளிலோ UFO அதிகம் அடையாளம் காணப்படவில்லை!
இதற்கு பரந்து விரிந்த, மரங்கள் இல்லாத நிலப்பரப்பு தேவையோ?
//
நீங்கள் இந்த கேள்வியை கேட்பீர்கள் என நான் எதிர்பார்த்தேன்.தெற்கு பூகோளப்பகுதியில் உள்ள பல நாடுகளில் பச்சி,பஞ்சம்,வறுமை,சண்டை என பல பிரச்சினைகள் இருப்பதாலும் அவர்களுக்கும் வேற்று கிரக ஊர்திகள் பற்றி எல்லாம் விழிப்புணர்வோ ஆர்வமோ இல்லாததாலும் அவர்கள் இதை பற்றி எல்லாம் கவனிப்பதில்லை என்பது என் யூகம். இதை பற்றி UFO வல்லுனர்களிடம் வேறு ஏதாவது விளக்கம் இருந்தாலும் இருக்கும்.

விக்கியில் இருந்து UFO-க்கள் கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியல் இதோ

Below is a list of UFO sightings (close encounters) by country.

* Australia
* Belarus
* Brazil
* Canada
* Canary Islands
* China
* France
* Iran
* Iraq
* Italy
* Libya
* Mexico
* New Zealand
* Norway
* Portugal
* Russia
* Scotland
* Spain
* Sweden
* Turkey
* United Kingdom
* United States
http://en.wikipedia.org/wiki/UFO_sightings

இதில் ஒரு சில தெற்கு பூகோள நாடுகளும் இருப்பதை காணலாம்.

//நெடுந்தூரக் கடல் பயணங்களில் கூட இவை காணப்படாதது ஏனோ?//
இது சம்பந்தமாக நான் விக்கியில் கண்டது.

From Christopher Columbus' Journal Logs - 5 hours before the discovery of the New World - While patrolling the deck of the Santa Maria at about 10:00 PM, Columbus thought he saw "a light glimmering at a great distance." He hurriedly summoned Pedro Gutierrez, "a gentleman of the king's bedchamber," who also saw the light. After a short time it vanished, only to reappear several times during the night, each time dancing up and down "in sudden and passing gleams, like the flickering wick of a candle" The light, first seen four hours before land was sighted, was never explained."

இது போன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கலாம்,ஆனால் யாரும் அதை பற்றி வெளியே சொல்லாமல் இருந்திருக்கலாம்?
அதுவுமில்லாமல் வேற்று கிரக கோள்கள் மனிதர்களை பற்றியும் நாடுகளை பற்றி அறிந்து கொள்வதற்கு கிழே வரும் போது நாம் அவற்றை கவனிக்கிறோம் ,ஆனால் கடல் பறப்பில் அவை மேலே நாம் காண முடியாத தூரத்தில் எங்கேயாவது போய்க்கொண்டிருக்கலாம்!!!

இதுவும் யூகம் தான்!! :-)

@வடுவூர் குமார்
//யூ டியூபிலும்,கூகிள் வீடியோவிலும் சில சலனப்படங்கள் உள்ளன.
நம்மூரில் இந்த மாதிரி எதுவுமே கண்ணில் பட்டதாக குறிப்பு ஏதும் இல்லையே அல்லது எனக்கு தெரியவில்லை.//
ஆமாம் குமார்,சனி ஞாயிரு இரு நாட்களும் எனக்கு இதுதான் வேலை.
உங்கள் கேள்விக்கு நான் கே.ஆர்.எஸ்-க்கு அளித்த பதிலே உங்களுக்கும் ஒற்றுப்போகும் என நினைக்கிறேன்!!

Just because UFO sightings are not "reported" in those countries,it doesnt mean they are not sighted!! :-)


@துர்கா
//agent CVR from FBI(agent fox மாதிரி),
நானும் rosewell பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றேன்.ஆனால் இது எல்லாமே உண்மையா என்பது புரியாத புதிர் தான்.
உங்கள் கதையைக் கேட்க ஆவலுடன் இருக்கின்றோம் அண்ணா! //
வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா!!
அடுத்த பகுதி வரை பொருத்திருங்கள்!! :-)

@ட்ரீம்ஸ்
//மீண்டும் ஒரு தகவல்பூர்வமான பதிவு. //
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ட்ரீம்ஸ்!! :-)

Anonymous said...

interesting...

மு.கார்த்திகேயன் said...

ஏழாவது பாகமாய் விரிந்து கிடக்கும் அதிசயங்களை சுவை குறையாமல் எழுதுறப்பா சி.வி.ஆர்.. வாழ்த்துக்கள்

மு.கார்த்திகேயன் said...

ஏற்ற படங்களை போட்டு காட்சியாகவும் விளக்கியது அருமை சி.வி.ஆர்

Unknown said...

Thats very interesting..Eagerly waiting to read the next chapter..

CVR said...

