மாலைப்பொழுதின் மயக்கத்திலே

இன்றைக்கு திடீரென ஏதோ எண்ணம் தோன்ற,கைப்பேசியை பொறுக்கிக்கொண்டு,பாடல் கருவியை காதில் செருகிக்கொண்டு காலார கிளம்பி விட்டேன். சிறிது தூரம் தள்ளி உள்ள ஒரு குட்டையின் பக்கத்தில் புல் தரையில் உலகை மறந்து அயர்ந்த போது அங்கு செழுமியிருந்த அழகை கண்கள் போதாதென்று கைப்பேசியிலும் தேக்கிக்கொண்டேன்.
அப்படி எடுத்த படங்களில் சிலவற்றை இதோ உங்கள் பார்வைக்கு!! :-)














பி.கு : அலைப்பேசியில் எடுத்ததால் பிக்ஸல் குவாலிட்டி அவ்வளவாக இருக்காது!! அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!! :-)

25 comments:

வடுவூர் குமார் said...

அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!!
படமே தெரியாட்டி கூடவா?
FlickR பிரச்சனை பண்ணுகிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அங்கு செழுமியிருந்த அழகை கண்கள் போதாதென்று கைப்பேசியிலும் தேக்கிக்கொண்டேன்//

அழகிகள்? இல்லை, அழகா??
கரீட்டாச் சொல்லுங்க நண்பா...
படங்கள் உங்க கண்ணுக்கு மட்டும் தான் தெரியணும்-னு போட்டிருந்தீங்கனா, நிச்சயமா அழகிகள் படம் தான்!
எங்க கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குதே CVR? :-(

கலைக் கண் வேண்டுமோ?

துளசி கோபால் said...

படங்கள் நல்லாத்தான் இருக்கு.

கண்ட கனவைச் சொல்லலையே தோழா !

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இப்ப எல்லாப் படமும் தெரியுது அண்ணாத்த!

கடைசிப் படம் அழகோ அழகு CVR!
காதல் மடப் பிடியோடு
களிறு வருவன கண்டேன்
- அப்படின்னு ஒரு அப்பர் சுவாமிகள் பாட்டு!

அதாச்சும் ஆண் யானையும் பெண் யானையும் ஜோடியா அசஞ்சி அசஞ்சி வராப்பல இருந்துச்சாம்! அது போல இருக்கு இந்த இரு மரங்களும்!

நி்ழலிலும் சரி
நிஜதிலும் சரி
இரண்டிலும் சேர்ந்து எவ்வளவு அழகா ஜோடியா இருக்குப் பாத்தீங்களா?
அதுக்கு இலை இல்லீன்னா, இதுக்கும் மேல மட்டும் இலை இல்லை!

அருமையான ஒளிக்கவிதை!

சரி...வீட்டுக்கு வந்த போது,
என்னை ஏன் இந்த இடத்துக்கும் ஏரிக்கும், நீங்க கூட்டிப் போகலை? Too Bad! :-(

CVR said...

@வடுவூர் குமார்
வலையேற்றுவதில் சிறு பிரச்சினை!!
சுட்டிக்காட்டியதற்கு நன்றி குமார்!!

சரி செய்து விடுகிறேன்.

@கே.ஆர்.எஸ்
//அழகிகள்? இல்லை, அழகா??
கரீட்டாச் சொல்லுங்க நண்பா...//
படங்களை பார்த்து நீங்களே சொல்லுங்க தலைவா!!

//எங்க கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குதே CVR? :-(

கலைக் கண் வேண்டுமோ?///
கண் மட்டும் போதும் தல!! :-))

@துளசி டீச்சர்
//படங்கள் நல்லாத்தான் இருக்கு.

கண்ட கனவைச் சொல்லலையே தோழா !//
எல்லா படங்களும் தெரிஞ்சுதா டீச்சர்??

//கண்ட கனவைச் சொல்லலையே தோழா !//
கனவு எல்லாம் எதுவும் காணலை டீச்சர்!!
சும்மா இளையராஜா பாட்டு கேட்டுட்டு புல்தரையின் மேல் படுத்துட்டு இருந்தேன்!! :-)

jeevagv said...

எல்லாப் படங்களும் நல்லா இருக்கு சி.வி.ஆர். படங்களுக்கு பார்டரும் கட்டி இருக்கீங்க!

ILA (a) இளா said...

இது மயக்கத்துல எடுத்தீங்களோ, தெரியல, ஆனா எங்களை மயக்க வெக்குது.

வல்லிசிம்ஹன் said...

C.V.R,
thought I would be popping in for susilaamma's voice.:)
the photos are good.
they are REALLY reflecting the mood of an evening peacefully spent.
Thank you.

Unknown said...

WOW CVR

மாயா said...

Thanks . . .

CVR said...

@கே.ஆர்.எஸ்
அடா அடா!!
என்ன கவித்துவமா ரசிச்சிருக்கீங்க!!

உங்களுக்கு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி அண்ணா!!! :-)

//சரி...வீட்டுக்கு வந்த போது,
என்னை ஏன் இந்த இடத்துக்கும் ஏரிக்கும், நீங்க கூட்டிப் போகலை? Too Bad! :-(//

நானே இன்னைக்கு தானே போனேன்!!
அடுத்த தடவை வாங்க போயிரலாம்!! :-)

@ஜீவா
வாங்க ஜீவா
புகைப்பட போட்டிக்கு அப்புறம் பிற்தயாரிப்பு உத்திகளின் முக்கியத்துவத்தை உணர ஆரம்பித்து விட்டேன்!!
அதன் பலன் தான் இந்த கட்டம் எல்லாம். புகைப்படக்கலையில் அடுத்த கட்டத்துக்கு போவதற்கான முயற்சிகள் தான் இவை!! :-D

@இளா
வாங்க இளா!!!
மயக்கத்தில் மூழ்கிவிட்டீர்களா??
வாழ்த்துக்களுக்கு மீக்க நன்றி!! :-)

@வல்லிசிம்ஹன்!
வாங்க வல்லிசிம்ஹன்!!
எனக்கு அந்த பாட்டு!! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்!! :-)
இந்த அமைதியான மாலை நேரத்தை பற்றி நினைக்கும் போது அந்த பாட்டு தான் தோனிச்சு!!
அதான் அதையே தலைப்பா வெச்சிட்டேன்!! :-)
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி. :-)

@தேவ்!
வாங்க அண்ணாச்சி!!
பொடிசு எப்படி இருக்காரு??

அப்பப்ப எங்க பதிவையும் கொஞ்சம் பாத்துட்டு போங்க!! :-)

@மாயா
வாழ்த்துக்களுக்கு நன்றி மாயா!! :-)

இராம்/Raam said...

சூப்பரா'கீது ப்பா.... :)

Arunkumar said...

photos are really good CVR.. keep clicking and flickRing :)

குமரன் (Kumaran) said...

அலைபேசியில எடுத்த அழகுக்காவியங்களா? நல்லா இருக்குங்க.

இந்த குட்டைகளும் புல்வெளிகளும் எவ்வளவு ஆனந்தத்தைத் தருகின்றன! இல்லையா? இங்க வந்ததுல இருந்து பல வீடு மாறியாச்சு. ஆனா எல்லா வீட்டுலயும் குட்டை பக்கத்துல இருக்கிற மாதிரியும் வீட்டுப் பலகணியில இருந்த பார்த்தா தெரியற மாதிரியும் தான் இருந்திருக்கேன். :-)

Dreamzz said...

thooya tamilla kalakareenga! fotos super!

Dreamzz said...

15

Unknown said...

சிவிஆர், அலைபேசில எதுத்தமாதிரியே இல்லே. நல்லா இருக்கு!

Thamizhan said...

இயற்கையை அனுபவித்து இன்பமுறு
இதயத்தை திறந்து இன்பமுறு
இணையத்தில் பகிர்ந்து இன்பமுறு!

காயத்ரி சித்தார்த் said...

சூப்பரா இருக்கு சிவிஆர்!

கதிர் said...

கலக்கல்ஸ் ஆப் கலிபோர்னியாவா இருக்கே!

ஆனாலும் இம்புட்டு திறமைய வச்சிகிட்டு அங்க இருக்கறது ஞாயமில்ல தம்பி.

CVR said...

@இராம்
வாங்க அண்ணாத்த!!
ரொம்ப டேங்க்ஸு!! :-)

@அருண்குமார்
நன்றி அருண்!! :-)

@குமரன்
//இந்த குட்டைகளும் புல்வெளிகளும் எவ்வளவு ஆனந்தத்தைத் தருகின்றன! இல்லையா? இங்க வந்ததுல இருந்து பல வீடு மாறியாச்சு. ஆனா எல்லா வீட்டுலயும் குட்டை பக்கத்துல இருக்கிற மாதிரியும் வீட்டுப் பலகணியில இருந்த பார்த்தா தெரியற மாதிரியும் தான் இருந்திருக்கேன். :-)//
ஆமாம் குமரன்!! அமைதியான சாயங்கால நேரத்தில் இந்த மாதிரி புல்வெளியில் போய் உட்கார்ந்து கொண்டால் அந்த சுகமே தனி!! :-)
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி! :-)

@ட்ரீம்ஸ்
வாங்க தல!!
படங்கள் பிடிச்சுருக்கா?? சந்தோஷம்!! :-)

@தஞ்சாவூரான்
நன்றி தஞ்சாவூரான்!! பிற்தயாரிப்பு மென்பொருட்கள் கொண்டு கொஞ்சம் செம்மை படுத்தியதின் விளைவு!! :-)

@தமிழன்
//இயற்கையை அனுபவித்து இன்பமுறு
இதயத்தை திறந்து இன்பமுறு
இணையத்தில் பகிர்ந்து இன்பமுறு!//
அதே அதே!! :-)

@காயத்ரி
//சூப்பரா இருக்கு சிவிஆர்!//
நன்றி காயத்ரி

@தம்பி
வாங்க தம்பியண்ணே!
//ஆனாலும் இம்புட்டு திறமைய வச்சிகிட்டு அங்க இருக்கறது ஞாயமில்ல தம்பி.///
இங்கேயேவா இருந்துற போறேன்???
எப்படியும் திரும்பி வரத்தானே போறேன்!! :-)

நீங்க மட்டும் இம்புட்டு திறமையை வைத்துக்கொண்டு அமீரகத்தில் ஐக்கியமாகிட்டீங்களே!! :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

சூபர் படங்கள். சில படங்கள் நாரயணபுரம் ஏரி ஏரியா பொலா இருக்கு இல்லே

CVR said...

@தி.ரா.ச
வாங்க தி.ரா.ச!
நாராயணபுரத்திலா??
பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துகிறீர்களே தி.ரா.ச!! :-)

இவான் said...

சூப்பர்...போட்டோசாப்பிலோ அல்லது ஜிம்ப்பிலோ சில சின்ன சின்ன வேலைகள் செய்திருந்தால் இன்னும் அட்டகாசமாக வந்திருக்கும்.

CVR said...

@இவான்
வாங்க!!
இது ஏற்கெனவே பிகாஸா மற்றும் ஜிம்ப்-இல் சில வேலைகள் செய்யப்பட்ட படங்கள் தான்!! :-)

Related Posts Widget for Blogs by LinkWithin