@தேவா!!
கண்டிப்பாக மிக சுவாரஸ்யமான தலைப்பு தான் இந்த விண்வெளி
அடிக்கடி பதிவுக்கு வந்துட்டு போங்க!! :-)

@கார்த்தி
// ஏழாவது பாகமாய் விரிந்து கிடக்கும் அதிசயங்களை சுவை குறையாமல் எழுதுறப்பா சி.வி.ஆர்.. வாழ்த்துக்கள்
//

எல்லாம் உங்களை மாதிரி பெரியவங்களோட ஆசி தான் அண்ணா!! :-)

@கமல்
//Thats very interesting..Eagerly waiting to read the next chapter..//
வாங்க கமல்!!
அடுத்த பகுதி தயார்!!
இன்னும் ஓரிரு நாட்களில் பதிவு வெளிவந்து விடும்!! :-)

G.Ragavan said...

சிவிஆர். உலகத்துல இத்தன பேரு பாத்திருக்காங்களா? அப்ப நானும் உண்மையச் சொல்லீர்ரேன்.

தூத்துக்குடியில சின்ன வயசுல...ஊரோட சின்ன வயசுல இல்ல..என்னோட சின்ன வயசுல...வீட்டுக்குப் பின்னாடியிருந்த முருங்கை மரத்து அரிப்புழுக்களுக்குத் தீ வெச்சுக்கிட்டிருந்தேன். அப்ப திடீர்னு ஏதோ சத்தம்...என்னடான்னு மேல பாத்தேன். ஏதோ பறக்குறாப்புல இருந்துச்சு. ஊதா...மஞ்சள்...பச்சைன்னு மாறிமாறி ஒளிருச்சு. என்னடான்னு பாத்துக்கிட்டிருந்தேன். நாங்கூட ஏதோ முருகன் மயில் மேற போறாருன்னு நெனச்சுக் கும்புட்ட்டேன். ஆனா இப்பல்ல தெரியுது...அது ஒரு பறக்கும் தட்டுன்னு...மேட்டர் இவ்வளவு பெருசாயிருக்கும்னு தெரிஞ்சிருந்தா அப்பவே ஒலகத்துக்குச் சொல்லீருப்பேன். ம்ம்ம்...இப்ப சொன்னா நம்பவாப் போறாங்க! :(

கதைய இப்பிடிப் பாதீல விடலாமா? ரொம்பத் தப்பு. ரொம்பவே தப்பு.

ALIF AHAMED said...

சாரி லேட்

படிச்சாச்சி

பறக்கும் தட்டு மேல் எனக்கு நம்பிக்கை இல்லை

தொடர்ந்து எழுதுங்க நம்பிக்கை வருதானு பாக்குறேன்

துளசி கோபால் said...

மீதிக்கதை(???? !!!) எப்போ?

இரமேஷ் இராமலிங்கம் said...

கலக்குரீங்க தலைவா!!! continue பன்னுங்க... நானும் சின்ன வயசில இது மாதிரி நிரய பாத்து பயந்துரிக்கேன். ஆனா!! அது எல்லாமே அரண்டவன் கண்ணுல இருண்டதெல்லாம் பேய் கதை தான். எனக்கென்னவோ இதுவெல்லாம் அதுபோலதான்னு தோனுது. ம்ம்.. அடுத்தது?

CVR said...

@ஜிரா!!
அட!! உங்களுக்கும் பறக்கும் தட்டு பாத்த அனுபவம் இருக்கா???

//மேட்டர் இவ்வளவு பெருசாயிருக்கும்னு தெரிஞ்சிருந்தா அப்பவே ஒலகத்துக்குச் சொல்லீருப்பேன். ம்ம்ம்...இப்ப சொன்னா நம்பவாப் போறாங்க! :(//
இது மாதிரி தான் நிறைய பேரு என்னதுன்னு தெரியாமலே மறந்து போயிடறாங்க!! ஆனா அமெரிக்காவுல எல்லாம் இது பத்தி நிறைய பேச்சு இருக்கறதுனால நிறைய விஷயங்கள் வெளியில வருது!! அதனால தான் அமெரிக்காவுல மட்டும் இந்த நிகழ்வுகள் எல்லாம் நடக்கறா மாதிரி தெரியுது போல!! :-)

@மின்னுது மின்னல்
//பறக்கும் தட்டு மேல் எனக்கு நம்பிக்கை இல்லை

தொடர்ந்து எழுதுங்க நம்பிக்கை வருதானு பாக்குறேன் //
எனக்கும் இதை நம்புறதா நம்ப வேணாமான்னு தெரில,ஆனா ரொம்ப சுவாரஸ்யமான விஷ்யம் என்பதால் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்!! :-)

@துளசி டீச்சர்
//மீதிக்கதை(???? !!!) எப்போ?//
இன்னைக்கு சாயந்திரம் (EST)!! :-)

@இரமேஷ்
//எனக்கென்னவோ இதுவெல்லாம் அதுபோலதான்னு தோனுது. ம்ம்.. அடுத்தது? //
இந்த விஷயத்தை பத்தி அரசாங்கத்தின் விளக்கமும் இதுதான்!!
இதை பற்றியெல்லாம் வர போற பகுதிகளில் பாக்கலாம்!! :-)

Related Posts Widget for Blogs by LinkWithin